![]() |
Add caption |
மேன்ஹாட்டனில் என்னுடைய அலுவலகம்
இருப்பது மிட் டவுனில் (Mid Town) உள்ள
பிராட்வேயில் 31-ஆவது தெருவுக்கும் 30ஆம் தெருவுக்கும் இடையில். இதற்குப் பக்கத்தில் இருக்கிற 32 ஆவது தெரு "கொரியன் வே" (Korean way) என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தத் தெரு முழுதும் கொரியன் பேக்கரி,
கொரியன் பலசரக்கு, ரெஸ்டாரண்டுகள், வங்கிகள் என அனைத்தும் கொரியன்.
Add caption |
கொரியர்கள் சீனர்களைப் போல மங்கோலிய
இனத்தவர்தான் என்றாலும், சீனர்களை விட
பார்க்க சற்றே உயரமாய் நன்றாக இருப்பார்கள். சப்பை மூக்கோ சிறிய நீண்ட கண்களோ
இல்லாமல் முக லட்சணங்கள் (Features) நன்றாகவே இருக்கும்.
இங்கேயே பல வருடங்கள் இருப்பதால்
ஓரிரு கொரிய வார்த்தைகளும் எனக்குத் தெரியும். "அன்யங்
ஹாசியோ" என்றால்
முகமன் கூறுதல். முதலில் பார்க்கும்போதும் சரி, விடை பெறும் போதும் சரி, சற்றே குனிந்து இதைச் சொல்வார்கள்.
இன்னொரு வார்த்தை "ஹம்ச
ஹானிடா" . இதற்கு நன்றி என்று அர்த்தம்.
மிக நெருங்கிப் பழகும் இவர்கள்,
பெரும்பாலும் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள். புத்தமதத்தைச்
சேர்ந்தவர் சிலர் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். உயர்ந்த கலாச்சாரத்தைக்
கொண்டவர்கள். நன்கு படித்தவர்கள். உயர்ந்த பதவிகளில் மட்டுமல்ல பெரும்பாலும்
பிஸினெஸ் செய்பவர்கள்.
Add caption |
எங்களுடைய அலுவலகம் இருக்கும் 10
மாடிக் கட்டடத்தில் நிறைய சூட்களில்
கொரியன் கம்பெனிகள் இருக்கின்றன. குறிப்பாக என் ஆபீஸ் இருக்கும் அதே ஃப்லொரில்
ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியும் ஒரு ஆடிட்டிங் கம்பெனியும்
இருக்கின்றன. இதன்
இரண்டு ஓனர்களும் எனக்கு
நன்றாக தெரியும்.
இதில் ஆடிட்டர், CPA
(Certified Public Accountant) முடித்தவர். நம்மூர் CA மாதிரி. மிகுந்த மரியாதை உள்ளவர். தன்னைத்தேடி வரும் கஸ்டமர்களை,
அவர்கள் கம்பெனி ஓனர்களாய் இருந்தாலும் சரி, தனிப்பட்ட
நபர்களாய் டேக்ஸ் ஃபைல் பண்ணுவதற்கு வருபவர்களாயினும் சரி,
எலிவெட்டெர் வரை
வந்து வழியனுப்புவார்.
நடுத்தர வயதுக்காரர். ஆபிசுக்கு
காலை வரும் நேரம் இவருக்கும் எனக்கும் ஒரே நேரம். ஆபிஸ் வந்தவுடன் முதல் வேலையாக
பாத்ரூம் செல்வோம் என்பதால், கிட்டத்தட்ட
தினமும் பாத்ரூமில் சந்திப்போம்.
இங்கேயுள்ள பெரும்பாலான
கட்டடங்களில் ஒவ்வொரு மாடிக்கும் எல்லா ஆபிசுக்கும் பொதுவாக ஆண்களுக்கும்
பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பறை இருக்கும். பூட்டியிருக்கும். எல்லா ஆபிசிலும்
எங்களுக்கென தனிப்பட்ட சாவி இருக்கும்.
![]() |
இங்கதான் எனக்கு ஒரு உண்மை
தெரியனும் சாமி.
