Thursday, May 14, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் பரபர செய்திகள் !!!!!!!!!!!!!!!!!

ஆல் அமெரிக்கா ரேடியோ தமிழ்ச்சேவை, செய்திகள் வாசிப்பது பரபர பரதேசி
தலைப்புச் செய்திகள்:-

சொத்துக்குவிப்பு வழக்கில் செல்வி.ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதிலிருந்து நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தன்னுடைய தீர்ப்பில், நீதிபதி தெரிவிக்கையில், ஜெயலலிதா அவர்களுக்கு இதன் மூலம் இன்னொரு பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாகவும், அடுத்த தடவை தன்னுடைய சம்பளத்தை 50 பைசாவாக குறைத்து, குறைந்த பட்சம் 50,000 கோடியாவது சேர்த்து கின்னஸ் ரிகார்ட் செய்ய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 60-70 கோடிக்கெல்லாம் நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், குறைந்தபட்சம் 1000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தால் மட்டும் நீதிமன்றத்தில் வழக்குப் போடலாம் என்று அரசியல் வியாதிகளுக்கு மன்னிக்க, அரசியல் வாதிகளுக்குக்கு அநீதிபதி குமாரசாமி அறிவுரை கூறினார். மேலும் அப்போதுதான் நீதிபதிகளுக்கும் கொஞ்சமாச்சும் தேறும் என்று கூறினார்.
Focus shifted on Justice Kumaraswamy who hears Jayalalithaa appeal

ஜெயலலிதாவை விடுதலை செய்த குமாரசாமி, அதே சமயத்தில் 60 கோடி என்ற குறைந்த சொத்துக்குவிப்பு வழக்குக்காக நீதி மன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி, அவருடைய ஆண்டு சம்பளத்தில் பாதியை அபராதமாகச் செலுத்தப் பணித்தார். ஜெயலலிதா அதனை எதிர்த்து அப்பீல் செய்யலாமா என்று தனது 120 வக்கீல்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, அவர்களுடைய அறிவுரையினை ஏற்று கருவூலத்திற்கு ஆயிரம் கார்களில் அணிவகுத்து வந்து அவருடைய ஆண்டுச் சம்பளத்தில் பாதியான ஆறு ரூபாயைச் செலுத்தினார். அவர் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை வந்ததைஅறிந்து ஆறு தொண்டர்கள் மனது ஆறாமல் தீக்குளித்தனர்.
கருணாநிதி:
M. Karunanidhi re-elected as DMK chief for 11th time

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ள கருணாநிதி, இது அவருடைய எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் 2G போன்ற வழக்குகளிலும் இதே மாதிரி அணுகுமுறையில் விடுதலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு ஜெயலலிதா கர்நாடகா உயர்நீதி மன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் எப்படிச் சரிக்கட்டினார் என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக சமர்ப்பித்தால் அவரைப் போன்ற பல பேருக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்க செலவு:
60 கோடி வழக்கிலிருந்து வெளிவர 600 கோடி செலவழித்ததால் ஜெயலலிதா வருத்தத்தில் இருப்பதாகவும், ஆனால் அதே வழக்குக்கு அரசாங்கம் செலவு செய்தது 1000 கோடி என்பதைக் கேள்விப்பட்டு மனதைத் தேற்றிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி:
முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை மந்திரியுமான பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு மூன்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
முதற்காரணம்:
Stooping to conquer: Finance minister O. Panneerselvam seeking chief minister J. Jayalalithaa's blessings during a party function

