Thursday, September 18, 2014

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் 2014: பாயும் புலி வீனஸ் வில்லியம்ஸ்

          

      ஆகஸ்ட் மாதம் பிறந்தவுடனேயேடென்னிஸ் வருமே என்ற நினைப்பு வந்து மறைந்தது. அந்தப்பக்கம் டிரைவ் செய்யும் போதெல்லாம் அது மீண்டும் மீண்டும் வந்தது. சீக்கிரம் டிக்கட்டுகளை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கும்போதுஎன் மனைவி ஃபோன் செய்துயு. எஸ்.ஓபனுக்கு 2 டிக்கட்டு இருக்கிறது என்றாள். ஆஹா ஓசியில் கிடைத்து விட்டது ரெட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது(எலேய் பரதேசி , சரியான அல்பம்டா நீ  ).


டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 27, 2014 புதனன்று மாலை ஏழு மணிக்கு, ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டிகளுக்கு. கடைசி நிமிடத்தில் என் மனைவி வரவில்லை என்று சொல்லிவிட, என் நண்பர் Chuck -ஐ (சிற்றரசுதான் Chuck என்று இங்கு மாறிவிட்டது) அழைத்தேன். டென்னிஸில் எத்தனைகோல் போட வேண்டும் என்று கேட்குமளவுக்கு அவருக்கு டென்னிஸ் அறிவு குறைவாக இருந்தாலும், எனக்கு கம்பெனி கொடுக்க ஒத்துக்கொண்டார். (ஏலேய் பரதேசி உனக்கு மட்டும் ரொம்ப தெரியுமோ ?)
புதனன்று மாலை ஆபிசிலிருந்து கிளம்பி 'F' டிரைன் பிடித்து ஜாக்சன் ஹெய்ட்சில் '7'டிரைன் பிடித்து மெட்ஸ் வில்லட்ஸ் பாய்ண்ட் ஸ்டாப்பில் இறங்கி வெளியே வந்தால் ஜேஜே என்று கூட்டம். US Open 2014 என்ற டி ஷர்ட் போட்ட பல வாலன்டிய தோழிகள் (ஏன் சகோதரிகள்னு   சொல்லக்கூடாதா ?) வரவேற்று வழிகாட்டினர்.
போகும் வழியில் மேன்ஹாட்டன், மற்றும் லாங் ஐலன்டை இணைக்கும் லாங் ஐலன்ட் ரெயில்  ரோடு (LIRR) கம்பெனியின் சிறப்பு ரயில் நிலையம் இருந்தது.சப்வே ஸ்டேஷனிலிருந்து விளையாட்டு அரங்கத்துக்குச் செல்லும் அகலமான வழி முழுவதும் மரப்பலகைகளைக் கொண்டு அமைத்த பாதை இருந்தது (Board walk) .
நடந்து உள்ளே போனால் ,ஃபிளஷிங் கரோனா கிரவுண்டில் ஒரு தனி நகரமே உருவாகியிருந்தது.எங்கு பார்த்தாலும் மின்னும் விளக்குகள், டிஸ்பிளே போர்டுகள், சிறு சிறு ஸ்டால்கள், ஸ்பான்சர்களின் ஷோ ரூம்கள், பியர், ஷாம்பெய்ன் விற்கும் கடைகள், ரெஸ்டாரன்டுகள் என்று எங்கு பார்த்தாலும் தலைகளாய்த் தெரிந்தன.

கிரௌண்ட் உள்ளே போவதற்கு பெரிய பெரிய லைன்கள். ஸ்பான்சர், ஸ்டாஃப், விளையாட்டு வீரர்கள், அவர்களின் உதவியாளர்கள் என்று தனித்தனி வழிகள் இருந்தன. பார்க்க வந்த எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு கையில் பை இருந்தால் தனி லைன். முழுவதுமாக செக் செய்துதான் உள்ளே அனுப்பினார்கள். உள்ளே பல சிறிய அரங்குகளில் டென்னிஸ் நடந்து கொண்டிருந்தது. அரங்குகளில்  ஆர்தர் ஆஷ் ஸ்டேடியம் மிகப்பெரியது.

