“ஹலோ பரதேசி”
“சொல்றா
புல்தடுக்கி”
“என்னடா
நானே ரொம்ப நாளுக்கு முன்னமே மறந்துபோன பட்டப் பேரைச் சொல்ற?”
“ஆமா,
நீ மட்டும் பரதேசின்னு சொல்லலாமா?”
"அட நான் எங்கடா சொன்னேன், நீதானே உன்னை பரதேசின்னு
சொல்லிக்கிட்டு அலையுற".
“உண்மைதான்
சரி என்ன விஷயம், சொல்லுறா மகேந்திரா?”
“ஒன்னுமில்லை,
புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத்தான் வந்தேன்”.
“நன்றி
,உனக்கும்
உரித்தாகுக,”.
“ஆமா
நாட்டு நடப்பெல்லாம் பாக்கிறியா?”.
“எதைச்
சொல்ற,
அதான் இங்க தமிழ் சேனல்கள் எல்லாம் வருதே? பாத்துக்கிட்டுதான்
இருக்கிறேன்”.
“இல்லடா
ஜெயா டிவி பாத்தியா?”
“ஆமா
பாத்தேன்,
சின்னம்மா
புண்ணியத்தில
நாடு மிகவும் அமைதியாகவும், சுபிட்சமாகவும் பொன்
விளையும் பூமியாகவும் இருக்குதாம்”.
“சன்
டிவி கூட வருதா
அங்க?”.
“ஆமா
பாத்தேன், நாடு வரட்சியில் வாடுது, கொலை கொள்ளை பெருகிப் போச்சு, சட்ட ஒழுங்கு சுத்தமா
இல்ல, விவசாயிகள் தினமும் தற்கொலை
செய்றாங்க”.
“ஆமாடா,
அப்ப நாட்டு நடப்புன்னு நீ எதை நம்புற?”
“மகேந்திரா
நான் எதையும் நம்புறதில்லை.நாட்டு நடப்பை விடு, நம்ம
வீட்டு நடப்பும் சரியில்லை”.
“என்னடா
சொல்ற மனைவி கூட தகறாரா?”.
“ஐயையோ
அதெல்லாம் நான் எப்பவும் பண்றதேயில்லை.”
“சமீபத்தில்
நீ போட்ட போட்டாவப் பார்த்தேன். ரெண்டு பேரிடமும் நல்ல மாற்றம் இருக்குடா.”
“ஆமடா
சமீபத்தில் கூட கல்யாண போட்டோவை நான் எடுத்துக் பார்த்தேன் வித்தியாசம்
ரொம்பத்தான் இருக்கு”.
“மாற்றம்
தானடா வாழ்க்கை. மாற்றம்தானடா என்னைக்கும் மாறாதது”.
“என்னடா
மகேந்திரா, புது வருஷ தத்துவமா?”
“அப்படியெல்லாம்
இல்ல,
நீ சொல்லுடா என்னடா வீட்டு நடப்பு?”
“அடுத்தவன்
கதைன்னா ரொம்ப ஆவலாயிருவேயே”.
“ஏலேய்
உங் கூட ரொம்ப நொம்பலம்டா, நீ தானடா பேச்சு
எடுத்த”.
“சரிசரி
சொல்றேன்,
என் மனைவிதாண்டா”
“என்னடா
சொல்ற தங்கச்சி என்ன சொல்லுது ?”.
“தங்கச்சி
அக்கா ஆகி அக்கா பக்காவாயிட்டா?”
“நல்லவேளை
அக்கா அம்மா ஆகலைடா”.
“யார் சொன்னா
அவளும்
மாறிட்டே இருக்காடா”.
“என்னடா
மாற்றம்?”
“கல்யாணம்
ஆகும் போது குழந்தை போல இருந்தா. அப்புறம் படிப்படியா முன்னேறி டீனேஜ் பெண்ணாகி
கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினா”.
“ம்
அப்புறம்”.
“அப்புறம்
ஒரேயடியா முன்னேறி, கொள்கை பரப்புச்
செயலாளர் ஆயிட்டா”.
“ஜெயலலிதா
மாரியா?”
“ஆமடா”
“ஆமாம் யாருடைய கொள்கைகளைப் பரப்பிச்சு
?
“தன் சொந்தக்
கொள்கைகள்
தான்”
“அது
என்ன கொள்கைகள்”.
“அதுவா
புருஷன்,
வீட்டில் சரிபாதி வேலை செய்யனும், சமையல்
செய்யனும், பத்துப்பாத்திரம் தேய்க்கனும் அப்படின்னா நிறைய
கொள்கைகள்”.
அப்புறம் பொதுச் செயலாளர் ஆயி, முதலமைச்சர்
ஆயிட்டா
“.
“ஐயையோ
அப்புறம்?”
“அப்புறம்
அதிகாரம் ஒரே இடத்தில குவிய ஆரம்பிச்சிருச்சு. அவளோடு உறவினர் பெருகிப்
போய்ட்டாங்க”.
“எங்க
நியூயார்க்கிலயா”?