கடந்த ஒரு வார காலமாக ஜெயலலிதா மீண்டும் வரப்போகும், முதலமைச்சர் அறையை குனிந்து நிமிர்ந்து சுத்தம் செய்ததில் மூச்சுப் பிடித்துக் கொண்டதாகவும், அம்மா முதல்வராக இருக்கும்போது எப்படியெல்லாம் வளைந்து நெளிந்தாலும் உடம்பு ஃபிட்டாக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக அது இல்லாமல் போனதால் தான் இந்த நிலைமை என்று சொன்னதாகக் கேள்வி.
2-ஆவது காரணம்:
அம்மாவின் விடுதலைச் செய்தி வந்ததும், முண்டியடித்து முன்னால் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது, அம்மா பலமுறை எழச் சொல்லியும் எழ முடியாமல் படுத்துக் கொண்டே இருக்க, "பன்னீர் உம் பக்தியை மெச்சினோம்", என்று அம்மா சொல்லிவிட்டு, மற்ற மந்திரிகளை அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளுச் சொன்னதாகக் கேள்வி. ஆனால் உண்மையில் அவருக்கு முதுகு பிசகிக் கொண்டதாகவும், அதனால்தான் எழமுடியாமல் போனதாகவும் வதந்தி நிலவுகிறது. அம்மாவுக்கு இது தெரியாதாம். ஏன் இப்படி பிடித்துக் கொண்டது என்று பன்னீரைக் கேட்ட போது, “டச் விட்டுவிட்டது”, என்று சொல்லி விதவித நமஸ்கார போஸ்களைச் சொல்லிக் கொடுக்க பர்சனல் டிரைனர் ஒருவரை நியமித்திருக்கிறாராம்.
காரணம் மூன்று:
பன்னீர் கொஞ்சமும் எதிர்பாராதபடி அம்மாவின் விடுதலை வந்து முதலமைச்சர் பதவி போனதால் மைல்ட் அட்டாக் வந்ததாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சொல்கிறார்கள்.
போயஸ் கார்டன்:
கடந்த மாதங்களில் தன்னை அவதூறாகப் பேசியவர்கள் மேல் வழக்குகள் போட்டதில் அதன் மொத்த எண்ணிக்கை 10,000-த்தைத் தாண்டியதால், உச்ச நீதிமன்ற ஆணையின் படி போயஸ் கார்டனில் உள்ள அம்மாவின் பங்களாவில் ஒரு உயர் நீதிமன்றக் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து மெய் சிலிர்த்த அம்மாவின் தொண்டர்கள் “பத்தாயிரம் வழக்குப் போட்ட பத்ரகாளி” என்ற பட்டத்தை அம்மாவுக்கு சூட்டியுள்ளார்கள். மேலும் சிறுதாவூர், கொட நாடு மற்றும் ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் ஆகிய இடங்களில் அதன் உப கிளைகள் திறக்கப்படும் என்று  தெரிகிறது.
சட்டமன்றத்தில் 110 விதி:
சட்டமன்றத்தில் புதிதாக சட்டங்களும் ஒரு சட்ட முன் வடிவமும் தாக்கப்பட்டன.
1.    சட்டசபையில் முதல்வருக்கு மட்டுமே இருக்கை வழங்கப்படுகிறது
2.    110-விதிகளின் கீழே செய்த அறிவிப்புகள் 1000 ஐத் தாண்டி விட்டதால் 110 விதியை 1010விதி என்ற மாற்ற அவசர சட்டம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
3.    அம்மா  ஹெலிபேடிலிருந்து இறங்கும்போது, அமைச்சர்கள் தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்றும், இது மக்களின் சுகாதாரத்துக்கு நல்லது என்றும் சொல்லி புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
4.    தேர்தல் முறை நீட்டிக்கப்பட்டாலும், ஒரு கட்சி ஒரு சின்னம் என்ற முறை பின்பற்றப்படும் என்று தெரிகிறது.
5.    தமிழ்நாடு அரசு சின்னமாக பறக்கும் குதிரையும் அதன் கீழ் இரட்டை  இலையும் மாற்றப்படுகிறது.
6.    சட்ட விரோதம் என்ற சொல் சற்றே மாற்றப்பட்டு ‘ஜெயவிரோதம்’ என்று அழைக்கப்படும்.
7.    "அம்மா என்றழைக்காத  உயிர் இல்லையே", என்ற பாடல்  தமிழ்நாட்டின் தேசியகீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 சட்ட முன் வடிவு:
திமுக, மதிமுக, தேமுதிக, பாமகா ஆகிய முக்கிய கட்சிகள் தடை செய்யப்படுகின்றன. மற்ற ஜாதிக்கட்சிகளின் தலைவர்களுக்கு வாலன்டரி  ரிடையர்மென்ட் ஸ்கீம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
புதிய உச்சவரம்பு:
ஊழலுக்கு புதிய உச்சவரம்பை நியமித்தது உச்ச நீதிமன்றம். 100 ரூபாயிலிருந்து 1000 வரை லஞ்சம் வாங்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனையும், 1கோடியிலிருந்து 1 லட்சம் கோடி வரை லஞ்சம் மூலம் சொத்துக்குவிப்பவர்களுக்கு அவர்களின் திறமையை பாராட்டி விடுதலை செய்து பாராட்டுப் பத்திரம் வழங்கவும் புதிய சட்டம் ஒன்றை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நீதிபதிகள் சங்கம், இந்தச் சட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கண்டனம் செய்துள்ளார்கள்.
100 ரூபாய்க்கு கீழே வாங்குவதை லஞ்சம் என்று சொல்வது அந்த வார்த்தைக்கு அளிக்கப்படும் அநீதி என்றும் அதனை வேண்டுமென்றால் ‘பிச்சை’ என்று சொல்லலாம் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்விஸ் வங்கிகள்:
ஊழல் வருமானத்தை உழைத்த வருமானமாக கணக்கில் கொண்டு, வருமான வரி செலுத்தினால் நாடு வேகமாக முன்னேறும் என்று முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறுகையில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஸ்விஸ் வங்கிகள் தங்களது கிளைகளைத் திறக்க, BJP அரசு முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்துடன்  இந்த செய்தித்தொகுப்பு  முடிவடைந்தது , ஜெயா ஹிந்த்.


