Children at New York Tamil Academy , Long Island |
கடந்த வாரம், ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை,ஸ்டோனி புரூக், லாங் ஐலண்டில் நடந்த,
நண்பர் முனைவர் பாலா சுவாமிநாதன் நடத்தும் “நியூயார்க் தமிழ் கல்விக்கழகத்தின்” (www.nytamilacademy.org)மூன்றாம் ஆண்டுவிழாவில் அடியேன் பங்கு கொண்டு வழங்கிய கவிதை அல்லது கவிதை
முயற்சி .
வணக்கம்
மூச்சுக்கொடுத்த
இறைவனுக்கும்
பேச்சுக்
கொடுத்த என் அன்னைக்கும்
வாய்ப்புக்
கொடுத்த அவைக்கும்
வணக்கங்கள்
பலப்பல.
புத்தாண்டு
வாழ்த்துக்கள்
துன்முகி
ஆண்டு
நன்முகியாய்
அமையட்டும்
பன்முகியாய்
இருந்தாலும் அவ்வை
ஷன்முகியாய்
மட்டும் ஆகாமலிருக்கட்டும்
புத்தாண்டு
வாழ்த்துக்கள்
பாலா
வாழ்த்துக்கவிதையொன்று
வாசிக்கிறேன்
- இது நான்
யோசிக்கிறேன்
- இது பாலா
யாசிக்கிறேன்
- இது பாலா
சரிசரி
குழுவிடம்
பேசிக்கிறேன்
- இது பாலா
அதனால்
நான் இன்று உங்கள் முன்பு
வாசிக்கிறேன்
!
நீளத்தீவில் ஒரு (அதாங்க லாங் ஐலன்ட்)
கோலத்திருவிழா
அட்லான்டிக் கடலருகில், தமிழ்
அன்னைக்கு
ஒரு விழா
சந்தப்பாட்டு :
இத்தரை
மீதினில்
முத்திரை
பதிக்கும்
சித்திரைத்
திருவிழா - இது
முத்தமிழ்ப்
பெருவிழா
பத்தரை
மாற்றுத் தங்கங்களாய் பல
பட்டுகள்
உலவும் விழா, அந்த
பட்டுகள்
பெற்று எடுத்த சிறு சிறு
சிட்டுகள்
குலவும் விழா.
பட்டுகளைப்
பார்ப்பதா - சிறு
சிட்டுகளைப்
பார்ப்பதா என்று
பரிதவித்துவிட்டான்
இந்தப்
பரதேசி
ஆனால்
அந்தப்பட்டுகளை
காதோரக்கண்ணால்
களிப்புடன்
பார்ப்பது யார்?
ஆஹா
என் பிள்ளைகள் மட்டுமல்ல
பெற்றெடுத்த
முல்லைகளும் அழகுதான் என்று
அந்தப்பட்டுகளை
காதோரக்
கண்ணால்
களிப்புடன்
பார்ப்பது யார்?
வேறு
யார்
பட்டுகளை
மணந்த
பதிகள்
தான்
சதியே
ஒரு சதி (சதி என்றால் மனைவி)
சதியே
என் கதி
கதியே
என் விதி
என்றிருக்கும்
உலகில் –( நான் என்னைச் சொல்லவில்லை)
சதிபதி
மற்றுமல்ல
மதிசுதியும்
மொழியால்
இணைந்திருப்பதை
விழியால்
பார்த்து வியந்தேன் !
சதிபதிக்கும்
மதிசுதிக்கும்
அதிபதி
பாலா அல்லவா?
மயக்கம்
மாலைதனை
வியக்கும்
வகையில்
இயக்கம்
பாலாவே
நீ
எனக்கு
எதிரி !.
ஆம்
பாலா எனக்கு எதிரி
பட்டிமன்றத்தில்
பங்குகொள்கையில்
அவர்
எனக்கு எதிரி, ஆனால்
அவரின்
தமிழ்ப்பணி முன்
நான்
ஒரு உதிரி !.
பள்ளி
கொண்ட பெருமாள் சுவாமி
பாருக்கே
தெரியும்
பள்ளி
கண்ட பெருமான் சுவாமி
யாருக்குத்
தெரியும்? அது நம்ம
பாலா
சுவாமிதான்
அவர்
பள்ளி கொண்டது பாற்கடலில்
இவர்
பள்ளி கண்டது அட்லான்டிக் கடலில்
பள்ளி
கண்ட பாலா
நீதான்
எனக்கு எப்போதும் தோழா !
தமிழ்ச்
சங்கம் கண்டவன் பாண்டியன்
தமிழ்ப்
பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் அதைப்
பாட்டில்
சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்
நானும்
மருதைக்காரன் தாங்கோய்
ஆயிரம்
கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன்
மறைவதில்லை (அரசியலுக்காக சொல்லவில்லை)
ஆயிரம்
மைல்கள் கடந்து வந்தாலும், நம்மில்
அன்னைத்தமிழ்
குறைவதில்லை
தமிழால்
இணைவோம்
தமிழாய்
முனைவோம்
தமிழாய்
வாழ்வோம்.
வாழிய
செந்தமிழ்
வாழ்க
நற்றமிழர்
வாழிய
பாரத மணித்திருநாடு
நன்றி
வணக்கம்.
Ranga on my right and Bala Swaminathan on my left. |
அருமை.. அருமை..
ReplyDeleteவாழ்க வளர்க திரு பாலா அவர்களின் சேவை...
உங்கள் தமிழ் தொண்டு தமிழ் மக்களுக்கு தேவை..
வாழ்க வளமுடன்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா .
ReplyDeleteவணக்கம் பரதேசி, தமிழ் விளையாட்டு விளையாத் தொடங்கி ஒரு இலக்கியப்பட்டறையே நடத்திவிட்டீர்கள். சரியாகச் சொன்னீர்கள், "ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும், நம்மில் அன்னைத்தமிழ் குறைவதில்லை" என்று. மருதைக்காரன் அல்லவா. :) அருமையான கவிதைப்பொழிவு. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நன்றி!
ReplyDeleteஉங்கள் அருமையான வாய்ப்புக்கும் நன்றி
Deleteஉங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி பாலா
Great weblog here! Additionally your site quite a bit up very fast!
ReplyDeleteWhat host are you the use of? Can I am getting your affiliate link for your host?
I want my website loaded up as fast as yours lol