“என்னது
விஜயகாந்த் முதலமைச்சர் ஆவாரா? என்னடா பரதேசி
உளர்றே”.
“இல்லடா
மகேந்திரா ஒரு பேச்சுக்கு, ஆனால் ?”
“டேய்
உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?”
“இல்லடா
முதலமைச்சர் ஆகும் தகுதி விஜய்காந்துக்கு இல்லைன்னே நானும் நினைக்கிறேன்.
அப்படிப்பாத்தா இப்ப அரசியல்ல இருக்கிற யாருக்கும் அந்தத் தகுதியில்ல”.
“சரி
நீ என்னதான் சொல்ல வர்ற?”
“அதாவது தப்பித்தவறி அமாவாசையும் பெளர்ணமியும் ஒண்ணா வந்து விஜய்காந்த், முதலமைச்சர் ஆயிட்டார்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்க, என்ன
நடக்கும்னு ஒரு கற்பனை”
“
சரி சொல்லித் தொலை”.
அதிகாலையில்
விஜய்காந்த் விட்டுக்கு எதிரே:
ஹேங்க் ஓவரில் இருந்த
விஜய்காந்த்தை ஒருபுறம் பிரேமலதாவும், மறுபுறம் சுதிஷீம்
கைத்தாங்கலாக அழைத்து வருகின்றனர்.
பத்திரிக்கை
நிருபர்கள்: சார் முதலமைச்சர் ஆக
தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
விஜய்காந்த்:
அடத்தூ,
என்னடா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் தெரியாதே,
இன்னும் நான் பேப்பரை படிக்கலயே
சுதீஷ்
தலையில் அடித்துக் கொள்ள பிரேமலதா, விஜய்காந்த் தலையில் அடிக்க,
இருவரும் மீண்டும் அவரைத் தரதர வென்று உள்ளே இழுத்துச்
செல்கிறார்கள்.
பதவியேற்கப்
போகும் வழியில்:
பிரேமலதா:
மறுபடியும் சொல்றேன், நீங்க முதலமைச்சரா
பதவி ஏற்கப்போறீங்க, பத்திரிகையாளரை பாத்துப் பேசுங்க.
விஜய்காந்த்:
முதலமைச்சராக ஆன உடன் முதல்ல இந்தப் பத்திரிகையாளரை எல்லாம் முதல்ல தடை பண்றேன்.
பத்திரிகையாளர்:
கேப்டன் சார் உங்க மந்திரி சபையில யாரை எல்லாம் சேர்க்கப்போறீங்க?
விஜய்காந்த்:
நான் முதல் அமைச்சர், பிரேமலதா இரண்டாம்
அமைச்சர், சுதீஸ் மூன்றாம் அமைச்சர்.
பத்திரிகையாளர்:
அப்ப வைக்கோ ?.
விஜய்காந்த்:
அவர் நாலாந்தர,( பிரேமலதா காதில் சொல்ல) மூத்த
அமைச்சர்.
பத்திரிகையாளர்:
அதுசரி திருமாவுக்கு என்ன பதவி?
விஜய்காந்த்:
அவர் தோத்த அமைச்சர், அவர்தான்
ஜெயிக்கலயே, டேய் நீ என்ன ஜெயா டிவில இருந்துவர்றியா,
தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன் ஆமா? நாக்கைத்துருத்துகிறார். (பிரேமலதா சாந்தப்படுத்துகிறார்)
பத்திரிகை:
உங்க மந்திரி சபையில் முக்கியமாக எந்த இலாக்கா இருக்கும்.
விஜய்காந்த்: (வெகுவாக யோசித்து) கதை
இலாக்கா
ராஜ்பவனில்:
சுதீஷ்:
கவர்னர் வரார் கும்பிடுங்க.
விஜய்காந்த்:
எவனா இருந்தா எனக்கென்ன, நான் யாரையும்
கும்பிட மாட்டேன். நீ தெரிஞ்சதை பார்ரா வெண்ணை.
பதவியேற்கும்
மேடையில்: கண்கள் சிவக்க,
தள்ளாடியபடி மேடையேறிய விஜய்காந்தைப் பார்த்து கவர்னர் பயந்து ஒதுங்க, விஜய்காந்த்
படிக்கிறார்.
"பிரேமலதாவாகிய நான், என்று ஆரம்பிக்க சுதீஷ்
ஓடிப்போய் அது இல்லை என்று சொல்லி, விஜய்காந்த் பேர் போட்ட உறுதிமொழியை
எடுத்துத்தர, "டேய் நீ யார்ரா எனக்குச் சொல்றது. எனக்கு
எல்லாம் தெரியும்" என்று சொல்லிவிட்டு, மீண்டும்
"பிரேமலதாவாகிய நான் என்று சொல்லி வாசித்து முடிக்க கூடியிருந்தவர் எல்லாம் கொல்லெனச்சிரிக்கின்றனர்.
சட்டசபையில்
செய்யப்பட்ட மாற்றங்கள்:
1. முதல் அமைச்சர் அறையில் மினிபார்.
2.
சட்டசபை
வளாகத்தில் ஒயின்ஷாப் மற்றும் மதுரை முனியாண்டி விலாஸ்.
3.
சட்டசபை முதல்
அமைச்சர் இருக்கையில் மூன்று பேர் உட்கார இடம் ஒருபுறம் பிரேமலதாவுக்கும்,
மறுபுறம் சுதீஷீக்கும்.
