ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்
படித்ததில் பிடித்தது
சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன்.
தொகுப்பாசிரியர்: பா. ஏகலைவன்.
ஜனவரி 2018 யாழ் பதிப்பகம் - சென்னை விலை: 500.00 ரூபாய்.
உலகத்தில் நடந்த பல
படுகொலைகளுக்கான உண்மைக் காரணங்களும், உண்மைக் குற்றவாளிகளும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. மகாத்மா
காந்தியடிகள், ஜான். F. கென்னடி போன்ற
சில கொலைகள் ஞாபகம் வந்தாலும், நம் மண்ணிலே நடந்த ராஜீவ்
காந்தி படுகொலையை நினைத்து வருந்திய தமிழர்கள் என்னையும் சேர்த்து ஏராளமானவர்.
குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஏழுபேர் கடந்த 28 ஆண்டுகளாக இன்னும் சிறைவாசம்
அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இரவிச்சந்திரன் எழுதிய
புத்தகம்தான் இது.
பழ. நெடுமாறன் முன்னுரை எழுத, தொல் திருமாவளவன், நீதியரசர் து அரிபரந்தாமன், சீமான்,
திருச்சி வேலுச்சாமி, KS. ராதா கிருஷ்ணன், தியாகு, புகழேந்தி,
தங்கராஜ், சுப. உதய குமரான், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் ஜி.தியாகராஜன்
ஆகியோர் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் அணிந்துரை எழுதிய புத்தகம்
எனக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை. இனி நான் படித்து, அயர்ந்து
போன, ஆச்சரியப்பட்ட, திகிலடைந்த,
சினமுற்ற, சந்தேகப்பட்ட, துயரமடைந்த விடயங்களை வழக்கம்போல் கீழ் வரும் புல்லட் பாயிண்ட்டுகளில்
(அய்யய்யோ இங்கேயும் புல்லட்டா?) தருகிறேன்.
1)
பழ.
நெடுமாறன் எழுதிய முன்னுரையில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 13 பேர்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் இலங்கைத் தமிழர் என்ற சரிசமமான கணக்கிலேயே
உள்நோக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
2)
இரவிச்சந்திரன்
தமிழகத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு படித்த பின்
விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு இலங்கை சென்று இயக்கத்தில்
சேர்ந்தவர்.
3)
அதன்பின்
திரும்ப தமிழகம் வந்து "தமிழ் தேசிய மீட்பு முன்னணி" என்ற அரசியல்
அமைப்பை உருவாக்கினார்.
4)
குற்றம்
சுமத்தப்பட்ட 26 தமிழர்களும் அரசியல் சதுரங்கத்தில் பலியிடப்பட்ட வெட்டுக்காய்கள்
என்று குறிப்பிடுகிறார்.
5)
நக்கீரன், ஜுவி, தராசு, நெற்றிக்கண், இந்தியா டுடே, சண்டே,
ஃபிரன்ட்லைன், வீக், இல்லஸ்ட்டிரேட் வீக்லி,
ஆகியவை CBI விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கின.
கேள்விகளை எழுப்பிய இராஜீந்தர் குமார் ஜெயின் என்ற பத்திரிக்கையாளர்
கொல்லப்பட்டார்.
6)
கார்த்திகேயன்
உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைத்தப்பவிட்டார்.
7)
சிவராசன்
பொட்டம்மனுக்கு அனுப்பிய வயர்லஸ் செய்தி, சிவராசன், தணு மற்றும் சுபா தவிர வேறு யாருக்கும்
தெரியாது.
8)
புலிகள்
இயக்கத்தில் சேர விரும்பிய ரவிச்சந்திரன் மண்டபம் வந்து, இலங்கைத் தமிழன்
சிவபாலனின் நட்பைப் பெற்று அவரின் உதவியுடன் PLOT அமைப்பின் படகில் ஏறி மன்னார் வளைகுடா செல்கிறார்.
9)
அங்கிருந்து
பாவற்குளம், வவலியாவின் புறநகர்
வழியாக யாழ்குடா சென்று சேர்கிறார்.
10)
அந்தச்சமயத்தில்
பிளாட் இயக்கத்தில் 10000 பேரும் ஈரோஸ் மற்றும் TELO-ல் தலா 1000 பேரும் இருந்தனர்.
