Thursday, September 15, 2016

வட அமெரிக்காவின் தமிழ் அரசியல் தலைவர்கள் !!!!!!!!

ஃபெட்னா தமிழர் திருவிழா - பகுதி 9

Image result
Gari Anandasankari
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_8.html

தமிழர் திருவிழாவில் இன்னுமொரு முக்கிய நிகழ்வாக உலகத்தமிழர் விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. அதில் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அரசியலில்  ஈடுபட்டு உயரங்களைத் தொட்ட இருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களில் பலர் வட அமெரிக்காவில், கவுன்சில்மேன், மேயர், ஏன் கவர்னர் போன்ற பதவிகளில் கூட இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் வட இந்தியர். ஒரு சிலர் ஆந்திரா, கேரளத்தைச் சேர்ந்தவர்கள். கனடாவிலும், அமெரிக்காவிலும் உயர்நிலைக்கு வந்த தமிழர் சிறப்பு விருந்தினர்களாக வந்தது கூடியிருந்தவர்களுக்கு மிகவும் பெருமை தந்தது. அதோடு விழாவை மதித்து உண்மையிலேயே பிஸியாக இருக்கும் அவர்கள்  வந்திருந்தது நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதில் ஒருவர் கரி ஆனந்த சங்கரி, இன்னொருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி.
அவர்கள் இருவரைப் பற்றிய சிறுகுறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
கரியின் முழுப்பெயர் 'சத்திய சங்கரி கரி ஆனந்த சங்கரி' இவர் ஒரு இலங்கைத்தமிழர். இலங்கையின் குறிப்பிடத்தக்க தமிழ் அரசியல்வாதியான V.ஆனந்த சங்கரியின் மகன் இவர். 1980ல் பிரிந்து போன இந்தக்குடும்பத்தில், கரியும் அவரின் அம்மாவும் முதலில் அயர்லாந்து நாட்டுக்குச் சென்றனர். 1983ல் திரும்பவும் தாய் நாட்டுக்குத் திரும்பத் திட்டமிட்டபோதுதான் தமிழருக்கு எதிரான ' கறுப்பு ஜூலை ' கலவரம் ஏற்பட்டது. எனவே தம் எண்ணத்தை மாற்றிக் கொண்ட கரியின் தாய், அதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கனடாவுக்கு இடம் பெயர்ந்தார்.

கனடாவுக்கு வரும்போது கரிக்கு 10 வயது மட்டும்தான். கரி அப்போது முதலே தந்தையைப் பிரிந்துதான் வாழ்ந்தார். 1983க்குப் பின் ஓரிரு முறை பார்த்ததோடு சரி. கனடாவில் பள்ளிப்படிப்பை முடித்து, கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் (carleton) 1996-ஆம் ஆண்டு BA ஹானர்ஸ் பட்டம் பெற்றார். இவரின் மேஜர் பொலிட்டிக்கல் சயின்ஸ்.

1996லிருந்து 2006 வரை மொத்தம் 10 வருடங்கள் அவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலை செய்தார்.  இது நம்மூரில் போல அல்ல. அதற்கு ஒரு தேர்வெழுதி பாஸ் செய்தபின் லைசென்ஸ் கிடைக்கும். அந்த ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்தால் மட்டுமே இந்த வேலை செய்யமுடியும். இது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல தனி நபர்களுக்கும் பொருந்தும்.  அதாவது தனிநபர்களுக்கு இந்த ரிஜிஸ்ட்ரேஷன் இருந்தால் மட்டும்தான் ரியல் எஸ்டேட் கம்பெனிகளில் கூட வேலை கிடைக்கும்.

வேலை பார்த்துக் கொண்டே யார்க் யுனிவர்சிட்டியின் ஆஸ்கூட் ஹால் லா ஸ்கூலில் (Osgoode Hall Law School) சட்டம் படித்து 2005ல் LLB  டிகிரி முடித்து, 2006ல் பார் கெளன்சிலில் அனுமதிக்கப்பட்டார். விரைவிலேயே தன சொந்தக் கம்பெனியான கேரி ஆனந்தசங்கரி & அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை, டொரான்ட்டோ நகரில் ஆரம்பித்தார். இந்த நிறுவனம், தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் ஆகியவற்றில் சிறப்புப் பெற்றது. அதன்பின் The Law Society of upper Canada, Canadian Bar Association, Ontario Bar Association and South Asian Bar Association  ஆகியவற்றின் உறுப்பினராக உயர்ந்தார்.


