இலையுதிர் காலத்தில் , நியூயார்க் நகரின் வெளிப்புறத்தில் upstate என்று
சொல்லப்படுகிற பகுதிகளில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பெயர்தான்
"ஆப்பிள் பிக்கிங்". மக்கள், பிக்னிக்
போல திட்டமிட்டு, அங்கே உள்ள பலவகை ஆப்பிள் பழங்களை பறிக்கலாம், ருசி பார்க்கலாம்,
வயிறுபுடைக்க தின்னலாம், வெளியே எடுத்துச் செல்லும்போது மட்டும் எடை பார்த்து காசு
வசூலிப்பார்கள். ஆப்பிள் எடையைத்தான் சொன்னேன். நல்லவேளை உடல் எடையையல்ல. ஆனால் நான்
எழுதவந்தது அதைப்பற்றியல்ல.
ஆப்பிள் என்றழைக்கப்படுகிற கம்பெனி தயாரிக்கும் சாதனங்களான, ஐபாட், ஐபேட் , ஐபோன் ஆகியவை குறிவைக்கப்பட்டு திருடப்படுகின்றன. குறிப்பாக ஐபோன்கள், அதனைத்தான் இப்போது நியூயார்க்கில் செல்லமாக "ஆப்பிள் பிக்கிங்" என்று அழைக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால், ஒரே ஒரு கம்பெனியின் சாதனங்களால், நியூயார்க்கின் கிரைம் ரேட் கூடிவிட்டது என்று மேயர் புளூம்பர்க் கவலை தெரிவித்துள்ளார்.
நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்டின் (NYPD) தகவல்படி ஆப்பிள் சாதனங்களின் திருட்டு மார்க்கெட் மட்டும், ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் ஆகும். போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் 42% திருட்டு கூடியுள்ளது. AT&T கம்பெனியுடன் இணைந்து இதனை தடுக்க, NYPD தனிப்படை அமைத்துள்ளது.ஐபோனுக்காக, நியூயார்க்கில் வாழும் 26 வயது,கொரிய இமிக்ரண்ட் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதற்கு முக்கிய காரணம் அதன் விலைதான். ஐபோன்கள் AT&T -யில் சேர்ந்து
2 வருட கான்ட் ராக்டில் வாங்கினால் $200 முதல் $250 வரை போனுக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால் அதனுடைய முழுவிலை $800 முதல் $1000 வரை. எனவே அதற்கென்று வெளியே கள்ள மார்க்கெட்
உருவானதில் ஆச்சரியமில்லை.
இந்த செய்திகளைப்படித்த நான், நல்லவேளை என்னிடம் ஐபோன் இல்லை, நான் கவலைப்படத்தேவையில்லை என்று நினைத்த கணத்தில், என் பெண்கள் இருவருக்கும் ஐபோன் வாங்கிக்கொடுத்தது ஞாபகம் வந்து பகீரென்றது.
இந்த செய்திகளைப்படித்த நான், நல்லவேளை என்னிடம் ஐபோன் இல்லை, நான் கவலைப்படத்தேவையில்லை என்று நினைத்த கணத்தில், என் பெண்கள் இருவருக்கும் ஐபோன் வாங்கிக்கொடுத்தது ஞாபகம் வந்து பகீரென்றது.
வீட்டுக்கு போனவுடன், இதனைப்பற்றி அவர்களிடம் சொல்லி எச்சரிக்கவேண்டும் என நினைத்துக்
கொண்டேன்.
அன்று மாலை வீடுதிரும்பி, வழக்கம்போல் ஓய்ந்து உட்கார்ந்து டிவியை மேய்ந்து கொண்டு இருந்தேன். என் மனைவி சமையலறையில் காய்ந்து கொண்டு இருந்தாள்.
எங்கே பிள்ளைகளை இன்னும் காணோம் என்ற என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையாதலால், பாவம், நாளை முதல் என் மனைவிக்கு சமையலில் உதவி செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டேன். ரொம்ப நல்லவன் என்று நினைக்க வேண்டாம். இப்படி உறுதிபூணுவது நாலாயிரத்து எண்ணூற்றி, சாரிங்க பாஸ் எண்ணிக்கை மறந்துருச்சு.

அந்த சமயத்தில், கதவு படபடவென்று தட்டப்பட, நான் என் மனைவியை கூப்பிட நினைத்து,
வசவை நினைத்து கைவிட்டு, எழுந்து ஓடிதிறந்தால், என் மூத்த மகள் அழுதுகொண்டே வேகமாக
உள்ளே ஓடிவந்தாள். "என்னாச்சு அனிஷா"? என்று கேட்டதற்கும் பதில் வரவில்லை.
கற்பனைப் பேய்கள் சிறகு விரிக்க பதை பதைத்து விட்டேன்.
சமையலை அந்தரத்தில் விட்டுவிட்டு, என் மனைவி, அனிஷாவின் ரூமுக்கு விரைந்தாள்.
நானும் உள்ளேபோக நினைக்குமுன் கதவு அடைக்கப்பட்டது. சிறிது நேரம் திகைப்போடு நின்றுவிட்டு,
என் இருக்கைக்கு திரும்பினேன். என்ன ஆச்சோ என்று மனசு அடித்துக் கொண்டது.
அனிஷா வீட்டுக்கு வர பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும்போது, ஐபோனில் சேட் செய்துகொண்டே
வந்திருக்கிறாள். சட்பின் புலவர்டில், லிபர்ட்டி அவென்யு தாண்டியதும், பஸ்,ஸ்டாப்பில்
நின்றபோது, ஒரு கறுப்பினப் பையன், மன்னிக்கவும் ஆப்பிரிக்க அமெரிக்க பையன் ,ஐபோனை
பறித்துக்கொண்டு கீழிறங்கி ஓடியிருக்கிறான். இவளும் இறங்கி அவனை துரத்திக்கொண்டு
சென்று, 2 தெரு தாண்டி, அவனைக் காணாமல் அழுதுகொண்டே திரும்பியிருக்கிறாள். ஐபோன் காணாமல் போனது
ஒரு பக்கம், மறுபக்கம் நான் திட்டுவேனே என்ற பயமும் சேர்ந்துகொள்ள அழுதுகொண்டு
இருந்தாள். நல்லவேளை வேறொன்றும் இல்லை. நான் அவளிடம் சென்று, போனால் போகிறது, வேறு
வாங்கித்தருகிறேன் என்று சொல்லி, அவனைப்பின் தொடர்ந்து ஓடியது பெரிய முட்டாள்தனம்.
இனிமேல் அப்படிச் செய்யாதே என்றேன்.
உடனே என் சின்னப்பெண் அபிஷாவுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினேன். எங்கேயிருக்கிறாய்
என்று கேட்டு. பதில் வரவில்லை. ஆனால் ஒரு 20 நிமிடத்தில் வீடுவந்து சேர்ந்தாள்.
நல்லபடியாகத்தான் உள்ளே வந்து 'ஹாய்', என்றாள். "ஏன் டெக்ஸ்டுக்கு பதில் அனுப்பவில்லை என்றுகேட்டு, எங்கே ஐபோன்" என்று கேட்டேன். அவள் திருப்பி "அதைத்தான் நானும் கேட்கிறேன்" எங்கே என் ஐபோன் யாராவது எடுத்தீர்களா?" என்று கேட்டாள்.

Your narrative style is good, So at the same day your daughters missed their cellphones ?
ReplyDeleteThat's right Subash.
Delete