நிறைய TV சேனல்கள் தனித்தனி ஸ்டால் போட்டு லைவ் ரிலே பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றில் தான் டெய்லர் டென்டைப் (Taylor Dent) பார்த்தேன். அமெரிக்க பிளேயரான டெய்லர், ஒரு சமயத்தில் டென்னிஸ் ரேங்கில் உலகத்தின் டாப் 21-ஆக இருந்தவர். நான்கு முறை சிங்கில்  டைட்டிலை வென்றவர், சர்ஜரி செய்தும் தீராத முதுகு வலியால் 2010ல் ரிட்டயர் ஆகிவிட்டார். ஆனால் உடம்பு செம ஃபிட்டாக இருந்தது.
With Taylor Dent


மாலை 7 மணி மேட்சுக்கு வந்த என்னைபோன்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் வெளியே நின்றிருந்தோம். ஸ்டேடியத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய ஃபெளன்டன் இருந்தது. இசைக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் நீர்க்கற்றைகள் வர்ணஜாலம் காட்டின.
அதன் முன்னே மிகப்பெரிய TV  ஸ்கிரீனில் உள்ளே நடந்த மாட்சைக் காண்பித்துக் கொண்டிருந்தனர். உற்றுப் பார்த்தால் அட, "மரியா ஷரபோவா"வும்(ரஷ்யா) உக்ரைனைச் சேர்ந்த அலெக்சான்ரா டல்கெரியும் ஆடிக்கொண்டிருந்தனர். ஆறு மணிக்கே முடிய வேண்டியது 7.30 வரை நீடித்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே மரியா ஷரபோவாதான்  வென்றார்.
Maria Sharapova
சச்சினை தெரியாது என்று லண்டன் விம்பிள்டனில் சொன்னவர் இவர்தான். இங்கிலாந்தின் அடிமை நாடுகளில் மட்டும் விளையாடப்படும் கிரிக்கட்டைப் பற்றியும் அதில் ஆடும் இந்தியர் ஒருவரைப் பற்றியும் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அறிந்திருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்.
ஒருவழியாக 8 மணிக்கு கேட் திறக்க, கடலலை போல் மக்கள் ஆர்ப்பரித்து உள்ளே சென்றனர். ஒருகாரியம் சொல்லியே ஆகவேண்டும். ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும், அடித்துக் கொள்வதோ முந்துவதோ இல்லாமல் தாங்களாகவே அமைத்துக் கொண்ட வரிசையில் ஒருவரை ஒருவர் நெருக்காமல், தொடாமல் உள்ளே சென்றார்கள். பியர் ஷாம்பெய்ன் விஸ்கி மற்றும் ஃபெளன்டன்  சோடாவில் பல வகைகள் இருந்தும் ஒரு பெருமூச்சு விட்டபடி வழக்கம்போல் டயட் வாட்டரை வாங்கிக் கொண்டேன்.
Fountain
என் இருக்கை 312ஆம் செக்னில் D வரிசையில் 9 & 10-ஆம் இருக்கைகள். அங்கே ஸ்டாஃபிடம் காண்பிக்க, மேலே போகச்சொன்னார்கள். இன்னும் மேலே இன்னும் மேலே என்று சென்று கிட்டத்தட்ட நிலவைத் தொடும் அளவுக்கு வந்துவிட்டோம். கீ........................ழே கிரெளன்ட் தெரிந்தது. அங்குள்ளவர்கள் பூனை அளவுதான் தெரிந்தார்கள். இதுதான் கடைசிபோல் தெரிந்தாலும் எங்களுக்கும் மேலே பத்துக்கும் மேலே வரிசைகள் இருந்தன. ஆர்தர் ஆஷ் ஸ்டேடியம் உலகத்திலேயே மிகப்பெரியது. ஒரே நேரத்தில் 22,547 பேர் முன்னால் உள்ளவர் தலை மறைக்காமல் பார்க்க முடியும். Who wants to be millionaire show புகழ் ரீஜிஸ் ஃபில்பர்ன் உள்பட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.