11)
எண்ணிக்கை
குறைவாக இருந்தாலும் தங்களுடைய அதிரடி நடவடிக்கைகளால் புலிகள் இயக்கம் மக்களிடம்
மரியாதையும் மதிப்பும் பெறத்துவங்கியிருந்தது.
12)
விடுதலைப்புலிகள்
முகாம் சென்றடைந்தும் சுமார் 1 1/2 மாதம் வெறும் நேர்காணலே நீடித்தது. அதன்
பின்னர் யாழ்குடாவில் ஆரம்பித்த பயிற்சியின் தலைவராக பாரதி மாஸ்டர் இருந்தார்.
அவர் கீழ் 200 பேர் பயிற்சி பெற்றனர்.
13)
பெரும்
வெற்றிகளைக்குறித்து, இலங்கையையும்
ஆண்ட, இராசேந்திர சோழரின் புலிச்சின்னம், விடுதலைப்புலிகளின் சின்னமானது. மேலும் புலி போன்று
வேகம், விசை, பாய்ச்சல், உறுதி,
உருமறைவு, இலக்கு மற்றும் மூர்க்கம், ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
14)
யாழ்
குடா நாடு என்பது, வலிகாமம்,
தென்மராட்சிப் பிரதேசம் என்ற சாவகச்சேரி,
வடமராட்சிப் பிரதேசம் சார்ந்த வல் வெட்டித்துறை பகுதியில் புலிகள்
கேலோச்சினர் இதில் வல்வெட்டித்துரை பிரபாகரன் சொந்த ஊர்.
15)
ரவிச்சந்திரனின்
முதல் சமரில் RPG ஒன்றை மீட்டு
வந்ததை நினைவு கூறுகிறார்.
16)
1989ல்
வந்த ஐ.பி.கே.எல்.எஃப் ஆகஸ்ட் 2,3,4 வல்வெட்டித்துறையில் நடத்திய
தாக்குதலில், 63பேர் கொல்லப்பட்டனர், 2000பேர்
படுகாயம், 150 வீடுகள் எரிந்து போயின, பல
பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
17)
தான்
பெற்ற புலிப்படைப் பயிற்சியை முழுவதுமாக விளக்குகிறார் ரவி. பொலிகண்டி என்ற கடற்கரை
கிராமத்தில் இருந்த இரண்டாவது பட்டாலியன் தலைமைப்பயிற்சிக்கு பொறுப்பேற்றிருந்த
செல்வராஜ் மாஸ்டர் தளபதி சூசை (கடற்படைத்தளபதி கர்னல் சூசை) பாரதி மாஸ்டர்
ஆகியோரைப் பற்றிச் சொல்லுகிறார்.
18)
ஜ.பி.கே.
எல். எஃப் -ன்
படுகொலைத் தாக்குதலுக்குப் பின், தாயகத்தின் ஆதரவைப்
பெறுவதற்காக தமிழ்நாடு திரும்பி தனியாக அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முயற்சி
செய்கிறார்.
அதன்பின் ராஜீவ் காந்தி கொலையின் சந்தேகத்தின் அடிப்படையில் ரவி கைது
செய்யப்படுகிறார். பின்னர்
விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதற்கு பல வித
ஆதாரங்களை அடுக்குகிறார்.
1)
பெல்ட்
பாம் ஒரு இந்தியத்தயாரிப்பு.
2)
அமெரிக்காவுக்கும்
நேரு குடும்பத்திற்கும் இருந்த பிரச்சனை, இதில் CIA உளவாளியாக சுப்ரமணிய சுவாமியின்
செயல்பாடுகள்.
3)
1990
ஈராக் அமெரிக்கப்போரை, சீனா
ரஷ்யாவோடு சேர்ந்து ராஜீவ் எதிர்த்ததால் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும்
வந்த கோபம்.
4)
அமெரிக்க
போர்விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப, அப்போதைய பிரதமர் சந்திரசேகர்
அனுமதியளிக்க அதனை ராஜீவ் எதிர்த்து
ஆட்சியைக் கவிழ்த்தது.
5)
1993ல்
நாடாளுமன்றத்தில் SB சவான். ராஜீவ் கொலையில் உள்நாட்டு/வெளிநாட்டு சதி இருக்கிறது என்று
சொன்னதோடு விடுதலைப்புலிகள் ஓர் அம்புதான் என்றும் CIA மேல் சந்தேகம் இருப்பதாகவும் சொன்னது.
