Monday, November 9, 2015

பரதேசியும் பழம்விற்கும் பையனும் !!!!!!!!!!!!!!!!

எச்சரிக்கை: அடைப்புக்குறிப்புக்குள் இருப்பவை என் மனைவி சொன்னவை, அதை தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம், படிக்கவும் வேண்டாம்.
My Office

அவன் ஏன் அப்படி என்னைக் கூப்பிட்டான்னு எனக்கு கொஞ்சம் கூட விளங்கல.
கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல நான் ஒரே வெயிட்தான். 125-முதல் 130 பவுண்டுக்குள் மட்டும் (ஆமா அங்க ஏறுனாத்தானே ?) இந்த ஒல்லி உடம்பை கில்லி மாதிரி வச்சிருக்க படாதபாடு படறேன். (ஆமா சும்மா கதை விடுறாரு ஒண்ணுமே பண்றதில்லை)
எடை ஏறாமல் இருப்பதற்கு என்னுடைய டாக்டர்களும் பாராட்டுத் தெரிவிப்பார்கள் (ஆமா இவர்  குடும்பத்துல எல்லாரும் அப்படித்தான் ன்னா சாப்பிட்டாலும் ஏறாது, அதுக்கு நான் என்னா செய்றது )
உடம்பை சிலிம்மா வச்சிருக்கிறது ஒரு கலை (ஆமாமா சொன்னாங்க அவ்வளவும் வினைன்னு நினைக்கிறேன்). என் இடுப்பு  சைஸ் இப்போது 32 லிருந்து 30  ஆகிவிட்டது(உயரமும் குறைஞ்சு போச்சே அதச்சொல்லல). நன்றாக நடப்பதற்கு, சுறுசுறுப்பாக இருப்பதற்கு இது ரொம்ப உதவுது (இந்த சுகர்னால தான் ஃபிகர் போச்சுன்னு சொல்ல மாட்டாரே)
முகம்கூட போடெக்ஸ் செய்யாமலேயே சுருக்கம் கிடையாது. (புதுசா சில கறுப்புப்புள்ளிகள் தெரியுதே அது என்னவாம்). பவுடரோ கிரீம்களோ உபயோகப்படுத்துவது கிடையாது (ஆமா இட்லி மாவுல கருப்பட்டி விழுந்தாப்ல இந்த முகத்துக்கு பவுடர் போட முடியுமா?) .
உடம்பை இளமையாக வச்சிருக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் (இளமையா, என்ன கொடுமை). பாட்டுக்கேக்கறது கூட "இளமை இதோ இதோ", “இளமை என்னும் பூங்காற்று”, போன்ற பாடல்களைத்தான் கேட்பேன். (இதிலிருந்து தெரியல இவர் எவ்வளவு முதுமைன்னு).
தலையில மட்டும் கொஞ்சம் இள நரை விழுந்ததால கொஞ்சம் டை போடுவேன். (இள நரையா? அது சரி, ஆனா மீசைக்கும் டை அடிக்கறத சொல்லல). அதனால இயற்கையாவே கொஞ்சம் இளமையாத்தான் தெரிவேன் (டை அடிக்கிறது இயற்கையா ?).

கல்யாணம் ஆகி என் மனைவிக்கு 22 வருஷம் ஆயிருச்சு. எனக்கு அத்தனை வருஷம் அகல (அடப்பாவி ரெண்டு பேருக்கும் ஒண்ணாதானே கல்யாணம் ஆச்சு)
வேகமாக நடப்பது, ஓடுவது என்ற பல உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்வேன் (ஒரு வாட்டி ஒரு கறுப்பன் துரத்தும்போது ஓடினதச்சொல்றாரு போல)
அப்படி இருந்தும் அவன் ஏன் என்னை அப்படிக்கூப்பிட்டான்னு தெரியல. என்னைப்பாத்தா  அப்படியா தெரியுது. (எவன் எப்படிக் கூப்பிட்டான்? ஒண்ணும் புரியலயே)
என் உடம்புல ஒரு பார்ட் மட்டும்தான் எனக்குப் புடிக்காது. வயிறு மட்டும் லேசா பூசுனாப்புல இருக்கும் (தொப்பைனு பளிச்சுனு சொல்ல வேண்டியதுதானே). ஆமா அத இளந்தொந்தின்னும் சொல்லலாம் (என்ன இளந்தொந்தியா?)
முகத்தில புன்சிரிப்பும் எப்போதும் இருந்தால், வயசு தெரியாதுன்னு சொல்வாங்க (உனக்குதான் இருகின முஞ்சி ஆச்சே) அதோட மத்தவங்களையும் சிரிக்க வைக்கும்போது நமக்கு ஆயுசு கூடும்னு பெரியவங்க சொல்வாங்க (எந்தப் பெரியவங்க, நான் அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே.)
இவ்வளவு இருந்தும் அவன் ஏன் அப்படிக்கூப்பிட்டான்.
Fruit vendor in 31st street, New York

