Tuesday, December 12, 2017

கடற்கன்னியும் வண்ண மீன்களும் !!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -30


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post.html

கீழே வந்தது என்னவென்று பார்ப்பதற்கு முன் இந்த பவளப்பாறைகள், பாசிகளைப்பற்றி சிறிது பார்க்கலாம். இலங்கையின் பெரும்பாலான கடற்கரைகளில் இந்த அதிசயப் பவளப்பாறைகள் பாசிகள் இருக்கின்றன. காலே கடற்கரை அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிட்டத்தட்ட 180 வகைகள் இருக்கின்றனவாம்.நான் எங்கு சென்றாலும் அதன் சிறப்பு கூடுகிறது(?). இந்த ஆழ்கடலில் வீழ் உடலாக உள்ளே சென்றால் அவற்றை அருகில் பார்க்கலாம்.
“சார் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள், மெலிதான உடல் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு நீச்சல்  செய்வது மிகவும் ஈஸி. நீச்சல் உங்களுக்குப் புத்துணர்ச்சி  ஆரோக்கியத்தைக் கூட்டும். அதுதவிர உங்கள் மூளை அதிவிரைவில் சிந்திக்கவும் தூண்டும்”.
“அம்ரி நீச்சலைக் குறித்த உன் விரிவுரை நன்றாக  இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது எனக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. அதோடு தண்ணீரில் எனக்கு முண்டம் சாரி தண்டம் சாரி சாரி கண்டம் இருக்கிறது. பார்த்தாயா கண்டம் இருக்கிறது என்று சொல்வதற்கே எவ்வளவு தடுமாறுகிறது பார்”.
“என்ன கண்டம் சார்?”
“அதாவது எனக்கு சனி உச்சியில் இருக்கும்போது உக்கிரதிசை வழியில் செல்லும்போது, சுக்கில பட்சத்தில்  ராகுவும் கேதுவும் உறவாடும்போது நீரில் கண்டம் என்று குருஜி சொல்லியிருக்கிறார்”.   அம்ரிக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதலால் கொஞ்சம் அள்ளிவிட்டேன்.
“யார் சார் அந்த குருஜி?”.
"அவரா அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ மகா உபாத்யாய குருபீட குருப்பிரம்ம, குரு  விஷ்ணு குருதேவோ குருஆச்சாரிய".
“சரி பரவாயில்லை சார் விடுங்க. ஏதோ  இளையராஜா பாட்டில வர மாறி இருக்கு .
“ஏன் மீன் சாப்பிடமாட்டீங்கறீங்கன்னு கேட்டியே இதுதான் காரணம். கடல் பண்டம் எதுவும் சாப்பிடக் கூடாது. கடல் பண்டத்திலும் உடல் கண்டம் எனக்கு இருக்கிறது. (ஆஹா மீன் சாப்பிடாததற்கு ஒரு மீன் (mean) காரணம் கண்டுபிடித்தாகிவிட்டது)
“சரிசார் விடுங்க, விடுங்க”.
ஆழ்கடலில் ஸ்நார்க்லிங் செய்பவர்களுக்கு  பலவித வண்ணங்களில் இருக்கும் கோரல்களைப் பார்ப்பதும், ஆய்வதும் மிகுந்த ஆச்சர்யங்களை அளிக்க வல்லது. அதோடு பலவித ரகமான வண்ணமய மீன்களும் கூட்டம் கூட்டமாக அலைந்து வண்ணத்துக்கு வண்ணம் சேர்க்கிறது.






கோரல்கள் விதவிதமான அளவுகளில், வண்ணங்களில் வடிவங்களில் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில இடங்களில் அவ்வளவு ஆளமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் நிறைய இருந்தன.  ஆனால் கண்ணாடி தடுத்தது. அப்படியே கை எட்டினாலும் எடுக்க முடியாது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட இடங்கள். ஆண்டவனின் அதிசய படைப்புகள் தான் எத்தனை எத்தனை, அனைத்தையும் பார்த்து மகிழ ஒரு ஜென்மம் போதாது .
அப்போதுதான் கீழே அந்தப்பெரிய  மீன் தெரிந்தது . அது மீன் என்று உற்றுப்பார்த்தால் இல்லை இல்லை ஓ அது மெர்மைட் என்று சொல்லப்படும் கடற்கன்னி போலத்தெரிந்தது. அம்ரியும் குனிந்து சுவாரஸ்யமாகப் பார்த்து கையாட்ட அது கண்டுக்காமல் போனது.
“என்ன அம்ரி கடற்கன்னியா ?”      
"கன்னியா என்று தெரியவில்லை, சார் சும்மா விளையாடாதீங்க அது ஏதோ வெள்ளைக்காரப் பெண் ஸ்நார்க்லிங் செய்து கொண்டு இருக்கிறது".


