Thursday, May 7, 2020

கொரோனாவால் விளைந்த நன்மைகள்


கொரோனா பாதிப்பால்  பல தீமைகள் நடந்திருந்தாலும் எனக்கு  சில  நன்மைகளும்  கிடைத்தன .

எச்சரிக்கை :  தயவு செய்து என் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள் (ரகசியம் பரம ரகசியம் ).
இந்தக்கணக்கு ஒரு மாதக்கணக்கு .
ஒரு  ஐடியாவுக்காக இந்திய மதிப்பையும்  பக்கத்தில் கொடுக்கிறேன் .

1) முதலில் கட்  ஆனது மெட்ரோ கார்ட்  செலவு       : $ 128.00  -   ரூபாய் 9728.00
2) கார் பெட்ரோல் செலவு                                                   : $ 100.00   -   ரூபாய் 7600.00
3)  ஈஸி   பாஸ் ( டோல்)                                                          : $ 100.00   -   ரூபாய் 7600.00
4) இன்சூரன்ஸ்  டிஸ்கவுன்ட் ( கார் ஓட்டாதனால்     : $ 100.00   -   ரூபாய் 7600.00
5) கார் வாஷ் செலவு ( டிப்ஸ் உட்பட )                             : $   35.00     - ரூபாய் 2660.00
6)  வெளியில் சாப்பிடும் செலவு                                        : $ 200.00   -   ரூபாய் 15200.00
7) ட்ரை கிளீனிங் ( வீட்டில் வேலை செய்வதால்)        : $  60.00    -   ரூபாய் 4560.00
8) ஷு பாலிஷ்  ( டிப்ஸ் உட்பட )                                          : $    6.00     -  ரூபாய்  456.00
9) மாலை நொறுக்குத்தீனி                                                    :  $   60.00    - ரூபாய் 4560.00
10) முடி வெட்டி சாயம் போட ( டிப்ஸ் உட்பட )              :  $    35.00     - ரூபாய் 2660.00
11) பலசரக்கு (பாதிக்கு மேல் மிச்சம் )                              :  $ 200.00   -   ரூபாய் 15200.00
12) வீடு கிளீனிங் (வெளியில் இருந்து வருவார்கள்):    $ 200.00    -   ரூபாய் 15200.00
13) பெடிகுயூர் (மாதம்  ஒரு முறை- டிப்ஸ் உட்பட)       :  $ 25.00   -      ரூபாய் 1900.00
14) பாத மசாஜ் ( மாதமிருமுறை-டிப்ஸ் உட்பட )           : $ 70.00    -     ரூபாய் 5320.00
15) பாடி மசாஜ் (மாதம்  ஒரு முறை- டிப்ஸ் உட்பட)       $  60.00   -      ரூபாய் 4560.00
16)ஷேவிங் ( வாரம் ஒரு முறையாக குறைந்ததால் : $   20.00   -      ரூபாய் 1520.00
17) ஷேரிங் கேப் ( 5X 4X 4)                                                         $80.00     -       ரூபாய் 6080.00

இன்னும் யோசித்தால் அதிகமாய்தான் வரும் .
ஆகமொத்தம்  மிச்சமானது :  $ 824      ரூபாய் 62624.00     



அம்மாடியோய் நானே இவ்வளவு வருமென்று எதிர்பார்க்கவில்லை.
இது தவிர வெளி நாடுகள் பயணம் ஒன்றும்   இல்லை .இனிமேல் எப்போது போகமுடியும் என்றும் சந்தேகமாக இருக்கிறது .கடைசியாய் போனது , செப்டம்பரில் 2019 பிரான்ஸ் , இத்தாலி ( ரோம் , பீசா , வெனிஸ் ,பிளாரென்ஸ் -ஜஸ்ட் மிஸ்டு  கொரோனா  ) நவம்பர் மற்றும் ஜனவரியில் இந்தியா .
அட பரதேசி இப்படி சேமித்த பணத்தை    என்ன செய்கிறாய்?  என்று மகேந்திரன் கேட்பது காதில் விழுகிறது .
கீழ்க் கண்ட நல்ல காரியங்களுக்காக செலவு செய்தேன்  .   இன்னும்  செய்யலாம்  .
1) கூடலூரில்  இருக்கும் என்   சமூகப்பணிக்கு ( www.goodwillcdp.org )
2) மதுரையில் ஊரடங்கால் வாடும் ஏழை மக்களுக்கு சு.வெங்கடேசன் MP. மூலம் உதவி.
3) மதுரையில் அகால மரணமடைந்த என் வகுப்புத்தோழன் குடும்பத்திற்கு ஒரு சிறிய உதவி .

நண்பர்களே, நிச்சயமாய் நீங்களும் இப்படி சேமித்த பணத்தை ஏதாவது நல்ல செயல்களுக்கு பயன்படுத்தலாமே .

  இன்றைய கொரோனா நிலவரம்  May 7th, 2020)
 USA :                                                 New York
Total cases: 1266785.00                    333491
Total deaths: 74962                           25956

18 comments:

  1. கார் பெட் ரோல் செலவு குறைச்சால இருக்கே ஒரு வேளை காரை தோளில் தூக்கி கொண்டு போவீர்களோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா , வீக்கெண்டு மட்டும்தான் கார் தமிழா.

      Delete
  2. வெளியில் சாப்பிடும் செலவு அந்த கொரிய பெண் கடையில் ஆன செலவுதானே இது?

    ReplyDelete
    Replies
    1. நான் மறந்தாலும் தான் மறவாத உள்ளம் தமிழன் உள்ளம்.

      Delete
    2. நானும் நினைத்தேன்... திரு. விசு அவர்களும் இதை வழிமொழிவார் என்று நினைக்கிறேன் :)

      Delete
  3. நல்ல காரியங்களுக்காக செலவு செய்தற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  4. பயனுள்ள செலவுகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இந்திய மதிப்பை வாசித்தால் கெதக்-ன்னு இருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. இங்கு ஒவ்வொன்றும் என்ன விலை என்று தெரிந்தாலும் அதே மாதிரிதான் இருக்கும் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  6. அந்த 3 உதவிகளும் அருமை

    ReplyDelete
  7. பாடி மாசாஜ் ..

    ஹ்ம்ம்.. பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடறான். நடக்கட்டும் நடக்கட்டும்.

    அந்த படத்தில் இருப்பவர் யார் அண்ணே ? நண்பரின் இறப்பிற்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதான் ஒன்னும் நடக்கலியே தம்பி, இவரும் என்னைப்போல் உன்னைப்போல் ஒர்க் பிரம் ஹோம் போல தெரிகிறது

      Delete
    2. "அதான் ஒன்னும் நடக்கலியே தம்பி" ஏதோ வருத்தப்படுறப்போல தெரியுது??

      Delete
  8. உதவிய உள்ளத்துக்கு உளமார வாழ்த்துக்கள்!!!

    உதவிக்கு உதவலாமா?
    "மதுரையில் ஊரடங்கால் வாடும் ஏழை மக்களுக்கு சு.வெங்கடேசன் MP. மூலம் உதவி" - தொடர்பு எண்?

    ReplyDelete