Monday, May 11, 2015

பொற்கைப் பாண்டியனும் ஒற்கைப் பாண்டியனும் !!!!!!!!!!!



"ஏலே சேகரு பொற்கைப் பாண்டியனைப் பத்திப் படிச்சிருக்கேன், அதென்ன ஒற்கைப்பாண்டியன் ?".
"இல்லடா மகேந்திரா ஒரு கைப் பாண்டியனைத்தான் ஒற்கைப் பாண்டியன்னு சொன்னேன்".
"அது எவண்டா ஒற்கைப்பாண்டியன் ? "
"சாட்சாத் நாந்தேன்"
"என்னடா குழப்புற ஒற்கைப் பாண்டியன் நீயா?"
“ஆமாடா அதையேன் கேக்கற, சொல்றேன் சொல்றேன்.போன வருஷம் குளிர்காலம், ஜனவரின்னு நினைக்கிறேன். வாழ்க்கையில எந்த சாதனையும் செய்யாம இருக்கமே, இப்படியே நம்ம ஜென்மம் முடிஞ்சு போயிருமோன்னு கவலைப்பட்டுக்கிட்டே நடந்துட்டிருந்தேன்.முந்தின வாரம் பேஞ்ச 11/2 அடி 'ஸ்னோ' பல இடங்களில் கரைஞ்சும் கரையாம கிடந்துச்சு. அங்கங்க பிளாக் ஐஸ்சும் இருந்துச்சு. என்ன செய்றது வேலைக்குப் போய்தானே ஆகனும்.”
"ஏண்டா ஐஸ்ல நடந்து போய்ட்டு வர்றதே பெரிய சாதனைதாண்டா" .
"இல்லடா நான் நினைச்சது அதுக்கும் மேல. போய்க்கிட்டிருந்தேனா, திடீர்னு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. கராத்தே ஹூசைனி என்னோட சீனியர்தானே, என்னல்லாம் சாதனை செய்றாரு, நம்ம அதே காலேஜில (மதுரை சமூகப் பணிக் கல்லூரி) தான  MA  படிச்சோம் . நாம ஏதாவது செய்யனும்னு தோணிச்சு”.
Jayalalithaa's supporter Shihan Hussaini

