Monday, May 8, 2017

இலங்கையில் கொட்டிக்கிடக்கும் ரத்தினங்கள் !!!!!!!!!


இலங்கையில் பரதேசி -12
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post.html

Image result for sri lanka ratnapura
ரத்தினபுரியில் இரத்தின அறுவடை 
"அம்ரி அதுக்கு ரத்னபுரி போலாம்னு சொன்னியே".
 கொழும்பினருகில் ரத்னபுரி என்ற இடம் இருக்கிறது. அங்கு வைரம், வைடூரியம், மரகதம், போன்ற நவரத்தினங்கள் தாராளமாகக் கிடைப்பதால் உலகமெங்கிலிருந்து அங்கு வந்து இந்தச் சிறப்பான ரத்தினங்களை வாங்கிச் செல்கின்றனர் என்று கேள்விப் பட்டிருந்தேன்.
Related image
Hope Diamond
அதுமட்டுமல்லாமல் இங்கே வாஷிங்டன் டி.சிக்கு செல்லும் போதெல்லாம் நான் தவறாது பார்ப்பதும் பிறரைக் கூட்டிபோவதும் “நேச்சுரல் ஹிஸ்டரி  மியூசியம்” என்ற பிரம்மாண்டமான மியூசியத்திற்கு. அதில் ‘ஹோப் டைமண்ட்’ என்று மிகப்பெரிய வைரம் உள்ளது. அது எங்கு கிடைத்தது என்றால் வேறெங்கு   இந்தியாவில் தான். அதோடு அந்த மியூசியத்தில் அந்தக் கால மன்னர்கள் பயன்படுத்திய தங்க, வைர, ரத்தின ஆபரணங்கள் பல காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. உலகத்தின் எந்த மன்னர் அணிந்திருந்தாலும் அவை இந்தியா அல்லது  இலங்கையிலிருந்து வந்தவைதான் என்பதை அங்கே எழுதி வைத்துள்ளனர்.

உலகத்தின் மிகப் பெரிய மிக விலைமதிப்புள்ள வைரமான "கோஹினூர்" வைரமும் இந்தியாவைச் சேர்ந்ததுதானே. ஹைதராபாத் பக்கத்திலுள்ள கோல் கொண்டாவில் வைரங்கள் கொட்டிக் கிடந்தன. ஆனால் அதனை வெட்டி முடித்துவிட்டனர். நான் லண்டன் சென்றிருந்த போது அங்கே இருந்த டவர் என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் அரசர்களின் கோட்டையில் "கோஹினூர் இன்னும் அரசியின் கிரீடத்தில் ஜொலிக்கிறது. காட்சிப் பொருளாக வைத்திருந்த அதனைப் பார்த்த எனக்கு ஆத்திரமும் தாங்கவில்லை என்ன செய்யமுடியும். நம்முடைய சொத்துக்களெல்லாம் இப்படி கொள்ளையடிக்கப்பட்டு பலநாடுகளுக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றன. அந்த வைரத்தைப்பற்றிய என்னுடைய பழைய பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html

ஆப்பிரிக்கா பெல்ஜியம் ஆகிய இடங்களிலிருந்து வைரங்கள் வந்தது சமீப காலங்களில்தான்.  இப்படி பிரசித்தி பெற்ற இலங்கை இரத்தினபுரிக்கு போக எனக்கு ஆசை. அதைத்தான் வந்த போது அம்ரியிடம் சொல்லியிருந்தேன்.
Image result for Kohinoor diamond in washington dc
Kohinoor Diamond
"சார் ரத்னபுரி போகமுடியுமான்னு தெரியல இன்னும் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் நிறைய இருக்கின்றன. ரத்னபுரியின் வைரங்கள் நவரத்தினங்கள் இங்கேயே நம்பிக்கையான இடத்தில் கிடைக்கும். வாருங்கள் பார்க்கலாம்".

வெள்ளைக்காரத் தம்பதியினரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு நான் அம்ரியுடன் கிளம்பினேன்.

திரும்பவும்  ஆற்றங்கரையிலிருந்து திரும்பும் வழியில் பலவித பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருபுறமும் இருந்தன . நாங்கள் போன கண்ணாடி ரெஸ்டாரண்ட் அருகிலேயே ஒரு சிறிய நகைக் கடை இருந்தது. அதனுள் நுழைந்தோம். சிறிய கடையாக இருந்தாலும் ரத்தின நகைகள் கண்ணைப்பறித்தன.  சிறிய கண்ணாடிப் பெட்டியில் அவைகள் மேலிருந்து வந்த ஃபோகஸ் லைட்டின் ஒளியால் ஜொலி ஜொலி என ஜொலித்தன. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நவரத்ன மோதிரம் வேண்டும் என்று கேட்டேன். கடைக்காரர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

