Monday, April 6, 2015

இளையராஜாவின் முதல் ஸ்டீரியோ இசை!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா -பாடல் எண் 20  ஹேய் பாடல் ஒன்று.

இளையராஜா இசையமைத்து 1978ல் வெளிவந்த பிரியா என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலைக் கேட்போம்.

பாடலின் சூழல்:
வேறென்ன தமிழ் சினிமாவில் வழக்கம் போல காதலனும் காதலியும் ஒருவரையொருவர் ரசித்து சிலாகித்து பாடும் டூயட் பாடல் இது.
இசையமைப்பு:

இந்தப்படத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. தமிழ்த்திரையுலகில் முதன்முதலாக இந்தப்படத்தில்தான் ஸ்டீரியோ முறையில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. முந்தைய பல பாடல்களையே ரசித்துக் கேட்ட எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி. இசை துல்லியமாகவும் தனித்தனியாகவும் குரல்களினின்று வேறுபட்டு ஒலிக்கும் போது பரவசமாக இருந்தது. அப்போது முதல், மோனோ டேப்ரிக்கார்டுகள் போய் ஸ்டீரியோ ரெக்கார்டர்கள் அதிகமாக விற்றதில் இளையராஜாவுக்கு ஒரு பெரும்பங்கு இருந்தது. இந்தப்படத்தில் 'டார்லிங் டார்லிங்' என்ற சுசிலா பாடிய பாடல் தான் இந்தவகையில் முதல் பாடல். 'என்னுயிர் நீதானே' என்ற பாடலும் சிறப்பான பாடல். ஸ்டீரியோ முறை மட்டுமல்லாமல் இந்த மூன்று பாடல்களின் இசையமைப்பும், இசைக்கருவிகளின் பயன்பாடும் மிகவும் மாடர்னாக அமைந்திருந்தன.ஆரம்பம் முதல் பாடல் முழுவதும் வரும் கிடார் ஸ்டிரம்மிங் மிக இதமாக ஒலிக்கிறது.
MSV வெளிநாட்டில் வரும் பாடல்களுக்கு சிறிது வேறுவிதமான இசைக்கருவிகளை உபயோகப்படுத்துவார். இளையராஜாவும் அதே வித்தையை இங்கே பயன்படுத்தியிருக்கிறார். மற்றபடி காங்கோ, வீணை, ஷெனாய் இசைக்கருவிகளும், வயலின் தபேலா போன்ற வகைகளோடு பயன்படுத்தியுள்ளார்.
பாடலின் வரிகள்:
ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்

ஹே பாடல் ஒன்று ....

மின்னல் உந்தன் பெண்மை
என்னைத் தாக்கும் ஆயுதம்(2)
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய் (2)
என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே

ஹே பாடல் ஒன்று...

தீபம் கொண்ட கண்கள்
எனை நோக்கும் காதலில் (2)
தாகம் கொண்ட நெஞ்சம்
எனைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய்(2)
இளம் காதல் ராஜா கன்னா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி நானே

ஹே பாடல் ஒன்று....

நேரம்  இன்ப நேரம்
விழி போடும் ஓவியம் (2)
ஓரம் நெஞ்சின் ஓரம் 
சுவையாகும் காவியம் (2)
ஒரு மாலை நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை நானே

ஹே பாடல் ஒன்று ...
பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள். பஞ்சு அருணாசலம் அவர்களின் நெஞ்சம் பஞ்சு போல் மென்மையானதாக இருக்க வேண்டும். சளைக்காமல் காதல் பாட்டுகளை எழுதித் தள்ளியுள்ளார்.
எனக்குப்பிடித்த வரிகள்.
மின்னல் உந்தன் பெண்மை
எனை தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல்
மலராடும் ஊஞ்சலாம்.
மேகம் போன்ற, உன் கூந்தல் மலராடும் ஊஞ்சல் என்பது அட்டகாசமான கற்பனை. இதெல்லாம் அதனை உண்மையிலேயே பார்க்கும் போதுதான் வரும்
-இறுதியில், "மாலைநேரம் உன் மார்பில் ஆடும் மாலை நான்", என்பதும் நல்ல கற்பனை.

பாடலின் குரல்:

மறுபடியும் ஜேசுதாஸ் ஜானகி கூட்டணியில் காதுக்கு இனிமையாக ஒலிக்கும் பாடல் இது. இன்று கேட்டால் கூட அதன் புதுமையும் இனிமையும் நம்மை மென்மையாக வருடுகின்றன. இந்தப்படத்தின் எல்லாப்பாடல்களையும் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
மொத்தத்தில் இளையராஜாவின் சிறந்த மெட்டுக்கும், இசையமைப்புக்கும், ஒலிப்பதிவுக்கும் இது ஒரு உன்னத எடுத்துக்காட்டு.
சுஜாதாவின் அருமையான கணேஷ் வசந்த் கதையை இந்தப்படத்தில் முழுமையாகக் கெடுத்துவிட்டாலும், இந்தப்படம் 175 நாள் ஓடியது. அதற்கு இளையராஜாவின் பாடல்கள் மிகப்பெரிய பங்கிழைத்தது என்பதில் சந்தேகமில்லை  .

  தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>

11 comments:

 1. நல்ல பதிவு.. இனிய பாடல்..

  ReplyDelete
 2. பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். ராஜாவின் வித்தியாசமான இசை வடிவம்தான் 'பிரியா' பாடல்கள். சலிக்காத இசை கேட்டுக்கொண்டே இருக்கலாம். பதிவுக்கு நன்றி!

  நேரம் இருந்தால் இசை மற்றும் ஒலிகள் சம்பந்தமான எனது பதிவை படித்து கருத்து தெரிவியுங்கள், நண்பரே!

  http://senthilmsp.blogspot.com/2015/02/92.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி செந்தில்குமார் .தங்கள் தளத்திற்கு கண்டிப்பாய் வருகிறேன் .

   Delete
 3. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 4. Hello... Kaarigan & Amudavan ... Are you there? Start abusing this song

  ReplyDelete
  Replies
  1. அனானியே, முதலில் நீ சொந்தப் பெயரில் எழுது
   இவர்களைப் பற்றி அவதூறு கூற நீர் யார் ' அவர்கள் அறிவாளிகள் சினிமா விஷயம் தெரிந்தவர்கள். அமுதவனுக்கு சினிமா விஷயத்தில் நிறய அனுபவம் உண்டு. உமக்கோ? உமக்கு என்ன ஞானம் .இருக்கு அப்யூஸ் என்று சொல்வதற்கு அனானியே?

   இப்படிக்கு அன்புள்ள
   வாந்தி . பேதி. வருண்

   Delete
  2. Anony

   Pls stay away from this kind of interesting articles. Kareegan & Amudhavan are really wonderful people for the tamil world

   Suthakar

   Delete
 5. இன்னொரு தகவ்ல் - கே.ஜே.யேசுதாஸின் தரங்கிணி ஸ்டூடியாதான் முதலில் ஸ்ட்ரீயோ தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தது.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி ராமன் .

   Delete