பொங்கலும் வந்தாச்சு
தையும் பொறந்தாச்சு !
இன்று காலையில்
ஓட் கஞ்சியை
கொதிக்க விட்டு
பொங்கலோ பொங்கல்னு சொன்னேன் !.
என் செய்வேன்
திங்க
பொங்கலும்
இல்லை
கடிக்க
கரும்பும் இல்லை
பொங்கலுக்கு லீவுமில்லை
போட்டுப்பாக்க
புதுசும் இல்லை !
வாழ்த்து மட்டும்
வாட்ஸாப் பூரா கொட்டுது
ஆனால்
வலி தீர இன்னும்
வழியில்லையே !
தமிழ்ச்சங்க விழா வரும்
தரமான பொங்கல் தரும்னு நினைச்சேன்
அதுவும் ஆன்லைனாம்
அம்புட்டும் ஜூம் லைனாம்!
கொரானாவும் போகலை
கொடுமைச்சாவும் நிக்கலை
புதுசு புதுசா
வரு து
தினுசு தினுசு
கொல்லுது!
கடைக்கும் போகமுடியலை
கவசத்தையும் கழட்ட முடியலை!
தடுப்பூசி வந்தாச்சு ஆனா
நமக்கு வர
நாலஞ்சு மாசம்
ஆகுமாம் !
டிரம்ப் போயி
பைடன் வந்தாச்சு
வேலை கிடைக்குமா
வெளிச்சம் வீசுமா ?
ரெண்டா பிரிஞ்சு நிக்குது ஜனநாயகம்
ஒண்ணா சேர்க்குமா புது பைடன் நாயகம் !
இந்தியாவில்
கார்போரேட்டுகளின் ஆட்சி
கனவுகளைச்சிதைக்குது
விவசாயி ஓலம் காதுல கேக்கலை
விவசாயி சாவு இன்னும் நிக்கலை
அரசியல் சத்தம்
அதிகமா கேக்குது
ஆட்சிக்கு யாரு வரதுன்னு
அடிதடி பேச்சு நடக்குது
இப்ப
பல தடவை வருவாங்க
பாசத்தை காட்டுவாங்க
பரிசுகளும் கொட்டுவாங்க
வாங்கி வைத்துக்கொண்டு
வாக்குப்போடும்போது
நோக்கப்படி போடுங்க
கேட்ட பணம் கிடைச்சாலும்
ஓட்டை மட்டும் விக்காதீங்க
சன்மானம் கிடைத்தாலும்
தன்மானத்தை
தாரை வாத்திடாதீங்க
தை பிறந்தாச்சு
வழியும் பிறக்கும்
நம்புவோம்
எஞ்சியிருப்பது
நம்பிக்கை மட்டும்தானே
பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்
உங்கள் பரதேசி
ஆல் ஃபிரட் தியாகராஜன்
அன்பு நண்பர்களே பொன்விழாக்கண்ட நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின்
இலக்கியக்குழுத்தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன் ,வெள்ளிதோறும் இலக்கிய உலாக்களை நடத்தத்துவங்கியிருக்கிறோம். அனைத்தும்
ஆன்லைன் என்பதால் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் , நன்றி .
மிகச் சிறப்பு கவிதை :) . திரு. Alfy.. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பா.
Delete
ReplyDeleteவீட்டுல பொங்கல் இல்லைன்னா என்ன கவிதை மூலம் இங்கே மிக நல்லாகவே பொங்கிட்டேங்களே பதிவை படித்ததும் நான் சரியான வலைத்தளத்திற்குதான் வந்து இருக்கிறேனா என்று பார்த்தேன்
நன்றி மதுரை .மதுரைத்தமிழன் பாராட்டினால் மதுரைஏ பாராட்டினால்போலத் தான்
Deleteகவிதை மிக சிறப்பு. பாராட்டுக்கள்
ReplyDeleteபுலம்பல் கவிதை நன்று. இலக்கியக் குழுத் தலைவர் பதவிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஸ்ரீராம்
Deleteஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...
ReplyDelete'தல' வாழ்த்துகள்..
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
Deleteநல் வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி அன்பு .
Delete//தை பிறந்தால் வழிபிறக்கும் நம்புவோம்// ஆமாம் நம்புவோம்.
ReplyDelete