Thursday, May 12, 2016

தி பட்லர்: உண்மைக்கதை

பார்த்ததில் பிடித்தது


ஒரு அமைதியான ஞாயிற்றுக்கிழமை மதியம். வீடு முழுதும் நிசப்தமாக இருந்தது. ஏனென்றால் என் மனைவி தூங்கப் போய்விட்டாள். என் இரு மகள்களும் தங்கள் தங்கள் ரூமில் அடைந்து போக, அப்பாடா என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கொறிக்கும் பொருட்களை காலடியில் நகர்த்திவிட்டு, நெட்ஃபிலிக்சில் தேடியதில் கிடைத்த ரத்தினம் தான் "தி பட்லர்"  என்ற திரைப்படம்.
ஏற்கனவே இதனைப்பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2013ல் வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடகம். அதாவது நீங்கள் நினைக்கும் நாடகம் அல்ல, 'டிராமா' என்று சொல்வார்கள்.

கதைக்கரு: 2009 ஆம் வருடம், வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் முதிய கறுப்பின ‘சிசில்’, புதியதாக பதவியேற்ற அமெரிக்க அதிபரை வரவேற்கக் காத்திருக்கையில், தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் ஃப்ளாஸ் பேக்குடன் படம் ஆரம்பிக்கிறது.

1926ஆம் வருடம் சிசில் ஏழு வயதாக இருக்கும் போது, அவன் பெற்றோர்கள் ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு பருத்திக் காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.அப்போது அங்கு வந்த பண்ணையின் வெள்ளை முதலாளி, சிசிலின் அம்மாவை அழைத்துக் கொண்டு போய் கற்பழித்து விடுகிறான். அதனைத் தட்டிக்கேட்ட சிசிலின் அப்பாவை முதலாளி சுட்டுக் கொன்றுவிட, அவனுடைய அம்மாவுக்கு சித்தப்பிரம்மை பிடிக்கிறது. இந்தச் சூழலில், முதலாளியின் அம்மா சிசிலை அழைத்துக் கொண்டு தன் வீட்டில் வைத்து 'ஹவுஸ் செர்வன்ட்' ஆக்குகிறாள். அங்கு பலவித பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்க்களையும் அறிந்து கொள்கிறான் சிசில்.

1937ல் அவனுக்கு 18 வயதாகும்போது சிசில், அந்தப் பண்ணையையும் ஊமையாகிபோன தன் தாயையும் விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறான். ஒரு இரவிலே பசி தாங்க முடியாமல் ஒரு கேக் கடையை உடைத்துத் திறந்து கேக்குகளை எடுத்து ஆவலாய்ச் சாப்பிட ஆரம்பிக்கிறான். அப்போது வரும் கடையின் உரிமையாளர், முதலில் கோபப்பட்டாலும், பின்னர் பரிதாபப்பட்டு அவனை அந்தக் கடையிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார். அங்கிருந்து வாஷிங்டன் DC யில் உள்ள பெரிய ஓட்டலில் வேலைக்குச் சேருகிறான். அங்கு அவனுக்குத் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளும் பிறக்கின்றனர். அப்போது தான் அவனுக்கு வெள்ளை மாளிகையில் பட்லராக வேலை கிடைக்கிறது. அச்சமயம் ஐசன்ஹோவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். அதற்கப்புறம் வந்த ஜான் F. கென்னடி, லிண்டன் B.ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன் ஆகிய பலருக்கும் நெருங்கிய பட்லராக இருக்கும்போது நடக்கும் பலவித அரசியல் சமூக மாற்றங்களை திரைப்படம் அழகாக படம் பிடிக்கிறது.


‘கறுப்புச்  சிறுத்தைகள்' அமைப்பில் சிசிலின் மகன் சேருவது, வெள்ளை அதி சமூக KKK க்கு எதிராக போராடுவது, அதில் சிசிலின் வெறுப்பு, பின்னர் ஈடுபாடு, வெள்ளை மாளிகையில் ஒரே வேலை செய்யும் கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் வேறுவேறு சம்பளம் இருந்ததை சிசில் எதிர்த்தது, மார்டின் லூதர் கிங் ஜூனியர்  சுட்டுக் கொல்லப்படுவது என்று ஆரம்பித்து கறுப்பினத் தலைவர் ஒபாமா அதிபராக  வருவது வரை அமெரிக்க வரலாறை அள்ளித்தரும் படம் இது.

