சீனாவில்
பரதேசி பகுதி-4
இதன் முதல் மூன்று பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்
பகுதி 1 : http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html
Feel INN Restaurent |
மதுபானத்தைப் பார்த்ததும்
பகீரென்றது. நமக்கு டீ காபி குடிச்சே பழக்கம் கிடையாது .இதுல
நானாவது விஸ்கியாவது ? . பார்த்ததுக்கே தலை கொஞ்சம் லேசா சுத்துச்சு. அதுக்கெல்லாம்
ஒரு கொடுப்பினை வேணுங்க .
இருந்தாலும்
சீனாவின் குளிருக்கு ஒரு முறை பருகிப்பார்த்தால்தான் என்ன என்று
தோன்றிய ஆர்வத்தைஅடக்கிவிட்டு, அந்த அம்மாவுக்கு என்ன
எடுத்துச் சொல்லியும் புரியாததால் பத்து நிமிடம் வெயிட் செய்தேன். ஜோஹன்னா
வந்ததும் சொன்னேன். அவள் புரிந்து கொண்டே, மதுவை
உள்ளே எடுத்துச் சென்று வாஷ்பேசினில் கொட்டிவிட்டுப் போய்விட்டாள். அவள் அம்மா
எடுத்துவந்த பில்லில் மதுவுக்கும் சேர்த்து சார்ஜ் செய்ததால், மீண்டும் ஜோஹன்னாவைக் கூப்பிட வேண்டியதிருந்தது. இன்னும் என்னவெல்லாம்
நடக்கப்போகிறதோ என்று ஒரே திகிலாக இருந்தது.
அடுத்த நாள் எங்கு செல்லலாம்
என ஜோஹன்னாவைக் கேட்டேன். "நாளை சீனப்பெருஞ்சுவர் செல்ல ஒரு டூர் இருக்கிறது
போகிறீர்களா?’ என்று கேட்டாள். "வெரிகுட் இத இதத்தான் எதிர்பார்த்தேன்"
என்றேன். "காலை உணவு மற்றும் மதிய உணவும் இலவசம்" என்றாள். "நான்
என்ன, வேணான்னா சொல்லப்போறேன், ஆமா கைடு
ஆங்கிலம் பேசுவார்களா?"
என்றேன். 'ஆமாம் கண்டிப்பாய்', என்றாள். உடனே புக் செய்துவிட்டு ரூமுக்குத் திரும்பினேன். அங்கே டிவி
ரிமோட்டை எடுத்துப் பார்த்தேன். 120 சேனல்கள் இருந்தன. உடை
மாற்றி நன்றாக உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொன்றாக திருப்பினேன்.
திருப்பினேன் திருப்பினேன், திருப்பிக் கொண்டே இருந்தேன். 120-ம் சீன சானல்கள்.
சரி செல்போனிலாவது மேய்வோம்
என்றால் எதுவும் வேலை செய்யவில்லை. வெளியே திரும்பப்போய் வைஃபை பாஸ்வேர்டு வாங்கி
திரும்பவும் ட்ரை செய்தேன். ம்ஹீம் அப்பவும் வேலை செய்யவில்லை. கேட்டபின்தான்
சொன்னாள்,
கூகிள், யுடியூப், யாஹூ,
ஃபேஸ்புக் போன்ற பல சமூக சாளரங்கள் சைனாவில் தடை
பண்ணப்பட்டிருக்கின்றனவாம். அட கஷ்டகாலமே, இதுதான்
கம்யூனிசம் போலிருக்குன்னு நினைத்துக் கொண்டே
படுக்கப்போனேன்.
காலையில் 7
1/2 மணிக்கு பஸ் வந்துவிடும் என்பதால் அலாரம் வைத்து எழுந்து
ரெடியாகி காலை உணவு எங்கே
என்றேன். அங்கேயே உள்ள ரெஸ்டாரன்டில்தான். என்றார்கள். டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டியில் சிறிதளவு பட்டர் தடவி, கொஞ்சம் பழ
ஜெல்லியைத் தடவும் போது, திராவிடன் ஒருவன் உள்ளே வந்தான். “ஹாய்”,
என்றான் புன்சிரித்துக் கொண்டே. அவனுக்கும் இன்னொரு இந்தியனை, திராவிடனைப் பார்த்ததில் மகிழ்ச்சி போல இருக்கிறது. ஆவலை அடக்க முடியாமல்,
“தமிழா?” என்றேன். “இல்லை பெங்களூர், கர்நாடகா”, என்றான். ஆஹா பரவாயில்லை ஒரு இந்தியன் அதுவும் தென்
இந்தியன் ஒருவனைப் பார்த்ததில், அதுவும் அவனும் சீனப்பெருஞ்சுவர்
வருவதைக் குறித்து, நல்ல கம்பெனி கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தேன்.