“அட
ஆமாண்டா ,அப்ப
தோழின்னு யாரும்?”
“தோழி
கிடையாது,
தோழன் மட்டும்தான்?”
“ஐயையோ
யாராது அந்த தோழன்?”
“வேறுயாரு நாந்தேன்”.
“நீ
தோழனா?
தோலனா?”
“டேய்
மகேந்திரா என்ன திமிரா?”
“இல்லடா
இப்பவும் உனக்கு என்பு தோல் போர்த்திய உடல் தானடா?”
“ஆமாடா
அது சரிதான்”.
“சரி
அப்புறம்?”
“அசைக்க
முடியாத சக்தியா உருவாயிட்டா, எதிர்பேச
யாருமில்ல,
என்னைத்தான்
தலைதலைன்னு எல்லாரும் சொல்வாய்ங்க”.
“இப்ப
என்னாச்சு?”.
“தலை
சிறுதலையாகி தறுதலையாகிப் போச்சு”.
“வெறுந்தலையாகிப்
போச்சுன்னு சொல்லு”.
“டேய்
என்னடா வார்த்தை தடுமாறுது”.
“சர்ரா
விட்ரா விட்ரா நீதான் அறிவாளியாச்சே, மேல சொல்லு.
சொத்துக்
குவிப்பும் நடந்துச்சு”.
“அப்படியா
உன் மனைவி பேர்லயா”?
“நீ
வேற எல்லாம் பினாமிதான்”.
“பினாமியா
அது யார்றா”?
“வேற
யாரு நாந்தேன்”.
“அடப்பாவிகளா
அப்புறம்”?
“நெனைச்சதெல்லாம்
நடத்திக் காட்டினா, எல்லாத்தையும் பேசியே
சாதிச்சா”.
“அபாரம்டா”
“சில
சமயம் அருகில் உறங்கும் போது திரும்பிப் பார்த்தால் கூட ஜெயலலிதா உருவம் போலவே
தெரியும்”.
“ஐயையோ
பிறகு”.
“இப்ப
டிசம்பர் லிருந்து அடியோட மாறிட்டா”?
“ஒண்ணும்
புரியலயே”
“அவளுக்குள்ளிருந்த ஜெயலலிதா
செத்துப்போன மாதிரி
தெரிஞ்சுது.
இப்ப
ஒண்ணுமே பேசறதேயில்லை. ஆனா பேசாமலேயே எல்லாத்தையும் சாதிக்கிறா. ஒரே மிரட்டலாய்
இருக்கு.
பிரமிப்பாய் இருக்கு. ஆனா ஒண்ணும் பேசறதேல்லை”.
“அப்புறம்
என்னாச்சு.
நேத்து
ராத்திரி தற்செயலா படுக்கையிலே திரும்பிப் பார்த்தேன். இப்ப அடையாளம் சுத்தமா
மாறிப்போச்சு”.
“
என்னடா சொல்ற?”,
“ஆமாடா,
இப்ப சசிகலா மாதிரியே தெரியறடா”
“ஐயையோ”
“ஜெயலலிதாவைக்
கூட சமாளிச்சரலாம்டா, எல்லாமே வெளிப்படை இந்த சசிகலாவை
எப்படிரா சமாளிக்கிறது?”
“அதாண்டா
தூக்கமே வரமாட்டேங்குது”.
“
ஹலோ
மகேந்திரா ஹலோ மகேந்திரா,
(என்ன இது அடி வாங்கும் சத்தம் கேட்கிறது ஐயையோ
ஏற்கனவே என்ட்ட சொல்லியிருக்கிறான். அவன் மனைவி இரவு 12-க்கு மேல் பத்ரகாளி என்று பாவம். நான் தான் ரொம்பப் பேசிட்டேன் போல
இருக்கு.)
ஒரு
15 நிமிடம் கழித்து.
“ஹலோ
சேகர் ஹலோ சேகர் (குசுகுறுக்கிறான்)”.
“என்னடா
அடி பலமா?”
“ஆமாடா,
லைட்டா”
“பிறகேண்டா
திரும்பவும் கூப்பிடுற”.
“இல்லடா
அவ டயர்டாகி தூங்கிட்டா”.
“சேகரு
உன் பாடு
எவ்வளவோ பரவாயில்லடா”.
லேசாக
சிரித்துக் கொண்டே,
“என்னடா உன் மனைவி அம்மாவா சின்னம்மாவா ?”
Ilavarasi |
“இரண்டுமில்ல
இவ இளவரசிடா”
“என்ன
இளவரசியா?”
“ஆமடா
அடுத்த
வாரிசுடா
,கொஞ்சம் பொறுத்துப்பார் தெரியும்”.
பரதேசி
திகைத்துப் போகிறான்.
Happy New Year..
ReplyDeletewish you the same Nanbaa
Deleteநல்ல அரட்டை! இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் ஸ்ரீராம்.
Deleteசெம கலாய்...!
ReplyDeleteநன்றி தனபாலன்.
Delete:)))
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்.
DeleteHappy New Year Allen
ReplyDelete