பொதுவா நம்மூர்லதான், அண்ணன், அக்கா, சிஸ்டர், தம்பின்னு தெரியாதவங்களையும் உறவைச்சொல்லி அழைப்போம். இந்த ஊர்ல அதெல்லாம் கிடையாது. எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.
அந்த விதத்தில், அவன் என்னைக் கூப்பிட்டது மரியாதையாத்தான் இருந்தது. ஆனாலும் அது எனக்குப்பிடிக்கல. (யார் அவன்னு சொல்லித் தொலைங்க சீக்கிரம்)
Rafiqi food vendor
சப்வேயில் 34ஆம் தெரு ஸ்டேஷனில் இறங்கி, 32 ஆம் தெரு, அதாங்க கொரியன் அவென்யூ வழியே வெளியே இறங்கி, பிராட்வேயில் என்னோட ஆஃபிஸ் போற வழியில் ரெண்டு மூணு கையேந்தி பவன் இருக்கு. இந்தியன் நடத்தும் ஒரு பெட்டிக்கடை, பாக்கிஸ்தானி ஒருவன் நடத்தும் பழக்கடை, பேகல், சாண்ட்விச் கடை ஒண்ணு, ரஃபீக்கி  நடத்தும் சாப்பாட்டுக்கடை.இங்க சிக்கன் ஓவர் ரைஸ்ஸீம், ஃபலாஃபல்லும் (Falafil) சூப்பரா இருக்கும். மதிய நேரத்தில் கூட்டம் அலை மோதும். பிளாட்ஃபார்ம் கடைன்னாலும் குவாலிடி நல்லா இருக்கும். அதோட இங்கெல்லாம் எந்தக்கடையும் லைசென்ஸ் இல்லாம நடத்த முடியாது. அப்புறம் ஒரு ஜூஸ் கடை (இது வின்டரில் இருக்காது) தாண்டி இன்னொரு பழக்கடை இருக்கு. ஒரு ஆப்கானிய பெரியவர் ரொம்ப வருஷமா நடத்தினார்.  இப்ப கொஞ்ச நாளா அவர் மகன் பொறுப்பேற்று, கொஞ்சம்  விரிவுபடுத்தி சிறப்பா நடத்துறான்.
அந்தப் பையன் நல்ல சிவப்பா வாட்டசாட்டமா இருப்பான். அவன்ட்டதான் நான் இப்பல்லாம் பழம் வாங்கறது. ஒவ்வொரு சீஷனுக்குத் தகுந்தாப்ல பழம் விப்பான். சில பழங்கள் எல்லா சீஷனிலும் கிடைக்கும்.
அவனுக்கு இன்னைக்கெல்லாம் இருந்தா ஒரு 25-26  வயசுக்குள்ளதான் இருக்கும். கிட்டத்தட்ட, ஏறக்குறைய சற்றுக் கூடக்குறைய, சுமாரா குத்துமதிப்பா, கொஞ்சம் மேலே கீழே, என் வயசுக்கிட்டதான் இருக்கும் (அடப்பாவி மனுஷா, இப்படி எத்தனை பேர்கிட்ட சொல்லி வச்சிருக்க) அவன்தான் என்னை அப்படி கூப்பிடுறான். (அட எப்படித்தான் கூப்பிடுறான் ?)
என்னை அங்கிள்ஜி  அங்கிள்ஜின்னு கூப்பிடுறான். (அதுல என்னை தப்பைக் கண்டுபிடிச்சிட்டே) இல்ல, எனக்கு என்ன அவ்வளவு வயசா ஆயிருச்சு ?. ஒரு அண்ணன், பிரதர்னு கூட கூப்பிட்டா நா என்ன தப்பாவா தப்பா எடுத்துக்க போறேன். (அட தாத்தாஜினு  கூப்பிடாம விட்டானே, சந்தோஷப்படு)
ஹலோ, யாராவது அவனைப் பார்த்தா சொல்றிங்களா, இனிமே என்னை அங்கிள்ஜினு கூப்பிடக்கூடாதுன்னு.  எனக்கு சுத்தமாப் பிடிக்கல.

