எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 34
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_16.html
79-ல் வெளிவந்த கல்யாண
ராமன் படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது. பாடலின் உள்ளே
நுழையுமுன் பாடலைக் கேட்போம்.
இசையமைப்பு:
ஒரு இளம்பெண்ணின் கொண்டாட்ட மனநிலையை
வெளிப்படுத்தும் பாடல் இது. குதூகலமாய் இருக்கிறது கேட்பதற்கு. கிடார் , கீபோர்டு, வயலின்கள் ஆகியவற்றின் சுதி நாதத்தின்
மேல் புல்லாங்குழல் நடமாட, கடசிங்காரியின் ரிதம் இசை பேங்கோஸ் அல்லது காங்கோசுடன்
இணைந்து சேர்கிறது. அதன் பின் இவையெல்லாவற்றையும் அடக்கும் விதத்தில் வயலின் குழுமம்
எழுந்து சஸ்டெயின் செய்ய, கனீரென்ற குரலில் "மலர்களில்
ஆடும் இளமை புதுமையே", என்று பாடல் ஆரம்பிக்கிறது.
குரலோடு துள்ளல் நடையில் தபேலா சேர்ந்து கொள்ள பாடல் வேகமெடுக்கிறது. முதல்
இடையிசையில் (BGM) சிறிது நடைமாறி, வேகம்
மாறி கீபோர்டு, வயலின் இசைக்க, கிளிகளும் குயில்களும் பாடுவது போல் இசையொலிக்க
புல்லாங்குழல் அதனை முடித்து வைக்க, சரணம் "பூமரத்தின்
வாசம் வந்தால்" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ல்
கடசிங்காரி ஆரம்பித்து, எலக்ட்ரிக் கிடார் எதிர்பாராத நேரத்தில் ஒலிக்க அதனுடன்
டேப் சேர்ந்து அழகான தாளத்துடன் நடைபோட, "நான் இன்று கேட்பதெல்லாம்"
என்று 2-ஆவது சரணம் ஆரம்பிக்கிறது. இறுதியில்
"அஆஆ" என்று குரல் கடசிங்காரியுடன் இணைந்து அப்படியே குறைந்து குழைந்து
பாடல் இனிதே முடிவடைகிறது.
பாடல் வரிகள்:
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பூமரத்தின் வாசம் வந்தால்
ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானாடும்
பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ண தேரோடும்
சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா
நெஞ்சுக்குள் தானாடும்
பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ண தேரோடும்
சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
நான் இன்று கேட்பதெல்லாம்
கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாளும் ஏனம்மா
எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாளும் ஏனம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். ஒரு
திருமணமாகாத கன்னிப் பெண்ணின் மகிழ்ச்சியான மனதை ,வீட்டிற்கு வெளியேயுள்ள வசந்தகால
இயற்கையுடன் ஒன்றி வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த மெட்டுக்கு வரிகள் பொருந்தியே
வருகின்றன. மலர்களில் இளமையைக் காண்பது புதுமையான கற்பனைதான். ரம்மியமான இயற்கை
சூழ்நிலையை வர்ணித்துவிட்டு இதுவே சொர்க்கத்துக்கு இணை என்று முதல் சரணத்தில்
சொல்லியிருப்பது பொருத்தமே. ஆனால் கன்னிப்பெண் பாடும் பாட்டென்றால் அது கல்யாண ஆசை,
தம்பத்திய சுகத்தை நினைத்து ஏங்குதல் ஆகியவைதான் பொதுவாக அந்தக்
காலத்தில் எழுதியுள்ளதை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. இதைத்தவிர வேறு
நினைப்புகளே இருக்காது என்று பதின்பருவப்பெண்களை ஒரு சிறிய வட்டத்திற்குள் சிறை
வைப்பது ஏற்புடையதல்ல என்பது என் கருத்து. நான் பார்த்த வரைக்கும் பல பெண்கள்
படிப்பு, வேலை வருமானம், சுயசார்பு,
என்ற விடயங்களில்தான் அதிகம் கனவுகளை, வைத்திருக்கிறார்கள்.
