Monday, September 12, 2016

பரதேசியிடம் ஏமாந்த சீனப்பெண்!!!!!!!!!!!!


சீனாவில் பரதேசி 22.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும்.

Paradesi with Johanna  and her Mom

இரவு உணவு எதையும் சாப்பிடாமல், பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். அக்ரோபேட்டிக் அரங்கத்தில் வாந்தி எடுக்கக்கூடாது என்று எந்த அளவுக்கு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேனோ, அதற்கு மேலே வாந்தி எடுத்தால்  நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அந்த அளவுக்கு வயிற்றுனுள்ளே உருமலும் பொருமலும் நடந்து கொண்டு இருந்தன. கொஞ்சம் சாப்பிட்டதற்கே இந்தக்கதி. அய்யய்யோ நல்லவேளை அதோடு நிறுத்திக்கொண்டேன்.
காலையில் ஏழு மணிக்கு அலாரம் அடித்து எழுந்தேன். அன்று டிசம்பர் 31, 2015. வருடத்தின் கடைசி நாளில் இன்னும் பார்க்க வேண்டியவை மிச்சம் இருந்ததால், எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து வெளியே வந்தபோது மிகவும் ஃப்ரெஷ்ஷாக   இருந்தது.
வெளியே ரிஷப்சனுக்கு  வந்தால், ஜோகன்னா, "குட்மார்னிங்", என்று சொல்லி அழகாகச் சிரித்தாள். காலையில் பூத்த மஞ்சள் மலர் போல் புதிதாக இருந்தாள். அவள் கண்களில் நன்றி இன்னும் மிச்சமிருந்தது. "உனக்காகத்தான் வாங்கி வந்தேன்", என்று சொன்ன ஒரு சின்னப்பொய்க்கு இவ்வளவு எஃபக்டா என்றெண்ணி சிரித்துக் கொண்டேன். அந்தப் பண்டைத்தை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ என்று நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது.
காலை உணவு சாப்பிடும்போது, விழுந்து விழுந்து கவனித்தாள். அதுவும் விந்தையாக இருந்தது. இந்தப் பெண்களின் அன்பைப் பெறுவது எவ்வளவு சுலபம் என்று நினைத்துக் கொண்டேன்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே லீ வந்து சேர்ந்தான். சாப்பிடச் சொன்னேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டு உம்மென்று முகத்தை வைத்திருந்தான். நான் உண்டு முடித்தபின் இருவரும் வெளியே வந்தோம்.
"ஏன் உம்மென்று இருக்கிறாய், எல்லாம் ஓகேதானே. "
"அதெல்லாம் ஒன்றுமில்லை, இவ்வளவு சிறிய ஹோட்டலில் தங்கியிருக்கிறாயே"
"லீ நான் தனியாக வரும்போது, சுற்றிப் பார்ப்பதற்குத்தான் அதிகம் செலவு செய்வேன். ரூமுக்கு அல்ல. இரவு தூங்குவதற்கு மட்டும்தானே. பாத்ரூமும் ஒரு பெட்டும் இருந்தால் போதுமே".
 "இல்லை நியூயார்க்கிலிருந்து வந்திருக்கிறாயே, பெரிய ஓட்டலில் தங்கியிருப்பாய் என்று நினைத்தேன்.இங்கு தங்கியிருப்பதால் அதிகம் செலவழிக்க மாட்டாயோவென்று நினைத்தேன் ஹி ஹி”.
 "அப்படியிருந்தால், உன்னை அமர்த்தியிருக்க மாட்டேனே. உன் மகளையும் அழைத்து வரச்சொல்லி  இருக்க மாட்டேனே?”
லீ அப்போதுதான் சகஜமாகி சிரித்தான்.
“ஆமாம் எங்கே உன் புதல்வி ?”
“அவள் வரவில்லை , அவளுக்கு கல்லூரியில்  கொஞ்சம் வேலை இருக்கிறதாம்” .
என் உற்சாகம் சட்டென வடிந்து போனது ஏன் என்று  தெரியவில்லை.
"சரி நாளைக்கு அழைத்து வா.இன்றைக்கு என்ன பிளான்?”
"டியனன்மன் ஸ்கொயர், மாவோ டெம்பிள், ஆர்ச்செரி டவர் மற்றும் நேரம் இருந்தால் பீஜிங்கின் பெரிய ஆந்த்ரபாலஜி மியூசியத்தையும் பார்க்கலாம் .மியூசியம் தவிர எல்லாமே நடந்து போகும் தொலைவுதான்"
ஆம் டியனன்மன் ஸ்கொயர் என்பது விலக்கப்பட்ட நகரின் முன்னால்தான் இருக்கிறது. எனவே நடையைக் கட்டினோம். விலக்கப்பட்ட நகரின் முன்னால் மிகவும் அகலமான இருவழிப்பாதைச் சாலை இருந்தது. ஒவ்வொரு பகுதியும் நான்கு வழித்தடங்கள் கொண்டது. நாள்  முழுவதும் நின்றாலும் சாலையைக் கடந்து மறுபுறம் போவது கஷ்டம்.
Tiananmen Square, Beijing, China 1988 (1).jpg
Tianamen Square
ஆனால் பல இடங்களில் அகலமான சுரங்கப்பாதை வழித்தடங்கள் இருந்தன. உள்ளே நுழைந்தால், பல பாதைகளை இணைக்கும் சுரங்கப் பாதை மிகவும் சுத்தமாக இருக்க, ஓரிரு நடை பாதைக்கடைகள் பனிக்குல்லாய்கள், காதடைப்பான்கள்,கையுரைகள் ஆகியவற்றை விற்றுக் கொண்டிருந்தன. பாதையின் மறுபுறம், ஸ்கொயருக்கு வெளியே வரும் பாதையில் செக்யூரிட்டி செக் வழி போவது புதிதாக இருந்தது.
லீயைப் பார்த்தேன். "பிரிவினை வாதிகள் தாக்கும் அபாயம் இருப்பதால் இந்தக் கெடுபிடி" என்றான். வாருங்கள் உள்ளே போய் அதன் வரலாற்றை சிறிது பார்ப்போம்.
           வெளியே வந்தால் மிகப்பரந்த சதுக்கம் கண்முன்னால் விரிந்தது.  ஏராளமான டூரிஸ்ட்களைப் பார்க்க முடிந்தது. அந்தச் சதுக்கம் ஒரு வெட்டவெளி. அதன் நடுவில் பெரிய தூண் ஒன்று இருக்கிறது. அது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. லீ சொன்னதையும் நான் அறிந்து கொண்டதையும் இணைத்து இதோ வழக்கம்போல புல்லட் குறிப்புகள் உங்களுக்காக .
1989 Protest in Tianamen Square 

