தமிழக தேர்தல் 2016
: பகுதி 1
கருணாநிதி தன்
வாழ்நாளில் செய்த பெருந்தவறு, தன் உற்ற நண்பனாக இருந்த எம்ஜியாரைப் பகைத்துக்
கொண்டது. அண்ணாவுக்குப் பின், அன்பழகன், நெடுஞ்செழியன்,
சம்பத் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் இருந்த போதும் கருணாநிதி முன்னிலை
பெறவும், மாபெரும் இயக்கத்தை வழிநடத்த
அவருக்குத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் எம்ஜியார்தான்.
எம்ஜியாரின்
மக்கள் பலத்தை, முன்கூட்டியே கணிக்கத்தவறிய
கருணாநிதியை, அது இன்றுவரை பாதித்து வருகிறது. எம்ஜியாரின் வாழ்நாளில் கருணாநிதி
தலையெடுக்கவே முடியவில்லை. ஜெயலலிதாவை இந்தமுறையும் குறைவாகவே மதிப்பிட்டது மேலும் செய்த தவறு . இப்போது
ஜெயலலிதாவும் எம்ஜியார் செய்த அதே சாதனையைச் செய்திருக்கிறார்.
MGR பிரிந்து சென்றபோது, திமுகவின் இளைஞர் படை அவரோடு
சென்றுவிட்டது. அதிமுக மற்றும் இரட்டை இலையின் வாக்கு வங்கி, காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும் மாறாத ஒன்று. ஜெயலலிதாவின் அராஜகம், ஆணவம், செயல்படாத தன்மை, ஊழல், தன் அமைச்சர்களைக் கூட அடிமைகளாக நடத்துவது, சசிகலா
குடும்பத்தின் ஆதிக்கம், இவையெல்லாவற்றையும் மீறி அந்த வாக்கு வங்கி அப்படியே
இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் வாக்குவங்கிகளில் 30 முதல் 35 வரை பெற்று முதலிடம் வகிக்கிறது. தற்போது
நாற்பதுக்கு மேல் எகிறியிருக்கிறது.
கருணாநிதியும், MGR என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து
பலமுறை தோற்றாலும், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து
மாறி மாறி ஜெயித்து, இன்றுவரை காப்பாற்றி வருகிறார். இதற்கு மிகுந்த திறமையும்
பொறுமையும் வேண்டும். திமுக-வின் வாக்கு வங்கி அன்றிலிருந்து இன்று
வரை மாறாமல் இருந்தாலும், இரட்டை இலையின் வாக்கு வங்கியை விட, உதய சூரியனின் வாக்கு
வங்கி குறைவானதுதான் ,25 முதல் 30 வரை
தான்.
எனவே தனித்தனியே
நின்றால், எப்பொழுதும் அதிமுகதான் ஜெயிக்கும். இது கலைஞருக்கு நன்கு தெரியும்.
முற்காலத்தில் கூட அதிமுகவை இருமுறை வென்றது சொந்த பலத்தால் அல்ல,
கூட்டணி பலத்தால்தான்.
எனவே 'பழம் நழுவி பாலில் விழும்' என்று தன் வெட்கத்தை
விட்டு விஜய்காந்துக்கு காத்திருந்து ஏமாந்தார்.
திமுகவிடம்
நெருங்கி வந்த விஜயகாந்த், வைகோ, திமுகவிடம்
ஏற்கனவே இருந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் வாசனின் தாமாகாவையும் சேர்த்து ஓர் மெகா கூட்டணியை அமைத்திருந்தால் வெற்றிக்கனி நழுவியிருக்காது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் வாசன் எப்படி சேர முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி சேர்ந்திருந்தால் வாசனின் கூட்டணி
திமுகவிடம் தான் தவிர காங்கிரசோடு அல்ல என்று நினைத்துக் கொள்ளலாம். ஏன்
காங்கிரசில் இருந்து பிரிந்த, ஷரத் பவார், மம்தா பானர்ஜி போன்றோர் அதன்பின் காங்கிரசோடு கூட்டணி வைத்ததோடு
அமைச்சரவையிலும் பங்கு கொண்டனரே. இதைவிட முன் உதாரணம் வேறொன்று வேண்டுமா?