சிசிலாக நடித்தது ஃபாரஸ்ட் விட்டேகர், அவர் மனைவி குளோரியாக மிகப்பிரபலமான டிவி ஸ்டார் ஒபரா வின்ஃபரே. இருவரும் தம் பண்பட்ட நடிப்பால் அப்படியே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் இதில் நடித்த அனைவரும் தங்கள் தங்கள் பாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

Lee Daniel
திரைக் கதையை டேனி ஸ்டிராஸ் எழுத, தயாரித்து இயக்கியவர் லீ டேனியல். வெய்ன்ஸ்டின் கம்பெனி மூலம், ஆகஸ்ட் 2013ல் வெளியிடப்பட்ட இந்தப்படம் $30 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுதும் திரையிடப்பட்டு மொத்தம் 176 மில்லியன் சம்பாதித்தது.

இந்தப்படம் ஆஸ்கார் போன்ற பல விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டாலும் வாங்கிய விருதுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1.   ஆப்ரா வின்ஃபிரேவுக்கு “பெஸ்ட் சப்போர்டிங் நடிகை என்ற விருது: AARP - Annual Movies for Grownups Awards.
2.   ஹாலிவுட் ஃபிலிம் அவார்ட், லீ டேனியலுக்கு 'சிறந்த இயக்குநர்' விருது கொடுத்தது.
3.   அதே நிறுவனம் டேவிட் ஓயிலோவுக்கு 'ஸ்பாட்லைட்' விருது கொடுத்தது.

அமெரிக்க கறுப்பின வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த அரசியல், சமூக மாற்றங்கள், பலவித சம்பவங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களும் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

 முற்றும்.

10 comments:

  1. நல்ல அறிமுகம். பொதுவாக இது போன்ற நல்ல படங்கள் ஓரு சில இனத்தவர்களால் மட்டும் போற்றி பாராட்டபடுவது வருந்தத்தக்கது

    ReplyDelete
  2. 9 years a slave is another good one on african american history and slavery in US. I watched both with my kid who was born and brought up here in US. He can't believe how US has changed afterwards

    ReplyDelete
    Replies
    1. Thank you Deiva for coming and referring another movie of similar kind.

      Delete
  3. தகவல்களுக்கு நன்றி. இந்த படம் பற்றி கேள்வி பட்டு இருந்தாலும் ஏனோ பார்க்க தூண்டவில்லை.. உங்கள் பதிவிருக்கு பிறகு பார்க்க முடியும் என்று நினைகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வா நண்பா , சரி நண்பா , நன்றி நண்பா , மீண்டும் வருக நண்பா

      Delete
  4. If you want to live in US, you should not think too much about history. Lots of dark history is there. Native Americans, Slavery and much more.

    ***அமெரிக்க கறுப்பின வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த அரசியல், சமூக மாற்றங்கள், பலவித சம்பவங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களும் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்.***

    இந்த ஊரில் வந்து குடியேறும் பார்ப்பனர்கள் மற்றும் ஸ்மார்ட் இந்தியர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. நம்ம ஊரில் எப்படி ஸ்லம் மற்றும் ஏழைகளைப் பற்றிக் கவ்லைப்படுவதில்லையே அதேபோல்தான் இங்கேயும். மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ளாமல், பகவானைத் தாலாட்டி தாலாட்டி, முட்டாளாவே வாழ்ந்து சாவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைக்கதையைப்பார்க்கும்போதும் சரி, உண்மைக்கருத்தைப்படிக்கும்போதும் சரி வாயடைத்துத்தான் போகிறது வருண் .

      Delete
  5. நல்லதொரு அறிமுகம். நன்றி நண்பரே.

    ReplyDelete