Monday, November 13, 2017

என் மனைவியின் பொன்விழாக்கவிதை !!!!!!!!!!!

My Family

கடந்த நவம்பர் 5ஆம் தேதி என் மனைவியின் ( ரூத் எலிசபெத் )பொன் விழா இம்மானுவேல் தமிழ்த்  திருச்சபையில் , ஆயர் அறிவர் ஜான்சன் ரெத்தினசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது .குடும்ப உறுப்பினர்கள் ஆலய நண்பர்கள் தவிர சிறப்பு அழைப்பாளர்களாக நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
With Pastor Johnson Family

அப்போது விழாவின் முக்கிய நிகழ்வாக ,   நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் கவிஞர் சிவபாலன் அவர்கள் ஒரு சிறப்பான கவிதையை வாசித்து அளித்தார் .இதோ அந்தக்கவிதை உங்களுக்காக .
 
Sivabalan Kavithai
     பொன்விழா வாழ்த்து!
அறுநூறு  நிலவுகளைப் பார்த்தது ஒரு நிலவு! . அது
அரை நூற்றாண்டு கண்டது எமக்கு மகிழ்வு!
கால் கட்டுப் போட்டது கல்யாண உறவு! -  அதுவும்
கால் நூற்றாண்டு  கொண்டதில் இன்பமும் வரவு!

பொன் விழா! வெள்ளி விழா! - என்றும்
இவர் வாழ்வில் திருவிழா!
இவ் வருடம் இவருக்கோ
இரண்டு விழா! - அதனால்
இடைவிடாத சுற்றுலா!
இடையில்,
இருவருக்கும் கிடைத்ததும்
இரண்டு வெண்ணிலா!
இல்லறத்தில் அன்போ வேர்ப்பலா!

இறைவன், இவரை,
இவர் தாய் கையில் கொடுத்து ஐம்பது ஆண்டாச்சு!. – இவரோ
இவர் கணவர் கை பிடிச்சு இருபத்தி  அஞ்சாச்சு!.
இணைந்த உறவுகளும்இப்போ பெரிசாச்சு!
இடமும், புலம் பெயர்ந்த நிலமாச்சு!

with Sivabalan Family

வடிவில் மயங்கும் வண்ணத்துப் பூச்சி,
படிவில் தோன்றும் வைரத்து கற்கள்,
செடியில் பூக்கும் செம்பகப் பூக்கள்,
கொடியில் தூங்கும் கோவைப் பழங்கள்.,
இயற்கையில் இவை எல்லாம்அழகு!
இதை விட, இவர் மனமோ பேரழகு!

சிரித்த முகம், சீரான பார்வை
சிறப்பான நட்பு  - நீர்
சிங்கார நாட்டு இளவரசி! - உம்
சிறு விரல்  பட்டாலே
சுவைக்கும் நெல் அரிசி!
செம் பொன்னும் பார்க்குமாம் தமை உரசி!
இருந்தும், உமக்கு
எப்படிக் கிடைத்தார்  இந்தப் பரதேசி?

பண்பும், பண்பாடும் இவர் செயல் வடிவில்!
அன்பும் அனுபவமும்  தாய் வடிவில்!
அகிலம் விழிப்பதோ காலை விடிவில்!
அனிசா,…. அபிசா…. விழித்ததோ இவர் மடியில்!

With Current President Ranga family

கார்த்திகையில் பூப்பது
கார்த்திகைப் பூக்கள்!
இங்கே,
கார்த்திகைப் பூவில்
பூத்தது
இரண்டு ரோஜாப் பூக்கள்!

ஐப்பசியில் மழை வர,
வீசும் ஆடியில் காத்து!
அந்நீர் ஓட,
வளரும் வயலில் நாத்து!
ஆதவன் வரவால்,
மலரும்
தாமரையும் பார்த்து!
ஆனந்த வரவால்
மலரவேண்டும்……
இந்த ரூத்து! [Ruth]

இவர் மாமன்,
சேரனா?
சோழனா?
பாண்டியனா? யார் அறிவார்? - ஆனால் அல்பி
தியாக ராராராஜன்!!!!  என்பதை ஊர் அறியும்! .
அல்பி என்பது அவர் முதற்பெயர்!- அவரோ
அற்பி [கஞ்சன்] ஆனது நிஜப் பெயர்!
இரண்டுக்கு மேல் இவர் நிறுத்திக் கொண்டார்!
இவரை இளமையாய்  வைத்துக் கொண்டார்!
 
Cutting of cake with Ruth;s parents
ஏனோ,.. இவர் கணவர்
எழுத்தாளர் ஆனார்!
நானா விடுவேன்?
பார்!!!!! -என, -  இவர்
அவர்
தலை எழுத்து [ஆளர்] ஆனார்
வாழவேண்டும் தம்பதிகள் பல்லாண்டு!. –
பலர் வாழ்த்த
வரவேண்டும் நூறாண்டு!

-அன்புடன், கவிஞர் சிவபாலன் குடும்பத்தினர்-


15 comments:

  1. கவிதை சிறப்பு சார். உங்களுக்கு கூடியவிரைவில் 25ஆவது வயது
    பிறந்தநாள் கொண்டாடுவோம் சார்!!. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர் , ஒரு சில விதி விலக்குகள் தவிர எல்லா கணவர்களும் மனைவியை விட இளையவர்கள்தான் , நம் மு.க.ஸ்டாலின் உட்பட .

      Delete
  2. அப்படியே உங்கள் மனைவிக்கு வாழ்த்துகளையும் சொல்லிவிடுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. சொல்லிவிட்டால் போயிற்று காசா பணமா .

      Delete
  3. மிக அற்புதமான கவிதை
    படங்களுடன் மிக அருமையாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எங்கள் இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி.

      Delete
  4. உங்கள் துணைவியாரின் ஐம்பதாவது பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  5. உலகம் சுற்றும் வாலிபரின் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆமாம் மனைவிய்டன் டூயட் பாடுற வீடியோ க்ளில் எங்கே?

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அண்ணிக்கு..

    அண்ணே.. இந்த கவிதையை அப்படியே காப்பிபேஸ்ட் பண்ணி எங்க வூட்டு அம்மணியை குஷி படுத்தலாம்னு இருக்கேன். .

    ReplyDelete
    Replies
    1. விசு நன்றி .இதன் காப்பிரைட்டை பல ஆயிரம் டாலர் கொடுத்து சிவபாலனிடம் வாங்கி வைத்துள்ளேன் .உனக்கு வேணுமென்றால், பேரம் படிந்தால் மாற்றித் தருகிறேன்.

      Delete
  7. உங்கள் துணைவியாரின் பொன்விழா பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.

      Delete