Mohamed Sathak Arts College |
என் பாஸ் முகமது சப்வேயில் செய்த செயல் எனக்கு அதிர்ச்சியை
அளித்தது. கொஞ்சம்
இருங்க என்ன நடந்ததுன்னு முதல்ல இருந்து சொல்றேன் .
"ஆல்ஃபி நானும் உங்களோடு
வர்றேன்" என்றார் முகமது. மணியைப் பார்த்தேன் மாலை 6.30 மணி. இன்னக்கி முகமது நம்மை
விடப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன். மனைவியிடம், "சீக்கிரம் வருகிறேன் இன்றைக்கு எப்படியும் கடைக்குப் போயிரலாம்",
என்று சொல்லியிருந்தேன். குளிர் அதிகமாக இருந்ததால் ரெண்டு
வீக்கென்ட் எங்கும் போக முடியவில்லை. "கரெக்டா வந்துருங்க, இன்னிக்கு வாங்காட்டி, சமையல் பண்ண காய்கறி எதுவும் இல்லை", என்று
சொல்லியிருந்தாள் என் பாரியாள்.
காய்கறி இல்லாட்டி என்ன,
எத்தனை குழம்பு வகைகள், காய் இல்லாமல் செய்ய முடியும் தெரியுமா?
பூண்டு குழம்பு, மிளகுக்குழம்பு,
பருப்பு உசியல், பருப்பு உருண்டைக் குழம்பு,
புளிக்காய்ச்சல், பொரிச்ச குழம்பு,
மோர்க்குழம்பு, அட இதெல்லாம் விடுங்க
ஒரு ரசம் வச்சா போதுமே" என்று, "சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லத்தான்
துடிக்கிறேன்"(இந்த வரியை பாட வேண்டும்). ஆனால் என்
மனைவிட்ட இதெல்லாம் யார் சொல்றது? எதுக்கு தகராறுன்னு
நினைச்சு, "வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்."
(மறுபடியும் பாடவும்). ஆஹா காதலுக்குப் பாடும் பாடலை மோதலுக்கும் பாடறானே பரதேசி என்று
நினைத்து எனக்கு நானே சிரித்துக் கொண்டேன். தினத்தந்தியில் வருமே
"ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்" அது போல இங்கு "பரதேசிப்பண்டாரம்
பாடறார்"னு வச்சிக்கங்களேன்.
ஆனால் சீக்கிரம் கிளம்ப முடியாதபடி
"லெட்ஸ் ஹேவ் எ மீட்டிங்", என்று பழையபடத்தில் நம்ம கோபாலகிருஷ்ணன் சொல்ற மாதிரி சொன்னார் முகமது.
போன வாரம் தான் இந்தியாவிலிருந்து
வந்திருக்கிறார். ஒரு மாதம் இங்குதான் இருப்பார். இப்படி திடீர் மீட்டிங்குகள்,
ரிவியூ, பிளானிங், பட்ஜெட் என்று
அடிக்கடி நடக்கும். மீட்டிங்குகளின் ஒரே அஜெண்டா, வேறென்ன? எப்படி பிராஃபிட்டை உயர்த்துவது? என்பது தான்.
என்னுடன் வேலை செய்யும் இன்னொரு
துறையின் துணைத்தலைவர் (Vice President) ஒரு
நாள் கேட்டது ஞாபகம் வந்தது. முகமது நபிகளுக்கும் நம்ம பிரசிடன்ட் முகமதுவுக்கும்
என்ன வித்தியாசம் என்று? யோசித்துப்பார்த்துவிட்டு,
"நீயே சொல்லு", என்றேன். அவன் சொன்னான்,
"முகமது நபி Prophet Mohamed, நம்ம
முகமது Profit Mohamed" என்றானே பார்க்கலாம். அதனை
இப்போது நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் அதில்
ஒன்றும் தவறில்லை.
நிறுவனம்
லாபத்தில் இயங்கவில்லை என்றால் எப்படி எங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியும்?. சம்பளம் கொடுக்கமுடியும்?
ஆனால் முகமதுவைப்போல ஒரு நல்ல
முதலாளியை யாரும் பார்க்க முடியாது. எப்போதும் சாத்வீகமாக இருப்பார். கோபம் வராது.
முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க மாட்டார். எப்போதும் எங்களிடத்தில் ஆலோசனை
கேட்பார். நல்ல ஃப்ரீடம் கொடுப்பார். ஆனாலும் கம்பெனியா,
வேலை செய்பவரா? என்று பார்க்கும் போது கம்பெனிக்குத்தான்
முக்கியத்துவம் கொடுப்பார். அப்படி இல்லாவிட்டால் அவர் முதலாளியாக இருக்க
முடியாதே.
பள்ளிக்கல்வியை டான்பாஸ்கோவிலும்
கல்லூரியை லயோலாவிலும் முடித்துவிட்டு, MBA படிக்க நியூயார்க் லாங் ஐலன்ட்
யுனிவர்சிட்டிக்கு வந்தார். கையோடு 1997-ல்
நியூயார்க்கில் ஆரம்பித்த கம்பெனிதான் 'ஓபன்வேவ்
கம்ப்யூட்டிங்". இப்போது, நியூயார்க்
மட்டுமல்லாமல், சிங்கப்பூர், கோலாலம்பூர்,
சென்னையில் Offshore Center என்று வளர்ந்திருக்கிறது.
மீட்டிங் 6.30 மணி வரைக்கும் போனாலும், இப்போது சப்வேயிலும்
என்கூட வருவதாகச் சொன்னதால், எல்லா Staff -வோடு நடந்த மீட்டிங் முடிந்து விட்டாலும், என்னோடு
உள்ள மீட்டிங் இன்னும் முடியவில்லை என்று தோன்றியது.