பஞ்சுவின் மென்மையான மனதில் பாடலின் சுழலுக்குத்தானே எழுத முடியும். பஞ்சுவைக் குறை சொல்லமுடியாது.
பாடலின் குரல்:
Sp Sailaja with Ilayaraja |
பாடியவர் SPB யின்
தங்கையான SP ஷைலஜா. நாட்டியம் நடிப்பு என்று பலதுறைகளில்
திறமை பெற்ற இவர் பின்னர் பாடலுக்கென்று மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இவருக்கு நல்ல கணீரென்ற குரல். நல்ல உச்சஸ்தாயியில் பாட முடியும் குரல். இவருடைய
உச்சரிப்பும் தனிரகம். ஆனால் பிழையில்லை. இந்த
மாதிரிப் பாடல்களுக்கு இவரின் குரல் மிகவும் பொருத்தம். குரலிலேயே ஒரு
உற்சாகம், துடிப்பு, மகிழ்ச்சி மறைந்து
உறைந்திருக்கிறது. இவர் "பொண்ணு ஊருக்குப்
புதுசு என்ற படத்தில் பாடிய" சோலைக்குயிலே காலைக்கதிரே" என்ற பாட்டு
தான் இவர் பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன். இளையராஜா இவருக்கு பல பாடல்களைக்
கொடுத்தார். SPB யுடன் இணைந்து பாடிவருகிறார். டூயட்
பாடல்களை அண்ணணும் தங்கையும் இணைந்து பாடுவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
இந்த துள்ளல் பாடலைக் கேட்டால் உங்கள் மனதும்
துள்ளும் என்பதில் ஐயமில்லை.
-தொடரும்.
ஆம், நல்ல பாடல். என்னிடமிருந்த 'பெண்குரல்' என்று தலைப்பு வைத்திருந்த கேசட்டில் இவர் பாடல்களைச் சேர்த்து வைத்திருந்தேன். அதனுடன் சுஜாதா, ஜென்சி போன்ற குரல்களும் இருக்கும். (சுசீலா, வாணி ஜெயராம், ஜானகி எல்லாம் தனி!!)
ReplyDeleteநல்ல ரசனை ஸ்ரீராம்
Deleteநல்ல பாடல். எனக்கும் பிடித்த பாடல்.
ReplyDeleteநன்றி வெங்கட்
Delete//டூயட் பாடல்களை அண்ணணும் தங்கையும் இணைந்து பாடுவதை//
ReplyDeleteஉண்மைதான். இருவரும் உடன்பிறந்தவர்கள் என்பதை இன்றுவரை நானறியேன்.
புதிய தகவல். நன்றி!
பாஸ்கர், பச்சை புள்ளையா இருக்கீங்களே ?
Deleteஎனக்கும் பிடித்த பாடல் . இசை என்று வந்துவிட்டாள் உறவு முறை பார்க்கமுடியாது பாடல் பாடுவதே நோக்கமாக இருக்க முடியும் என்பதே என் கருத்து,
ReplyDeleteகாதல் ரசம் சொட்டும் பாடல்களை அண்ணனும் தங்கையும் மேடையில் பாடுவதை என்னால் சகிக்கமுடியவில்லை தனிமரம்.
DeleteJency and sp sailaja are nice singers introduced by Ilayaraja esp the song from
ReplyDeletesalangai oli sung by SPB and SPsailaja "natha vinotha" is my favourite song.Thanks for the write up on SP Sailaja whom i think was under utilised by our composers.
Yes you are right, Thanks for coming. But why Anonymous?
Delete//டூயட் பாடல்களை அண்ணணும் தங்கையும் இணைந்து பாடுவதைத்தான்//
ReplyDeleteஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் தான் ராசா வும் அதிக டூயட் பாடல்களை கொடுக்கவில்லை என நினைக்கிறேன்.ராசாவின் இசையில் பத்து டூயட் பாடல்கள் கூட இருக்காது. சில டப்பிங் செய்யப் பட்ட பட பாடல்களாக இருக்கும். தெலுங்கில் எப்படி என தெரியாது.
நீங்கள் சொல்வதுதான் உண்மையாக இருக்க வேண்டும் சேக்காளி
Delete