Thursday, August 1, 2019

பரதேசி ஒரு தெருப்பொறுக்கி


Image may contain: one or more people and outdoor
"சேகர் என் இரத்தம் கொதிக்குதுடா"
"அய்யய்யோ மகேந்திரா, என்னாச்சுடா, BP  செக் பண்ணியா?"
"டேய் கிண்டலா உனக்காகத்தான் என் மனசு கொதிக்குதுடா"
"ஏண்டா மகேந்திரா? எதுக்கு?"
"யார்றா சொன்னா உன்னை தெருப்பொறுக்கின்னு?, பரதேசின்னு சொன்னதையே என்னால தாங்க முடியல"
"பரதேசின்னு எனக்கு நானேதானடா பேர் வச்சேன் , நான்  பரதேசி தானடா,  சொந்த தேசம்விட்டு, வந்த தேசத்திலும் நொந்து, ஊர் ஊராகக்  சுத்தும் என்னை  பரதேசின்னு சொல்றதுதான் சரி"
"சரி, பரதேசிய விடு, தெருப்பொறுக்கின்னு சொல்றது?"
"ஆமாடா நான் தெருப்பொறுக்கிதான்"
"என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வேலை கிடைச்சதுன்னு நீ சொல்லும்போதே நான் பயப்பட்டேன்"
"இல்லடா சுய நினைவோடதான் சொல்றேன்"
"யார்ரா உன்னை அப்படிக் கூப்பிட்டது"
'வேற யார் என் பார்யாள் தான்"
"அதுக்கு நீ ஒன்னும் எதிர்த்துக் கேக்கலயா"
"எதுக்குடா எதிர்க்கணும்?"
"என்னடா சொல்ற?”
"அவ  சொல்றது உண்மைதான அதனால சரிதான்னு ஒத்துக்கிட்டேன்.
அப்ப நீ நெசமாவே  தெருப்பொறுக்கிதானா ?"
"ஆமடா ஆமா"
"அய்யோ ஒரே குழப்பமா இருக்கே, டே சேகரு என்னடா அமெரிக்கா போய் இப்படி தெருப்பொறுக்கியா ஆயிட்டியே"
"இருடா விளக்கமா  சொல்றேன். கொஞ்சம் பொறுமையாக்கேளு"
"சீக்கிரம் சொல்றா, தூக்கம் வேற வருது"
          "நான் தெருவுல போகும்போது பல பொருட்கள் கிடைச்சிருக்கு. வாலட் கிடைச்சிருக்கு. அதப்பத்தி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில சொல்லிருக்கேன்"
"அதை என்னடா செஞ்ச"
          "அதை அவங்கவங்கட்ட  சேத்திட்டேன். சில சமயம் முக்கிய டாக்குமென்ட்ஸ் கிடைச்சிருக்கு . அதனையும் அவரவர்ட்ட கொடுத்திட்டேன். ஆனா சிறு சிறு பொருள் கிடைக்கும் அதை யாருக்குச் சொந்தம்னு தெரியாது. அதனால நானே வச்சுக்குவேன். இல்லைனா சர்ச்சுக்கு கொடுத்துருவேன்."
"வேற என்னென்ன கிடைச்சிருக்கு"
"பென்னி, நிக்கல், டைம், குவார்ட்டர், டாலர் பில் இப்படி நிறையக் கிடச்சிருக்கு"
          "அடேய் பரதேசி அங்கபோய் குவார்ட்டர் அடிச்சிப் பழகிட்டயா. அதுவும் தெருவில இருந்தா எடுத்துக் குடிக்கிற, நீ உண்மையிலயே தெருப்பொறுக்கிதாண்டா".
          "டேய் நான் குவார்ட்டர்ன்னு சொன்னது, அந்தக்குவார்ட்டர் இல்லடா, இங்க 25 பைசாவ குவார்ட்டர்னு சொல்லுவாங்க"
"அப்படி விளக்கமாச் சொல்லு,  அப்ப மத்ததத்தைப் பத்தியும் சொல்லு"
          "நிக்கல்னு (Nickel) சொன்னா அஞ்சு பைசா, டைம் (Dime) னு சொன்னா 10 பைசா, பென்னின்னு (Penny) சொன்னா ஒரு பைசா"
"சரி சில்லறையை விடு டாலர் நோட்டுக்கள் ஏதாவது கிடைச்சிருக்கா" 
"ஒரு டாலர் பில்லிருந்து 50 டாலர் பில் வரை கிடைச்சிருக்கு"
"அடேய் யாருக்கு வேணும் பில் டாலர் நோட்டைப்பத்திச் சொல்றா"
          "அடலூசு மகேந்திரா, டாலர் பில்னா டாலர் நோட்டுன்னு அர்த்தம். அத இங்க பில்னு (Bill) தான் சொல்வாய்ங்க"
"கைல நிக்காம செலவு ஆயிரதனால பில்னு சொல்றாய்ங்களோ"
