வெற்றுலாவான
சிக்காகோ சிற்றுலா !!!!!!
ஜூலை
ஒன்பதில் வந்த 25 ஆவது மணநாள் விழாவினை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என
என்னுடைய மகள்கள் கூறிய யோசனையெல்லாவற்றையும் புறக்கணித்து,
அது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் ஆலயத்தில் ஜெபத்துடன்
கழித்துவிடலாம் என திட்டமிட்டிருந்தேன். ஜூலை
4 அமெரிக்க சுதந்திர நாள் வருகிறது. இது இந்த வருடம்
செவ்வாய்க்கிழமை வருவதால், திங்கள் கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்தால் நான்கு நாட்கள்
சுளையாக வரும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
போன ஆண்டு ஜூலை
4
வீக்கெண்டில் நியூஜெர்சியில் சிறப்பாக நடந்த ஃபெட்னா (
Federation of Tamil Sangams of North America)தமிழர் திருவிழாவில் நானும் என்
மனைவியும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி அதனைப்பற்றி ஒரு தொடர் பதிவுகளை
எழுதியதும் என்னுடைய பிளாக்கை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
இம்முறை மினியாபோலிசில் நடக்கும் ஃபெட்னா விழாவிற்கு
போவதற்கு மனதில் நினைத்திருந்தாலும், இந்த 25 ஆவது மணநாளை ஒட்டி குடும்பத்துடன் எதாவது ஒரு ஊரில்
சில நாட்கள் கழிக்க நினைத்தேன்.
என்
மனைவிக்கு ஊர் சுற்றப்பிடிக்காதலால் பெரும்பாலும் என்னுடைய டிரிப்புகள்
தனியாகத்தான் இருந்திருக்கிறது என்பதும் உங்களுக்கெல்லாம் தெரியும். இது என்னுடைய
ஹனிமூனில் இருந்தே ஆரம்பித்தது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும். அந்த
தனிமூனான ஹனிமூன் கதையை இன்னொரு நாள் அவசியம் சொல்கிறேன்.
Add caption |
அதனால்
கனடாவில் கியூபெக், கியூபாவில் உள்ள ஹவானா, லாஸ் வேகாஸ், அரிஸோனாவில் உள்ள கிராண்ட் கானியன் உள்ள பல இடங்களுக்கெல்லாம் யோசித்து ஒத்துவராமல்
நாங்கள் போக முடிவெடுத்த நகரம் சிக்காகோ. அந்தக் காலத்தில் தமிழ்வாணன் எழுதிய
துப்பறியும் சங்கர்லால் ஒவ்வொரு ஊருக்கும் பயணம் செய்ய அவரோடு நானும்
பயணித்திருக்கிறேன். அப்புறம் தமிழ்வாணனே துப்பறிவாளராய் ஆகி பல ஊருக்கும்
சென்றார். அப்படிச் சென்ற ஊர்களில் சிக்காகோவும் ஒன்று. Chicago
-வில் 'ch'
என்பதை பொதுவாக 'ச்சி' என்று நாம் உச்சரிப்போம். அப்படிப் பார்த்தால் இதனை 'ச்சிக்காகோ' என்று சொல்ல வேண்டும். ஆனால் இதனை 'ஷிக்காகோ' என்றுதான் சொல்கிறார்கள். நானும் அப்படியே சொல்லுகிறேன்.
இந்த மாநகரம் இருக்கும் ஊர் Illinois, இதன் உச்சரிப்பும் வித்தியாசம். இதனை இல்லிநாய்ஸ் என்று
சொல்லாமல் 'இல்லினாய்' என்றுதான் சொல்லவேண்டும்.
"டேய்
பரதேசி, இல்லிநாய்க்குப்போன ஒல்லி நாய் என்று இதற்கு தலைப்பு வைக்கலாமே",
“யார்ராது மகேந்திரனா, என்னடா முருங்கக்காய் மகேந்திரா என்ன
திமிரா? தூரத்தில இருக்கேன்னு என்னவேணா சொல்லுவியா, ஊருக்கு வந்து சந்தைக்கு கூட்டிப்போய் நங்கு நங்குன்னு
தலையில் நாலுவச்சேன், அப்புறம் பாத்துக்க”.
