பனை
மரத்துல வவ்வாலா? கலைஞருக்கு சவாலா?
இந்தப்படை
போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
போடுங்கம்மா
ஓட்டு, ரெட்டை இலையைப்பாத்து !!!!!
போன்ற சத்தம்
இன்று நினைத்தாலும் காதோரத்தில் நாராசமாய் ஒலிக்கிறது.
தேவதானப்பட்டியில் இருக்கும் ஒரே மைதானமான(?)
காந்தி மைதானத்தை ஆக்கிரமித்திருக்கும் கோயில் காளைகளும், தெரு
நாய்களும், எருமைகளும் அப்புறப்படுத்தப்படும்.
பாப்பான் கிணற்று நீரை சேந்தி, புழுதி அடங்க நீர் தெளித்து சுத்தம் செய்யப்படும். தலைவர்கள்( ?) வரும் போது பஞ்சாயத் ஆபிசிலிருந்து
ஒரு விதமான வெள்ளைப்பொடி தூவுவார்கள்
நாகூர் மீரான் ஓலைக்கிடுகுகளையும் மூங்கில்களையும் வைத்து நிரந்தரப்பந்தல் அமைப்பார்.
பாவம் காசு வாங்க கட்சி ஆபிஸ்களுக்கு, அடுத்த
தேர்தல் வரை அலைவார். இந்து நடுநிலைப்பள்ளியின்,
பெஞ்சுகளை கொண்டுவந்து மேடை அமைக்கப்படும். பள்ளிக்கூடம் தேர்தல் முடிவதற்குள் பாதி
பெஞ்சுகளை இழக்கும். மைக் செட், ஒலிஒளி அமைப்பு
குழாய்கள் கட்டப்பட்டு பாட்டு ஒலிக்க, சிறுவயதில் ஒரே கொண்டாட்டமாயிருக்கும் எலக்ஷ
ன் திருவிழா.
கோயில் திருவிழா காலத்தில் சாதிகளால் பிரியும்
சமூகம், இப்போது கட்சிகளால் பிரியும். சுவரில் கட்சிகள் போட்டி போட்டு இடம் பிடிக்கும்.
சுவர் விளம்பரம் வரைபவர்களுக்கு தற்காலிக டிமாண்ட். மாலையில் போடும் பாட்டுகளை வைத்து
எந்தக் கட்சி மீட்டிங் என்று கண்டுபிடிப்போம். தேர்தல் கவிஞர்களும், இசைக்குழுக்களும்
புதிதாக முளைக்கும்.
"இமயமுதல் குமரி வரை இணைக்கும் எங்கள்
காமராஜர்."
"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே"
"காஞ்சியிலே ஒரு
புத்தன் பிறந்தான்."
"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது
ஆணவ சிரிப்பு"
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்"
எம்.எல்.ஏ , எம்.பி, மாவட்டத்தலைவர்கள், மாநிலத்தலைவர்கள்,
ஏன் கலைஞர், எம்ஜியார் எல்லோரையும் உள்ளூரிலேயே பார்க்க முடியும். தேர்தலில் நிற்கும்
தலைவர்களை வெள்ளையும் சொள்ளையுமாக உங்கள் வீட்டு வாசலிலேயே பார்த்துவிடலாம். வாக்குறுதிகள்
ஏராளமாய் பறக்கும்.
ஒரு மாதமாகும் இந்தச் சத்தம் அடங்க. காந்தி மைதானத்திற்கு
கோயில்காளைகளும், ஆடுகளும், தெரு நாய்களும் திரும்பும். ஜெயித்தவர்கள் புதுப்பணக்காரர்கள்
ஆவார்கள். ஊரும் பாப்பான் கிணறும் அன்று பார்த்த மாதிரியே, என்றும் இருக்கும்.
இத்தகைய எந்தக்கலாட்டாவும் இல்லாமல் நியூயார்க்கில்
மேயர் எலக்ஷன் நடக்க, யார் ஓட்டுப்போட்டார்கள் யார் போடவில்லை, எங்கே எப்படி ஓட்டு
நடந்தது? என்று எதுவும் தெரியாமல், பில் பிளாசியோ மேயராகிவிட்டார். மைக்கேல் புளூம்பர்கின்
12 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதுல யாரு பில்லு,,யாரு மைக்கேலு?
ReplyDeleteஇது பில்- இன் குடும்பம்
ReplyDeleteதேர்தல் வாக்குறுதி: 3
ReplyDeleteநாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடி நடவடிக்கையாக அரசின் செலவில் அனைத்து மின் விளக்குகளையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் வைக்க ஏற்பாடு செய்வோம். விளக்கேற்ற உதவியாக ஒவ்வொரு இல்லத்திற்கும் 7 அடி ஏணி ஒன்றும் தரப்படும். ஏணியில் ஏற தயங்கும் நபர்களுக்கு 6 அடி தீக்குச்சிகள் வழங்கப்படும்.
தேர்தல் வாக்குறுதி: 2
ReplyDeleteநாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் ஆட்டோவில் மீட்டர் வைக்க மாட்டோம். அதற்க்கு பதிலாக ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு மீட்டர் அளிப்போம். நீங்கள் ஆட்டோவில் செல்லும் போது நீங்களே மீட்டர் ஸ்டார்ட் செய்து அந்த கட்டணத்தை ஆட்டோ ஓட்டுனருக்கு தரலாம்.
தம்பி ஒரு ரகசியம் இந்த வாட்டர் போர்டு சாரி , மீட்டர்
Deleteபோர்டு வாரியத்துக்கு தலைவர் போட்டாச்சா ?
இல்லை, நம்ம மச்சான் ஒருத்தன் அஞ்சாப்பு பெயில்
இருக்கான்...................
அஞ்சாப்பு படிச்சா புள்ள நிறைய கேள்வி கேட்க்கும் அண்ணே. ஆறாவது தபால் முறையிலே முதுகலை பெற்றவர்களா நியமித்தால் நன்னா இருக்கும்.
Deleteஇதென்ன புதுசா இருக்கு , எங்க விக்கிராய்ங்கன்னு சொல்லு, வாங்கிப்புடுதேன்
Deleteதேர்தல் வாக்குறுதி: 1
ReplyDeleteஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள், மதியவேளை சத்துணவில் முட்டை தருவார்களாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்துணவில் முட்டை மட்டும் இல்லாமல் அதற்கும் மேல ஒவ்வொரு மாணவ மாணவியர்க்கும் ஆளுக்கொரு பீடாவும், சிகரெட்டும் தருவோம் என்பதை இங்கே தாழ்மையுடன் சொல்லிகொள்கிறேன்.
தேர்தல்..... நினைவுகள் எனக்குள்ளும்!
ReplyDeleteஇதுவும் எலெக்ஷன் காலமாததால்
ReplyDeleteபதிவு படிக்காச் சுவாரஸ்யம்
ட்ரம்ப் மற்றும் அவரது மகளின்
பேச்சை ரேடியோவில் கேட்டேன்
தாக்கிப் பேசுவதில் அமெரிக்கர்கள்
நம்மவர்களுக்கு எந்த விதத்திலும்
குறைந்தவர்கள் இல்லையென்ப் புரிந்தது
நீங்கள் சொல்வது சரிதான் , அதுவும் டிரம்ப் வந்தபின் மிகவும் மோசம் .
Delete