New York City people |
பழிவாங்கல் 1
பொது மக்கள் : இந்த சீனாக்காரன் பாம்பையும் தேளையும் தின்னதால பாரு இப்ப கொரோனா வைரஸ் வந்து கஷ்டப்படுறான் .நல்ல வேளைப்பா நாம தப்பிச்சோம் ( ஜனவரி 2020).
கொரோனா: ஓ நீ அப்படி நினைக்கிறயா , இதோ வந்துட்டேன் .
செய்தி : மொத்தம் 202 நாடுகளை கொரோனா தொற்று பாதித்திருக்கிறது .
பழிவாங்கல் 2
பொது மக்கள் : கொரோனா வளர்ந்த நாடுகளில் அதிகம் பரவாது .
கொரோனா: அட முட்டாளே , இப்ப பாரு .
செய்தி : அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவுகிறது .( மார்ச் 2020)
பழிவாங்கல் 3
பொது மக்கள் : அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்படாது .
கொரோனா: ஹா ஹா ஹா , ஐயோ பாவம்
செய்தி : கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகத்திலேயே முதலிடம் பிடித்தது ( ஏப்ரல் 2020).
பழிவாங்கல் 4
மருத்துவ ஆராய்ச்சியாளர்: சுகவீனமாக உள்ளவர்கள் மட்டும் மாஸ்க் போட்டால் போதும்
கொரோனா: ஏண்டா திருந்தவே மாட்டீர்களா ?
செய்தி : வெளியில் செல்லும் எல்லோரும் மாஸ்க் போடவேண்டும் ( ஏப்ரல் 2020)
பழிவாங்கல் 5
மருத் துவ ஆராய்ச்சியாளர்:உடலில் ஏற்கனவே ஏதாவது பாதிப்புகள் உள்ளவர்களை மட்டும்தான் தாக்கும்
கொரோனா: என்னை புரிஞ்சிக்கவே மாட்டிங்களா ?
செய்தி : கொரோனா ஆரோக்கியமாக இருப்பவர்களையும் தாக்குகிறது ( ஏப்ரல் 2020).
பழிவாங்கல் 6
மருத்துவ ஆராய்ச்சியாளர்: கொரோனா முதியவர்களை மட்டுமே பாதிக்கும்
கொரோனா: இளைஞர்களையும் எனக்குப்பிடிக்குமே
செய்தி : கொரோனாவால் அதிகமாக இளைஞர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ( ஏப்ரல் 2020).
பழிவாங்கல் 7
மருத்துவ ஆராய்ச்சியாளர்: கொரோனா சிறு குழந்தைககளை த்தாக்காது
கொரோனா: நான் அப்படியெல்லாம் பிரிச்சு பார்ப்பதேயில்லை
செய்தி : கொரோனாவால் சிறு குழந்தைகள் உலகமெங்கிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ( மே 2020).
பழிவாங்கல் 8
பொது மக்கள் : அதிக வெப்பமுள்ள பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் இருக்காது
கொரோனா: பச்சைப்பிள்ளையாய் இருக்கியேடா
செய்தி : இந்தியாவில் சித்திரை வெய்யிலிலும் நித்திரை தொலைக்க வைத்தது கொரோனா: ( மே 2020)
பழிவாங்கல் 9
பொது மக்கள் : தமிழர்களுக்கு தடுப்பு சக்தி அதிகம்
கொரோனா: எம்மொழியும் எமக்கு சம்மதமே ?
செய்தி : இந்தியாவில் கொரோனா: பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தைப்பிடித்தது . ( மே 2020)
பழிவாங்கல் 10
பொது மக்கள் : இப்ப உள்ள நிலைமையை சாமிதான் காப்பாத்தணும்
கொரோனா: அப்படியா? பார்க்கலாமா ?
செய்தி : உலகமெங்கிலும் ஆலயங்கள், கோவில்கள் மற்றும் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன .( மார்ச் 2020)
பழிவாங்கல் 11
மருத்துவ ஆராய்ச்சியாளர்: கொரோனா வந்தவர்களுக்கு இருமல், காய்ச்சல் , தொண்டை வலி போன்றவை இருக்கும்
கொரோனா: ம்ம்ம் இப்ப பாருங்க
செய்தி : எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டுபிடி க்கப்பட்டுள்ளது (மே 2020)
பழிவாங்கல் 12
மருத்துவ ஆராய்ச்சியாளர் :கொரோனா ஒருவருக்கு ஒரு முறை வந்தால் மறுமுறை வராது
கொரோனா: எங்க திரும்பச் சொல்லு ?
பரதேசி : முட்டாள் ஜனமே கொஞ்சம் சும்மா இருக்கீங்களா ?
உண்மை.. கொரோனாவின் கருணை தேவை..
ReplyDeleteசாத்தான்ட்ட வேதம் கேட்ட கதைதான் நண்பா
Deleteஅண்ணே.. நீங்க சொல்றத பார்த்தா கொரோனாவை மானிடம் இன்னும் கொஞ்சம் கூட அறியாம இருக்கங்களோனு தோணுது.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்னு இருக்க முடியாது போல இருக்கே!
கடந்தும் போகமாட்டேங்குது , நடந்தும் போகமாட்டேங்குது, அப்படியே பலுகிப் பெருகுது
Deleteஅதிகம் சத்தம் போட்டு பேசுபவர்கள் மூலம் கொரோனா பரவுவதாக ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்று ஒரு சில தினங்கள் முன் செய்தி பார்த்தேன்
ReplyDeleteவீடுகளில் அதிகம் சத்தம் போட்டு பேசுவது பெண்களே... ஹும் ஹஹும் நம்ம காலிதான்
அப்ப வீட்டுல சோசியல் டிஸ்டன்சிங் கடைப் பிடிப்பதில்லையா தமிழா ?
Deleteவித்தியாசமாக் யோச்சித்து இருக்கீங்க..... குட்
ReplyDeleteஆஹா வசிஸ்டர் வாயால , நன்றி நன்றி நன்றி
Deleteநல்ல தொகுப்பு.
ReplyDeleteஇந்த தீநுண்மி இன்னதென்று வரையறைக்குள் சிக்கவைக்க முடியாததாய் இருக்கிறது.
இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ ஸ்ரீராம்
Deleteசிறிய தொகுப்பு... ஆனாலும் சிறப்பு...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஊரடங்கு தளர்வு முடிஞ்சதும் அவனவன் இந்த 60 நாள்ல விட்ட பணத்தை ஒரே நாளில் பிடிக்க போறது போல பறக்கறானுக திருந்தாத ஜன்மங்கள்
ReplyDeleteபிடிக்கப் போறாங்களா இல்லை குடிக்கப் போறாங்களா அன்பு?
Deleteஉங்களிடம் பஞ்சம்பட்டி ஜமீந்தார் பற்றிய தகவல் உள்ளதா?
Deleteசுருக்கமாக...விளக்கமாக...அருமையாக
ReplyDeleteமிக்க நன்றி .
Deleteமிக்க நன்றி சிவபார்கவி.
ReplyDelete