சீனாவில்
பரதேசி -17
Paradesi at Summer palace |
உழப்பி உழப்பி பார்த்துவிட்டு குச்சியை கடுப்பில்
மேஜையில் போட்டுவிட்டு, “ஃபோர்க் இருக்கா”? என்று
கேட்டேன். “அப்படியென்றால் என்ன?”, என்று கேட்டாள் அந்த இளம் பெண். ஃபோர்க் என்றால் அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. என்னடாது ஃபோர்க் கூட
இல்லாத ரெஸ்ட்டாரண்டா?. படம் வரைந்து பாகங்களைக்குறித்தேன் .லீ பார்த்துக்கொண்டு
சும்மா இருந்தான் . “ஏனப்பா சொல்லக்கூடாதா?”, என்று கேட்டவுடன் சிரித்துக்கொண்டே ,”
நல்லாத்தான் வரைகிறாய்”, என்றான். அவன் கேட்டவுடன் , அந்தப் பெண்
வெளியே போய் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் வாங்கிக் கொண்டு வந்தாள். அதை டிரை செய்யும்
முன்பு லீயைப் பார்த்தால், முழுவதுமாக சாப்பிட்டு முடித்து,
அவ்வளவு பெரிய கிண்ணத்தை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சிக் குடித்து
முடித்து, ஒரு ஏப்பத்தை வேறவிட்டு வயித்தெரிச்சலைக் கிளப்பினான்.
அந்த
ஸ்பூனில் சாப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹும் வருகிறது, ஆனால் வாய்க்குக் கொண்டு
போகும் முன்னால் வழுக்கி விழுந்துடுது. எனக்கோ பசியில் காது அடைத்துப் போய்
பேசாமல் நம்மூர் ஸ்டையில் கையைவைத்து சாப்பிட்டு விடலாமா என்று நினைத்து
பரிதாபமாகப் பார்த்தேன். ஃபோர்க் இருந்தால் ஒரு மாதிரி உருட்டி உருட்டி சாப்பிட்டுவிடலாம்.
Ceremonial entrance ( Courtesy Digital Journal) |
நேரம்
வேறு ஓடிக் கொண்டிருந்தது. லீ ஒரு யோசனை செய்து ஒரு சிறிய கப்பில்
லோமெயின் யும் சூப்பையும்
ஊற்றிக் கொடுத்தான். முதலில் சூப்பைக் குடித்துமுடிக்க, டம்ளரில்
நூடுல்ஸ் மட்டும் தங்கியிருந்தது. பின்னர் லீ “ரெண்டையும் சேர்த்து நல்லாத்தம்
கட்டி உரிஞ்சு”, என்றான்.
நான்
அதனை உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டேன். .எவ்வளோவோ
ஜாக்கிரதையாய் சாப்பிட்டாலும் , சூப் மீசையில் பட்டு முகத்தில் வழிந்தது . நான் அப்படிச் சாப்பிடுவதை அந்தப்பெண் வேறு வாயைத் திறந்து வைத்துக்
கொண்டு ஆச்சரியமாய்ப்பார்த்தாள். பசியில் அதையெல்லாம்
நான் கண்டுகொள்ளவில்லை.
அந்தக்
கிண்ணத்தில் பாதி சாப்பிடுவதற்கு முன்னால், நெஞ்சு
வரை சாப்பிட்ட உணர்வு வந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது, ருசி
அபாரமாய் இருந்தது. அதுமாதிரி லோமெய்ன் வேறு எங்கும் சாப்பிட்ட ஞாபகம் இல்லை.
அதோடு இந்த வகையிலும் லொமெய்னை நான் சாப்பிட்டதில்லை.
ஒரு
வேளை அதீத பசியாயிருந்ததால் அவ்வளவு ருசியாக இருந்ததோ என்று நினைத்தேன்.
விலையும்
ரொம்பக் குறைச்சல்.ரெண்டு பேருக்கும் தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து 8 யுவான் தான் ஆனது. டிப்ஸ் எவ்வளவு என்று லீயைக் கேட்க, “டிப்ஸ் வாங்க மாட்டார்கள்”, என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
“சீசியே”,
( நன்றி) என்று நான் அந்தப் பெண்ணிடமும் அவள் அம்மாவிடமும் சொல்லிவிட்டு வெளியே
வந்தேன். “பாத்தியா என்கூட வந்தால் நீ நிறைய பணம் மிச்சம் பண்ணலாம்”, என்று சொன்னான்.
நானும்
சிரித்துக் கொண்டே அவன் பின்னால் ஓடினேன். அவன்தான் நடக்கமாட்டேன்கிறானே என்ன
செய்வது.
நுழைவுச்
சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தோம். பெயருக்கேற்ற படி 'சம்மர் பேலஸ்' மரங்களும் தோட்டங்களும் தண்ணீரும் சூழ்ந்து மிகவும் ரம்மியமாக
இருந்தது. இந்த மன்னர்களுக்கு (அரண்)மனைகளும் அதிகம் மனைவிகளும் அதிகம். கோடை
காலங்களில் ஓய்வெடுக்க தன் படை பரிவாரங்களோடு பேரரசர் இங்கு வந்துவிடுவாராம்.
Last Emperor Puyi at the Summer Palace |
சிறு
குறிப்புகளை கீழே தருகிறேன்.
1.
சீனப் பேரரசர்களின்
இந்தக் கோடை வாசஸ்தலம், கிபி 1150 முதல் 1161 வரை அரசாண்ட ஜின்
டைனாஸ்டி (Jin
Dynasty) யைச் சேர்ந்த வான்யன் லியங் (Wanyan Liang) அவர்களால் கிபி 1153ல் கட்டப்பட்டது.