1.   டியனன்மன் ஸ்கொயர் என்றதுமே முதலில் எனக்கு நினைவுக்கு வந்தது. இங்கு நடந்த மாணவர் புரட்சி. 
2.   இச்சதுக்கம்  பீஜிங் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சரியாகச் சொல்லப்போனால், விலக்கப்பட்ட நகரம் அமைக்கப்பட்டு, பீஜிங் நகரம் அதைச் சுற்றித்தான் உருவாக்கப்பட்டது.
3.   டியானன்மென் என்றால் "சொர்க்கத்தின் வாசல்" என்று அர்த்தம். இது விலக்கப்பட்ட நகரம் அதாவது சீனப் பேரரசின் அரண்மனை வளாகத்தில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
4.   இச்சதுக்கத்தின் முன்னால் விலக்கப்பட்ட நகரம் (Forbidden city), நடுவில் சீனமக்களின் ஹீரோக்களுக்கு அமைந்த நினைவுத்தூண் (Monument of People's Heroes), தி கிரேட் ஹால் ஆ ஃப் பீப்பிள், திநேஷனல் மியூசியம் ஆ ஃப் சைனா, மாசே துங்கின்  நினைவிடம், ஆகியவை சுற்றிலும் இருக்கின்றன.
5.   இந்தச் சதுக்கத்தில்தான் 1949 ஆம் ஆண்டு ஆக்டோபர் 1ஆம் தேதி மாசே துங் சின்ன மக்கள் குடியரசை'  (Peoples Republic of China) பிரகடனம் செய்தார். அதைத்தான் PRC  என்று தற்சமயம் சுருக்கிச் சொல்கிறார்கள். இந்தநாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
6.   டியனன்மென் சதுக்கம் உலகத்தின் பத்து பெரிய சதுக்கங்களில் ஒன்று. மொத்தம் 109 ஏக்கர் அளவுள்ளது.
Students creating  Liberty stature in the square.
7.   சீன வரலாற்றில் அநேக சம்பவங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக நமக்கு எல்லாருக்கும் ஞாபகம்  இருக்கும் நிகழ்வு, 1989ல் நடந்த மிகப்பெரிய புரட்சி.  பொதுமக்களும் மாணவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் தானா போராட்டம் ஜனநாயகம் (Democrat) வேண்டி நடத்தப்பட்டது. ஆனால் 1989 ஜூன் நான்காம் தேதி சீன அரசால் கொண்டுவரப்பட்ட அடக்கு முறைச் சட்டத்தால் (Martial Law) இது ஒடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  அதற்கப்புறம் சீன கம்யூனிஸ்ட் ஆட்சி  தொடர்ந்தது என்றாலும் அது கேப்பிடலிசம் நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.
          அதன்பின் ஜனநாயகமா? அது என்ன? கேட்கும் விதமாகத்தான் இப்போது சீன மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடுதாக எனக்குத் தெரிந்தது.
தொடரும்.   


9 comments:

  1. சுருக்கமாக என்றாலும்
    விடுபடாது டியனன்மன் சதுக்கம் குறித்து
    முக்கிய தகவல்களைப்
    படங்களுடன் சொல்லிப்போனவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. Ur sadness is bigger than Chinese,because of not seeing Lee's daughter

    ReplyDelete
  4. Ur sadness is bigger than Chinese,because of not seeing Lee's daughter

    ReplyDelete