Thursday, August 1, 2013

கர்ப்பவதிகளும் புஷ்பவதிகளும்


சப்வேயில் பயணம் செய்வது அனுதினமும் ஒரு புதிய அனுபவம். குறிப்பாக நான் வசிக்கின்ற, குயின்ஸ் பகுதியிலிருந்து, மேன்ஹாட்டனுக்கு வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது நடக்கும். அது சுமார் ஒரு மணி நேரப்பயணம்.
முதலாவது அதிசயம், ஒவ்வொருவரும்  வித்தியாசமானவராய் இருப்பர். இனம், நிறம், மொழி, நாடு, உடை, முடி, கண்கள், உதடுகள் என எல்லாமே வேறு வேறு.
·         ஐபாடில் பாட்டின் ட்யுனையும்,  பிரேக்ஃபாஸ்ட்டையும், ஒரே சமயத்தில் மெல்லும் மக்கள்.
·         பலவித சாதனங்களை வைத்துக் கொண்டு, வயதைக்குறைத்துக்காட்ட மேக்கப் போட்டுத்தோற்கும் நடுத்தர யுவதிகள்.
·         புத்தகப்பைகளோடு தூங்கிவழியும் மாணவர்கள்.
·         தங்கள் ஹோம் வொர்க்கை அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கும் புத்தம் புதுப்பூக்களாய் டீனேஜ்ஜர்கள்.
·         எக்ஸாமுக்கோ, குவிஸ்ஸுக்கோ தயார் பண்ணிக் கொண்டிருப்பவர்கள்.
·         நியூஸ் பேப்பர்  அல்லது புத்தகங்களில் மூழ்கிப்போகும் மக்கள்.
·          கிண்டல்களை ஒதுக்கிவிட்டு, "கின்டில்களில்" (Kindle) ஆழ்ந்திருக்கும் பெண்கள்.
·         செல்போன்களில் பாட்டுக்கேட்டுக் கொண்டே, கேம்ஸ் விளையாடும் ஆட்கள்.

·         பபிள்கம் தீர்ந்ததால் தோழிகளின் உதடுகளை மெல்லும் உற்சாக இளைஞர்கள்.
இதெல்லாம் காலை சீன், மாலை சீன் வேறு மாதிரி ஆயிரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கியிருந்தாலும், அவர்கள் எந்தப்பக்கம் ஏறினாலும் இடம் கொடுக்க வேண்டும் என்பது மரபு.  அது போல சீனியர் சிட்டிசன்களுக்கும், கர்ப்பவதிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். இதிலே வயதானவர்கள் அல்லது அதுபோல தோன்றுபவர்களுக்கு சீட் கொடுக்கும் போது, பலர் அதை மறுத்துவிட்டு, வீம்புக்கென்றே நின்று வருவார்கள். சில பேர் இன்சல்ட்டாகவும் எடுத்துக்கொள்வார்கள் .ரொம்ப முடியாவிட்டாலொழிய அவர்கள் சீட்டை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது ஒரு ஆச்சரிய உண்மை. அதேபோல்தான் கர்ப்பவதிகளும், அவர்களே கேட்கமாட்டார்கள். நாமேதான் கொடுக்கவேண்டும்.

அன்று ஒருநாள்  ஒரு நிறைமாத கர்ப்பிணி நடுவில் ஏற, நான் ஒருவன்தான் பார்த்தது போல இருந்தது. மற்றவர்கள் அனைவரும் கவனிக்காது, அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நடுவில் சில புஷ்பவதிகள் ஏற (அதான் நம்ம டீனேஜ் பெண்கள் பாஸ்)  , உடனே இடம் கொடுத்து எழுந்தனர்  சில BJP ஆட்கள் ( பயங்கர ஜொள்ளு பார்ட்டிகள்  பாஸ் ). எனக்கு கோபம் கோபமாய் வந்தது. வந்த கர்ப்பிணிக்கு இடம் கொடுக்காமல், என்னது எல்லோரும் இப்படி  இருக்கின்றனரே  என்று. அப்புறம்தான் எனக்கு உரைத்தது, பார்த்த நான் அல்லவா இடம் கொடுக்க வேண்டும். படக்கென்று எழ, ஒரு நன்றிப்பார்வையுடன் அந்தப்பெண் உட்கார்ந்தாள். பாருங்கள், எப்போதும் பிறர்தான் செய்யவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு தவறு. அப்போதுதான் இடம் கிடைத்து உட்கார்ந்தேன். பரவாயில்லை என்ன செய்வது.
புஷ்பவதிகள் வந்தால் இடம் கொடுக்கும் அளவுக்கு நான் இளங்குமரனுமல்ல, கர்ப்பவதிகள் வந்தால் இடம் தரமுடியாத அளவுக்கு நான் பழங்கிழவனுமல்ல.
ஆனால் இதில ஒரு பெரும் பிரச்சனை ஒன்றிருக்கிறது. நேற்று சற்று முன்னரே கிளம்பியதால் உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்து அப்துல்கலாமின் "திருப்பு முனையை" திருப்பியபோது, நிமிர்ந்து பார்த்தால், ஒரு ஆப்பிரிக்கப்பெண் அருகில் வந்து நின்றாள். இந்த ஊரில்தான் வயசும் தெரியாது சைஸ்ஸும் தெரியாது, கர்ப்பிணி போல் இருந்தது. ஆனால் வயிறு பெருத்தவர்களெல்லாம் கர்ப்பிணிகள் அல்லவே. பக்கத்தில் இருந்த அனைவரும் அவரவர் செயல்களில் பிஸியாக இருந்தனர்.

