சர்ஜரி
ஆனதிலிருந்து மனசில ஒரு கலக்கம், நாம எப்ப
ரிட்டயர் ஆகப்போறோம், ரிட்டயர் ஆக முடியுமா? இல்ல கடைசி வரைக்கும் வேலை பார்த்துத்தான் ஆகனுமா? போன்ற கேள்விகள் தோன்றி மறைந்தன. நான் வேலை செய்வதை நிறுத்தினாலும்
பில்கள் வருவது நிற்காது, மார்ட்கேஜ் கட்டுவதும்
நிற்காது. மார்ட்கேஜ் ஓட மொத்த வருஷத்தை கணக்குப்போட்டா, இந்த
ஜென்மம் மட்டுமில்லாம அடுத்த ஜென்மத்துலயம் கட்டணும் போல இருக்கு. நமக்கு பென்ஷன்
போல எதுவும் கிடையாது.
எங்க
அம்மா டீச்சர் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் இன்னக்கி வரைக்கும் பென்ஷன் வருது.
இங்கதான் நியூயார்க்கில் என் தம்பி
கூட இருக்காங்க. ஸ்டேட் பாங்க், சென்னையில் டெப்பாசிட்
ஆகும் பணத்தை ATM கார்டு வெச்சு இங்க
டாலரில எடுத்துர்றாங்க .நேத்து சர்ச்சுக்குப் போகும்போது என் முகம் வாட்டத்தை
கவனிச்சு, ஏதாவது செலவுக்கு வேணும்னா நான் ஒரு 100 டாலர் மாசாமாசம் தர்ரேன்னு சொன்னாங்க. சே பாவம் அவங்கட்டயிருந்து
வாங்கறதா, சேச்சே அசிங்கம். அதைக்கேட்டு என் மனைவிக்கும்
கோபம் வந்துருச்சு. அவங்களுக்கு என் பட்ஜெட் தெரியாது. எனக்கு குறைந்தபட்சம் ஒரு
மாத செலவுக்கு 10,000 டாலர் தேவைப்படுது.
அமெரிக்காவில
நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் யாரும் ரிட்டயர் ஆகுற மாதிரி தெரியல. நம்ம
சர்ச்சுல ஒருத்தரு 84 வயசு.
ஆஸ்பத்திரியிலதான் வேலை. வேலைக்குப் போகும்போது, ஏதோ வலி
வந்து இருந்தாலும் அப்படியே போய், அங்கேயே இறந்து போனார்.
நல்ல சாவு.
என்
மனைவியும் இன்னும் ரெண்டு வருஷம்தான் வேலை பார்ப்பேண்ணு சொல்லி பயமுறுத்துறா.
இதுக்குத்தான் சொல்றாங்க பிறந்தா பணக்காரனா பிறக்கனும் இல்லை அட்லீஸ்ட் பணக்காரியை
கல்யாணம் பண்ணனும்னு. ம்ஹீம் நமக்கு ரெண்டும் வாய்க்கல. சாகும் வரைக்கும் இந்த
பில்லைக்கட்டியே பல்லு போயிரும்போல இருக்கு.
என்னோட
ரிட்டயர்மென்டைப் பத்திப் பேசினா, என் மனைவி
கலைஞரைப் பாக்கச் சொல்றா. என்னன்னா 92 வயசுலயும் மகனுக்கு
வழிவிடாம இருக்காராம். இதுல சேரவிட்டு எழுந்தா, யாராவது
உட்கார்ந்திரப் போறாங்கன்னு, எப்பவும் சேரிலயே
உட்காந்திருக்கிறாரோனு தோணுது.
என்னோட
மகள்கள் ஏதாவது உதவி பண்ணமாட்டாங்களானு நெனைச்சா, ம்ஹீம் ஒண்ணும் பேறாது போல இருக்கு. என்னோட
பெற்றோர் என்ட்ட கேட்காதப்ப, நான் போய் அவங்ககிட்ட வாங்கறதா, தப்பு தப்பு
மகாத்தப்பு.
இதுக்கிடையிலதான்
நம்ம சர்ச்சுல தம்பையான்னு ஒருத்தரு. NYPD டிரான்ஸ்போர்ட் பிரிவில வேலை
பார்த்து சின்ன வயசுலயே ரிட்டயர் ஆயிட்டார். இலங்கைத் தமிழர் அவர். அவரும் அவர்
குடும்பமும் ரொம்ப நாளா எங்க சர்ச்சுல மெம்பர்.
