சீனாவில்
பரதேசி -25
Mao's Memorial Hall. |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_26.html
'சேர்மன்
மாவோ' மெம்மோரியல் ஹால்' என்று
அழைக்கப்படும் மாவோ சேதுங்கின் நினைவுக்கட்டிடம் என் முன்னால் பிரம்மாண்டமாக
நின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவின் சேர்மனாக 1943லும், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாக 1945 முதல் அவர் இறந்த 1976 வரையும் இருந்ததால்
இன்றும் அவர் சேர்மன் என்றே அழைக்கப்படுகிறார்.
மாவோ தன் உடலை
எரித்துவிடும்படி சொன்னாலும் அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவர் உடல் பாடம்
செய்யப்பட்டது. இது இப்போது உலகம் எங்குமிருந்து மக்கள் வந்து பார்க்கும் முக்கிய
சுற்றுலாத்தலமாகி விட்டது. 'கேட் ஆஃப்
சைனா' இருந்த இடத்தில்தான் இந்த நினைவகம்
கட்டப்பட்டிருக்கிறது.
1976
செப்டம்பரில் இறந்த அவருக்கு, நவம்பர் 1976ல் இந்த
நினைவகம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 1977ல்
முடிக்கப்பட்டது. ஹூவா குவாஃபெங்க் என்பவர்தான். இந்த கட்டிட வேலை நடைபெற்றபோது
மேற்பார்வையிட்டு தன்னுடைய கையெழுத்தையும் இட்டிருக்கிறார். இந்தக்கட்டிடத்தின்
அமைப்பு மற்றும் வரைபடத்தை உருவாக்க நாடு முழுதிலும் உள்ள மக்களின் கருத்து
கேட்கப்பட்டதோடு, சுமார் ஏழு லட்சம் பேர்கள் தன்னார்வத்துடன்
எல்லா இடங்களிலுமிருந்து வந்து பணியாற்றினார்கள். மேலும், பயன்படுத்தப்பட்ட
பொருட்களும் நாடு முழுவதிலுமிருந்து கொண்டு வரப்பட்டன. உதாரணமாக கிரானைட் கற்கள்
சிச்வான் (Sichuan Porvince) பகுதியிலிருந்தும், போர்சலின் பிளேட்டுகள் குவாங்டாங்
(Guangdang) பகுதியிலிருந்தும், பைன் மரங்கள் ஷான்ஷி (shaanxi) யிலிருந்தும் , வண்ண கூழாங்கற்கள் நான்
ஜிங்கிலிருந்தும் (Nanjing) குவார்ட்ஸ் கற்கள் குன்லுன்
மலையிலிருந்தும் (Kunlun Mountains), கற்கள் இமய
மலைப்பகுதியிலுருந்தும் கொண்டுவரப்பட்டனவாம். மணல் கூட தைவான் பகுதியிலிருந்து
வந்ததாம். சீனாவுக்கு தைவான் மேலுள்ள உரிமையை உறுதிப்படுத்தவும் இது செய்யப்பட்டது
என்கிறார்கள்.
Sun Yatsan |
1925ல் சன் யாட்சன்
இறந்துபோனபோது, அவரை வைப்பதற்காக ரஷ்யா ஒரு கிறிஸ்டல்
கண்ணாடிப்பெட்டியை அளித்தது. முதலில் அதே பெட்டியைப் பயன்படுத்தலாம் என்று
நினைத்தார்கள். ஆனால் மாவோ, சன்யாட்சென்னை விட உயரமானவர்
என்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
கிறிஸ்டல்
கண்ணாடிப் பெட்டி செய்யவும் போட்டி போட்டுக் கொண்டு பல நிறுவனங்கள் மொத்தம் 24 பெட்டிகளை கொண்டு வந்தனர். அதில் சிறந்த ஒன்றான 608-ஆவது தயாரிப்பு நிறுவனத்தின் பெட்டி தேர்வு செய்யப்பட்டது.
மாவோ சேதுங்கின் குடும்ப
உறுப்பினர்கள் இந்த நினைவகத்தை அவருடைய பிறந்த நாளிலும்,
மறைந்த நாளிலுமாக ஆண்டிற்கு இருமுறை வந்து பார்க்கிறார்கள்.
Mao with He Zichen |
ஏதோ சில
காரணங்களுக்காக மாவோவின் மூன்றாவது மனைவி ஹி ஜிஜென் (He
zichen) மசூலியத்திற்கு வரக் கூடாது என்று சீன அரசால் தடை
செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு வருடமாக தொடர்ந்து வேண்டிக் கேட்டுக் கொண்டதன்
மூலம் ஒரே ஒரு முறை பல நிபந்தனைகளுடன் ரகசியமாக அழைத்துவரப்பட்டார்.
He Zichen |
அந்த நிபந்தனைகள்,
அழக்கூடாது, எந்த சத்தமும் போடக்கூடாது
பத்திரிக்கைக் காரர்களை சந்திக்கக்கூடாது ஆகியவை. ஆனால் கணவனின் உடலோடு ஒரேயொரு
புகைப்படம் மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் ஆட்சியில் இதெல்லாம்
சகஜமப்பா என்று நினைத்துக் கொண்டேன்.மாவோவுக்கு நான்கு மனைவிகள் என்பது கூடுதல் தகவல் .
லீ என்னை உள்ளே
அனுப்பிவிட்டு, கட்டிடத்தின் மறுபகுதியில்
சந்திப்பதாகச் சொல்லி அகன்றான். தங்கள் தலைவரைக் காணும் ஆர்வத்தில் பல சீனர்கள்
நீண்ட வரிசையில் நின்றனர். என்னைத்தவிர வேறு வெளி நாட்டு டூரிஸ்ட்டுகளை
நான் அங்கே பார்க்கவில்லை. ஒருவேளை இனிமேல் வரலாம். வரிசை மெதுவாக நகர்ந்தது.
சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. வழியில் பூங்கொத்துகளை விற்றுக்
கொண்டிருந்தனர். அநேகமாக எனக்கு முன்னால் நின்ற அனைவரும், என் பின்னால் நின்றவர்களும் பூவை வாங்கிக் கொண்டார்கள். நான்
மட்டும்தான் வாங்கவில்லை. பிரமாண்டமான கட்டிடத்தின் பின்புற வழியாக
நுழைந்தேன். வரும்வழியில் சதுக்கத்தின்
நுழைவாயிலேயே ஏற்கனவே சோதனை முடிந்து விட்டதால் மறுபடியும் எந்த சோதனையும்
இல்லாமல் உள்ளே பல படிகளில் ஏறி கட்டிடத்தில் நுழைந்தேன்.
தொடரும்
No comments:
Post a Comment