2.
இது பீஜிங்
நகரத்தின் வடமேற்குப்பகுதியில் உள்ள 'அச்செங்' (Acheng) மாவட்டத்தில்
அமைந்துள்ளது.
3.
1271ல் யான்
டைனாஸ்ட்டியில் (Yean Dynasty) இங்கிருந்த ஒரு ஏரியிலிருந்து
விலக்கப்பட்ட நகருக்குள் செல்லும் வகையில் ஒரு வாய்க்கால் அமைக்கப்பட்டது.
4.
1860ல் நடந்த
ஓப்பியம் யுத்தத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப்படைகள் இதனை ஆக்கிரமித்தன. பிரிட்டனின்
தூதுவர்களாக வந்த டைம்ஸ் பத்திரிகை நிருபரையும் அவனோடு வந்தவர்களையும் சீனர்கள்
கொன்றுவிட்டதால் ஆத்திரமடைந்த, அச்சமயம் சீனாவில் பிரிட்டிஷ் ஹைகமிஷனராக இருந்த
எல்ஜின் பிரபு, உள்ளே இருந்த அரண்மனைகளை இடித்துத்தள்ள உத்தரவிட்டார். அதே மாதிரி
1900ல் நடந்த பாக்ஸர் புரட்சியின் போதும் பல தோட்டங்கள் அழிக்கப்பட்டன.
5.
1912ல் சீனாவின்
கடைசிப் பேரரசர் புயி பதவிநீக்கம் செய்யப்பட்டவுடன் 'சம்மர் பேலஸ்' சிங் டைனாஸ்டியின் பேரரசர்
குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாறியது.
6.
1914ல் இது பொது
மக்களுக்காக திறந்துவிடப்பட்டது.
7.
1924ல் பேரரசர்
புயி விலக்கப்பட்ட நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டபின்,
பீஜிங்கின் முனிசிபல் அமைப்பு சம்மர் பேலஸின் பொறுப்பேற்று, இதை ஒரு
பொதுமக்களுக்கான பூங்காவாக மாற்றி
அமைத்தனர்.
8.
1949ல் இங்குதான்
சிறிது காலம் "சென்ட்ரல் பார்ட்டி ஸ்கூல் ஆஃ ப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி" என்று அழைக்கப்பட்ட
கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கொள்கை
விளக்கப்பள்ளி இருந்தது. அந்தச் சமயத்தில் 'மா
சேதுங்' அவர்களின்
நண்பர்களான, லியு யாஜி (Liu Yazi) மற்றும்
ஜியங் சிங் (Jiang Qing) ஆகியோர் இங்கு குடியிருந்தனர் .
9.
1953ல் இந்த அரண்மனை
வளாகம் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக்கப்பட்டது.
10.
1998ல் சம்மர்
பேலஸ் யுனெஸ்கோவில் 'வேர்ல்ட் ஹெரிடேஜ்' இடம் என்று
அங்கீகரிக்கப்பட்டது.
11.
மொத்தம் 2.9 சதுர
கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பூங்காவில் முக்கால்வாசிப் பகுதி
ஏரியாகும்.
உள்ளே
'லாஞ்சிலிட்டி மலை (Longivitti Hill) 'கன்மிங் ஏரி'
(Kunming Lake) மற்றும் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. அது தவிர
குட்டிகுட்டி மலைகளும், தங்குமிடங்களும் அரண்மனைகளும் உள்ளே இருக்கின்றன.
இந்த
ஏரியில் பாதி இயற்கையானது, மறுபாதி செயற்கையானது என்று லீ சொன்னான். சீனர்களின்
நாகரிகத்தின் கலைப்பண்பாட்டின் உச்ச பச்ச கட்டடக்கலையின் (Masterpiece) அமைப்பென கருதப்படும்
இடத்தின் உள்ளே உள்ள அதிசயங்களை வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
தொடரும்.
தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி.
Delete//வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.//
ReplyDeleteசரி
வாருங்கள் பேராசியர் அவர்களே .
Deleteஎப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சாச்சு..... அவங்க யாருன்னு தெரியலையா கடைசி வரைக்கும்!
ReplyDeleteதொடர்கிறேன்....
அவங்க லீயின் சொந்தக்காரர்களும் இல்லை , என் சொந்தக்காரர்களும் இல்லை வெங்கட் .
Deleteஅறியாதன அறிந்தோம்
ReplyDeleteசுவாரஸ்யாகச் சொல்லி பின் சரித்திரக்
குறிப்புக்கள் முழுவதையும் கொடுத்தது
இரசித்துப் படிக்கும்படியாய் உள்ளது
முடிந்தால் குறைந்த பட்சம்
நாங்கு படங்களாவது,,, பகிரவும்
உணர்ந்துப் படிக்க அது ஏதுவாகும்
தொடர்கிறோம்
வாழ்த்துக்களுடன்...
நன்றி ரமணி , இந்த லீ சரியாக படங்களை எடுக்கவில்லை .ஒரே இருட்டாக இருக்கிறது .வரும் பதிவுகளில் அதிக படங்களை கொடுக்க முயற்சிக்கிறேன் .
Deleteபார்க்கலாம்.. நாங்கள் தயார் ...
ReplyDeleteவரும் திங்கள்கிழமை நானும் தயார் ஆகிவிடுவேன் நண்பா.
DeleteLot of good information. வாய்விட்டு சிரிக்கவைத்த நீங்கள் வாழ்க :)
ReplyDeleteநன்றி ஆரூர் பாஸ்கர்.
DeleteAlfi good.humourous
ReplyDelete