சரி
சீக்கிரம் ரிட்டயர்மென்ட் ஆகிற சீக்ரெட் என்னான்னு கேட்கலாம்னு அவர்ட்ட கேட்கிறதவிட
அவர் மனைவி வசந்திகிட்ட கேட்கலாம்னு கிட்டப்போய் உட்கார்ந்தேன்.
"என்னக்கா செளக்கியமா? அண்ணன் ரிடையர்
ஆயிட்டாரு போலருக்குன்னு," கேட்டேன்.
ஒரே
பிலுபிலுன்னு பிடிச்சுக்கிட்டாங்க.
"ஆமா உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கனும்.
இப்பதான் அறுபது ஆகுது ரிட்டயர்மென்ட் வாங்கற வயசா இது. ஆளு கட்டையும் குட்டையுமா
நல்லாத்தான இருக்காரு. வீட்டில ஒருவேலையும் செய்யறதில்ல. சும்மாவே பொழுது
போக்கிறாரு. பிள்ளைக இன்னும் படிச்சிக்கிட்டுதான் இருக்குது. இந்த மனுஷனை
வச்சிக்கிட்டு எப்படி நான் குடித்தனம் பண்ணுறதுன்னு தெரியல".
"சரிக்கா ஆபிஸ்ல அவங்களே ரிடையர்மென்ட் கொடுத்தா என்ன செய்யறது"
"ஆஃல்பி என்னா பேசுற? அப்படியெல்லாம்
ஒண்ணுமில்ல இவர் இன்னும் குறைஞ்ச பட்சம் ஒரு பதினஞ்சு வருஷம் வேலை பார்க்கலாம்.
சும்மா அவரே வாலன்டரி ரிடையர்மென்ட் அதுவும் என்ட்ட சொல்லாம
வாங்கிட்டாருன்னு" அப்படியே பேசிட்ட இருந்தாங்க. நான் நைஸா நழுவி, இன்னொரு ஓரமா உட்கார்ந்திருந்த தம்பையாட்ட போனேன்.
"என்னன்னே ரிட்டையர் ஆயிட்டிங்கன்னு
கேள்விப்பட்டேன். இப்ப ரிலாக்சா வாழ்க்கையை என்ஜாய் பண்றீங்களா ?"
"வாழ்க்கைய என்ஜாய் பண்றேனா, என்னப்பா சொல்ற ?".
"இல்ல நான் ரிட்டயர் ஆகிறப்பத்தி
யோசிச்சிட்டிருக்கேன். உங்கள்ட்ட ஏதாவது டிப்ஸ் கிடைக்குமான்னு வந்தேன்".
"ஆமா ஏதோ ரிலாக்ஸ்டா இருக்கேன்னு சொன்னிலே".
"ஆமான்னே, ரிட்டயர் ஆயிட்டா ஹாயா இருக்கலாம்ல"
"இப்ப என்ன வேலையெல்லாம் செய்யறேன் தெரியுமா?"
"சொல்லுங்க அண்ணே".
"இப்ப காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறேன்."
"நாலு மணிக்கா, முதல்ல எப்ப எழுவீங்க".
“முதல்ல
ஏழு மணிக்குத்தான் எழும்பி ஒரு மணி நேரத்தில ரெடியாகி எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ்
போயிட்டு சாயந்திரம் நாலு மணிக்கு வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன்,
நண்பர்களைப் போய் பார்ப்பேன். ஆஹா அந்தக்காலம் எவ்வளவு ஜாலியா
இருக்கும் தெரியுமா?.”
"என்னன்னே சொல்றீங்க, அது சரி நாலுமணிக்கு
எந்திரிச்சு என்ன செய்வீங்க."
"அதையேன் கேக்குற காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு, முதல்ல பத்துப்பாத்திரம் தேய்க்கனும். இட்லி ஊத்தி வச்சுட்டு
காஃபிபோட்டு எடுத்துட்டுப் போய் மனைவியை எழுப்பனும். அப்புறம்
பிள்ளைகளை எழுப்பி ரெடிபண்ணி தனித்தனியா வேற வேற ஸ்கூல்ல கொண்டுபோய் விடனும்.
