Samurai Soldier |
சீனாவில் பரதேசி -29
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
டிக்கட்டுகளில்
500 யுவான் போட்டிருந்தது. எவ்வளவு என்று சைகையில் கேட்க 1000 யுவான் என்று எழுதிக்காண்பித்தான். அட நம்மூரில் பிளாக்ல டிக்கட் விக்கிற
மாதிரியில்ல இங்க இருக்கு என்று நினைத்துக் கொண்டு வேண்டாம் என்றேன். 200 யுவான் டிக்கட்டைக்காட்டி 500 என்றான். ஏற்கனவே
பலமுறை ஏமாந்திருக்கிறேன் என்பதால் தயக்கமாக இருந்தது. ஓபரா ஷோவைப் பார்க்க
ஆசையாயும் இருந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தால் ஒருவேளை
நம்மூர் போல பின்னால் வந்து குறைத்துக் கொடுப்பான் என்று நினைத்து நடையைக்
கட்டினேன். பின்னால் உடனே திரும்பிப்பார்க்காமல் வேகமாக நடந்தேன். சிறிது
நேரம்
கழித்து
யாரும் வருவது போல்
தெரியாததால் திரும்பிப் பார்த்தேன். அவன் கூட்டத்தில் தெரியவில்லை. அந்தப் பக்கம்
இன்னொருவன் நின்றிருந்தான். அவன் வந்து டிக்கட்டுகளைக் காண்பித்தான். 500 யுவான் டிக்கட்டைக் காண்பித்தான். எவ்வளவு
என்று கேட்க 2000 என்று சொன்னான். ஐயையோ இதற்கு
அவனே தேவலையே என்று திரும்ப விரைவாக நடந்து அவனைத் தேடிப்பார்த்தேன். ம்ஹூம்
கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது
இன்னொருவன் வந்தான். ஆனால் 500 யுவானை 2500 என்று சொன்னான். இது கட்டுப்படியாகாது
என்று நினைத்து நடையைக் கட்டினேன். மணியைப் பார்த்தால் பத்து மணிதான்
ஆகியிருந்தது. ஃபயர் வொர்க்ஸுக்கு இன்னும்
இரண்டுமணி நேரம் இருந்தது. குளிர் வேறு கூடிக் கொண்டே போனது.
காதடைப்பானை
சிறிது சரிசெய்ய படக்கென்று உடைந்து போனது. என்ன கொடுமை இது என்று
நினைத்துக் கொண்டு ம்ஹும் இனிமேலும்
வெளியே நின்று கொண்டிருந்தால் பரதேசி பரலோகம் செல்வதற்குத்தான் அதிக வாய்ப்பு
என்றெண்ணி நம்முடைய வாசக நண்பர்களின் நன்மைக்காக பொடிநடையாய் விடுதிக்குத்
திரும்பினேன்.
ஒரு
மணல் சூனியக்காரியை வாங்கி மகிழ்ந்து உண்டேன்.
புரியவில்லையா புரோ' சான்டவிச்'சைத்தான்
தமிழில்
அப்படிச்சொன்னேன்.
அன்று நடந்த நடைக்கு தூக்கமும் கண்களைத் தழுவ ஆனந்த சயனம்
அடைந்தேன்.
இரவு
திடீரென்று விழித்துக் கொண்டேன். நல்ல கனவு, 500
யுவான் டிக்கட்டை ஒரு பெண் இலவசமாகக் கொடுக்க நன்றி சொல்லி உள்ளேபோய் அமர்ந்தால்
பக்கத்தில் அந்தப்பெண். மேடையில் நடக்கும் ஓபராவைப் பார்ப்பதா பக்கத்திலிருக்கும்
பார்பராவைப் பார்ப்பதா என்று திகைத்து ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு
அவள் கைகளைக் கோர்த்துக் கொள்ள அவளின் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த
சாமுராய் வீரன் தன் வாளை உருவ, நான்
வேர்த்து விறுவிறுத்து எழுந்து விட்டேன்.
திரும்ப
தூங்குவதற்கு சிறிது நேரமானது. திரும்ப கனவு வந்தால் அந்த சாமுராய் வீரனை பாண்டிய
திருப்பாச்சேத்தி அரிவாளால் ஒரு போடு போட்டிருப்பேன். என்னசெய்வது நம் வீரத்தைக்
காண்பிக்க கனவில் கூட ஒரு
சான்ஸ் கிடைக்க
மாட்டேங்குது.
New Year in the Great Wall of China |
“ஏலேய்
பரதேசி”
(என்ன ரொம்ப நாளைக்குப்புறம் மகேந்திரன் குரல் கேக்குது)
“யார்ரா
அவன் ஏக வசனத்தில் கூப்பிடுகிறது”.
“தெரிஞ்சிக்கிட்டே
தெரியாத மாதிரி நடிக்கிறதுல உன்னை மிஞ்ச ஆளில்லடா பரதேசி”.
“சரிசரி
சொல்றா மகேந்திரா என்னாச்சு ரொம்ப நாளாச்சு”.
“நீ
இந்த தரித்திரம் பிடிச்ச சரித்திரத்தை கட்டிக்கிட்டு இருக்கிறதால தான் நான் இந்தப் பக்கமே வரதில்ல”.
“அடப்பாவி
மதுரைத் தமிழன் மாதிரியே பேசறியே .சரிசரி இப்ப மட்டும் எதுக்கு வந்த?”.