Image result for sri lanka ratnapura
“உங்கள் விரல் சைஸ் என்ன?”
“ஐயையோ தெரியாது”.
“பிரச்சனையில்லை அளந்து கொள்ளலாம்”.
(அளந்து பார்த்து) “உங்கள் மோதிரவிரல் சைஸ் 7 ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்”, என்று சொல்லிச் சிரித்தார்.
“எதுக்கு சிரிக்கிறீங்க?”
"இல்ல ரொம்ப சின்னதா இருக்கு, இது கிட்டத்தட்ட பெண்கள் சைஸ்"
எனக்கு உடனே வெட்கமும் துக்கமும் சேர்ந்தே வந்துச்சு என்னடாது பல மேடைகள்ள பேச குரல் கொடுத்த ஆண்டவன் இப்படி விரல் 'ல' சோதிச்சிட்டானே.
“நல்லதுதானேங்க எடை குறைவா மோதிரம் வாங்குனா போதும்”. என்று சமாளித்தேன்.
“நல்லது உங்களுக்கு ஆனா எங்களுக்கு சரி விடுங்க வைரமோதிரமா? இல்ல ரத்தின மோதிரமா? “
“ரத்தினம் அதிலும் இலங்கை பேர் சொல்ற மாதிரி  நவ ரத்தினம் வேணும்”.
“வெரிகுட், தங்கமா வெள்ளியா?”
“தங்கத்திலேயே கொடுங்க”
 “14ஆ, 18ஆ”
“ஓ கேரட்டை சொல்றீங்களா இரண்டும் வேணாம், 22தான் வேணும்”.
கேட்டுவிட்டு மாறாத புன்னகையுடன் 22 கேரட்டில் (ஆமா இந்த கேரட்டுன்னா என்னான்னு யாராவது சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நம்ம சாப்பிடுற கேரட் தான்)
ஜொலிக்கும் தங்க மோதிரங்கள் ஒரு சிவப்பு ஜரிகை போட்ட டிரேயில் வைத்துக் காண்பித்தார்.
“சைஸைப் பத்தி கவலைப் படாதீங்க, மாடல் பிடிச்சிருந்ததுன்னா சைஸை சரிபண்ணித் தந்துரலாம்”.
நான் இதுவரை பார்த்த எல்லாரும் ஒரு சதுரவடிவமான மோதிரத்தில் ஒன்பது கல்கள் பதித்து போட்டிருப்பதைத்தான் பாத்திருக்கிறேன் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக வட்டவடிவில் இந்த மோதிரத்தை எடுத்துக் காண்பித்தேன். சைசும் சரியாக இருந்தது.
“குட் சாய்ஸ்” என்றார்.
இதைத்தான் எல்லாரிடமும் சொல்வாங்கன்னு  தெரிந்தும், ஒரு திருப்தி வந்தது. ஒரு பவுனில் 22 கேரட் நவரத்ன மோதிரம் அது என்பதாலும் நன்றாகவே இருந்தது.  இதிலுள்ள நவரத்னங்கள் என்னென்ன என்று கேட்டேன்.
நவரத்ன மோதிரம் ரொம்ப நல்லது என்று பல காரணங்களை அடுக்கினார். ஒவ்வொரு ரத்தினமும் ஒவ்வொரு கிரகம்னு சொன்னார்.

“ஐயா எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. சும்மா இவ்வளவு தூரம் வந்ததுக்கு ஒன்று வாங்கலாம்னுதான்”, என்றேன். யோசித்துப் பார்த்தால் எனக்கென்று நானே முதலில் வாங்கும் நகை இதுதான் என்ற நினைவு வந்தது.

நான் போட்டிருக்கும் சங்கிலி எங்கம்மா 30 வருஷத்து முன்னால் கொடுத்தது, அதில் இருக்கிற சிலுவை டாலர் என் மனைவி வாங்கிக் கொடுத்தது. மாமனார் வீட்டில் போட்ட மோதிரம் தொலைஞ்சு போனதால , என் மனைவி ஒரு வைர மோதிரம் வாங்கிக் கொடுத்தா. அதுதான் இப்ப கல்யாண மோதிரமே.

யோசித்துப் பார்த்தா நீங்க நம்புவீங்களா இல்லயோ, என் மனைவிக்கு நகையா நான் இதுவரை வாங்கிக் கொடுத்ததே இல்லை. சரி அதவிடுங்க, “அந்த ஒன்பது ரத்தினங்கள் ஒன்பது கிரங்களையும் குறிக்கும். இது இந்து மதம் மட்டுமல்ல, புத்த, சைண, சீக்கிய சமயங்களிலும் மதிக்கப்படும் விசேஷம் கொண்டது”, என்று சொல்லிவிட்டு அவைகளை விளக்க ஆரம்பித்தார்.


- தொடரும்.

12 comments:

  1. நுணுக்கமான செய்திகளை அறிய வைத்தது உங்கள் பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி Dr.ஜம்புலிங்கம்.

      Delete
  2. பல புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

    சார், அடுத்த தடவை உங்க கையை கெட்டியா பிடிச்சுடுறேன். :)

    அப்புறம், //என் மனைவிக்கு நகையா நான் இதுவரை வாங்கிக் கொடுத்ததே இல்லை// - என் விசயத்திலும் உண்மை

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர்.என்னது கையை கெட்டியா பிடிச்சுக்குவீங்களா, ம்ம்ம் நம்ம கையில என்ன இருக்கு பாஸ்கர் ?
      நீங்களும் நகை வாங்கி கொடுத்ததில்லையா , அப்ப பணம்மட்டும் கொடுத்துட்டு ஒதுங்கிருவீங்களா ?

      Delete
  3. அமெரிக்காவில் நிரந்தரமாக இருக்கிறீர்கள். எப்படியாவது கோஹிநூரைக் கொண்டுவந்துவிடுங்கள்...இந்தியாவுக்கு இல்லாவிடினும் வாஷிங்க்டனுக்காவது. உங்கள் கண்பார்வையில் இருந்தால் நல்லது!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. ராய செல்லப்பா சொல்லிவிட்டால் படை திரட்ட வேண்டியதுதான் .

      Delete
  4. Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  5. நன்றி...திண்டுக்கல் தனபாலன்.

    ReplyDelete
  6. இன்று இந்தியாவில் இருந்தால் அந்த கோகினூர் உருப்படியாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள். உங்களுக்கு தாராள மனசுதான்!

    ReplyDelete
    Replies
    1. அதானே அதைப்பத்தி யோசிக்கவேயில்லையே , நன்றி பழனிவேல். வெள்ளையரும் ஒன்றுதான் உள்நாட்டு கொள்ளையரும் ஒன்றுதான் , என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?.

      Delete