எப்படியய்யா கண்டுபிடிப்பது?. கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். எப்படிக்கேட்பது என்று சந்தேகமாக இருந்தது. "ஆர் யு பிரக்னன்ட்?, இல்லை" டஸன்ட் செளன்ட் குட். நிமிர்ந்து பார்த்து சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. அவள் வயிறையே உற்றுப்பார்க்க, அவள் என்னை முறைத்தாள். அதோடு புருவங்களை உயர்த்தி என்னவென்று கோபமான நயன பாஷையில் கேட்க, நான் தலை குனிந்தேன்.
"இதென்னடா வம்பா போச்சு", என்று நினைத்துக்கொண்டே புத்தகத்தை படிக்க முயன்றேன், முடியவில்லை. சரி கேட்டுவிடுவோம் என நிமிர்ந்தால், அவள் என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள்.
குட்டைப் பாவாடை என்பதால் அவளது பருத்த மற்றும் கருத்த தொடைகள் என்னை வருத்த ஆரம்பிக்க, என் சிறுத்த தொடைகள் வழக்கம் போல்  நடுங்க ஆரம்பிக்க, மீண்டும்  நிமிர்ந்து பார்த்தேன். "Whats up?" என்றாள், சத்தமாக. தவறி என்  மடியில் உட்கார்ந்தால் , நான் நொடியில் காலி.

அப்போதுதான் பார்த்தேன், அவளுடன் வந்த கணவனோ காதலனோ அந்தப்பக்கம் நின்றிருந்தான். என்ன? என்று  இவளைப்பார்த்து சைகையில் கேட்டான். அவன் சைஸ், இந்தப் பெண்ணைவிட ரெண்டு மடங்கு சைஸில் இருக்க, எனக்கு நல்ல AC-யிலும் வேர்த்துக்கொட்டியது. அப்போது லெக்சிங்டன்  வர என் ஸ்டாப் இன்னும் பல ஸ்டாப்புகள் தள்ளி இருந்தாலும், டக்கென்று என் பொருட்களை வாரிக்கொண்டு இறங்கிவிட்டேன். ஆபிஸுக்கு Late -ஆன Alfy -யாக போனால் பரவாயில்லை as long as I don’t become Late Alfy என்பதால்.

9 comments:

  1. ரயிலில் ஏறினோமா அடக்க ஒடுக்கமா தமிழ் பையன் மாதிரி இருந்தோமா என்று இல்லாமல் கண்ணை இப்படி அலையவிட்டா எப்படி? நீர் ரொம்ப லக்கி மனுஷன் ஐயா ரயிலில் போவதால் புஷ்பவதிகளை பார்க்கும் அதிர்ஷம் உனக்கு இருக்கிறது . எனது வேலை பார்க்கும் இடமோ வீட்டில் இருந்து 5 நிமிட தூரத்தில்தான் (காரில் செல்லும் போது )இருக்கிறது அதனால் புஷ்பவதிகளை பார்க்ககும் அதிர்ஷ்டம் இல்லை ஹூம்ம்ம்ம்

    வழக்கம் போல பதிவு அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நாம் பார்ப்பது இருக்கட்டும் , அவர்கள் நம்மை பார்க்கிறார்களா ?

      Delete
  2. நன்றி நண்பரே ,எந்த தளம் .in னில் முடிகிறது என்று தெரியவில்லை. என்னுடைய ப்ளாக்

    http://paradesiatnewyork.blogspot.com என்பதாகும் .உங்களுக்கு ஒரு ஈமெயிலும் அனுப்பியிருக்கிறேன்

    ReplyDelete
  3. Dude,

    Blogger (i.e blospot) latches a country specific domain based on the IP of the visitor. So we indians get your URL as http://paradesiatnewyork.blogspot.in/2013/08/blog-post.html instead of http://paradesiatnewyork.blogspot.com/2013/08/blog-post.html. That is what Mr. Ddgl.Dhanabalan is referring to.

    ReplyDelete
    Replies
    1. Thanks Dude for your clarification, I will try fixing it.

      Delete
  4. நானும் இப்படி தான் இங்கே லோக்கல் ட்ரையினில் போற போது பராக்கு பாத்துட்டே தான் போவேன்.எதுக்கோ பார்க்க போய் சிலரை முறைத்து கொண்டதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அக்கா வாங்க, வணக்கம் வந்தனம் , நீங்களும் நம்ம சாதிதேன்

      Delete
  5. தில்லி மெட்ரோவிலும் கிட்டத்தட்ட இதே அனுபவங்கள்...... :)

    அனுபவங்களை சுவையாக சொல்லி இருக்கீங்க பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

      உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே

      Delete