இதையெல்லாம்
விட்டுவிட்டு, மு.க.ஸ்டாலினின் பேச்சைக்கேட்டு பலத்தை பெருமளவு இழந்துபோன
காங்கிரசை மட்டும் பிடித்துக் கொண்டு களம் கண்டதால்தான் தி.மு.க. தோற்றுப்போனது. குறைந்தபட்சம்
இதில் ஒன்று இரண்டு கட்சிகளாவது, திமுகவின் பக்கம் வந்திருந்தால், நிச்சயம் வெற்றி
பெற்று இருப்பார்கள் .ஏனென்றால் விகித வித்யாசம் வெறும் 1:1 சதவிகதம்தானே .கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .
இதில்
ஜெயலலிதாவின் சாதுர்யமும் வியூகமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவர்
தன்னம்பிக்கை என்பது இந்தச் சமயம் ஓவர்கான்ஃபிடன்ஸ் இல்லை.
வைகோ கூட்டணியில் விஜய்காந்த்
சேருவதாக அறிவித்தபோதே, அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போதே
அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
தேர்ந்த அரசியல்வாதியான
வைகோ, இப்படி ஒரு தற்கொலை முடிவு எடுத்தது எதனால்? என்ற கேள்வி எழும்போது, இதுவும்
ஜெயலலிதாவின் வியூகமாக இருக்குமோ? என்ற சந்தேகம்
எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.
கருணாநிதி
பெரிதும் எதிரிபார்த்த இந்தத் தேர்தல் தோல்வியில் முடிந்ததோடு கருணாநிதியின்
அரசியல் வாழ்வும் இத்தோடு முடிந்ததாகத்தான் கருத வேண்டும். ஏனென்றால் இன்னும்
ஐந்து வருடங்களில் கருணாநிதியின் வயது 98
ஆகிவிடும். அவர் உயிரோடு இருந்தால் கூட தேர்தலில் நிற்பது, பரப்புரைக்குச்
செல்வது என்பதெல்லாம் உடல் பூர்வமாக முடியாத ஒன்று .
ஆனாலும் கட்சியைக்
காக்கவும் அடுத்த தலைமுறைக்கு முழுதாகக் கொடுக்கவும் அவர் செய்ய வேண்டியது என்ன?
1.
தோல்வியின் காரணங்கள் எதுவாக இருந்தாலும்,
தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும்.
2.
உடனடியாக அமைப்பு ரீதியில் தேர்தல் நடத்தி, கட்சியின் தலைவரையும்,பொதுச் செயலாளரையும்
தேர்ந்தெடுக்கவேண்டும்.
3.
இதில் முக ஸ்டாலின் ஜெயித்தால் , அவர்
தலைமை ஏற்கலாம்.
4.
குடும்பத்தகராறுகளை உடனடியாக பேச்சுவார்த்தை
அல்லது சொத்துப் பிரித்தல் மூலமாக தீர்க்க வேண்டும்.
5.
மு.க. அழகிரி மட்டுமல்ல, கனிமொழி, தயாநிதிமாறன்
ஆகியோரை அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கச் செய்ய
வேண்டும்.
6.
எதிர்காலத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் வரவிடாது பார்த்துக் கொள்ள
வேண்டும்.
7.
எதிர்க்கட்சித்தலைவராக
செயல்பட விரும்பாவிட்டாலோ, சட்டசபைக்குச்
செல்வதை தவிர்த்தாலோ, தன் MLA பதவியை ராஜினாமா செய்து, வேறொருவருக்கு வழிவிட வேண்டும்.
8.
ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திமுக
செயல்பட, ஸ்டாலினுக்கும் கட்சியினருக்கும் உதவ வேண்டும்.
9.
தான் மட்டுமன்றி தன்னுடன் இருக்கும்
பல மூத்த வயதுகடந்த அரசியல் வாதிகளையும் ஓய்வு
பெற வைக்க வேண்டும்.
10.
அதன்பிறகு அரசியலை விட்டு ஒதுங்கி, நிம்மதியாக
ஓய்வெடுக்கலாம்
11.
ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டால்
மட்டுமே சொல்ல முனைய வேண்டும்.
12.
அறிவாலயத்தில் திராவிட இயக்கத்தின் நிரந்தர
பொருட்காட்சியை அமைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் திறந்து விடலாம்.
13.
பேரப்பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்.
14.
முரசொலியில் மட்டுமல்லாது பிற பத்திரிகைகளிலும்
அவ்வப்போது கட்டுரைகள் எழுதலாம் .
15.
நெஞ்சுக்கு நீதி கடைசி அத்தியாயத்தை
எழுதி முடிக்கலாம்.
தன் மீதியுள்ள காலத்திலாவது கருணாநிதி அவர்கள் அமைதியாகவும்
, நிம்மதியாகவும் அரசியலை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியுடன் காலத்தை
கழிக்க வேண்டும் .
கேட்க நல்லாத்தான் இருக்கு... நடக்காதே....!
ReplyDeleteஸ்ரீராம், நடந்தா நாட்டுக்கு நல்லது இல்லேன்னா கேட்டுக்கு நல்லது .
Deleteசரியான நேரத்தில் மிகச் சரியாக எழுதப்பட்ட பதிவு......பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன்
Delete***அண்ணாவுக்குப் பின், அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் இருந்த போதும் கருணாநிதி முன்னிலை பெறவும், மாபெரும் இயக்கத்தை வழிநடத்த அவருக்குத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் எம்ஜியார்தான்.***
ReplyDeleteரொம்ப அப்பாவியா இருக்கீங்க! வேறென்னத்தைச் சொல்றது..
இதுதான் உண்மைன்னு இது வரை நினைச்சிட்டு இருக்கேன் , கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்களேன் வருண் .
DeleteYes you are right, the five big leaders of DMK in the beginning were Annadurai, Mathialagan, nedunchelian,N.V.N natarajan and E.V.K Sampath. Even the second line were, Pulavar Govindan, Govindasamy,Kannadasan,Ma.PO.SI then Karunanidhi. Becos of the support from MGR, Karunanidhi became CM in 1969 after Anna's demise. When MGR was brought inside to DMK by Karunanidhi in early 50's there were lot of opposition from the senior leaders, but Anna graced MGR. By 1969 MGR became a big force in DMK, so it was just becos of MGR support Karunanidhi became CM. Anna himself kept Karunandhi far from power, when Anna went to USA for his cancer treatment, he made Nedunchelian as the acting CM. Also after winning 1967 election, Karunanidhi was given a very non-important ministry like PWD only. Good Article by you sir.
DeleteThank you for coming.
Deleteசரியான பதிவு..தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteதலைவர் தோற்றது கூட கவலை அளிக்கவில்லை.
ReplyDeleteஇப்படி ஆளாளுக்கு அட்வைஸ் பண்றாங்களே...அதுதான் கவலையாக இருக்கு....!
என்ன பண்றது சிங்கம் படுத்துட்டா , எலி கூட ஏறி விளையாடும் பெப்பின்.
DeleteUnmai!!!
DeleteHE HAS ALLOTTED TOO MUCH SEATS TO CONGRESS WHICH DOES NOT DESERVE 41 SEATS AND HE ALLOTTED TOO MANY SEATS TO ALL OTHER FRINGE PARTIES AND THIS HAS THWARTED THE VICTORY.
ReplyDeleteEXCEPT FLOOD AFFECTED CHENNAI AREAS AND KANYAKUMARI DIST AIADMK POLLED A VERY GOOD
PERCENTAGE OF VOTES AND THAT IS WHY DMK WAS DEFEATED AND AS YOU SAY THIS IS LAST
ELECTION FOR KALAIGNAR.
He jumped on Congress because no one was available.Without Congress however small their percentage is, DMK would have lost more seats.
Deleteஅரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தை கருணாநிதி நெருங்கி விட்டார்,
ReplyDeleteகேட்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் அதுதான் உண்மை நிலை வர்மா .