“பரவாயில்லை மகேந்திரா நல்லா யோசிக்கிற"
          “50 டாலர் பில் வரை கிடைச்சுதா பரவாயில்லரா பரதேசி, பொறுக்கியே காலத்தை ஓட்டிரலாம் போல"
          "நீ சொல்றது உண்மைதாண்டா,  பொறுக்கியே காலத்தை ஓட்டுறவங்களும் இருக்காய்ங்க".
"என்னடா சொல்ற அங்கேயுமா?"
          "நிச்சயமா உதாரணத்திற்கு இங்கல்லாம் புதுப்பொருள் வாங்குனா பழைய பொருளை வெளியே வச்சுருவாய்ங்க, அது வேலை செய்ற  தரத்துல இருந்துச்சுனா, அது ஒரு ஸ்லிப் எழுதி வச்சிருவாய்ங்க. தேவைப்பட்டவங்க எடுத்துக் கொள்ளலாம்". சில பொருள்களை வெளியே வச்சுட்டு ஃப்ரீன்னு எழுதி வெளியே வச்சுருவாங்க".
          "அப்படியா என்ன மாதிரி பொருள் அப்படி வெளியே கிடைக்கும்?”
“ கட்டில், மெத்தை, கப்போர்டு, டிவி, மைக்ரோவேவ், மேசை, நாற்காலிகள், அலமாரி போன்ற பல பொருட்கள் கிடைக்கும். இதுல சில மெத்தை செய்யும் கம்பெனிகள் அவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய், உள்ளே இருக்கிறதை எடுத்து ரீசைக்கிளிங்  செய்து புது மெத்தை தைச்சு வித்துருவாய்ங்க. அது மட்டுமல்லாமல் இரும்பு காயலான் கடைக்காரங்க ஒரு டிரக்கில் நாலு தெரு சுத்துனா போதும் நிறைய கிடைச்சுரும். வீட்டுக்கழிவுகள் மற்றும் ரீசைக்கிளிங் தினங்களில் இப்படிப்பட்ட ட்ரக்குகளைப் பார்க்கலாம்.       
          “அது தவிர பிளாஸ்டிக் பாட்டில்கள், மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கிற நாட்களில் பலபேர் தள்ளு வண்டிகளில் வந்து பிளாஸ்ட்டிக்  பாட்டில்களை மட்டும் பிரித்து எடுத்துட்டு போயிருவாங்க . ஏன்னா கடைகள்ள சில மெஷின்  வச்சிருப்பாங்க. அதுல போய் ஒவ்வொண்ணா போட்டா, ஒரு பாட்டிலுக்கு 5 சென்ட் கிடைக்கும். ஒரு வாரத்துல நூத்துக்கணக்கில் இவங்க சம்பாரிச்சுருவாங்க.
          "அப்படியா பரவாயில்லையே. ஆமா பரதேசி, டாலர் பணம் கிடந்தா கீழ எடுக்கிறது ஓக்கே. ஏண்டா ஒரு பைசா கிடைச்சாக்கூட  எடுக்கிற?"
          என்னடா அப்படி சர்வசாதாரணமா சொல்லிட்ட, 1982க்கு முன்ன அடிச்ச பென்னின்னா முழுசா காப்பர். அதோட மதிப்பு இப்ப 3 லிருந்து 4 பென்னி. தங்கம், வெள்ளிக்கு அப்புறம் காப்பர்தான் இப்ப விலை கூடிட்டிருக்கு. 1960-க்கு மேலே பென்னி கிடைச்சா அதோட விலை எகிறும். சில பென்னி ஆயிரம் டாலர் வரை போகும் தெரியுமா?
          "என்னடா சொல்ற இதுல இவ்வளவு விஷயம் இருக்கா" அப்படின்னா வொர்த் இல்லைனா தூக்கிப் போட்டிருவியா"
          “நோ நோ, அப்படிச் செய்ய மாட்டேன். ஏன்னா மோடி புண்ணியத்தில் நம்ம பொருளாதாரம் நல்லா இருக்கு”.
"என்னது பொருளாதாரம் நல்லா இருக்கா ? சொல்லவே இல்லை ,இங்க பெரிய பெரிய கோடீஸ்வரனெல்லாம்  தற்கொலை பண்ணிட்டு செத்துட்டு இருக்காய்ங்க உனக்குத்தெரியாதா ? "
          "அடே ரூபாய் மதிப்பு குறைய குறைய டாலர் மதிப்பு கூட்டிட்டுத்தான் இருக்கு, அதனால எங்க NRI  பொருளாதாரத்தைச் சொன்னேன்"
"ஓ அப்படி ஒரு ஆங்கிள் இருக்கா?
          அதனால கீழே பென்னி கிடைச்சாலும் அதோட இந்திய மதிப்பு 70 காசுடா, விடுவேனா? –
“ ஹலோ, ஹலோ எங்கடா போன? பயபுள்ள தூங்கிட்டான் போல இருக்கு”
முற்றும்