பின்குறிப்பு : இந்த மணித்துளி  வரை இது வெறும் கற்பனை என்பதை நினைத்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது .You never Know.

20 comments:

  1. you never know...!!! :)
    சூப்பர்ரே...

    ReplyDelete
  2. அருமை சகோ!!!
    நன்றி!!!

    ReplyDelete
  3. remba nalla irukkae , naanum try pannava? keep it up

    ReplyDelete
    Replies
    1. அம்மா ஆட்சியிலே எதுவும் சாத்தியம்தான் , ம்ம் ஆரம்பிக்கட்டும் அளப்பரை மாதவன் .

      Delete
  4. Thank god!!, இது வெறும் கற்பனை.

    //தமிழ்நாட்டின் தேசியகீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது// - மாநிலகீதமாக ? :)

    ReplyDelete
    Replies
    1. எது மாநிலமா ? அம்மா ஆட்சியிலேதமிழ்நாடு தனி தேசம் ஆனது உங்களுக்கு தெரியாதா கவிஞரே ?

      Delete
  5. சகோ..... இப்படி எல்லாம் கற்பனை !!! உங்க சுவிஸ் அக்கௌன்ட் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேன்கறீங்க !

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன வேணாம்னா சொல்றேன் ? , அதுக்கு முதல கட்சியில சேரனும்
      நம்மளை எல்லாம் கட்சியில் சேர்த்துக்க மாட்டேன்கரைங்க ?
      அமெரிக்க அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆக நான் ரெடி

      Delete
  6. இப்படியெல்லாம் சொல்லி பீதியை கிளப்பிவிட்டீர்களே.....😳

    ReplyDelete
    Replies
    1. பாதி சொன்னதற்கே இப்படி பீதி ஆயிட்டீங்களே ஸ்ரீவித்யா ?

      Delete
  7. கற்பனை அருமை..பாராட்டுக்கள்... இந்த பதிவி ஜெயவிரோதபதிவாக இருப்பதால் இந்தியாவிற்கு நீங்கள் செல்லும் போது ஜெயலலிதா அவர்கள் உங்களுக்கு சிறப்பு பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு பண்ணப் போவதாக சொல்லி இருக்கிறார்களாம்

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி பாராட்டெல்லாம் வேணாம் , இருக்கட்டும் பரவாயில்லை .

      Delete
  8. இப்படி நடந்தாலும் நடக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ நடக்குமா ?

      Delete
  9. உங்கள் கற்பனை நிஜமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அம்மாச்சி ஆட்சியிலே எது வேணாம் நடக்கும் கும்மாச்சி .

      Delete