"எதைச் சொல்ற? அம்மா விடுதலையாகனும்னு சிலுவையில அரைஞ்சிட்டு தொங்கினானே அதச் சொல்றியா, ஏண்டா அது சாதனையா? உலகமகா வேதனைடா சுத்தமான அக்மார்க் அடிமைத்தனம் ".
"இல்லடா அதைச் சொல்லல, இந்த ஸ் ஒடைக்கிறது, பாம்போட வெளையாடறாது, தீக்குளிக்கிறது இப்படி பல சாதனை செஞ்ச்சிருக்காரே”.   
"ஐயையோ தீக்குளிக்கிறதா ஏலே கிறுக்குப் பரதேசி, அப்படி எதுவும் செய்துடப்போற".
“இல்லடா இந்த ஐஸ்ஸை உடைச்சுப் பாக்கலாமேன்னு தோணிச்சு”
“ஏலே உனக்குத்தான் கையெல்லாம் குச்சி குச்சியாய் இருக்குமே, எதுக்குடா ஒனக்கு இதெல்லாம். அட  அப்புறம், என்னாச்சு?
அதனாலதாண்டா என் தினவெடுத்த தோளை யூஸ் பண்ணேன். காலுக்குக் கீழே ஐஸ்ஸை பாத்தவுடன் உடனே உடைச்சுப் பாக்கத் தோணிச்சு, இன்னிக்கு ஐஸ்சா நானான்னு பாத்துரலாம்னு, என் முழுப் பலத்தோட இடது தோளை வைச்சு படாருன்னு ஐஸ்மேல விழுந்தேன்”.
“அடங்கொக்கமக்கா அப்புறம்? “
“ஐஸ்ஸை ஒடைச்சுட்டேன்ல”
அட பரவாயில்லையே ஐஸ் சுக்கல் சுக்கலா போயிருச்சா”
“சுக்கலா " என்னடா மகேந்திரா நக்கலா? இலேசாக் கீறல் விட்டுறுச்சு”.
 “ஓ வெறும் கீறல்தானா, அப்ப உன் தோளுக்கு எதும் ஆச்சா?
“ஆமடா இலேசாக்கீறல் விட்டுறுச்சு”
டேய் நான் தோளைக் கேட்டேன்”
“தோள்ல தாண்டா,அங்கேயும்தான்  இலேசாக்கீறல் விட்டுறுச்சு”
 “என்னது தோள்லயா, அப்ப நீயும் ஜெயிச்சுட்டே ஐஸ்சும் ஜெயிச்சிருச்சு, இதத்தான் வின்வின் (win-win)சிட்டுவேசன்னு சொல்வாங்களா “?
“வின்வின்னோ, லூஸ்லூஸோ, தோள்ல வலி விண் விண்ணுண்ணு உயிரை எடுத்துருச்சு.ஆனா ஆறு மாசம் கழிச்சுத்தான் வலியே ஆரம்பிச்சுச்சு. அந்தக் கீறலைக் கண்டுபிடிக்க 9 மாசம்  ஆச்சு. எக்ஸ்ரே எடுத்துப்பாத்துக்கூட ஒன்னும் தெரியல. கடைசில  MRI-லதான் தெரிஞ்சிச்சு. சின்னக் கீறல்தான் 1cm  அளவுதான்”
“எங்கே எலும்பிலயா? உன் எலும்பு ரொம்ப ஸ்ட்ராங்  ஆச்சே?ஏன்னா அது ஒன்னுதானே உருப்படியாஇருக்கு ?”
“நீ சொன்னது சரிதான். ஆனா கீறல் விழுந்தது தோள்பட்டை ரொட்டேட்டர் கப் உள்ளே உள்ள ஒரு திசுவுல (Full thickness tear). படுத்தி எடுத்துரிச்சு, அசைக்க முடியல தூக்கமுடியல, ஆர்த்தோ டாக்டர்ட்ட போனா, இதுக்கு ஒரே வழி சர்ஜரி தான்னு சொல்லிட்டார். ரெண்டு வாரம் முன்னால ஏப்ரல் 17-ல் தான் சர்ஜரி நடந்தது. இப்பக்கையில் கட்டோடு அலையிறேன் .இதாண்டா ஒற்கைப் பாண்டியனின் கதை”.
“சரி இது சரியாக எத்தனை நாள் ஆகும்”?
“ரெண்டு வாரம் வீட்டில ரெஸ்ட், 2 மாதம் கழிச்சுத்தான் கைக் கட்டை அவிழ்க்கனும், மூணு மாசம் கழிச்சுத்தான் டிரைவ் பண்ணலாம், இப்பயிருந்து மூணுமாசம் ஃபிசிக்கல் தெரபி பண்ணனும் (குறைந்த பட்சம்) அப்பதான் கையில ஃபுல் ரேஞ்ச் ஆஃப் மோஷன் கிடைக்குமாம்”.
“ஓ இந்தச் சின்னக்கீறலுக்கு இவ்வளவு பிரச்சனையா? ஆமா அந்த ஐஸ்ல விழுந்த கீறல் என்னாச்சு?
டேய் என்ன லந்து பண்றயா? அது உருகி ஓடியிருக்கும்”.
“ஹாஸ்பிட்டலில் ஏதாவது சுவாரஸ்யமா நடந்துச்சா”?
“ஏண்டா ஹாஸ்பிட்டலுக்கு  நான் ஆப்பரேஷனுக்குப் போனேனா இல்ல வேறு எதுக்குமா “?
“அது இல்லடா, நீ போனா எதுனாலும் நடக்குமே”?
new york hospital queens, new york hospital queens retrofitting, new york hospital queens goes green, NYHQ, NYHQ goes green, green hospitals, green hospitals nyc, green hospitals queens, hospital green retrofitting

“குயின்சில் மெய்ன் ஸ்ட்ரிட்ல இருக்கிற நியூயார்க் ஹாஸ்பிட்ல்லதான் சர்ஜரி நடந்தது. ரொம்ப பிரமாண்டமான ஆஸ்பத்திரி.உள்ளே ரிஜிஸ்டிரேஷன் இடத்தில ஒரு பெரிய லாங்குவேஜ் லிஸ்ட்டே இருந்துச்சு. அந்த மொழியில பேசறவுங்க வந்தா அந்த மொழி பேசற இன்டர்பிரட்டரே வருவாங்க. அதுல இந்தி உள்ளிட்ட பல மொழிகள் இருந்துச்சு. ஆனா தமிழைக்காணோம். எனக்கு கெட்ட கோபம் வந்துச்சு. மறத்தமிழன் அதுவும் மதுரைத் தமிழன் இல்லையா? தமிழுக்கு மரியாதை கொடுக்காத இந்த மருத்துவமனை வேணாம்னு எந்திரிச்சிட்டேன் “.  
“ஐயையோ அப்புறம் என்னாச்சு”?