அறிவிப்பு .
வரும் 
சனிக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடக்கும் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அடியேன் கலந்து கொண்டு கவிதையொன்று வாசிக்கிறேன் ..அருகில் வசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். 


Image may contain: 1 person
Add caption

9 comments:

  1. // என்னது பொருளாதாரம் நல்லா இருக்கா ? சொல்லவே இல்லை...//

    ஹா... ஹா...

    // மகேந்திரா, என்னாச்சுடா, BP செக் பண்ணியா? //

    நடுவே J இல்லை என்பதால், ரத்தக் கொதிப்பு normal...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா முதல்ல J ன்னு சொன்னதும் நன் கூட வேற யாரோயோ சொல்றீங்கன்னு நினைச்சேன்.

      Delete
  2. ஹா ஹா ஹா முதல்ல J ன்னு சொன்னதும் நன் கூட வேற யாரோயோ சொல்றீங்கன்னு நினைச்சேன்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான உரையாடல்!

    ReplyDelete
  4. நண்பா,
    பரதேசி பட்டமும், தெருப்பொறுக்கி பட்டமும் இனிமேல் வேண்டாம்பா!!,
    உலகம் சுற்றும் வாலிபன் என்று இன்றிலிருந்து அழைக்கப்படுவாயப்பா!!!

    ReplyDelete
    Replies
    1. உலகம் சுற்றுவது என்னவோ உண்மைதான் ஆனா வாலிபன் னு சொல்றது ரொம்பவே ஓவர், நன்றி பொன்ராம் ராஜா

      Delete
  5. பொன்ராம் ராஜா

    ReplyDelete
  6. பொன்ராம் ராஜா

    ReplyDelete