அவரோடு பலமுறை டிராவல்
செய்திருக்கிறேன். சான்ஃபிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஆஸ்டின் டெக்சஸ், காரில் நியூஜெர்சி என்று பல இடங்களில் செல்லும் இடங்களில் எல்லாச்
செலவும் அவருடையது. சில ஆங்கிலப்படங்களுக்கும்
சென்றிருக்கிறோம்.
அவரிடம் எனக்கு ரொம்பப்பிடித்தது,
தான் முதலாளி என்ற கர்வமோ, பெருமையோ,
அதிகாரமோ கொஞ்சம் கூட கிடையாது.
Down to Earth என்று சொல்வார்களே அந்த மாதிரி.
இத்தனைக்கும் முகமது சதக்கின் குழுமத்தின் சேர்மன் இவருடைய அப்பாதான். அடுத்த
வாரிசு இவர். Born with silver, no no Golden spoon என்று
சொல்லலாம். மில்லியனர் கூட இல்லை சமீபத்தில் மொத்த மதிப்பு பில்லியன் டாலரை
(USD) தொட்டுவிட்டது.
அப்படிப்பட்ட பெரும் பணக்காரர்
சப்வேயில் செய்த செயல் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும்
அளித்தது.
இருவரும் கிளம்பி,
F டிரைனில் ஏறினோம். பீக் டைம் சற்றே முடிந்துவிட்டதால் உட்கார
இடம் கிடைத்தது. உட்கார்ந்தவுடன் பேச ஆரம்பித்தார்.
Penny |
ஒரு விஷயம் கூட கம்பெனி குறித்து
அல்ல. என் குடும்பம், பிள்ளைகள்,
என் ஆலயம் குறித்து மட்டுமே பேசினார். அப்போது எங்கள் முன்னால்
ஒரு பென்னி (Penny) கிடந்தது, இவ்வாறு தெருவில் பென்னி
கிடந்தால் நான் எடுத்து விடுவேன். நான் நாணய சேகரிப்பாளர் என்பதால் அதில் ஏதாவது
நல்ல நாணயம் மாட்டக் கூடும் என்பதால். உதாரணத்திற்கு
1982-க்கு முன்னால் வந்த பென்னி
காயின் என்றால் அது காப்பர் காயின் அதன் மதிப்பு 3 பென்னி.
1909 முதல் 1956 வரை வந்த காயின் என்றால் அதன் பெயர் வீட் காயின் மதிப்பு 50 பென்னி.
1959 முதல் 1909 வரை அச்சிடப்பட்ட காயின் என்றால் அது இன்டியன் பென்னி. (Red
Indian) மதிப்பு -1 டாலர்.
Indian Penny |
அதோடு சில பழைய அரிய பென்னிகள்
கிடைத்தால் அதன் மதிப்பு ஆயிரம் டாலர் வரை இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாமல்
சதாரண காயின் என்றாலும் அதன் இந்திய மதிப்பு 63 காசுகள் ஆயிற்றே. எனவே எடுத்துவிடுவேன். ஆனாலும் முகமது தப்பாக
நினைக்கப் போகிறார் என்று வரட்டு கெளரவத்தால் பென்னியை எடுக்கவில்லை.
Mohamed Sathak |
ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராதபடி
முகமது சட்டென்று குனிந்து அதனை எடுத்து தன் வாலட்டில் போட்டுக் கொண்டார்.நான்
நினைத்துக் கொண்டேன், பக்கத்தில் தன் ஸ்டாப் இருக்கிறானே என்ற
எந்தச் சங்கடமும் இல்லாமல், பணத்துக்கு, அது பென்னியாக
இருந்தாலும், மதிப்புக் கொடுத்து அதனை எடுத்துக் கொண்டாரே
அதனால்தான் அவர் பில்லியனர் நான் வெறும் சல்லியனர்.
முற்றும்
கீழே கிட(டை)க்கும் பணம் (1 பென்னி -யிலிருந்து அதிகபட்சத் தொகைவரை எவ்வளவே எனினும்) அது நம்முடையதில்லையே???
ReplyDeleteஒ இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதோ ?
DeleteTrue. You can put that in the offertory plate. All money belongs to Him.
Deleteநல்ல பதிவு.
ReplyDeleteஅன்புள்ள,
வாந்தி பேதி வருண்
நன்றி அருண் , ஆமா இந்த வாந்தி பேதி நின்னுருச்சா இல்லையா ?
Deleteஅருமையை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்...
ReplyDeleteஆமாம் திண்டுக்கல் தனபாலன்.
Deleteபென்னிக்கும் மதிப்புண்டு அல்லவா
ReplyDeleteபென்னிக்கும் மதிப்புண்டு அல்லவா
ReplyDeleteஅது சரிதான் காமராஜ் .
DeleteI have taught my children not to take any single cent , if it's not belong to them. Am I teaching wrong thing?
ReplyDeleteYes... you are correct...
DeleteYour teaching is correct only.My article is in a different angle in a different country.You will find lot of pennies in the streets unlike in India.
Deleteநல்ல அனுபவம்.
ReplyDeleteநம்முடையது இல்லை எனும்போது எடுத்துக் கொள்வது தவறு என்பது நமக்குக் கிடைத்த பாடம்.....
நன்றி வெங்கட் நாகராஜ்.
Deleteசுவையான பதிவு, வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி பாஸ்கரன் .
Delete