“என் மனைவிதான், அட மடத்தமிழா, அந்த வேறு மொழில பேசற நிறையப் பேருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் தெரியாதவங்களுக்குத்தான் இன்டர்பிரட்டர் தேவை. இங்க வாழ்ற தமிழனுக்குத்தான் ஆங்கிலம் நல்லாத் தெரியுமே, இன்னும் சொல்லப்போனா தமிழ்தான் ஒழுங்காத்தெரியாதுன்னு சொல்லிப்புரிய வச்சா “.
அப்புறம் உள்ள போய் ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து, இடது தோளில் ஒரு நாலு ஓட்டையைப் போட்டு ஆர்த்தோஸ்கோபி பண்ணி முடிச்சாங்க. காலையில 10 மணிக்கு ஆரம்பிச்சு, 1 1/2 மணி நேரம் சர்ஜரி. அப்புறம் ரெகவரி பெட்ல போட்டு நினைவு திரும்பி நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க. இடது புறத்தில கை மட்டும்தான் கொஞ்சம் தொளதொளன்னு கிடந்துச்சு.  
"ஆமாமா இல்லேன்னாலும் பெரிய ஜிம் பாடி".
ஏய் வேணாம், நமக்கு ஏற்கனவே அறிமுகமான பாஸ்டர் ஜான்சன் ரத்தினசாமி அதான் ‘ரேட் ஹின சமி” ஆஸ்பத்திரியில கூடவே இருந்தார். தமிழ்ச்சங்க நண்பர்கள் ரங்கா, கவிஞர் சிவபாலன் வீட்டுக்கு வந்து விசாரிச்சாங்க. அதுதவிர நம்ம பர்சனல் தொலைபேசி, அலைபேசி, Face Book, Whats up, Email னு நலம் விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
 ஒரு வாரம் வீட்டில முடங்கிட்டு ரெண்டாவது வாரம்தான் சர்ச்சுக்குப் போனேன். எல்லாத்துக்கும் பதில் சொல்றதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு. நம்ம Bro ஃபிலிப் விக்டர் ஒரு ஜேர்னலிஸ்ட், அல் ஜசிரா டெலிவிஷன் வேலை செய்றான். அப்பதான் இந்த கீறலான முழுக்கதையும் ஒரு மாரலா இருக்கட்டுமேனு ஓரலா சொன்னேன்.
"என்னது அல்ஜசீராவா அவன்ட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருடா".
கொஞ்ச நேரங்கழிச்சு திரும்பிப்பார்த்தா பிலிப்பு என் மனைவிட்ட ஏதோ கையைக் கையை ஆட்டி சொல்லிட்டிருந்தான். சரி கிட்டப்போய் என்ன சொல்றான்னு கேட்போம்னு பாத்தா அவன் சொல்றான்.
"ஏன்க்கா பிரச்னை எவ்வளவு பெரிசானாலும், பேசித் தீர்த்துக்க வேண்டியதுதானே, என்ன இப்படிப் பண்ணிட்டீங்க, அண்ணன் பாவம்லன்னு" சொன்னானே பாக்கலாம்.அடங் கொக்க மக்கா, என்னதான் பில்ட் அப் கொடுத்தாலும் எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ? 
முற்றும்




6 comments:

  1. இதுக்குதானப்பா அமெரிக்கன் காலேஜில் படிக்கணும் என்கிறது மனைவிகிட்ட அடிவாங்கி கையை உடைச்சுகிட்டாலும் அப்படி நடக்காத மாதிரி எவ்வளவு அருமையாக நகைச்சுவை உணர்வோடா எழுதி இருக்கிறீங்க. எது எப்படியோ இப்போ நலமாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து மிகவும் சந்தோஷமே

    ReplyDelete
  2. //ரெண்டு வாரம் வீட்டில ரெஸ்ட், 2 மாதம் கழிச்சுத்தான் கைக் கட்டை அவிழ்க்கனும், மூணு மாசம் கழிச்சுத்தான் டிரைவ் பண்ணலாம், இப்பயிருந்து மூணுமாசம் ஃபிசிக்கல் தெரபி பண்ணனும் (குறைந்த பட்சம்) அப்பதான் கையில ஃபுல் ரேஞ்ச் ஆஃப் மோஷன் கிடைக்குமாம்”.///

    இது உண்மையா என்று FBI யை வைத்துதான் விசாரிக்கணும் வீட்டு வேலை செய்வதில் இருந்து தப்பிக்க நீங்க மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்து இப்படி ரிப்போர்ட் எழுதி வாங்கி இருக்கீங்க போல இருக்குது என்று என் உள் மனசு சொல்லுது

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் உதவி செய்யாவிட்டாலும் இப்படி காட்டிக்கொடுத்து உபத்ரவம் செய்யாமல் இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  3. தற்போது பூரண நலம் தானே...?

    ReplyDelete
    Replies
    1. விரைவில் நலமடையத்தான் விருப்பம் தனபாலன்.

      Delete
  4. Please take good care..Get Well Soon..
    உங்கள் சேவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு தேவை..

    ReplyDelete