ஒருமுறையல்ல பலமுறை பார்த்ததால்
எனக்கு ஒரு பெருத்த சந்தேகம்.
பொதுவாக நாம் கழிப்பறையில் யூரினல்
பயன்படுத்தும்போது என்ன செய்வோம்? போய்விட்டு
வந்து சோப் போட்டு கையலம்பிவிட்டு, கையைத் துடைத்துவிட்டு
வந்துவிடுவோம் இல்லையா?.
இந்த ஆடிட்டர் செய்வது எனக்கு
விநோதமாக இருக்கிறது.
உள்ளே நுழைந்தவுடன் கையை சுத்தமாக
சோப் போட்டு அலம்பி நாப்கின் வைத்து துடைக்கிறார். சரி எல்லாம் முடித்துவிட்டார் என நினைக்கும்போது அதன்பின்
தான் யூரினல் பயன்படுத்துகிறார். சரி மறுபடியும் கையை அலம்புவார் என்று பார்த்தால்
அப்படியே போய் விடுகிறார்.
ஒரு தடவை சரி விடு, மறந்துவிட்டார்
என நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் செய்கிறார்.
என்ன கருமம்டா சாமி. ஒரு வேளை
எல்லாக் கொரியனும் இப்படித்தானோ என்று நினைக்கும்போது,
இது கலாச்சாரமா இல்ல அநாச்சாரமா என்று தோன்றியது.
அடுத்த தடவை அவர் கைகுலுக்க
வரும்போது, தவிர்த்து வணக்கம் சொல்லி
இதுதான் இந்தியக் கலாச்சாரம் என்றேன்.
இதைப்பத்தி யாருக்காவது தெரிந்தால்
கொஞ்சம் சொல்லுங்களேன்.
“டேய் சேகரு,
ஃபாரின் போய் நல்லா வேலை செஞ்சு, நல்ல
பேரும் புகழும் அடைவேன்னு பாத்தா எவன் எப்படி ...த்திரம் போனான்னு ஆராய்ச்சி பன்றத
நினைச்சு எனக்கு ஆத்திர ஆத்திரமாய் வருது.கொஞ்சம் கூட வெக்கமில்லையா உனக்கு”.
"ஆமாடா மகேந்திரா,
நீ சொல்றது சரிதான்". அடச்சீ ஃபாரின் வந்தாலும் இந்த
யூரின் பிரச்சனை போகமாட்டேங்குதே.
கொரியன் என்று சொல்லி இருக்கலாமே, CPA என்று ஏன் சொல்லவேண்டும். ஒரு இனத்தையே கலங்க படுத்துவிட்டீர்களே!
ReplyDeleteCPA என்றால் Careful Personal Attribute என்று ஒரு அர்த்தம் இருக்கு.
Deleteஆடிட்டர் வேறு விசயத்தில்... ஹா.... ஹா....
ReplyDeleteஆடிட்டர் வேறு விசயத்தில். ஆடிட்டார். அதைப்பார்த்த நானும் ஆடிப்போயிட்டேன்
Deleteஇதுக்கு ஒரு ப்ளாக் எழுதி எல்லோரையும் குழப்பாம அந்த சம்பத்தப்பட்ட நபரை கேக்கலாமே ! அவர் உங்கள் நண்பர்தானே ! பயமா இருந்த அவர் போன் நம்பர் வாங்கி குடுங்க ....நாங்க பேசி விசாரிச்சு சொல்லறோம்.
ReplyDeleteபோன்ல விசாரிச்சா அவ்வளவு நல்லா இருக்காது , வேணும்னா நேர்ல வாங்களேன் .அறிமுகப்படுத்தறேன்.
Deleteசந்தேகம்.... பொல்லாதது! :) சீக்கிரம் கேட்டு விடுங்கள்...
ReplyDelete"போகும்போது" சுத்தமா போகணும்னு நினைக்கிறாரோ! எதுக்கும் கேட்டுட்டு அடுத்த பதிவில் சொல்லுங்களேன்....
ReplyDelete