காலேஜ் போற மகள் மட்டுமல்ல வேலைக்குப் போற மகளும் ஊட்டினாத்தான் சாப்பிடுது. இதுல
அம்மா நல்லா ஊட்டுவாங்கனு கம்ப்ளைண்ட் வேற. வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தா
என் இவ்வளவு நேரம், சீக்கிரம் சீக்கிரம்னு என் மனைவி வாசல்ல நிப்பா. அவளை
கொண்டுபோய் விட்டுட்டு வர்றதுக்குள்ள மணி 11-ஆயிரும்.
அப்புறம் நான் சாப்பிட்டுட்டு இருக்கும்போது, மனைவி ஃபோன் பண்ணி, பல வேலைகளை கொடுக்கிறா”.
“அப்படியா
அப்படி என்ன பல வேலைகள்?”
“வீடுமுழுக்க
வேக்குயூம் பண்றது, டைல் தரைகளை
துடைப்பது, செடிகளுக்கு தண்ணி ஊத்தறது, புல்வெட்டறது, ஒட்டடை அடிக்கறது, பெயிண்ட் அடிக்கறது, கடைக்குப் போறதுன்னு பல
வேலைகள். மதியச்சாப்பாடு
சாப்பிடுறதுக்குள்ள மணி 3 ஆயி, பிள்ளைகளை
பிக்கப் பண்ணிட்டு வந்து, சப்பாத்தி உருட்டி சப்ஜி செஞ்சு
வச்சுட்டு மனைவியை கூப்பிட்டு வரணும்.”
"ஆமா மனைவி கார் என்னாச்சு".
“நான்
ரிட்டயர் ஆனதும் அத வித்துட்டா. கேட்டா ஃபுல் சர்விசே ஃப்ரீ சர்வீசா
கிடைக்கும்போது எதுக்கு செல்ஃப் சர்வீஸ்னு சொல்லிட்டா.”
“இந்த
தோட்ட வேலையெல்லாம் வின்டர்ல இருக்காதுல.”
“
அடப்போப்பா விண்டர்லதான் ஸ்நோ தள்ற வேலை வந்துருதே”
"அதுசரி இந்த வேலையெல்லாம் இத்தனை நாள்
யார் செஞ்சா ?”. “புல்வெட்டறதுக்கு ஸ்நோ தள்றதுக்கெல்லாம் ஆளு இருந்துச்சு,
இப்ப எல்லாத்தையும் நிறுத்திட்டா”. அதுல
இப்ப ஃபால் சீசன் வேற ஆரம்பிச்சுருச்சா. இலை கொட்டோ கொட்டுனு கொட்டி, பெருக்கி அள்றதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சு போயிருது”.
“அப்ப டிவி
கீவி பாக்கறதில்லையா?”
“இப்பெல்லாம்
டிவி கேக்கறது மட்டும்தான்”
“டிவி கேக்கறதா
ஒண்ணும் புரியலயே ?”
“அட என்னப்பா,
நான்தான் கிச்சன்ல இருப்பேன்ல, அவங்கள்ளாம்
உட்கார்ந்து டிவி பாக்கும்போது, எனக்கும் நல்லா கேக்கும்”.
“அடப்பாவமே,சரிசரி அப்ப காலைல நாலுமணிக்கு எழும்புறது ராத்திரி சீக்கிரம்
படுத்துருவீங்களா? “.
“நைட்
டிபன் முடிச்சு,
பிள்ளைகளை படுக்க வச்சிட்டு எங்க பெட்ரூமுக்கு போய், காலைப் பிடிக்கணும், அதுவும் அவ காலு
அந்தநாளில நல்லா வாழைத்தண்டு மாதிரி இருக்கும். இப்ப கர்லாக்கட்டை மாதிரி ஆயிப்போச்சு. ரெண்டு கைல புடிக்க முடியல. அவ புத்தகம் படிக்க,
நான் கால அமுக்க தூங்கறதுக்கு மணி குறைஞ்சசது 12 மணி
ஆயிரும். அவளுக்கென்ன காலைல 8 மணிக்கு எழுந்தா போதும்,
எனக்கு நாலு மணிக்கு ஏந்திரிக்கணும்னு கவலை கூட இல்லை”.