4.
நடுவில்
விஜய்காந்துக்கு சீட்பெல்ட், மற்றும்
எழுந்து யாரையும் அடித்துவிடக்கூடாதென்று முன்னெச்சரிக்கைக்காக காலிலும் சங்கிலி
போட்டு இணைக்க வசதி.
5.
விஜய்காந்த்
முன்னால் ஒரு டம்மி மைக்.
6.
தமிழ்நாட்டின்
தலைநகர் மதுரைக்கு மாற்றம்.
7.
MLA -க்கள் அடிவாங்க
தனி ரூம் வசதி.
8.
முதலமைச்சர் ரூமை
ஒட்டி மேக்கப் ரூம் மற்றும் மேக்கப் மேனுக்கு அமைச்சருக்கு இணையான பதவி.
9.
தூதூ என்று
அடிக்கடி துப்புவதால் பக்கத்தில் ஒரு எச்சில் துப்பும் பாத்திரம்.
10.
எல்லா சினிமா தியேட்டர்களும்
அரசுடமையாக்கப் படுகின்றன.
11.
தேசிய நிறமாக
கருப்பை அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டம்.
12.
தேசிய விளையாட்டாக
பம்பரம் விடுதலுக்கு சட்டசபை மூலம் பரிந்துரை.
பிரேக்கிங்
நியூஸ்:
1.
கவர்னர் உரையை
தமிழில் படிக்கச் சொல்லி அடம்பிடித்த விஜய்காந்தின் அலும்பு தாங்க முடியாமல்
கவர்னர் வெளிநடப்பு.
2.
பஞ்ச
பாண்டவர்களுக்குள் சண்டை வந்து அர்ச்சுணனும் பீமனும் தருமரின் உதை தாங்காமல்
ஓடிப்போனார்கள்.
முற்றும்.
ஒருவேளை விஜயகாந்த் முதல்வரானால் உங்களை சபாநாயகராக ஆக்க முடியுமா என்று பார்க்கணும்
ReplyDeleteதலிவா நான் நல்லா இருக்கிறது பிடிக்கலியா ? ஏன் இந்த விபரீத ஆசை ?
ReplyDeleteரசித்தேன். அவர் நாக்கைத் துருத்தும் புகைப்படத்தில் அவருக்கு அடுத்து அமர்ந்திருப்பவர், மற்றும் இசுடாலினுக்குப் பின்னர் அமர்ந்திருப்பவர் கண்களையும் பாருங்கள்!
ReplyDeleteஆமாம் , பக்கத்தில் இருப்பது பண்ருட்டி ராமச்சந்திரன் , அதன் பின் அவர் ரொம்ப பயந்து ,அதிமுக கட்சிக்குத்தாவி விட்டார் .ஸ்டாலின் பக்கத்தில் இருப்பது துரைமுருகன் .அவர் இதுக்கும் மேலே பார்த்தவர் செய்தவர் .
Deleteஆக மொத்த்தில் அவரை ஒரு குடிகார நோயாளி என்றே நினைக்கும் நீங்களும் ஊடக போதையில் இருக்கும் ஒருவர் என்பதை நினைக்கும் போது ! கவலையாக இருக்கு உங்கள் பதிவை ஏன் வாசிக்க வருகின்றேன் என்று சார்! பேசாமல் மாற்றம் வேண்டி பொதுவில் பேசலாம்[[
ReplyDeleteதனிமரம், யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.எந்த அரசியல் சார்பும் இல்லாதவன் நான் .
Deleteஉங்கள் மனதை காயப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
good imaginazn
ReplyDeleteThank you Anbu.
Deleteதமாஷுக்காக கலாய்க்கலாம்; வி.காந்த் வந்தால் இப்ப இருக்கும் அரசை விட நன்றாகவே இருக்கும். வி.காந்த் செய்யும் தப்பு மாலை ஆறு எழு மணிக்கு மீட்டிங் முடித்து விட்டு..அப்புறம் no personal interaction இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்ப நல்ல பேரு தானே!
ReplyDeleteவிஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக செயல் படவில்லை! அதற்கு முக்கிய காரணம் அவரை வெறுப்பேத்தி செயல்பட விடாமல் செய்தார்கள். அதை விடுங்கள். முதல் அமைச்சர் எப்படி செயல்பட்டார்கள்? அதைப் பற்றி ஏன் ஒன்றும் கிண்டல் இல்லை?
வி. காந்த் முதல் அமைச்சராக இருந்தால் ஐந்து வருடமும் 110-விதியில் காலட்சேபம் செய்து இருக்கமாட்டார்---at least, செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்து விட்டிருப்பார்.
நம்பிள்கி , நிம்பிள் சொல்வதும் சரிதான். ஆனால் இதை ரிஸ்க் எடுத்து பொறுத்திருந்து பார்க்கவேண்டுமா என்பதுதான் என் கேள்வி .
Deleteஜெயலிதா பற்றிய என் முன் பதிவு இது
http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_14.html
அத்தோடு விஜயகாந்த் பற்றியாவது நமக்கு கொஞ்சம் தெரியும், இந்த பிரேமலதா மற்றும் சுதீஷ் பற்றி நமக்கு அவ்வளவாய் தெரியாதே .
Delete