![]() |
“ஹலோ,
பரதேசியா பேசுறது?”
“என்னடா மகேந்திரா,
என்ன ரொம்ப நாளாச்சு?”
“நீயோ ஒரு பரதேசி உன்னை எந்த
ஊர்ல பிடிக்கிறது?”
“டேய் நீ என்னை பாராட்டுறியா,
இல்லை கலாய்க்கிறயா?”
“உன் வசதிப்படி வச்சுக்கடா?”
“உன்ட்ட பேசக்கூடாதுன்னு
நெனச்சேன்?”
“ஏண்டா நான் என்ன செஞ்சேன் ?”
“என்ன செய்யலன்னு கேளு?
“
“டேய் என்னடா புதிர்போடுற?”
“ஏன்டா, இவ்வளவு தூரம் மதுரை
வரைக்கும் வந்திருக்க, திண்டுக்கல் வேற
போயிருக்க, தேவதானப்பட்டிக்கு ஏன்டா வரல ?, பெரிய டவுன்காரரு ஆயிட்டயோ, பட்டி தொட்டிக்கெல்லாம்
வரமாட்டியோ? “.
“அப்படியில்லடா,
தேவதானப்பட்டிக்கு கண்டிப்பா வரணும்னு நெனச்சப்ப, அங்க பசங்கெல்லாம்
அரைப் பரீட்சை எழுதறாங்கன்னு சொன்னாங்க, அதான் வரல”.
“ஏண்டா அப்ப நானுமா
அரைப்பரீட்சை எழுதிட்டு இருந்தேன்?”.
“நீ எங்க அரைப்பரீட்சை எழுதறது,
அதான் கால் பரீட்சையிலயே கோட்டைவிட்டுட்டு ...?”
“டேய் வேணாம் பழசை கிளறாதே?”
“அதோட நான் எந்த நாட்டுக்கும், ஊருக்கும் போகணும்னு நெனச்சாலும் அந்த நாட்டுக்கு ஏதாவது பிரச்சனை
வந்துறுது. அப்படி நான் தேவதானப்பட்டிக்கு வந்து ஏதாவது உனக்கு பிரச்சனை
ஆயிருச்சுன்னா என்ன செய்யறதுன்னு நினைச்சுதாண்டா வரல”.
“அட என்னடா கதைவிடுற?”
“ஆமாடா மாப்ள
நான் சொல்றதக் கேளு”
“ சரி சொல்றா சொல்றா”.
“சென்னைக்கு நான் நவம்பர்லயே வரவேண்டியது. ஆனா
பேயாத மழை ஓயாது பேஞ்சி, செம்பரம்பாக்கம்
கீழ்ப்பாக்கம் வரை பாஞ்சி, ஒரே வெள்ளக்காடா ஆயிப்போச்சி,
அதனாலதான் டிக்கட்டை மாத்திப்போட்டேன்.”
![]() |
Flooding in Chennai |
“ஐயையோ அவனா நீ?”
“ அவனேதான். சரி போற
வழியில பாரீசுக்கு போகலாம்னு நெனச்சிருந்தேன். அதுக்குள்ள ஐசிஸ்
ஆளுங்க, குண்டைப்போட்டு ஒரே ரணகளமாயிப்போச்சு”.
![]() |
Paris Bomb blast |
“அட அப்புறம்?”
“ செளத் அமெரிக்கால
இன்னும் பாக்காத நாடு பல இருக்கு, எதுக்காவது போகலாம்னு நெனெச்சா, சிகா வைரஸ் இருக்கு, சிக்கா ஆயிருவீங்கன்னு
சொல்லிட்டாய்ங்கே”.
![]() |
“அட சிகாவுக்கு காரணமான சகா
நீதானா?”
“சரி வேணாம்னு
விட்டுட்டுத்தான் சீனா வழி இந்தியாவுக்கு வரலாம்னு டிக்கட்டைப் போட்டேன்.
