பரதேசி: இந்த
வெள்ளப் பெருக்கத்திற்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?
அதிமுக பிரமுகர்:
இதற்கு
தி.மு.க ஆட்சிதான் காரணம். அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது செய்ய வேண்டிய
காரியங்களை செய்யாமல் விட்டுவிட்டார்கள். சரி
சரி நான் பிசியாய் இருக்கேன் , அப்புறம் வாங்க
“டேய் சீக்கிரம் ஸ்டிக்கரை ஒட்டுரா:
“ அது நம்ம பொருள் இல்லண்ணே”
“அப்ப ரெண்டு
பக்கமும் ஸ்டிக்கரை ஒட்டுரா, அடுத்த வாட்டி நாம நிச்சயமா வரப்போறதில்ல,
வந்தாலும் அமைச்சராவதும் நிச்சயமில்லை, இந்த
வெள்ளத்திற்குத்தான் நன்றி சொல்லணும், முடிஞ்ச அளவுக்கு 2-3 தலைமுறைக்கு சொத்தைச் சேர்க்கணும்.
கருணாநிதி
:
நீங்கள் வெள்ளத்தில் இருந்தாலும் என் உள்ளத்தில் இருக்கிறீர்கள்.( (நல்ல
வேளை என் வீடு பள்ளத்தில் இல்லை)
ஜெயலலிதா :
வாக்காளப்
பெருமக்களே, உங்கள் அன்பு சகோதரியான நான்
இருக்கிறேன், எதற்கும் கவலை வேண்டாம் (நெலமை மோசமாத்தான்
இருக்கு, ஹெலிகாப்டரை
ரெடி பண்ணி, கொட நாட்டுக்கு விடு)
மு.க.ஸ்டாலின்:
இந்த
அரசு,
கலெக்சன் கமிஷன் என்று இருக்கிறது, ஆனால்
எலக்சன் என்று ஒன்று வருகிறது. (அந்நியச் செலாவணி வழக்கும் வரும்போல இருக்கே)
வைகோ:
இந்த
கோயபல்ஸ் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கிறேன். ஜெயலலிதா அம்மையார் இலங்கைத்
தமிழருக்கு நன்மை செய்திருக்கிறார். அவரை எதிர்க்க வேண்டாம். இந்த இரண்டு
கழகங்களும் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டன. இதனைக் கண்டித்து என் தம்பிகள்
புடைசூழ நடைப் பயணம் இதோ கிளம்பி விட்டேன்.
“அண்ணே
நடக்க ரோடே இல்லை, முழுசா தண்ணி
தேங்கியிருச்சு, வேணா போட்ல போகலாம்”
“ என்னை நடக்கவிடாதபடி அமெரிக்கா சதி செய்கிறது”.
நரேந்திரமோடி:
என்னது
சென்னைக்குப்போவனுமா? செக்ரட்டரி
சென்னைக்குப் போக முடியுமா? இல்லை ஜி இன்னும் மூணு
வருஷத்திற்கு உங்க டிராவல் புக்குடு.
ஆமாமா
இன்னும் பார்க்காத நாடு பல இருக்கு, என்னாது வெள்ளப் பெருக்கத்திற்கு யாரு காரணமா
அது வேற யாரு காங்கிரஸ் தான், இத்தாலி நாட்டு சதிதான்.
சொர்க்கத்தில் ( ?):
MGR: என்ன இப்படி ஆயிருச்சு,
நீங்க அணை கட்டினீங்க சரி, டிரைனேஜ்
கட்டவேயில்லையே?
காமராஜர்: அதான் என்னை வரவிடலையே. அதெல்லாம் வெள்ளைக்காரனை
கேட்கனும். ஆகட்டும் பார்க்கலாம் அடுத்த ஜன்மத்தில.
வெள்ளைக்காரன்:
ஏன் என்ட்ட கேக்கற, ஜார்ஜ் கோட்டைக்குள்ளே தண்ணி வராம
கட்டிட்டோம்ல.ஆற்காடு நவாபைக் கேளுப்பா, எல்லாத்துக்கும் நான் தான் கிடைச்சேனா.
Arcot Nawab |
ஆற்காடு நவாபு: நான்
அங்கே இங்கே ஓடி ஒழியவே நேரம் பத்தாம இருந்துச்சு
இதெல்லாம் எனக்கு முன்னால ஆண்ட நாயக்கரைக் கேளுங்க.
நாயக்கர்: ஐயா
எனக்கு எதுவுமே தெரியாது, பல்லவனைக் கேளு,
வெறும் பாறையை மட்டும் குடைஞ்சிட்டு இருந்தாரு, இதெல்லாம்
பாக்கனுமில்ல.
பல்லவன்: யோவ்
நான் இருந்தப்ப சென்னைன்னு ஒண்ணு இல்லவே இல்லை. இருந்த ஆறு குளம் ஏரி
எல்லாத்திலும் வீடு கட்டிட்டு, இருந்த எல்லா கிராமத்தையும் ஒன்னாச்சேர்ந்து நகரம்
ஆக்கினீங்களே, அதான் இப்ப நகரம் நரகம்
ஆயிருச்சு.
- ஆண்டவனே
இதுக்கு முடிவோ தீர்வோ எதுமேயில்லையா?.
சூப்பர் சூப்பர் சூப்பர்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன்.
Deleteம்ம்ம்... சென்னையின் சோகத்துக்கு இப்படியே காரணம் தேடியே வேதனையை மறக்க வேண்டியிருக்கிறது....
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ்.
Deleteஅருமையான, இன்றைய நிலையை உணர்த்தும் பதிவு!
ReplyDeleteத ம 3
நன்றி S.P. Senthil Kumar.
Deleteநதி மூலம் போலவே,,,நகர்மூலம் தேடியிருக்கின்றீர்கள்...உங்கள் கற்பனை ஒன்றும் அத்தனை பொய்யில்லை....நடக்கிறது தான்....
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஉண்மையை ரசிக்கும் படி சொன்னீங்க...
ReplyDeleteநன்றி ஆரூர் பாஸ்கர்.
Deleteசுவர்க்கம் போனீங்க.....
ReplyDeleteநரகம் போகவேயில்லையே?
அது சொர்க்கமா நரகமான்னு தெரியாததால்தான் அடைப்புக்குள் கேள்விக்குறி போட்டிருந்தேன்
Delete