சரி அவனை
விடுங்க,
அப்படி முடிவெடுத்து நாலுபேருக்கு டிக்கெட் புக் செய்தேன்.
எக்ஸ்பீடியா மூலமே ஷிக்காகோவின் ஏர்போட்டான ஓ'ஹாரே ஏர்போர்ட்
அருகில் இருக்கும் 'டேய்ஸ் இன்' ஹோட்டலில் இரண்டு டபுள் பெட் கொண்ட ஒரு ரூமையும் புக் செய்தேன். அதற்குப்பின் என்
சின்னப் பெண்ணுடன் உட்கார்ந்து சைட் சீயிங் இடங்களை திட்டமிட்டு லிஸ்ட்டை போட்டு
அதற்கு ஷிக்காக்கோ சிட்டி பாஸ் 3 நாளைக்கு வாங்கினோம். இந்த பாஸை வைத்து ஷிக்காக்கோவின்
முக்கிய சுற்றுலா தலங்களுக்குப் போகலாம். வரிசையில் போய் நின்று டிக்கெட் வாங்க
வேண்டிய அவசியம் இல்லை, அதுமட்டுமல்லாமல் எங்கெங்கு சாப்பிடவேண்டும் என்பதையும்
திட்டமிட்டேன். டேய்ஸ் இன்னில் காலை கான்ட்டினென்டல் பிரேக்ஃபாஸ்ட் இலவசம் தான்.
மதியம் இந்திய உணவும், இரவில் அமெரிக்க உணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்து
ஒரு பெரிய லிஸ்ட்டை எடுத்து வைத்தேன். உடுப்பி, பெங்களூர் உட்லண்ட்ஸ், அன்னபூர்ணா, கோதாவரி ஆகிய உணவகங்களும் அதில் அடக்கம்.
ஜூன் 30 வெள்ளியன்று
மலை கிளம்பி அன்று இரவு, ஜூலை 1 சனி, ஜூலை 2 ஞாயிறு, ஜூலை 3 திங்கள் முடித்து ஜூலை 4 செவ்வாய் மாலை கிளம்பி வருவதாகப் பிளான்.
நம்முடைய பிளாக்கில் இந்தத்
திட்டத்தை தெரிவித்து அதனால் பதிவுகள் வராது என்பதையும் அறிவித்துவிட்டேன்.
இவ்வளவு
ஏற்பாடுகளையும் செய்து முடித்து, பேக் செய்து செக்லிஸ்ட்டை சரிபார்த்து உபெரைக் (uber) கூப்பிட்டு லக்குவார்டியா ஏர்போர்ட்டிற்கு போனோம். என்
மனைவி , வீட்டில் பூத்த மல்லிகை மலர்களைச்
சூடியிருந்தாள். காரே கமகமத்தது, மனது குதூகலமாய் ஆனது.
பாதிவழியில்
வந்த இ மெயிலில் ஃபிளைட் டிலே என்று வந்தது. இரண்டு மணிநேரம் தாமதம் என்பதால்
வீட்டிற்குப்போய் திரும்ப வரலாமா என்று கேட்டேன். இல்லை ஏர்போட்டிலேயே இருந்து
கொள்ளலாம் என்று எல்லோரும் சொன்னதால் ஏர்போர்ட் போய் இறங்கினோம். ஏர்வேஸின் பெயர் ஸ்பிரிட் ஏர்வேய்ஸ். உற்சாகம்
தொற்றிக்கொள்ள லைனில் நின்றோம். அங்கு வந்த செக்யூரிட்டி எங்கள் டிக்கட்டைப்
பார்த்துவிட்டு நக்கலாய் சிரித்தான். என்னவென்று கேட்டால் ஃபிளைட் கேன்சல்ட் என்றான். கோபத்துடனும் கலவரத்துடன் கெளண்ட்டருக்குப்
போய்க் கேட்டபோது அதையே சொன்னார்கள். அதோடு ஷிக்காகோ போகும் எல்லா விமானங்களும் ரத்து என்றும்
வானிலை சரியில்லை என்றும் சொன்னார்கள். ஸ்பிரிட் ஏர்வேஸ் கேன்சல் ஆனதால் எங்கள் எல்லோரின் ஸ்பிரிட்டும்
இறங்கிப்போய் காத்து இறங்கின பந்தைப்போல் ஆனோம் .ஆனால் அந்தக்கவலை என் மனைவி முகத்தில்
தெரியவில்லை. அவளுக்குத்தான் ஊர் சுற்றுவதில் விருப்பமில்லையே அதுதான் காரணமாய் இருக்கும்
என்று நினைத்தேன் .சொன்னதோடு மறுபிளைட் திங்கள் தான் என்று
சொன்னதால் எல்லாவற்றையும் கேன்சல் செய்து ரீஃபண்டை
வாங்கிட்டு ஒரு மஞ்சள் கேப் பிடித்தோம்.
