Thursday, August 29, 2013

யாரடி நீ மோகினி? Part 1: மோகினிப்பிசாசு


மோகினிப்பிசாசு சுத்துதுன்னு ஹாஸ்டல் பூரா ஒரே புரளி. நள்ளிரவில் வெள்ளை உருவமொன்று சலங்கை சத்தத்தோடு ஹாஸ்டலைச்சுத்தி உலவுவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். தென்னந்தோப்புக்கு மறுபக்கமிருந்த பெண்கள் ஹாஸ்டல் வரை இது பரவிவிட்டது. பசங்களுக்கு ஒரே பயம். ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவருமே சலங்கை சத்தத்தை கேட்டதோடு சிலபேர் மோகினியைப்பார்த்தும் பலபேர் பார்க்காமலும் பார்த்த மாதிரி கதைகட்டி கூடிக் கூடி அதைப் பற்றி பேசினர். மாலை வந்தால் ரூமைவிட்டு வெளியே வரவே பயந்தனர். இரவில் பாத்ரூம் வந்தா என்ன செய்யறதுன்னு, நைட் சாப்பாட்டைக்கூட குறைச்சிட்டாய்ங்க. ராத்திரி வந்தா போர்வையை போத்திக்கிட்டு நெருக்க நெருக்கமா படுத்தாய்ங்க.
ஆனா எனக்கு மட்டும் பயமேயில்லைங்க. ஏன்னு கேக்கறீங்களா ? ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை? ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா? நாங்கதாங்க  அந்த மோகினிப் பிசாசு. ஒன்னும் ஆச்சரியப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையாக்கேளுங்க.
"டேய் நாமளே ஒயின் தயாரித்தால் 
என்ன?" திடீரென்று ஒரு நாள் ஆறுமுகம் கேட்டான். சும்மார்றா  அதெல்லாம் வேலைக்காவாது" இது நான். நான் காந்திகிராமத்தில் பிளஸ்-2 படிக்கும்போது ஹாஸ்டலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் உண்டு. ஒரு புறம் முதிர்ந்த நீண்ட தென்னை மரங்கள், மறுபுறம் ஹைபிரிட் குட்டை மரங்கள். சிறிது ஏறினாலே பறித்துவிடலாம். சுற்றிலும் தோட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலோ என்னவோ என் பள்ளியின் பெயர் “தம்பித்தோட்டம்”. 
இரவு நேரங்களில் சைலன்ட் ஸ்டடி நடக்கும் போது நழுவி, வாட்ச்மேன் கண்களுக்குத்தப்பி, சாப்பிடும் எளனியும், வழுக்கையும் ஆஹா இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று இளநீராவது சாப்பிட்டால்தான் திருப்தி. இந்த ஆறுமுகம் பய ரொம்ப மோசம். திருட்டு எளனி சாப்பிட்டதோடு வாட்ச்மேன் தாத்தாட்ட போய் சாதுவாக "தாத்தா எவனோ களவாணிப்பயக நேத்து எளனி சாப்பிட்டுட்டு மட்டையைப் பரப்பி வச்சிருக்காய்ங்க" என்று கம்பிளைன்ட் செய்வான். நான் ஆறுமுகம் மற்றும் ஜோசப்தான் கூட்டாளிங்க. எல்லா திருட்டு வேலைக்கும் ஆறுமுகம் ஐடியா கொடுப்பான். ஜோசப் நடைமுறைப்படுத்துவான். நான் சைலன்ட் பார்ட்னர்.
அப்பதான் இந்த ஐடியாவை ஆறுமுகம் சொன்னான். "சரிடா செஞ்சு பார்த்திரலாம்ன்ட்டு"  ஜோசப் சொன்னான். நாங்க மூனுபேரும் ஒரு வாரமா பிளான் செஞ்சு, தென்னந்தோப்புல மோகினி சுத்தறதா வதந்தியைக் கிளப்பினோம். அதை உண்மையாக்க சனிக்கிழமை ஃப்ரீ டைம் விடும்போது, சின்னாளபட்டி சந்தையிலே மாட்டுச்சலங்கையை வாங்கிவந்தான் ஜோசப். எல்லாரும் தூங்கினப்புறம், ஆறுமுகம் கைலியைப்  போர்த்திக்கிட்டு சலங்கையை ஆட்டிக்கிட்டே ஹாஸ்டலைச் சுத்தி வந்ததோடு வாட்ச்மேன் தாத்தா குடிசையையும் சுத்தி வந்தான். ஹாஸ்டல் மொத்தமும் பயத்துல நடுங்கிட்டு இருந்துச்சு. தெரியாம நைட்ஷோ போவதுகூட நின்னுபோச்சு. வாட்ச்மேன் தாத்தா முதல்ல தைரியமா இருந்தாலும், அவர் பொண்டாட்டி ரொம்ப பயந்து, அவரையும் வெளியே விடல.

 தொடரும் >>>>>>>>>>

11 comments:

  1. அண்ணே ... இந்த குழந்தை முகத்தை வச்சிகிட்டு எவ்ளோ வேல பண்ணிருக்கிருங்கிங்க...

    ReplyDelete
    Replies
    1. முகத்தைப்பார்த்து அகத்தை எடைபோடக்கூடாது தம்பி ஆனந்த்.

      Delete
  2. Waiting for the next

    ReplyDelete
  3. தயாரிச்சு வைச்ச ஒயினை நிஜமான மோகினி வந்து குடிச்சு இருக்கணுமே??

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு ?
      பொறுத்திருந்து பாருங்கள் அமுதா.

      Delete
  4. அண்ணே.... எங்க Voorhees College (Vellore) ஹாஸ்டல் பக்கம் கூட மோகினி வந்திச்சி. நாங்கள் எல்லாம் சேர்ந்து அது கூட மணிரத்தினம் பட ஸ்டைல் டான்ஸ் ஆடி அனுப்பி வைச்சோம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ அந்த மோகினியா அது வேற இது வேற தம்பி

      Delete
  5. ஆல்பி, சின்ன வயது சேட்டைகள் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாய். உனக்கு நமது கல்லூரி லேடீஸ் ஹாஸ்டலில் மோகன் பிசாசு வந்த விடயம் நினைவிருக்கிறதா? மறைந்த நமது நண்பன் ரெங்கசாமியும் நானும் அதற்காக நம் வார்டனிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது இன்னும் மறக்க முடியவில்லை........அன்புடன் சையத் அ

    ReplyDelete
    Replies
    1. Yes, Syed I do remember. Its very sad that Rengasamy passed away untimely.I heard from Praba that Sevalkodiyon passed away last month.

      Delete