             
அதுமட்டுமல்லாமல் சமூகத்தின் பல அமைப்புகளுக்குத் தலைமைப்  பொறுப்பிலும் இருந்தார். அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.
President – Canadian Tamil’s chamber of commerce
Counsel – Canadian Tamil congress
Chairman – Canadian Tamil youth Development center
Member: Newcomer Grant for the united way of Greater Toronto
Member: Toronto city summit’s emerging leader’s network
Board Member: youth challenge fund.
Guest Lecturer – Centennial college center for small business and Entrepreneurship.

தன்னுடைய சிறந்த பணிகளுக்கான குயின் எலிசபெத் கோல்டன் ஜூப்ளி மெடல், குயின் எலிசபெத் II டயமண்ட் ஜூபிளி  மெடல், TREB அவார்ட், ஹென்றி மார்ஷல் டிராய் அவார்ட் ஆகிய  பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் சமயம்மனித உரிமை பறிப்புகளுக்கு எதிராக பலமுறை குரல் எழுப்பியிருக்கிறார். ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சலில் பலமுறை பங்கு பெற்று தமிழர்களுக்காக பேசியிருக்கிறார். எனவே சிங்கள, புத்த இனவாத குரூப்புகள் இவரை விடுதலைப்புலி என்று முத்திரை குத்தி ஒழிக்கப்பார்த்தனர். ஆனாலும் 2015ல் நடந்த மத்திய தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு ஒருமித்த ஆதரவைத்த தந்தனர்.

அக்டோபர் மாதம் 2013ல் லிபரல் பார்ட்டியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது கனட பாராளுமன்றத்தில் இவரைச் சேர்த்து இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர். மற்றொருவர் கனட பாராளுமன்றத்தில் தமிழில் பேசி அசத்திய ராதிகா.  கரி தொடர்ந்து மனித உரிமைகளுக்காக வாதாடி வருகிறார்.
Image result
Raja Krishnamurthi
அடுத்த சிறப்பு அழைப்பாளர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, புதுதில்லியில் 1973ல் பிறந்த இவர் தற்போது வாழ்வது, ஸ்காம்பர்க், இல்லினாய் (Schamburg, Ilinois). சிவானந்தா லேப்ஸ் என்ற சொந்த நிறுவனத்தை  சிக்காகோ ஏரியாவில் நடத்தி வரும் இவர், பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்ற பின், ஹார்வர்ட் லா ஸ்கூலில் சட்டம் படித்தவர். ராஜா, 'INSPIRE' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.  இது குறிப்பாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறது.

ஒபாமா அவர்களுக்கு 2004ல் நடந்த செனட் காம்பெய்னுக்கு பாலிசி டைரக்டர் ஆகி, ஒபாமா செனட்டராக ஜெயித்தபின், பல பதவிகள் ராஜாவைத் தேடிவந்தன. இல்லினாய் ஹவுசிங் போர்டு டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் மெம்பராக நியமிக்கப்பட்டார். அதன்பின் இல்லினாய் மாநில அட்டார்னி ஜெனரலின் ஆன்டி - கரப்ஷன் யூனிட்டின் பிராசிக்யூட்டர் ஆனார். அதன்பின் இல்லினாய் மாநிலத்தின் துணைப்பொருளாளர் ஆனார். அதோடு இல்லினாய் இன்னவேஷன் கவுன்சலிங் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  


இல்லினாய் மாநிலத்தின் அனைத்து பத்திரிக்கைகளின் மொத்த ஆதரவோடு தன்னை எதிர்த்து நின்ற அத்தனை பேரையும் முறியடித்து, டெமாக்ரடிக் பார்ட்டியின் வேட்பாளராக ஆயிருக்கிறார். நடைபெறப்போகும் தேர்தலில் அவர் காங்கிரஸ்மேனாக வாழ்த்துக்கள்.

இருவரின் சொற்பொழிவும் மிக அருமையாக அமைந்தன. இவர்கள் இருவரும் வந்தது, ஃபெட்னா  விழாவுக்கு பெருமை சேர்த்தது. தமிழர்கள் எங்கிருந்தாலும் எவ்வளவு உயர்ந்தாலும் ஒன்றுபட்டு இருந்தால் உயரலாம் என்பதற்கு இவர்கள் நல்ல உதாரணம்.

 - தமிழர் திருவிழா பதிவுகள் தொடரும்.



No comments:

Post a Comment