![]() |
பார்த்ததில் பிடித்தது
பர்மனு
“எனக்கும்
இந்தநிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் பாயும்புலி பண்டாரக வன்னியன்
படிக்கும்போது கலைஞர் இறந்துபோனார்”.
“அந்த
பண்டாரத்துக்கும் கலைஞருக்கும் என்னடா சம்பந்தம்?”
“பண்டாரக
வன்னியன் இலங்கையின் முல்லைத்தீவை ஆண்ட மன்னன். ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த
விடுதலைக்குரல்களில் அவனுடையதும் ஒன்று”
“சரி
அதுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் “
“அடேய்
முட்டாள் மகேந்திரா, அது அவர் எழுதிய புத்தகம்”
“ஓ
இப்ப புரியுதுரா”.
“அதே மாதிரி எனக்கும் போக்ரானுக்கும் எந்த
சம்பந்தமுமில்லை”
“என்னடே
சொல்ற,
உனக்கும் போக்ரானுக்கும் தொடர்பிருந்தது என்று யாரோ சொன்ன மாதிரி
பேசுற?”
"அடேய் மகேந்திரா அதைச் சொல்லலடா"
“நெட்பிலிக்சில்
'பர்மனு' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அதே நாளில் வாஜ்பாய் இறந்து போனார்”.
“என்னடா
சொல்ற பர்மனு படத்தை வாஜ்பாயா டைரக்ட் செஞ்சார்”.
“அடேய்
நீ திரும்பத்திரும்ப முட்டாள்னு நீரூபிச்சிக்கிட்டே இருக்கியே” .
“ஆமடே
முட்டாளோடு நண்பன் பின்ன வேறெப்படி இருக்கமுடியும்?அதுசரி சொல்றா இந்தப்படத்துக்கும்
வாஜ் பாய்க்கும் என்ன சம்பந்தம்?
"பர்மனு என்ற படம் போக்ரான் அணுகுண்டு எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை
விளக்கும் படம்”.
![]() |
“ஓ
அப்படியா அப்படித் தெளிவாச் சொல்லு. சரிசரி மேலே சொல்லு”.
1995 வரை சீனா
43 தடவை அணு ஆயுத சோதனை நடத்தி முடித்திருக்க, இந்தியா 1974ல் ஒரே ஒரு முறை அதுவும் சமாதானத்தின் அடிப்படையில் சோதனை செய்வதாக
வெடித்திருந்தது. அதனால் மேலை நாடுகள் மற்றும் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து
மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் வாஜ்பாய் அரசு பதவியேற்றபின்
இதனை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு முயற்சி செய்யும் போது
இதே போக் ரானில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் இரண்டாம் முறை முயன்று அது முற்றிலும் வெற்றி பெற்றது. அந்த
முயற்சியினை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.
உலக
நாடுகளுக்குத் தெரியக் கூடாது. ரகசியமாக நடத்தப்பட வேண்டும். உள்ளூரிலும்
எதிர்க்கட்சி போன்ற யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் பாரதிய ஜனதா கட்சியின்
உள்ளேயும் பலருக்குத் தெரியாத ஒரு பெரும் நிகழ்வு
இது.
முதல்
முயற்சி தோல்வியில் முடிந்தாலும் உலக நாடுகளின் கண்கள் குறிப்பாக அமெரிக்காவின்
ரேடார் கண்கள் இந்தியாவின் மேல் அதிலும் பொக்ரானின் மேல் கண்காணித்துக்
கொண்டிருக்கும்போது அதன் கண்களில் மண்ணைத்தூவி விட்டு செய்யவேண்டிய வேலை இது.

இந்தியாவில்
இருக்கும் வெளிநாட்டு உளவாளிகள், உள்ளூர் துரோகிகளுக்கு மறைத்து இதனைச் செய்ய வேண்டும். ஏராளமான ஆட்களும்,
பொருட்களும் தளவாடங்களும் தேவை என்ற நிலையில் பொக்ரான் என்பது
எத்தனை பெரிய சாதனை என்பதை இந்தப்படத்தின் மூலம் விளங்க வைத்திருக்கிறார்கள்.
இதனைப் போன்ற சாதனைகளை செய்வதற்கு மனஉறுதி கொண்ட வாஜ்பாயைப் போன்ற தலைவரும்
நாட்டின் முன்னேற்றமே தலையானது என்று நினைத்துச் செயல்பட்ட அப்துல் கலாம்
அவர்களின் முயற்சியும் போற்றத்தக்கவை. உலக அரங்கில் இந்திய நாட்டை தலை நிமிர்ந்து
நிற்கச் செய்ததோடு யாருக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ என்று நிரூபித்த
நிகழ்வு இது. பார்த்து ரசியுங்கள்.
வரலாற்று
நிகழ்வு என்றாலும் வாஜ்பாய் போன்ற
தலைவர்கள் தவிர மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பெயர்
மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அப்துல் கலாம் முதற்கொண்டு
பெரும் ஆளுமைகளை இதில் காண்பிக்க முயற்சி செய்யவில்லை.
![]() |
John Abraham with Abishek Sharma |
இந்தப்படத்தை
அபிஷேக் சர்மா அவர்கள் இயக்கியிருக்க, ஜி ஸ்டூடியோஸ், ஜே.ஏ.எண்டர்டைன்மெண்ட் போன்ற பல கம்பெனிகள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனரோடு இணைந்து
சைவான் குவாட்ரஸ் மற்றும் சம்யுக்தா
சாவ்லா ஷேக் என்பவர்கள் வசனம் எழுதியுள்ளனர். பாட்டுகளுக்கு இசையாக சச்சின் ஜிகர், ஜீட்
கங்குலி இசையமைக்க அருமையான பின்னணி இசையைக் கொடுத்தவர் சந்திப் செளட்பி
முக்கிய
கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரகாமும் டயனா பென்ட்டியும் திறமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
![]() |
Diana Penty |
மே,
2018ல் வெளிவந்தது இந்தப்படம். 44 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட
இந்தப்படம் 91.36 கோடி வரை சம்பாதித்தது.
இந்தப்படம்
விருதுகள் வாங்குமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
-
முற்றும்.
மகேந்திரன்: “அது சரிடா இனிமே நீ எந்தப் புத்தகத்தை படிப்பதாக
இருந்தாலோ அல்லது எந்தப் படத்தையும் பார்ப்பதாக இருந்தாலோ கொஞ்சம் சொல்லிவிட்டுச் செய்.