|
1924-2018 |
தமிழனத் தலைவர் , முத்தமிழ் அறிஞர், கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவையொட்டி நியூயார்க் தமிழ்ச்சங்கம் சார்பாக
எங்கள் தலைவர் அரங்கநாதன் உத்தமன் அவர்கள் ஒரு இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார் .மேலும் எங்கள் செயலாளர் கவிஞர் சிவபாலன் எழுதிய ஒரு அருமையான கவிதாஞ்சலியும் வெளியிடப்பட்டது ,அதனை கீழே தருகிறேன் .
முத்தமிழ்க் கலைஞனே [மு.க]! மூத்த தமிழ்ச் செல்வனே! முடியவில்லை!....... நம்ப முடியவில்லை!…..-தாங்கிக் கொள்ள முடியவில்லை!
உன் இழப்பு வெறும் இறப்பல்ல! உலகத் தமிழர் துயரம்! துயரத்திலோ இது சிகரம்!
நீ தொடாத உயரமா? தொட்டது போதாதென்றோ இன்று தொலைதூரம் போனாய்? விட்டது உன் உயிர்- இனி விடாது தமிழுக்குத் துயர்!
சங்கத் தமிழா, இல்லை தங்கத் தமிழா, சிங்கத் திமிருடன், சீறுமே உன் விரலும், உன் பேச்சும்! இனிப் போச்சே உன்னுடைய மூச்சும்! தமிழ் வீச்சும்! இச்செய்தி, வேலை அல்லவா நெஞ்சில் பாய்ச்சும்!
பகுத்து, அறிந்த உன் அறிவும்[பகுத்தறிவும்] வகுத்து, நீ செய்த அரசியலும் தொகுத்து, நீ வழங்கிய இலக்கியமும் சகித்து, நீ உரைத்த சாணக்கியமும் கொடுத்து வைத்தது அன்று தமிழ் நாடு! எடுத்துச் சென்றதேன் இன்று உன்னோடு? நூறுவரை நீயிருப்பாய் என நினைத்தோம்! மறுமுறையும் மீழ்வாய் என்றிருந்தோம்! கடமை முடிந்ததென்றோ கண்மூடித் தூங்குகின்றாய்? காண்பவர் கண்ணீரைக் கடலாக தாங்குகின்றாய்? தலைவா, சூரியனில் இரவு இல்லை! -உதய சூரியனே உனக்கு இறப்பு இல்லை! வள்ளுவன் வாழவில்லையா இன்றும் எம்மோடு? கம்பன் கதைப்பதில்லையா இன்றும் நம்மோடு? கலைஞரே, நீ வாழ்வாய் என்றும்! கலைந்திடாது, உன் புகழ் ஓங்கும்!
கலையை மறந்தது இன்று உன் செவ்வாய்! கவலை மறந்து நீ செல்வாய்!
விடை கொடுக்கட்டும்! தமிழ் உலகம்! –உன்புகழை விதைத்திடட்டும் இனித் தமிழகம்!
|
|
சிறந்த அஞ்சலி.....
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteநீயூயார்க் சங்கம் சார்பாக வந்த அஞ்சலி மிக சிறப்பு.....அதை உங்கள் தளத்தில் வெளியிட்டது இன்னும் சிறப்பு
ReplyDeleteமிக்க நன்றி மதுரைத்தமிழன்.
Deleteநியூயார்க் தமிழ் சங்கம் சார்பில் கலைஞரின் மறைவையொட்டி வடித்த கவிதை வரிகள் கண்ணில் நீர் வர வைத்துவிட்டது. கலைஞருக்கு நியூயார்க் தமிழ்ச்சங்கததாரின் நிறைவான அஞ்சலி.
ReplyDeleteமிக்க நன்றி முத்துச்சாமி.
Delete