“ஐயையோ
இவ்வளவு வேலை செய்ற உங்களையா ஒரு வேலையும் செய்யறதில்லைன்னு சொல்றாங்க.
இயேசுவே
வேலையில இருக்கும்போதே எனக்கு உயிர் போயிரனும் ஆண்டவரே,
ஆமென்.
“என்னப்பா
அமைதி ஆயிட்டே, இன்னும் இருக்கு கேளு”.
“ போதும்னே இதுவே போதும். ரொம்ப தேங்க்ஸ்னே.
எனக்கு ரிட்டயர்மென்ட்டும் வேணாம், ஒண்ணும்
வேணாம்.””
-முற்றும்.
அண்ணே, இந்த பதிவ சும்மா தமாசுக்கு தானே எழுதுனிங்க. சேத்து வைச்ச டாலர 66ல் பெருக்கினிங்கனா லம்பா வருமே. எல்லாத்தையும் மூட்டை கட்டிகிட்டு மோடிஜியின் "கிளீன் இந்தியா- மேக் இன் இந்தியா- டிஜிட்டல் இந்தியா" போய் என்சாய் மாடி.
ReplyDeleteஎன்னாது சேத்து வெச்ச டாலரா ?
Deleteஅத வெச்சு டிக்கெட் கூட வாங்க முடியாதே விசு தம்பி .
ஆமா இப்ப இந்தியா கிளீன் ஆயிரிச்சா என்ன?
டிஜிட்டல் இந்தியா சரி , கரன்ட்டுக்கு என்ன செய்யறது?
அட யாரப்பா இங்க வந்து சார் சேத்து வைச்சதை என்று தப்புதப்பா பேசுறது...ஆல்பிரட் சார் எல்லாம் கண்டபடி செலவழிச்சு மீதி இருக்கிறதை வைச்சே தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கிறலாம். அப்படி இருக்கிறப்ப அவரை போய் சேத்து வைச்சதை 66ல் பெருக்கினிங்கனா என்று கேள்வி கேட்டு ஹும்ம் அவர் வீட்டை பெருக்கினா கிழே கிடக்கிற டாலைரை எடுத்து சேர்த்தாலே அமெரிக்காவில் சொந்த வீடூ மன் ஹாட்டன்லே வாங்கலாம்...
Deleteவிளக்குமாத்துல பெருக்கினா கூட ஒரு சல்லிகூட வரதில்லை , செத்து காஞ்சுபோன பல்லிதான் வருது.
Delete66-ஆல எங்க பெருக்கறது ,666 -தான் அடிக்கடி வருது
Unmaithan.
ReplyDeleteநன்றி சத்யா .
DeleteNachu nu irrukku Annachi
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் தங்கச்சி .
Deleteநான் தலைப்பு பார்த்த பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனா படித்த பிறகு , நான் ரிட்டையர்மென்ட் பற்றி என் கனவில் கூட அதை பற்றி யோசிக்க போவதில்லை !!!!!!!!!
ReplyDeleteகனவா எனக்கெல்லாம் அது வராது ,தூங்கினாத்தானே கனவு வரும் ?ஆரூர் பாஸ்கர்.
Deleteதம்பையாவது ரிட்டையர் ஆனா பின்னால்தான் அவ்வளவு வேலை செய்கிறார். அந்த வேலை எல்லாம் நான் ரிட்டையர் ஆகாமலே செய்ய வேண்டிருக்கிறது
ReplyDeleteநீங்க ரொம்ப கெடுத்து வச்சவர் மதுரைத்தமிழன் .
Deleteஉங்களை( ஆல்பிரட்,விசு,ஆருர் பாஸ்கர்) போல உள்ள பெரியவங்களே இப்படி ரிட்டையர்மெண்ட் பற்றி யோசிக்கும் போது என்னை நினைச்சு பார்தேன் ஹும் கடவுள் நம்மை மேலே அழைக்கும் போது மட்டும்தான் ரிட்டையர்மெண்ட் கிடைக்கும் என்று புரிஞ்சுது
ReplyDeleteநாங்க நம்பிட்டோம் .
Deleteபதிவுவை சொல்லி சென்ற விதம் மிக அருமையாக படிப்பதற்கு இருந்தது பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன் .
Delete@Avargal Unmaigal, சகோதரா !!