6)
பிரிட்டனில்
இருந்த பஞ்சாப் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஜக்ஜித்சிங் செளகான், "ராஜீவ் காந்தியை ஒழித்தால் மட்டுமே காலிஸ்தான்
பிரச்சனை தீரும். சந்திராசாமி அதற்கு நிதியுதவி செய்வார்" என்று சொன்னது.
7)
சந்திராசாமிக்கும் சி.ஐ.எவுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு, சிவராசனுக்கு இருந்த இன்டர்நேசனல் வங்கிக் கணக்கு.
8)
கார்த்திகேயன்
மூடி மறைத்ததை ஜெயின் கமிஷன் கண்டித்தது.
9)
கொலைக்கு
முன் TN சேஷன், திருச்சி வேலுச்சாமி
ஆகியோர் எச்சரித்தது.
10)
சுப்பிரமணியசாமி, சந்திரசேகர், சந்திராசாமி,
நரசிம்மராவ் போன்ற பார்ப்பனர் வட்டத்தின் கூட்டு.
11)
மத்திய
உளவுத்துறை, ராஜீவ் உயிருக்கு ஆபத்து என்று சந்திரசேகர் அரசிடம் சொன்னது.
12)
1995ல்
சோனியா உண்மையான சாதியாளர்களை நரசிம்மராவ் பிடிக்க மாட்டார் என்று சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஓரங்கட்டியது.
13)
வர்மா
கமிஷனில் இருந்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் விலகுவது.
14)
சுப்பிரமணியசுவாமியின்
56 மணிநேர தலை மறைவு, ராஜீவ்
காந்தி ஆவணங்கள் தொலைந்து போதல்.
15)
டி.ஐ.ஜி.
ஸ்ரீகுமார், லண்டன், ஐரோப்பா என்ற சேகரித்த வெளிநாட்டு ஆவணங்கள் லண்டன் ஏர்போர்ட்டில் தொலைந்து
போனது .
16)
ரா
தலைவர் இது விடுதலைப்புலிகள் செய்ததல்ல என்று சொன்னது.
17)
நரசிம்மராவ், சுப்ரமணியசாமி , சந்திராசாமி,
மரகதம் சந்திரசேகர், லதா, பிரியகுமார், வாழப்பாடி ராமமூர்த்தி, மார்கரெட் ஆல்வா, எம்.கே.நாராயணன் ஆகியோரை
உள்ளடக்கிய கறுப்பு ரகசியங்கள்.
18)
ராஜீவ்
விமானம் 6 மணிக்கு வந்து சேரவேண்டியது, 6 மணிக்குத்தான் விசாக பட்டிணத்தில் கிளம்பியது. தாமதத்தின்
காரணம் என்ன? அந்தத்தாமதம் சிவராசனுக்கு எப்படி முன்னரே
தெரிந்தது?
19)
மரகதம்
சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர் ஒரு சிங்களப் பெண்ணை மணந்தவர்.
20)
பாதுகாப்புக்குறைபாடுகளை
விசாரித்த ஜெயின் கமிஷனுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு முழு ஒத்துழைப்பைத்
தரவில்லை.
21)
1991 முதல் சி.பி.ஐ
வர்மாகமிஷன்,ஜெயின்கமிஷன் என்று ஆயிரம் கோடிக்கு மேல்
செலவாயிருக்கிறது.
22)
1987ல் ராஜீவ்வைத்
தாக்கிக் கொல்ல முயன்ற விஜே முனி ரோகன டி சில்வா என்ற இலங்கை கடற்படை வீரர் மனநிலை
சரியில்லாதவர் என்று 1989ல் பிரேமதாசாவால் விடுதலை செய்யப்படுகிறார். அனால் அடுத்த நடந்த தேர்தலில் தென்மண்டல சபை
உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுகிறார்.
ரவி இவ்வாறு எழுப்பும் சந்தேகங்களைப்
படித்தால் தலை சுற்றுவதோடு, குழப்பம் மேலும் அதிகரிக்கிறது.
எது எப்படியோ நீண்ட நாள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு தங்களது தண்டனைக்காலத்திற்கு
மேல் சிறையில் வாடும்
இந்த ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவதுதான் எந்த ஒரு
மனிதாபிமானமுள்ள தமிழரும் நினைப்பது.
முற்றும்
கொடுமையிலும் கொடுமை...
ReplyDeleteஉண்மைதான் தனபாலன் , தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
ReplyDelete