Delete//தன் மீதியுள்ள காலத்திலாவது கருணாநிதி அவர்கள் அமைதியாகவும் , நிம்மதியாகவும் அரசியலை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியுடன் காலத்தை கழிக்க வேண்டும் .// இவர் இதைச் செய்யார். ஆடியகால் போல் ஆடத்தான் செய்யும், அத்துடன் செய்த ஊழல், சேர்த்த பணம் இவற்றை மூடி மறைக்க ஏதாவது வேசம் சாகும் வரை கட்டியே தீருவார். புலிவாலைப் பிடித்தவன் கதியே, கலைஞர் கதி!இந்த வயதிலும் அவர் பேராசை மிக மிக அதிகம்...
ReplyDeleteஅழகிரியை காரணம் காட்டி , ஸ்டாலினை முன்னிலைப்படுத்தாது தேர்தலைச் சந்தித்தது மாபெரும் தவறு .
Deleteஐயா, பரதேசி அவர்களே ..அரசியல் நிலையற்ற தன்மை கொண்ட து இதல். கருணாநிதி யை. குறை சொல்ல எதுவும் இல்லை அவர் பார்க்காத வெற்றி, தோல் வி இல்லை. எதிரி வெல்லாம் துரோகம் தோற்கப்பட்டது. வைக்கொ சிமான், அன்புமணி,விஐயகாந்,வேல்முருகன்,
ReplyDeleteவெற்றி தோல்வி மாறி மாறி வருவதுதான் ஆனால் இந்த முறை தோல்வியே தொடர்ந்து வந்துவிட்டது தானே திமுகவுக்கு இழுக்கு .
Deleteஐயா, விவாத்திற்கு சரி போல் தோன்றும் நாம விரும்பவது நடப்பது அரசியலில் சாத்தியமற்றது பரதேசி அவர்களே உலக அரசியலே. உற்று நோக்கும் உமக்கு தெரியாதா கலைஞர் வேற தமிழகம் வேற அல்ல,இது பல முறை ்்தி.மு.க. மேடையில் உறுதிபடுத்தபட்டது.
ReplyDelete"நாம விரும்பவது நடப்பது அரசியலில் சாத்தியமற்றது",ஒத்துக்கொள்கிறேன் .ஆனால் தமிழகம் கருணாநிதியைத்தாண்டிச்செல்லும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன் .
Deleteஐயா, உங்கள் எண்ணம் சரி தான். கலைஞர அதை தான் விரும்புமவார், தமிழக மக்கள் வேகமாக மாறும் தன்மை அற்றவர் அறிவை விட உணர்வுக்( கட் பிலிங்ஸ்) பற்றி செல்வர் ்்தமிழக புவிஇயல் வெப்பாமானது,தூசி நிறைந்த து தமிழனின் திறன் உலக தரத்தை விட குறைந்த்து,இதை தனது நெடிய பழமயைஆன வரலாறு முலம் சரி செய்ய முயல்வான்,
ReplyDeleteநான் இதை ஒத்துக்கொள்ளமாட்டேன் .தமிழன்தான் இப்போது உலகம் எங்கும் சென்று எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்கிறான்.
Deleteஐயா, நீங்கள் சொல்வது சரி தமிழன் வெளிநாட்டில் சாதிப்பான். உள்ளுரில் அவன் எதே தின்ன பித்தம் தெளியும் என்று தெரியவில்லை ஐயா, இங்கு குடும்பம் ்்நடத்த பத்துவட்டிக்கு கடன் வாங்கறான்.
ReplyDeletenachiappan, unable to digest the truth, has started degrading the people of Tamilnadu.
ReplyDeleteHe is his master's voice
ஐயா ஆர் எஸ் உங்களுக்கு கோபம் ஏன் வருகிறது. ஒட்டு போடறவங்க நாலு கோடிக்கு மேல் உள்ளன ர்... உங்களுக்கு எல்லாரையும் பற்றி தெரியுமா ...உங்களுக்கு தெரிந்தவர் மட்டும் தமிழ் நாடு கிடையாது. எப்படி ப் பார்ந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க.ஒட்டு சதவீதம் வளர்த்து உள்ளது.7.5%.. மேல்.. மறுக்க முடியாத உண்மை. மேலும் தலைவர் இருக்கும் போது யாரைபற்றியும. கவலை பட மாட்டோம. .போய்
ReplyDeleteபோ...