பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பது என் பதிவுகளை
தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். பயணம் செய்து வேறு நாடு,
மொழி கலை கலாச்சாரங்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவு விரிவடைகிறது. இந்தப் பரந்த
உலகத்தில் உள்ள அதிசயங்கள் உங்களை ஆச்சரியமூட்டுகிறது.
சிறுவயதில் முத்து காமிக்ஸ், டின்டின் போன்ற
காமிக்ஸ்களும் , தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் நூல்களும் பல இடங்களுக்கும்
போகத்தூண்டும் கனவுகளை என்னில் விதைத்தது.
அதன் காரணம் தான் நான்
அமெரிக்கா வந்தது கூட . அப்படிப்பட்ட என் கனவுகளுக்கு
முதலில் ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்தவர் என் தந்தைதான். தேவதானப்பட்டி
இந்து நடுநிலைப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பெற்றோர் ஆசிரியர்
கழகத்தின் மூலம் செல்லும் சுற்றுலாவில்
என்னுடைய பெற்றவரும் ஆசிரியருமாகிய திரு. அ.செ.தியாகராஜன் என்னை தவறாது
கூப்பிட்டுப்போவார். அப்படி நான் தமிழகத்தில் பார்த்த இடங்களை கீழே தருகிறேன்.
கோவில்கள்:
அறுபடை வீடுகள்: - திருத்தணி,
திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம்.
சிவத்தலங்கள்: மீனாட்சி
சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை; தஞ்சைப் பெரிய கோவில்;
தில்லை நடராசர் அம்பலம், சிதம்பரம்; இராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்; திருவண்ணாமலை; கபாலீஸ்வரர் கோயில், சென்னை; ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்; வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்; காசி விஸ்வநாதர் கோவில்; திருவான்மியூர் மருந்தீஸ்வரர்;
கும்பகோணம்; பாலலீஸ்வரர் கோயில், கடலூர்; காளையார் கோவில், சிவகங்கை, பூம்புகார் கோவில், வைத்தீஸ்வரர் கோவில், சீர்காழி சட்டைநாதர், திருநாகேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர், வேலூர். இன்னும் பல
கோவில்கள் ஞாபகம் வரவில்லை.
“தென்னாடுடைய சிவனேபோற்றி” என்று
சொல்லும் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு சிவத்தலங்கள் வேறெங்கும்
இல்லை எனலாம்.
வைணவத்திருத்தலங்கள்:
ஸ்ரீரங்கம், திருச்சி, திருப்பதி, சீர்காழி, காஞ்சிபுரம், அழகர் கோவில்
பார்த்த ஊர்கள்:
தமிழ்நாடு : முழுவதும்
கர்நாடகா: பெங்களூர்,
மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினம்.
ஆந்திரா:ஹைதராபாத்,
கோல்கொண்டா, விசாக பட்டினம், திருப்பதி.
கேரளா: தேக்கடி,
திருவனந்தபுரம், கொட்டாரக்காரா, ஆலப்புழா , மலம்புழா.
வடஇந்தியா: உம்ஹும் இன்னும்
ஒரு இடம் கூட போகவில்லை. கண்டிப்பாய் போக
வேண்டும்.
வெளிநாடுகள்: சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், துருக்கி, மெக்சிக்கோ, போர்ட்டரிக்கோ, கனடா, இஸ்ரயேல், பாலஸ்தீனம்.
அமெரிக்கா: நியூயார்க்
(வாழுமிடம்), நியூஜெர்சி, கனக்டிக்கட், டெலவேர், வாஷிங்டன் டி.சி, மெய்ன், டெக்சாஸ், கலிபோர்னியா, பென்சில்வேனியா, ரோட் ஐலன்ட், மாசசூசட்ஸ், ஹவாய், நியூ ஹாம்ஷயர், வர்ஜினியா, மேரிலாண்ட், மிசெளரி.
போகத்திட்டமிட்டிருக்கும்
வெளிநாடுகள்:
தாய்லாந்து, ரஷ்யா, ஃபிரான்ஸ், ரோம், வெனிஸ், ஸ்பெயின், கியூபா, டொமினிக்கன் ரிபப்ளிக், பெரு, ஸ்விட்சர்லாந்த்.
தூரம் அதிகம், வேகம் குறைவு காலமும் குறைவு. ஆனாலும் அலைகள் ஓய்வதில்லை,
பயணங்கள் முடிவதில்லை.
Add caption |
தொடரட்டும் பயணம், இனிக்கட்டும் மனம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் .
Deleteபயணம் செய்வது நல்லது. பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்கிறோம். ஆதலினால் பயணம் செய்வோம்.....
ReplyDeleteதொடரட்டும் பயணங்கள்.
உண்மை உண்மை , நீங்கள் எனக்கு முன்னோடி .
Deleteம்.. பொறாமையா இருக்கு..
ReplyDeleteவாருங்கள் சேர்ந்து பயணிப்போம் .
Deleteஎன்னை விழிப்படையச் செய்த , அறிவுத்தேடலை தந்த இடம் தேவதானம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளி.
ReplyDeleteஅப்படியா மிக்க மகிழ்ச்சி , வாருங்கள் அடுத்த வாரம் முதல் ஊருக்குபோகலாம்.
Delete