எல்லோர் முகமும் சோகமாய் இருக்க, என் மனைவி முகம் மட்டும் மகிழ்ச்சியாய் இருந்தது
போல் தெரிந்தது. அவள் தலையில் இருந்த மல்லிகை மலர்கள் என்னைப் பார்த்து சிரித்தன,
மணத்தன. 'போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு'
என்ற பழமொழி வேறு நேரந்தெரியாமல் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.
வீடு வந்து
சேர்ந்து ஹீரோ டாக்கீசில் படம் பார்க்கலாம் என்று நோண்டியபோது "போங்கு" என்ற படம் புதிதாக
இணைக்கப்பட்டிருந்தது. அந்தப்படம் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தது வருத்தமாக
இருந்தது.
அடுத்த நாள் காலையில்
எழுந்து நியுஜெர்சிக்குப் போய் மிர்ச்சியில் சாப்பிடலாம் என்று மனைவி சொன்னதால்
சரி இப்படியாவது விடுமுறையைக் கழிக்கலாம் என்று அங்கு சென்றோம். எடிசனில்
இருக்கும் இந்த ஆந்திர உணவகத்தில் 35 வகைகள் புஃபேயில் இருந்தன. விலையும் 16
டாலர்கள், சாப்பிட்டு வெளியே வந்து பார்த்தால் அதே காம்ப்பவுண்ட்ண்டில் "ஜாய்
அலுக்காஸ்" நகைக்கடை இருந்தது.
"ஏங்க அதான் ரீபண்ட் வந்திருச்சே,
ஏதாவது நகை பார்க்கலாமா?" என்று சொன்னாள். இது மிகப்பெரிய சதித்திட்டமாய் இருக்குதே
என்று எண்ணினாலும் மறுப்புச் சொல்லாமல் உள்ளே போனோம். மிக மிகத் தவறான முடிவென்று பின்னர்தான் தெரிந்தது.
தலைக்கு மேல் வெள்ளம்போய் ஷிக்காக்கோ போல மூணுமடங்கு செலவானது. போன மச்சான் திரும்பி வந்தான்
பூமணத்தோடுன்னா சொன்னேன். அந்த பூமணம் போய் இப்ப கோமணமாவது மிஞ்சுமான்னு தெரியலை
போங்க.
Super alfi.u should tell ur wife that jewellery shop only window shopping.Better follow next time
ReplyDeleteவிண்டோ ஷாப்பிங்ன்னு சொன்னா மண்டேயை உடைச்சுட்டா என்ன செய்றது ?
Deleteவருகைக்கு நன்றி ராஜா.
Narration is simply superb
ReplyDeleteI will keep reading your blog.
Thank you Govindaraju Arunachalam.
ReplyDeleteGood holiday
ReplyDeleteyou think so?
DeleteSame blood last Sunday in same shop :)
ReplyDeleteware vaa join the club.
Deleteநன்று
ReplyDeleteஎது? நான் கோமணாண்டி ஆனதா ?
Deleteகட்டுரை நன்றுன்னு சொன்னேங்க மற்றபடி உங்க பயணம் கேன்சலானது வருத்தமே
ReplyDeleteஅது மட்டும்தானா அன்பு ?
Deleteஐயோ இப்படி ஆயிடிச்சே. எங்களுக்கு ஒரு நல்ல பயணக்கட்டுரை
ReplyDeleteஅம்போ..
உங்களுக்கு கட்டுரை மட்டும்தானே போச்சு , எனக்கு எல்லாமே போயிருச்சு பாஸ்கர் , பாஸ்கர்.
Delete