முற்றும்
இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...
 இந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.

22 comments:

  1. நல்ல நகைச்சுவை, தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ அங்க்கிலே தேவலை .

      Delete
  2. //அவனுக்கு இன்னைக்கெல்லாம் ...., என் வயசுக்கிட்டதான் இருக்கும்// ஒருவேளை அவரது வயதை திருப்பிப்போட (Reverse) வேண்டுமோ ?? , அவனுக்கு 25 அப்படினா உங்களுக்கு ? :)

    ReplyDelete
    Replies
    1. நான் என் வயசை திருப்பிப்போட முயன்றால், நீங்க அவன் வயசை திருப்பிப்போடுரீன்களே .

      Delete
  3. சொல்ல மறந்துவிட்டேன். படம் அருமை சார். தீபாவளி வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..ஆரூர் பாஸ்கர்.

      Delete
  4. ஹா... ஹா...

    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்.

      Delete

  5. உங்களுக்கு மேக் ஒவர் தேவை... ஹேர் ஸ்டைலை மாத்துங்க ஆபிஸுக்கு போகும் போது அந்த பழக்கடைகாரன் மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு போங்க ஆபீஸுக்குள் போனதும் இப்ப நீங்க போட்டு இருக்கிற ஒல்டு மேன் டிரஸ் போட்டுக்குங்க.... அப்புறம் இந்த மாதிரி சின்ன பசங்க நம்மகிட்ட பேசுறதுக்கு முன்னால் நாம் அவங்களை ஹேய் ப்ரோ ஹவ் ஆர் யூ ப்ரோ என்று பேச ஆரம்பிச்சடனும்.... அப்பதான் அவங்க நம்பளை அங்கிள்ஜின்னு கூப்பிட மாட்டாங்க....ஹும் இதெல்லாம் தெரியாமலா நீங்க இவ்வளவு நாள் நீயூயார்க்கில் இருக்கிறீங்க.....

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழன் உங்களை மாதிரி யாராவது சொன்னால்தானே தெரிகிறது .நீங்க சொன்னமாதிரி நியூயார்க்கில் இத்தனை காலத்தை வேஸ்ட் பன்னிட்டநோன்னு தோணுது

      Delete
  6. அவனுக்கு மிஞ்சிமிஞ்சி என் பையன் வயசு இருக்கும்போல தெரியுது நான் கண்டிசனா அங்கிளை அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிடுறேன் சொல்லிடுறேன் சரி சொல்லிடுறேன் அங்கிள்.

    ReplyDelete
  7. அவனுக்கு மிஞ்சிமிஞ்சி என் பையன் வயசு இருக்கும்போல தெரியுது நான் கண்டிசனா அங்கிளை அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிடுறேன் அங்கிள்.

    ReplyDelete
    Replies
    1. சரிங்க அங்கிள் நன்றி .

      Delete
  8. அண்ணே ... நடக்கட்டும் .. நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. எங்க நடக்குது, ஒண்ணும் நடக்க மாட்டேங்குது தம்பி விசு .

      Delete
  9. இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்..நண்பர்கள் அனைவருக்கும்!!!!

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.நண்பா.

      Delete
  10. அங்கிள் ஜி! நான் அந்த தம்பிக்கிட்ட கண்டிச்சு சொல்லிடறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும்ம்ம்ம்ம்மமா வெங்கட்ஜி .

      Delete
  11. நல்லாருக்கு "அல்ஃபி" ஜி! நீங்க அவன்கூட "செல்ஃஃபி" எடுத்திருந்தா கண்டிப்பா உங்கள அங்கிள்னு கூப்பிட்டுருக்க மாட்டானோநு தோணுது...buddyநு கூப்பிட்டுருப்பானோ...

    கீதா: அங்கிள் உங்களுக்காவது பரவால்ல அங்கிள்னு கூப்பிட்டான்...என்னைய இங்க எல்லாரும் என் வயசுக்காரங்களோட போனால் அவங்ககிட்ட என்னையக் காட்டி "இது உங்க பாட்டியானு" கேக்கறாங்களாம்...அவ்வ்வ்வ்வ்....சந்தோஷப்படுங்க அங்கிள்...

    ReplyDelete
    Replies
    1. துளசி அங்கிளுக்கும் கீதா பாட்டிக்கும் என் நன்றிகள் .

      Delete
  12. உங்கள் பதிவுல உங்க மனைவியின் கமென்ட்ஸ் தான் ஹைலைட்!!!!

    ReplyDelete