Thursday, November 5, 2015

விக்டோரியா மகாராணியின் காதலன் ?????????


Her majesty, Mrs Brown

  நெட் பிலிக்சில் தோண்டி எடுத்த புதையல் போன்ற படம் இது. இது 1997ல் பிரிட்டன் மற்றும் உலகமெங்கும் வெளிவந்தது.

கதைக்களம் :
அரச குடும்பத்திருமணங்கள் காதலுக்காக நடப்பதில்லை. அரசியல் லாபங்களுக்காகவும்  இரு நாட்டின் ஒற்றுமைக்காகவும்  தான் பல திருமணங்கள் நடந்தன. விக்டோரியா மகாராணிக்கும் இளவரசன்  ஆல்பர்ட்டுக்கும் நடந்த திருமணமும் அப்படிப்பட்ட ஏற்பாட்டில் நடந்த திருமணம் என்றாலும், திருமணத்திற்குப்பின் இந்த இருவரும் மனமொத்து மகிழ்ச்சியுடன் ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்தனர். உலகின் பல அரச தம்பதிகளில் இவ்வளவு நெருக்கமாய் வாழ்ந்தவர்கள் அன்றுமில்லை, இன்றுமில்லை.
Price Albert
இந்த சமயத்தில் 1861ல் இளவரசன் ஆல்பர்ட் தனது 42 ஆவது வயதில் , டைஃபாய்ட் ஜுரத்தால் திடீரென்று இறந்துவிட, விக்டோரியாவால் அந்த இழப்பைத் தாங்கமுடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருட காலம் விக்டோரியா எந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை, வெளியில் தலைகாட்டவில்லை, தன்னுடைய சோக உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை.
Queen Victoria
இந்த சமயத்தில் மகாராணியின் அரண்மனையில் இருந்த பணியாளர்கள், எப்படியாவது மகாராணியின் மூடை மாற்ற ஸ்காட்லாந்திலிருந்து ஜான் பிரவுன் (John Brown)என்பவரை வரவழைத்தனர்.
ஜான்பிரவுன் வெகு சீக்கிரத்திலேயே விக்டோரியாவின் நம்பிக்கைக்கு உகந்த நண்பனாக மாற, விக்டோரியா தன்னுடைய துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறாள்.
ஜான்பிரவுன் மகாராணியின் மூடை மாற்றும் விதத்தில் ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரல் (Balmoral) எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து, அங்கு மகிழ்ச்சியுடன் நாட்களை கழிக்கிறார்கள்.
John Brown
ஆனால் மகாராணி தொடர்ந்து அரசாங்கத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் ஒதுங்கியே இருப்பதால், பார்லிமென்ட்டில் அரச அதிகாரத்திற்கு எதிராக குரலெழுப்பி, இங்கிலாந்து முழுவதுமாக ஜனநாயக நாடாக ஆகவேண்டும் என பலர் குறிப்பாக ரிபப்ளிகன் பார்ட்டி பேச ஆரம்பித்தது. அதோடு மகாராணிக்கும் பிரவுனுக்கும் உள்ள நெருக்கத்தை தவறாக உருவகப்படுத்தி விக்டோரியாவை Mrs.பிரவுன் என்று அழைக்கும் அளவுக்கு மோசமாகப் போனது.
பிரவுனும் எந்த ஒரு அரசகுல வழக்கம், மரியாதை எதையும் பயன்படுத்தாமல் ராணியை பெண்ணே (Woman) என்று அழைப்பது, அரச குடும்பத்தினர் யாரையும் மதிக்காமல் இருப்பது, மற்ற வேலைக்காரர்களை அண்டவிடாமல் இருப்பது என்று பல காரியங்களைச் செய்தது எல்லோருக்கும் சந்தேகத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணியது.
இதனையெல்லாம் பார்த்த அப்போதைய பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி  (Benjamin Disraeli) ஜான் பிரவுன் மூலமே ராணியை திரும்பவும் பொது வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறார்.
ஜான் பிரவுன் அதனை ஒத்துக் கொண்டாரா? மகாராணி அதனை ஏற்றுக் கொண்டாராபின்னர் என்னதான் நடந்தது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்கம் வெளியீடு இந்தப்படத்திற்கு ஜெரமி பிராக் (Jeremy Brock)திரைக்கதை அமைக்க ஜான் மேடன் (John Madden) என்பவர் இயக்கியிருக்கிறார். BBC (British Broad casting corporation) Ecosse Films ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் BBCல் ஒளிபரப்பப்படுவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் மிராமேக்ஸ் (Miramax) இதனை வாங்கி உலகமெங்கும் வெளியிட 13 கோடி டாலர்கள் (USD) சம்பாதித்தது.

நடிகர்கள்:

Image result for judi dench
Judy Dench
விக்டோரியாவாக நடித்தது நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஜூடி டென்ச்  (Judi Dench)இவர்தான் எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் BOSS ஆக வருவார். ஜான் பிரவுனாக நடித்தவர் பில்லி கானலி (Billy Connolly) இந்த இருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். குறிப்பாக ஜூடியின் நடிப்பு  மிகச்சிறந்த ஒன்று.

Billy Connolly

விருதுகள்: (Source: Wikipedia))

Dame Judi Dench
·         nominated, Academy Award (US) for Best Actress in a Leading Role
·         winner, BAFTA Award for Best Performance by an Actress in a Leading Role
·         winner, BAFTA Scotland Award for Best Actress in a Film
·         winner, Golden Globe Award for Best Performance by an Actress in a Motion Picture – Drama
·         nominated, Screen Actors' Guild (SAG) Award for Outstanding Performance by a Female Actor in a Leading Role

Billy Connolly
·         nominated, Screen Actors' Guild (SAG) Award for Outstanding Performance by a Male Actor in a Supporting Role
·         nominated, BAFTA Award for Best Performance by an Actor in a Leading Role
·         nominated, BAFTA Scotland Award for Best Actor in a Film

Others
·         winner, BAFTA Award for Best Costume Design, Deirdre Clancy
·         nominated, BAFTA Award for Best Film
·         nominated, Alexander Korda Award for Best British Film (also BAFTA)
·         nominated, Academy Award for Makeup, Lisa Westcott, Veronica Brebner and Beverley Binda

திரைப்பட விழாக்கள்:-
1997 Cannes Film Festival உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
விக்டோரியா மகாராணியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வரலாற்று ஆர்வலர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும். .


முற்றும்.

8 comments:

  1. நல்லதொரு அறிமுகம் பதிவை படித்ததும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட்டாது.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி செந்தில்குமார் .

      Delete
  2. படத்தை பார்த்த திருப்தி பதிவை படித்ததும் ஏற்பட்டது. பகிர்விற்கு நன்றி.

    எனது வலையில் இன்று: ஆங்கில உச்சரிப்பு பிரச்னையா? இதோ அதற்கான மென்பொருள்

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி..
    //விக்டோரியா எந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை, வெளியில் தலைகாட்டவில்லை, தன்னுடைய சோக உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை.//
    இது படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனுக்கு Inspiration? :)

    ReplyDelete
    Replies
    1. எங்க இருந்து எங்க முடிச்சு போடுறீர் கவிஞரே?

      Delete
  4. புதிய விஷயமாக இருக்கே....

    ReplyDelete
  5. நல்லதொரு பதிவு மற்றும் பகிர்வு. தொய்வில்லாத நடை, விளக்கம்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    ReplyDelete