“ஆமாம் உன்னை நான் இதுவரை பார்க்கவில்லையே”, என்றேன். "இரவு லேட்டாகத்தான் வந்தோம்". என்றான்.
"வந்தோமா அப்படியென்றால்?”, என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே,
ஒரு ஆரிய தேவதை உள்ளே நுழைந்தது, அந்த இடமே வெளிச்சமானது. வந்து பெங்களூர்காரன் பக்கத்தில் அமர, பார்ரா இவனுக்கு
அமைந்த அதிர்ஷ்டத்தை என்று நினைத்தேன். ஹனிமூனுக்கு சீனா வந்திருக்கிறார்கள்
போல என்று நினைத்தேன். என்னை அறிமுகப்படுத்த,அவள் மிருதுவாய் கைகுலுக்கினாள். மங்களூர் பெண், போர்த்துக்கீசிய
நிறத்துடன், நம்பெண்களின்
லட்சணத்துடன் இருந்தாள், பெயர் மிதுளா
.
சாப்பிட்டு முடிக்கவும் பஸ்வரவும் சரியாக இருந்தது.
Beijing City by night |
பீஜீங் நகரத்திற்குள்
நுழைவதற்கு முன்னால் சுருக்கமாக அம்மாநகரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
1.
சீனாவின் தலைநகரான
பீஜீங், உலகத்தின் மக்கள் தொகை அதிகமாக வாழும் நகரங்களில்
ஒன்று.
2.
இது சீனாவின்
வடபகுதியில் இருக்கிறது.
3.
மிங் டைனாஸ்டியின்
போது (கி.பி 1401) இதன் பெயர் பீஜிங் என்று
ஆனது அதன் அர்த்தம் வடக்குத் தலைநகர் என்பது.
4.
இதுதான்
ஆங்கிலேயர் காலத்தில் பீகிங் என்றும் அழைக்கப்பட்டது.
5.
கடந்த எட்டு நூற்றாண்டுகளாக
இந்நகர்தான் சீனாவின் தலைநகர்என்றாலும், இது மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.
6.
2013ல் நடந்த
கணக்கெடுப்பின்படி 2 கோடியே 12 லட்சம்
பேர் இங்கு வசிக்கிறார்கள்.
7.
2008ல் இங்கு
ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன மற்றும் 2022-ல் குளிர்கால
ஒலிம்பிக்ஸ் நடக்க இந்நகர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
Beijing by Night |
ஒரு சைனீஸ் கைட் உடைந்த, ஆங்கிலத்தில்
எங்களை வரவேற்று அழைத்துச்சென்றான். பஸ்
முழுவதும் வெள்ளைகள் இருந்தன. ஹவாயிலிருந்து ஒரு குடும்பம்,
லண்டனிலிருந்து ஒன்று, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒன்று,
ஜெர்மனியிலிருந்து ஒன்று என்று பலநாடுகள் என்றாலும் எல்லோரும் வெள்ளை.
அதுதவிர இந்த பெங்களூரைச் சேர்ந்த இருவர் அப்புறம் நான், ஒரு சீன டிரைவர்
மற்றும் கைட்.
எனக்கு முன்னிருந்த இரட்டை இருக்கையில் அந்த பெங்களூர்
ஜோடி அமர,
நான் அவர்கள் பின்னால் இரட்டை இருக்கையில் ஒற்றையாக அமர்ந்தேன்,
வேறு வழி.
சைனீஸ் கைட், முதலில்
ஒவ்வொரு நாட்டினரையும் கைதட்டி வரவேற்றுவிட்டு, மடமடவென்று பேச ஆரம்பித்தான்.
அந்த சிங்கிலிஷ் புரிவதற்கு கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டியிருந்தது. சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றை விளக்கிக் கொண்டிருந்தான். நடுநடுவில் அவன் அடித்த ஜோக்குகளுக்கு யாரும் சிரிக்கவில்லை.
நடுவில் ஒரு ஊர் வந்தது.