ReplyDeleteவயதுகும் ரிட்டையர்மென்ட்கும் எந்த உறவும் இல்லை..
அப்ப இதுக்கு விடிவு காலமே இல்லையா ?
Deleteஇனி ரிட்டையர் மெண்ட் பற்றி சிந்திக்கவே மாட்டேன்))))
ReplyDeleteஅய்யய்யோ நீங்களுமா , நீங்கதான் தனிமரம் ஆச்சே ?
Deleteஉண்மை
ReplyDeleteஇங்க தனியார் நிறுவனங்கள் ஐம்பத்தெட்டு வயசுலேயே வீட்டுக்கு அனுப்பிருவாங்களே... நான் என்ன செய்வேன்?????
ReplyDeleteஇங்க வந்துருங்க கார்த்திக் சரவணன் கூடிச்சேர்ந்து கும்மி அடிக்கலாம் , ஒரு கை குறையுது .
DeleteEnmanaive ippadiyellam velai
ReplyDeleteseiyachollamaatanu namburane Karther male unparaththai vaithuvidu
Enmanaive ippadiyellam velai
ReplyDeleteseiyachollamaatanu namburane Karther male unparaththai vaithuvidu
ஆமா அது சரிதான் பிரகாஷ் , வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவங்களுக்கு கர்த்தர்தான இளைப்பாறுதல் தர முடியும் .
Delete""பிறந்தா பணக்காரனா பிறக்கனும் இல்லை அட்லீஸ்ட் பணக்காரியை கல்யாணம் பண்ணனும்னு"" ம்ம் என்ன பண்றது நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்..
ReplyDeleteஅய்யய்யோ நீங்களுமா ஏமாந்தீங்க, என்ன நண்பா நீங்க உஷாருன்னு நினைச்சேன் .
Deleteநாம் எல்லாம் நண்பர் விசு அளவுக்கு உஷார் இல்ல தான். அவரு பாருங்க பணக்காரனாக பிறக்கல, ஆனாலும் தன்னுடைய உஷார் குணத்தால் இன்றைக்கு நாம் எல்லாம் பெருமை படகூடிய பெரிய பணக்காரர் ஆக உயர்ந்து இருக்கிறார்.. :)
Deleteஉண்மைதானே நண்பர் alfy..
முற்றிலும் உண்மை நண்பா .
Delete***""பிறந்தா பணக்காரனா பிறக்கனும் இல்லை அட்லீஸ்ட் பணக்காரியை கல்யாணம் பண்ணனும்னு"" ம்ம் என்ன பண்றது நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்..***
ReplyDelete"பணக்காரன்" "ஏழை" என்பதெல்லாம் "ரிலேடிவ்" தானே? அப்படியே நீங்க ஆசைப்பட்டபடி பணக்காரனாவோ, பணக்காரிய கட்டிய பணக்காரனாகவோ பொறந்து இருந்தாலும் "இதே போல்" வேற ஏதாவது புலம்பல் தொடரத்தான் செய்யும், ஆல்ஃபி அங்கிள்!. :)
ஆஹா வருண், நீ பெரிய சத்தியவாதின்னு நினைச்சேன், ஆனா பெரிய தத்துவவாதியா இருக்கியே .
Deleteதத்துவம்லாம் என் உடம்புக்கு ஆவாது தம்பி .
அடடா.. அங்கிள், எனக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போங்க! :)
Deleteதத்துவங்கள் இல்லைனா என்னால வாழவே முடியாது. ஆனால் உங்களுக்கு தத்துவம்னா அலர்ஜி! மனிதர்களில்தான் எத்தனை வகைகள் பாருங்க, அங்கிள்! :)
இனிமேல் உங்க காட்டில் தத்துவமழை பெய்து உங்களுக்கு ஜலதோஷன் கொடுக்காமல், ஏதாவது தேவையான வரட்சி பூமியில் தத்துவமழையைப் பெய்கிறேன். BTW, I am very good at keeping my promises! :)
நீ தத்துவவாதி இருந்தாலும் உண்மை வாதி என்பதில் எந்த சந்தேகமுமில்லை .
Deleteஜலதோஷம் பிடித்தாலும் பரவாயில்லை வருவதை மட்டும் நிறுத்தி விடவேண்டாம்