Image result for snorkeling in galle

“எனக்கும் தெரியும் நீதான் உத்து உத்துப்பாத்தியே, அதனால் கேட்டேன்”.
அந்தப் பெண்ணை போட்டோ எடுத்துக் காண்பித்தால் கடற்கன்னி சொன்னால் யாரும் நம்பிவிடுவார்கள். 2 பீஸ் உடை இரு கால்களிலும் மீன் வாலைப் போன்ற ஒரு அமைப்பை மாட்டியிருந்தாள். கண்களில் ஒரு காகில்ஸ் முகமூடி. முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர். அவள் நீந்துவது மீன் கூட போட்டிபோடுவது போல் தெரிந்தது. இவ்வளவும் நடப்பது ஆழ்கடலில் நாங்கள் படகில் மேலே, அதற்குள் கடற்கண்ணன் வந்துவிட  முத்தமிட்டுக்கொண்டே இருவரும் நீந்திக்  கடந்தனர்.ஒரு சிங்கிள் கூட இல்லை இங்கே மிங்கிள் ஆக. எல்லோரும் ஜோடிதான் ஹீம் கடலின் ஆழத்திலும் சரி, கடற்கரையிலும் சரி, வான ஊர்தியிலும் சரி, நகர்ப்புறத்தில் சரி. தனியாக இருந்தது நான் மட்டும்தான் நல்லவேளை அம்ரியாவது இருக்கிறானே துணைக்கு.


படகு நகர்ந்து அடுத்த புறம் செல்ல அடியில் ஆயிரக்கணக்கில் ஒரு வண்ணமய மீன் கூட்டம் கடந்து சென்றது. சிறிது நேரம் சென்று இன்னொரு வண்ண மீன் கூட்டம் சென்றது,கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
Related image
Glass bottom 
இதென்ன இங்கு மீன் வளர்க்கிறார்களா? என்று  கேட்டால், படகுக்காரர் சொன்னார் எல்லாம் இங்கே இயற்கையாக வளர்வது என்று. என் மனைவி இப்போது மட்டும் இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பாள். எங்கள் வீட்டில் வண்ணமீன்கள் தொட்டி வைத்து சில மீன்களை வளர்த்து வருகிறாள். ஒவ்வொன்றும்  நல்ல விலை. அதே சமயத்தில் மீன் உணவு என்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம். அதெப்படி ஒரே சமயத்தில் ஒருபுறம் மீனைச் சாப்பிட்டுக் கொண்டு மறுபுறம் மீனையும் வளர்க்கவும் முடியும் என்பது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்தான். அதோடு எனக்கு மீன் என்றால் ஆகாது. அவளுக்கு மீன் என்றால் உயிர். இந்தக் கடவுள் எப்படியெல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்கள்.
Image result for Glass boat in Galle

படகுக்காரர் எங்கெல்லாம் கோரல் இருக்கிறதோ  அங்கு சிலநிமிடம் நிறுத்துவார். அதே மாதிரி மீன் கூட்டம் வந்தாலும் நிறுத்துவார். இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை  எனக்கு கிடைத்ததில்லை. வண்ணமீன்களில் விதவித டிசைன்களைப் பார்க்கும்போது சொர்க்கத்தில் கடவுள் இதற்கென தனி டிபார்ட்மென்ட் வைத்து சில ஆர்ட்டிஸ்ட்டுகளை வேலைக்கு வைத்து வரைந்து, பெயிண்ட் செய்து, அனுப்புவார் போலத் தெரிந்தது.
 காலே பயணம் இனிமையாகக்கழிய, நானும் அம்ரியும் கிளம்பி கொழும்பு வந்து சேர்ந்தோம். அப்போது அம்ரி கேட்டான், “உங்களுக்கு பிரைட் ஐஸ்கிரீம் வேணுமா? வேணும் என்றேன். அதென்ன பொறித்த ஐஸ்கிரீம் என்று வியப்பாக இருந்தது.

தொடரும்>>>>>>>>

6 comments:

  1. Replies
    1. நன்றி ஸ்ரீராம் , பின்னூட்டம் எப்போதும் எனக்கு உற்சாகம் கொடுப்பவை , என்னை தொடர்ந்து எழுதத்தூண்டுபவை.

      Delete
  2. 'காலே' என்று தலைப்பைப் படித்ததும் எனக்குப் பிடித்த‌ kale கீரை பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தேன். :‍) இலங்கையில் பிறந்திருந்தாலும் ஒரு பொழுதும் காலிப் பக்கம் போனது கிடையாது. தமிழில் k சப்தம் வர‌, (k)காலி என்று சொல்லுவோம். சிங்களத்தில் (g)கால்ல‌.

    ReplyDelete
  3. //பொரித்த‌ ஐஸ்க்ரீம்// அதில் இரண்டு விதம் இருக்கிறதே! க்ரம்ஸில் புரட்டிப் பொரிப்பது ஒருவகை, ஃபிலோ பேஸ்ட்ரியில் பார்சல் செய்து பொரிப்பது (சர்ப்ரைஸ் காப்ரைஸ் என்பார்கள்,) மற்றொரு விதம். முதலாவது சின்னவர்களுக்காக‌ முன்பு செய்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அடுத்த தடவை நிச்சயம் சாப்பிட்டுப்பார்க்கிறேன். நன்றி இமா .

      Delete