குறுக்கில் மறைத்து டோல்கேட் போல ஒன்று இருந்தது. வழிகாட்டி சொன்னான், “இங்கே நகராட்சியின் விற்பனையகம்
இருக்கிறது. இந்த வழிபோகும் அனைவரும் இங்கு இறங்கி கண்டிப்பாய்
விற்பனையகத்திற்கு போக
வேண்டும்”, என்றான். கம்யூனிச நாட்டில் இதுவும் நடக்கும் இதற்கு
மேலும் நடக்கும் என்று நினைத்து, “கண்டிப்பாய் பொருளையும் வாங்க
வேண்டுமா ?” என்று நான் கேட்டேன். புன்னகையுடன்,
"தேவையில்லை, எதுவும் இங்கு வாங்க வேண்டாம்,
எல்லமே இங்குவிலை அதிகம்”, என்றான்.
வெளியே போய் விற்பனை அரங்கத்தை
ஒரு பார்வை பார்த்துவிட்டு, வழி நெடுகிலும் பிளாட்
பாரத்தில் விற்ற பொருட்களையும் தவிர்த்து வேறு வழியில் வெளியே வந்து பஸ்ஸீக்குள் ஏறி உட்கார்ந்தேன்.
எல்லாரும் வந்துவிட பெங்களூர் ஜோடியை மட்டும் காணோம். பின்னர் எங்கள் வழிகாட்டி மீண்டும் இறங்கிப் போய் அவர்களைத்தேடிக் கண்டுபிடித்து
கூட்டிவந்தான். உள்ளே ஏறியவுடன் பெங்களூர்காரன் அதே இடத்தில்
அமர, மங்களூர் தேவதை என் அருகில் வந்து அமர்ந்தது.
-
தொடரும்.
இது என்னங்க புது அத்தியாயமா இருக்கு?
ReplyDeleteஇதைப்படிச்சவுடன் கந்தசாமி நொந்தசாமி ஆயிட்டாரு போல இருக்கே .
Deleteவருகைக்கு நன்றி பழனி கந்தசாமி
good suspense..Sekar..I am waiting for the next chapter eagerly 😅
ReplyDeleteநன்றி கண்ணன் , வந்து ரொம்ப நாளாச்சு .
Deletegood suspense..Sekar..I am waiting for the next chapter eagerly 😅
ReplyDeleteம்ம். அப்புறம். கதை எங்கயோ போகுதே.. ;)
ReplyDeleteகதை நம்மளை மீறி எங்க போயிரப்போகுது , பாஸ்கர் .
Deleteஎன் உறவினர் ஒருவர் ரெகுலராக சீனா சென்று திரும்புகிறார் - பிஸினஸ் விஷயமாக! உங்கள் கட்டுரை சுவாரஸ்யம். தொடர்கிறேன்.
ReplyDeleteமிகவும் நன்றி ஸ்ரீராம்.
Deleteநடத்துங்க!
ReplyDeleteசரிங்க, நோ சாரிங்க வெங்கட்
Deleteதொடர்கிறேன்...
ReplyDeleteInteresting...
ReplyDeleteYour each episode's ending is drawing more curiosity than our Tamil serial directors.
Make the font little bigger. Difficult to read small font size.
Thanks Alien.Next time I will increase the font size.
DeleteYoutube not working..Unbelievable..OMG!
ReplyDeleteWe are very fortunate that we were not born in China.
Google also.
Deleteஅம்மாநகரத்தை என்பதை (அம்மா) நகரத்தை என்று வாசித்து விட்டேன்...அட கொடுமையே.... அம்மா ஸ்டிக்கர் இப்படி தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதே!!
ReplyDelete.
பிரகாஷ் , அம்மா நரகம் என்று வாசித்திருந்தால் ஒரு வேளை சரியாக இருந்திருக்குமோ ?
Deleteசீனா..தன் வளர்ச்சிக்காக மக்களை படுத்தியிருக்கும் கதையை எழுத சீனப்பெருஞ்சுவர் தான் சரியான இடம்..
ReplyDeleteவளர்ச்சி என்பதற்கு வீக்கம் கண்டிருக்கிறார்கள்...உங்கள் பார்வையில் அர்த்தம் இருக்கிறது..
காரைக்குடி மெஸ்ஸில் காலாற நடந்துபோய் உண்ட இரவு இப்போதும் கண்ணுக்குள்...
அது எந்ததேசத்திலும் நடக்காது...இந்தியாவைத்தவிர..
வாழ்க இந்தியா...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா , உண்மைதான் செல்வா .
ReplyDelete