கிறிஸ்மஸ்சை 70 டிகிரி வெயில்ல சூப்பராக் கொண்டாடிட்டு,
சீனா போனா அங்க 20 டிகிரில குளிர் வாட்டி எடுத்துருச்சு. அதோட
காத்தும் கெட்டுப்போய்,
(Pollution) நான் போன இடத்துக்கெல்லாம் முகமூடி போட்டுட்டு போற மாதிரி ஆயிப்போச்சு. நல்ல
வேளை ஒண்ணும் ஆகல”.
![]() |
Paradesi in China |
“சரி இலங்கைக்குப்போனியே அங்க
எதும் ஆச்சா?”
“என்னடா ரொம்ப ஆர்வமாக்
கேக்குற. எதாவது ஆனாத்தான் உனக்கு நல்லா இருக்குமோ, இலங்கையில ஏற்கனவே ஆனதெல்லாம் பத்தாதா?, இப்பத்தான்
அங்கேயே கொஞ்சம் அமைதி வந்துருக்கு. ஆனாலும் நான் இருந்த சமயம்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரீப் வந்திருந்தார் .என்ன நடக்குமோ தெரியலை ?”.
![]() |
Nawaz in Srilanka |
“சரி அதைவிடு சென்னையிலயும்
மதுரையிலையும் ஒண்ணும் ஆகலைல?”
“ சென்னையில ரெண்டு
நாள்தான் இருந்தேன். மதுரைக்கு என்னைப் பார்க்க வரவேண்டிய என் கிளாஸ்மேட்டு
ஜெய்ராமுக்கு ஆக்சிடன்ட் ஆயி கால்ல கட்டுப் போட்டுட்டு உட்கார்ந்துட்டான்”.
“ஐயையோ,
ஆமா மைசூருக்கு வேற போனயே?
“ ஆமாடா
மைசூருக்குப்போய் அங்கிருந்து கூடலூருக்கு போனேன். அதுக்கு முந்தின நாள் தான் அங்க
மதயானை உள்ளே புகுந்து ஒருத்தனே கொண்டே போடுச்சு”. “மதயானையா? எந்த மதம்?”
“ டேய் உனக்கு என்ன
லந்தாப் போச்சா?”.
![]() |
“ஆமா ஏப்ரல் வந்தா ஏதாவது
வெளிநாட்டுக்குப் போவியே எந்த நாட்டுக்குப் போகப்போற?”
“எகிப்துக்குப் போலாம்னு
நெனச்சேன், அதுக்குள்ள அங்கு ஒரு விமானத்தைக் கடத்திட்டாய்ங்க.
பெல்ஜியத்திற்கு ஒரு நண்பர் கூப்பிட்டார்”.
“அட அங்கதான் விமான நிலையத்துல
ஐசிஸ் தாக்கி நூறுபேருக்கு மேல செத்துட்டாய்ங்களே”.
“பார்ரா, உனக்கே உலக விஷயம்
தெரியுது”.
“சரி சிரியா போக வேண்டியதுதானே
உனக்கு சரியா இருக்கும்”.
“ஏலே மகேந்திரா வயசானாலும் உன்
குறும்பு போலடா?”
“அப்ப என்னதாண்டா செய்யப்போற?”
“பேசாம வீட்டுலயே
உட்காரவேண்டியதுதான்”.
“சரிடா கூப்பிட்டதை
மறந்துட்டேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா”.
“ஆமாடா ஏப்ரல் 1ஆம் தேதி
பிறந்தனால யாரும் மறக்கமாட்டாய்ங்கறாங்க. ரொம்ப தேங்க்ஸ்ரா”.
“நான்ல உனக்கு தேங்க்ஸ்
சொல்லணும். ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ரா”.
“என்னடா தேங்க்ஸ் ரொம்ப நீளமா
இருக்கு.எதுக்குரா இவ்வளவு நீள தேங்க்ஸ்? “
“அது ஒண்ணுமில்ல,
நீ தேவதானப்பட்டிக்கு வராததுக்குத்தான்”.
“அடப்பாவி மகேந்திரா”.
முற்றும்.
பின்குறிப்பு:
உங்கள் யார் ஊருக்காவது நான் வரணுமுன்னு நெனச்சா,
கடுதாசி போடவும்.