கீழே கிரெளன்டின் அருகில் டிக்கட்டுகள் எவ்வளவு இருக்குமென நினைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டேன்.
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி"
"நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு"
என்ற பாடலை சற்றே மாற்றி, மேலே பார்த்து
உனக்கும் மேலே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு
-என்று பாடிக்கொண்டேன்.
குளோஸ் அப்பில் பார்க்க வேண்டுமென்றால் இருபுறமும் பெரிய டிவி ஸ்கிரீன்கள் இருந்தன. அந்தரத்தில் தொங்கிய ரோபோ கேமரா அங்கு மிங்கும் அலை பாய்ந்து பெரிய ஸ்கிரீனில் லைவ்ரிலே செய்தது. என்னவோ தெரியல என் பக்கம் சுத்தமா வரவேயில்லை ( CIA சதியா இருக்குமோ? ).அதுதவிர அரங்கத்தைச்சுற்றி பல நாட்டு மூவி கேமராக்கள்.
கிரவுன்டின் உள்ளே சுற்றிலும் தயார் நிலையில் பொறுக்கிகள் இருந்தார்கள். கலவரப்பட வேண்டாம். பந்து பொறுக்கும் சிறுவர், சிறுமிகளைத்தான் அப்படிச் சொன்னேன்.
Venus Williams
லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், வெல்கம் டிமியா பக்ஸின்ஸ்கி  (Timea Bacsinzky) என்ற சத்தம் கேட்டது. ஸ்விஸ் பிளேயரான இவர் பெண்கள் டென்னிசில் முன்னணி ஆட்டக்காரர். வரும் வழியில் மடக்கிப்பிடித்து சில கேள்விகள் கேட்பது ஸ்கிரீனில் தெரிந்தது, கேட்டது. கைதட்டலுடன் வரவேற்றோம். சில நொடிகள் பின்னால் கருஞ்சிறுத்தை போல் வீனஸ் வில்லியம்ஸ் வர அரங்கம் அதிர்ந்தது. உள்ளூர்க் காரர் அல்லவா. 35 வயதிலும் சூப்பர் ஃபிட்.
தன் சகோதரி செரினா வில்லியம்ஸ் அளவுக்கு வெற்றிகள் குவிக்காவிட்டாலும் இவரது ரெக்கார்டும் நல்ல ரெக்கார்டுதான். சேர் அம்பயர் 'மாரா' வந்து டாஸ் போட்டு சைட் வேண்டுமா செர்வ் பண்ண வேண்டுமா எனத் தீர்மானிக்க, ஆட்டம் துவங்கியது.
முதல் செட்டில் 6க்கு 1 என்ற கணக்கில் வீனஸ் சுலபமாக ஜெயித்தார். 2-ஆவது செட்டில் திமியா முதல் கேமை விட்டாலும், தொடர்ந்து மூன்று கேம்களை ஜெயித்து முன்னணி பெற கேம் சூடு பிடித்தது. ஒரு சமயத்தில் 4/4 என்று equal ஆகி நகம் கடிக்க வைத்தது. Deuce, Double point, Break point / Advantage என மாறி மாறி வந்தது. ஆனால் கடைசியில் 6க்கு 4 என்ற விகிதத்தில் வீனஸ் ஜெயிக்க, பெஸ்ட் ஆஃப் த்ரீ  என்ற கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் அந்த மேட்ச்சை ஜெயித்தார்.
Stan Wawrinka 
 அது முடிந்து ரெண்டாவது மேட்ச்சும் ஆரம்பித்தது. ஸ்டேன் வாவ்ரின்கா (stan wawrinka-swiss)  தாமஸ் பெலுக்ச்சி (Thomas Bellucci-Brazil). முதல் செட்டை 6-3 என்றும் 2ஆவது செட்டை 6-4 என்றும் வாவ்ரின்கா ஜெயிக்க, இவர்தான் சமீபத்திய ஆஸ்திரேலியன் ஓபனை ஜெயித்தவர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. அப்போதே இரவு 11.30 மணி ஆகிவிட்டது. ஆனால் மேட்ச் ஒன் சைடாகவே அவ்வளவு சுவாரஸ்யமாய் இல்லாததாலும் நள்ளிரவுக்குள் வீட்டுக்குள் செல்லாவிட்டால், கோட்டைக்கதவு அடைத்து விடும் என்பதாலும் கிளம்பி விட்டேன். ஆனால் நான் வந்த பிறகுதான் மேட்ச் நன்றாக சூடுபிடித்து மாறி மாறி ஜெயித்து 12.30 மணிவரை போனதாம். ஆனாலும் ஜெயித்தது வாவ்ரின்காதான்.

யு எஸ் ஓபன் பற்றி சில தகவல்கள்.
1.    நியூயார்க்கின் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டி
2.    உலக அளவில் அதிக அளவில் ரசிகர்கள்  குவியும் போட்டி.
3.    கிரான்ட்  ஸ்லாம் போட்டிகளில் தலையாயது.
4.    உலகின் மிகச்சிறந்த டோர்னமென்ட்.
5.    ஏழுலட்சம் பேர் கூடும் ஒரே விளையாட்டு. இதில் 43% வெளியூரிலிருந்தும், 15% வெளிநாடுகளிலிருந்தும் வருகிறார்கள்.
6.    யு.எஸ்.ஓபன் மூலம் நியூயார்க் நகரத்துக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் ஆயிரம் மில்லியன் டாலர்கள்.
7.    ஒரு டிக்கட்டின் ஆவரேஜ் மதிப்பு $142 டாலர்கள். ஏழு வருடங்களில் 30% ஏறியுள்ளது.
8.    பத்து வருடத்தில் நடந்த 19 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றது ஐந்தே ஐந்து வீரர்கள் மட்டுமே.
1.    Rafael Nadal  -8
2.    Novak Dfokovic -6
3.    Roger Federer -2
4.    Andy Murray -2
5.    Stan Wawrinka -1

சானியா மிர்சா ஜோடி Mixed Doubles-ல் பதக்கம் வென்றது இந்தியாவுக்கு. ஒரு கடைசி நேர  ஹைலைட்   ஆறுதல்.