“அதுவா
எதோ கனவு காண்றதப் பத்தி சொன்னேல்ல, அதான்
வந்தேன்”.
“சரி
அதுக்கு என்ன?”
“இல்ல
அந்தக் கனவுக்கு நல்ல தலைப்பு ஒண்ணு தோணுச்சு. அதான் சொல்லிறலாம்னு வந்தேன்”.
“கனவுக்கு
தலைப்பா சரிசரி சொல்லு சொல்லு” (ஐயையோ என்ன சொல்லப் போறானோ
புது வருஷமும் அதுவுமா).
“இல்ல
சாமுராய் வீரனோட சண்டை போட்ட மாதிரி கனவு வந்துச்சுல அதுக்குத்தான் ஒரு தலைப்பு
தோணுது”.
“சரி
சீக்கிரம் சொல்லுறது. நான் இன்னும் ஒரு
பக்கம் எழுதி முடிக்கணும்”.
“இப்படி
தலைப்பு வச்சா என்ன? "யாம குச்சியும்
ஓமகுச்சியும்" “நல்லாத்தான் இருக்கு ஆமா அதில
யாமகுச்சி யாரு?”
“அதாண்டா
அந்த சாமுராய் வீரன் பார்பரா காதலன்”.
“அப்ப
ஓமக்குச்சி?”
“அத
வேற கேட்கணுமா? அது நீ தான்”.
“அட
நாதாரி இதுக்கா என்னை காலைல எழுப்பிவிட்ட. உன்னை ஊர்ல வந்து கவனிச்சுக்கிறேண்டா”.
இந்த
புல்தடுக்கிக்கு என்ன திமிர் பாருங்க. இனிமே அவன் போன் பண்ணா எடுக்கக் கூடாது.
பீஜிங்கில்
புத்தாண்டு பிறந்தது. நான் எழுந்து ரெடியாகி வெளியே வர "ஹேப்பி நியூ
இயர்"என்று சொல்லி எழுந்து கைகுலுக்கினான் லீ. ஹேப்பி நியூ இயர் என்று
வாழ்த்திவிட்டு இருவரும் சிற்றுண்டி முடித்து வெளியே வந்தோம்.
என்ன
லீ இன்னைக்கு எங்கே போகிறோம்.
நீ
சொன்னபடி புது வருடமும் அதுவுமா உன்னை சில ஆலயங்களுக்கு கூப்பிட்டுப் போகிறேன்.
முதலில் கிறிஸ்தவ ஆலயம் அப்புறம் புத்தர் ஆலயம் அதற்கப்புறம் டாவோ ஆலயம் என்று.
சப்வேயில்
இறங்கி பயணித்து பீஜிங்கின் பழமையான ஒரு கத்தோலிக்க ஆலயம் சென்றோம்.
Cathedral of the Immaculate Conception |
சுவானவுமென் ஆலயம் என்று (xuanwumen
church) என்று சீன மொழியில்
அழைக்கப்படும் இந்த அழகான ஆலயத்தின்
ஆங்கிலப் பெயர் "கதீட்ரல் ஆஃப் தி
இம்மாக்குலேட்
கான்செப்ஷன்
(Cathedral of the Immaculate Conception) என்பது. இது
பொதுவாக
"தென்புறம்
இருப்பதால்
'செளத்
சர்ச்'
என்றும்
அழைக்கப்படும்.
பீஜிங்கின்
மிகப்பழமையான
இந்த
ரோமன்
கத்தோலிக்க
ஆலயம்
முதலில்
கி.பி.1605-ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் 1904ல் கட்டி முடிக்கப்பட்டது. இது பரோக் ஸ்டைல் (Baroque style) கட்டிடக்கலையின் படி அமைந்துள்ளது.
Emperor Wanli |
"கி.பி.1605-ல் மிங் பரம்பரையைச் சேர்ந்த வான்ங்லி பேரரசர் தான் ஆட்சி செய்த 33 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்"என்றான் லீ.
பரவாயில்லை
சீனப்
பேரரசர்கள்
பரந்த
மனப்பான்மையுடன்
இருந்திருக்கிறார்கள்.
ஆனால்
கம்யூனிச
ஆட்சியில்
இதை
எப்படி
இன்னும்விட்டு
வைத்திருக்கிறார்கள்
என்று
லீயைக்
கேட்டேன்.
-தொடரும்.
சீனா2செல்லும்2அதிர்ஷ்டம்2பெற்ற2நண்பரே2சுவையாக2எழுதுகிறீர்கள்2தொடர்ந்து2படிக்க2விருப்பம்-இராய2செல்லப்பா2நியுஜெர்சி
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி செல்லப்பா.
Deleteசீனா2செல்லும்2அதிர்ஷ்டம்2பெற்ற2நண்பரே2சுவையாக2எழுதுகிறீர்கள்2தொடர்ந்து2படிக்க2விருப்பம்-இராய2செல்லப்பா2நியுஜெர்சி
ReplyDeleteஎதையும் தமிழிலேயே சொல்லி விடுங்கள்... பயமாக இருக்கிறது... ஹா...ஹா...
ReplyDeleteஅய்யய்யோ தமிழில் சொல்வதாகத்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
Deleteஉச்சரிப்பு மாறுபடுவதால் சீன மொழியில் உள்ள பெயர்களை ஆங்கிலத்தில் சொல்வது கடினம் என்பது புரிகிறது . .பதிவு நன்றாக உள்ளது
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் .நன்றி அபயா.
Deleteநன்று.... பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Delete