10 comments:

  1. ம்ம்ம்... இதுக்கு எல்லாம் கொடுத்து வைச்சி இருக்கணும் அண்ணே. இலவச டிக்கட்,அதுவும் மனைவியே எடுத்து வந்து .. .அதுவும் மனைவி வராமலே, அதுவும் ஒரு நண்பனோட, அதுவும் இந்த விள்ளையாட்ட பற்றி தெரியாத நண்பனோட (நம்மக்கு தான் தெரியும்ன்னு அலடீக்கலாம், பாருங்க) அதுவும் ஆர்தர் அஷ் அரங்கத்தில, அதுவும் பெண்கள் ஆட்டத்தில... அதுவும்... அதுவும்ன்னு... மூச்சு வாங்குது...
    சரி, அந்த அம்மா சச்சினை தெரியாதுன்னு சொன்னாங்களே... நீங்களும் நேரா போய் உன்னை யாருன்னே எனக்கு தெரியாதுன்னு ஒரு வீம்பா பேசிட்டு வந்து இருந்திங்கனா... நம்ம சச்சின் ரசிகர்கள் எல்லாம் எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தவரை தெரியாது என்பதும் , தெரியாதவரை தெரிந்தவர் என்று சொல்வதும் இக்கட்டில் அல்லவா ஆழ்த்திவிடும் தம்பி விசு .

      Delete
  2. டென்னிஸ் பார்க்க போன மாதிரி இல்லையே....நீங்க போட்ட முதல் படத்தில் நீங்க டென்னிஸ்கோர்ட்டை பார்க்காமல் வல்து புறம் இருக்கும் பெண்ணை பார்ப்பது போல இருக்கே... ஆமாம் அந்த போட்டோவில் வலது புறம் இருக்கு பொண்ணின் முகத்தை மறைத்து எடுத்தது ஏணோ?

    ReplyDelete
    Replies
    1. பக்கத்தில் இருந்து பார்த்தது போல் பளிச்சென்று கண்டுபிடித்து சொல்வதில் உமக்கு நிகர் யாருமில்லை தலிவா

      Delete
  3. டென்னிஸ் பார்க்க போயிட்டு தண்ணி பாட்டிலை வாங்கினேன் என்று பப்ளிக்கா சொல்லுரீங்கலே உங்களுக்கு வெட்கமா இல்லை....டென்னிஸ் பார்க்க வருகிற 21 வயசுக்கு மேல் உள்ளவங்களுக்கு தண்ணி பாட்டில் கிடையாதுன்னு சட்டம் கொண்டு வரணும் அப்பதான் உங்களை மாதிரி உள்ள ஆளுங்க பீர்பாட்டிலையாவது வாங்குவீங்க

    ReplyDelete
    Replies
    1. அது கூட தண்ணி என்று சொன்னால் தப்பாய் நினைத்து விடுவார்கள் என்றுதான் வாட்டர் என்று குறிப்பிட்டுள்ளேன்.

      Delete
  4. //வரிசையில் ஒருவரை ஒருவர் நெருக்காமல், தொடாமல் உள்ளே சென்றார்கள்.//

    பிடிக்கும். வழியில்லை!

    // கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் தலையாயது.//

    நீங்களா சொல்லிக்கிறதா..? அவங்க என்னடான்னா... விம்பிள்டன் தான் ஆஹோ,,ஓஹோன்னு சொல்லிக்கிறாங்க ... என்னமோ போங்க...!

    //இங்கிலாந்தின் அடிமை நாடுகளில் மட்டும் விளையாடப்படும் கிரிக்கட்டைப் பற்றியும் //

    இது ரொம்ப பிடிச்சிது ........


    ReplyDelete
    Replies
    1. விம்பிள்டன் தலையாயது என்று ஒரு வேளை இங்கிலாந்தின் அடிமை நாடுகளில் சொல்கிறார்களோ என்னமோ ?

      Delete
  5. நல்ல அனுபவம்.... அடித்துப் பிடித்து தள்ளு முள்ளு இல்லாமல் உள்ளே நுழைவது நல்ல விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete