Thursday, January 5, 2017

சாமுராய் வாளும், திருப்பாச்சேத்தி அரிவாளும் !!!!!!!!!

Related image
Samurai Soldier


சீனாவில் பரதேசி -29

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

டிக்கட்டுகளில் 500 யுவான் போட்டிருந்தது. எவ்வளவு என்று சைகையில் கேட்க 1000 யுவான் என்று எழுதிக்காண்பித்தான். அட நம்மூரில் பிளாக்ல டிக்கட் விக்கிற மாதிரியில்ல இங்க இருக்கு என்று நினைத்துக் கொண்டு வேண்டாம் என்றேன். 200 யுவான் டிக்கட்டைக்காட்டி 500 என்றான். ஏற்கனவே பலமுறை ஏமாந்திருக்கிறேன் என்பதால் தயக்கமாக இருந்தது. ஓபரா ஷோவைப் பார்க்க ஆசையாயும் இருந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தால் ஒருவேளை நம்மூர் போல பின்னால் வந்து குறைத்துக் கொடுப்பான் என்று நினைத்து நடையைக் கட்டினேன். பின்னால் உடனே திரும்பிப்பார்க்காமல் வேகமாக நடந்தேன். சிறிது நேரம் கழித்து  யாரும் வருவது போல் தெரியாததால் திரும்பிப் பார்த்தேன். அவன் கூட்டத்தில் தெரியவில்லை. அந்தப் பக்கம் இன்னொருவன் நின்றிருந்தான். அவன் வந்து டிக்கட்டுகளைக் காண்பித்தான். 500 யுவான் டிக்கட்டைக் காண்பித்தான். எவ்வளவு என்று கேட்க 2000 என்று சொன்னான். ஐயையோ இதற்கு அவனே தேவலையே என்று திரும்ப விரைவாக நடந்து அவனைத் தேடிப்பார்த்தேன். ம்ஹூம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது இன்னொருவன் வந்தான். ஆனால் 500 யுவானை 2500 என்று சொன்னான். இது கட்டுப்படியாகாது என்று நினைத்து நடையைக் கட்டினேன். மணியைப் பார்த்தால் பத்து மணிதான் ஆகியிருந்தது. ஃபயர் வொர்க்ஸுக்கு  இன்னும் இரண்டுமணி நேரம் இருந்தது. குளிர் வேறு கூடிக் கொண்டே போனது.

காதடைப்பானை சிறிது சரிசெய்ய படக்கென்று உடைந்து போனது. என்ன கொடுமை இது என்று நினைத்துக் கொண்டு ம்ஹும்  இனிமேலும் வெளியே நின்று கொண்டிருந்தால் பரதேசி பரலோகம் செல்வதற்குத்தான் அதிக வாய்ப்பு என்றெண்ணி நம்முடைய வாசக நண்பர்களின் நன்மைக்காக பொடிநடையாய் விடுதிக்குத் திரும்பினேன்.

ஒரு மணல் சூனியக்காரியை வாங்கி மகிழ்ந்து உண்டேன். புரியவில்லையா புரோ' சான்டவிச்'சைத்தான் தமிழில் அப்படிச்சொன்னேன். அன்று நடந்த நடைக்கு தூக்கமும் கண்களைத் தழுவ ஆனந்த சயனம் அடைந்தேன்.

இரவு திடீரென்று விழித்துக் கொண்டேன். நல்ல கனவு, 500 யுவான் டிக்கட்டை ஒரு பெண் இலவசமாகக் கொடுக்க நன்றி சொல்லி உள்ளேபோய் அமர்ந்தால் பக்கத்தில் அந்தப்பெண். மேடையில் நடக்கும் ஓபராவைப் பார்ப்பதா பக்கத்திலிருக்கும் பார்பராவைப் பார்ப்பதா என்று திகைத்து ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவள் கைகளைக் கோர்த்துக் கொள்ள அவளின் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சாமுராய் வீரன் தன்  வாளை  உருவ, நான் வேர்த்து விறுவிறுத்து எழுந்து விட்டேன்.

திரும்ப தூங்குவதற்கு சிறிது நேரமானது. திரும்ப கனவு வந்தால் அந்த சாமுராய் வீரனை பாண்டிய திருப்பாச்சேத்தி அரிவாளால் ஒரு போடு போட்டிருப்பேன். என்னசெய்வது நம் வீரத்தைக் காண்பிக்க கனவில் கூட ஒரு  சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது.
New Year Eve In Beijing New-Years-Eve-in-Beijing-2975998
New Year in the Great Wall of China

“ஏலேய் பரதேசி”
(என்ன ரொம்ப நாளைக்குப்புறம் மகேந்திரன் குரல் கேக்குது)
“யார்ரா அவன் ஏக வசனத்தில் கூப்பிடுகிறது”.
“தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி நடிக்கிறதுல உன்னை மிஞ்ச ஆளில்லடா பரதேசி”.
“சரிசரி சொல்றா மகேந்திரா என்னாச்சு ரொம்ப நாளாச்சு”.
“நீ இந்த தரித்திரம் பிடிச்ச சரித்திரத்தை கட்டிக்கிட்டு  இருக்கிறதால தான் நான் இந்தப் பக்கமே வரதில்ல”.
“அடப்பாவி மதுரைத் தமிழன் மாதிரியே பேசறியே .சரிசரி இப்ப மட்டும்  எதுக்கு வந்த?”.
“அதுவா எதோ கனவு காண்றதப் பத்தி சொன்னேல்ல, அதான் வந்தேன்”.
“சரி அதுக்கு என்ன?”
“இல்ல அந்தக் கனவுக்கு நல்ல தலைப்பு ஒண்ணு தோணுச்சு. அதான் சொல்லிறலாம்னு வந்தேன்”.
“கனவுக்கு தலைப்பா சரிசரி சொல்லு சொல்லு” (ஐயையோ என்ன சொல்லப் போறானோ புது வருஷமும் அதுவுமா).
“இல்ல சாமுராய் வீரனோட சண்டை போட்ட மாதிரி கனவு வந்துச்சுல அதுக்குத்தான் ஒரு தலைப்பு தோணுது”.
“சரி சீக்கிரம்  சொல்லுறது. நான் இன்னும் ஒரு பக்கம் எழுதி முடிக்கணும்”.
“இப்படி தலைப்பு வச்சா என்ன? "யாம குச்சியும் ஓமகுச்சியும்" “நல்லாத்தான் இருக்கு ஆமா அதில யாமகுச்சி யாரு?”
          “அதாண்டா அந்த சாமுராய் வீரன் பார்பரா காதலன்”.
“அப்ப ஓமக்குச்சி?”
“அத வேற கேட்கணுமா? அது நீ தான்”.
“அட நாதாரி இதுக்கா என்னை காலைல எழுப்பிவிட்ட. உன்னை ஊர்ல வந்து கவனிச்சுக்கிறேண்டா”.  
இந்த புல்தடுக்கிக்கு என்ன திமிர் பாருங்க. இனிமே அவன் போன் பண்ணா எடுக்கக் கூடாது.
பீஜிங்கில் புத்தாண்டு பிறந்தது. நான் எழுந்து ரெடியாகி வெளியே வர "ஹேப்பி நியூ இயர்"என்று சொல்லி எழுந்து கைகுலுக்கினான் லீ. ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்திவிட்டு இருவரும் சிற்றுண்டி முடித்து வெளியே வந்தோம்.


என்ன லீ இன்னைக்கு எங்கே போகிறோம்.
நீ சொன்னபடி புது வருடமும் அதுவுமா உன்னை சில ஆலயங்களுக்கு கூப்பிட்டுப் போகிறேன். முதலில் கிறிஸ்தவ ஆலயம் அப்புறம் புத்தர் ஆலயம் அதற்கப்புறம் டாவோ ஆலயம் என்று.
சப்வேயில் இறங்கி பயணித்து பீஜிங்கின் பழமையான ஒரு கத்தோலிக்க ஆலயம் சென்றோம்.
Image result for Cathedral of the Immaculate Conception, Beijing
Cathedral of the Immaculate Conception
சுவானவுமென் ஆலயம் என்று (xuanwumen church) என்று சீன மொழியில் அழைக்கப்படும்  இந்த அழகான ஆலயத்தின் ஆங்கிலப் பெயர் "கதீட்ரல் ஆஃப் தி இம்மாக்குலேட் கான்செப்ஷன் (Cathedral of the Immaculate Conception) என்பது. இது பொதுவாக "தென்புறம் இருப்பதால் 'செளத் சர்ச்' என்றும் அழைக்கப்படும்.

பீஜிங்கின் மிகப்பழமையான இந்த ரோமன் கத்தோலிக்க ஆலயம் முதலில் கி.பி.1605-ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் 1904ல் கட்டி முடிக்கப்பட்டது. இது பரோக் ஸ்டைல் (Baroque style) கட்டிடக்கலையின் படி அமைந்துள்ளது.
Image result for Emperor Wanli
Emperor Wanli
"கி.பி.1605-ல் மிங் பரம்பரையைச் சேர்ந்த வான்ங்லி பேரரசர் தான் ஆட்சி செய்த 33 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்"என்றான் லீ.

பரவாயில்லை சீனப் பேரரசர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால் கம்யூனிச ஆட்சியில் இதை எப்படி இன்னும்விட்டு வைத்திருக்கிறார்கள் என்று லீயைக் கேட்டேன்.

-தொடரும்.



Tuesday, January 3, 2017

அம்மாவும், சின்னம்மாவும், வீட்டம்மாவும் !!!!!!!!!!!!

Image result for jayalalitha


“ஹலோ பரதேசி”
“சொல்றா புல்தடுக்கி”
“என்னடா நானே ரொம்ப நாளுக்கு முன்னமே மறந்துபோன பட்டப் பேரைச் சொல்ற?”
“ஆமா, நீ மட்டும் பரதேசின்னு சொல்லலாமா?”
"அட நான் எங்கடா சொன்னேன், நீதானே உன்னை பரதேசின்னு சொல்லிக்கிட்டு அலையுற".
“உண்மைதான் சரி என்ன விஷயம், சொல்லுறா மகேந்திரா?”
“ஒன்னுமில்லை, புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத்தான் வந்தேன்”.
“நன்றி ,உனக்கும் உரித்தாகுக,”.
“ஆமா நாட்டு நடப்பெல்லாம் பாக்கிறியா?”.
“எதைச் சொல்ற, அதான் இங்க தமிழ் சேனல்கள் எல்லாம் வருதே? பாத்துக்கிட்டுதான் இருக்கிறேன்”.
“இல்லடா ஜெயா டிவி பாத்தியா?”
“ஆமா பாத்தேன், சின்னம்மா புண்ணியத்தில நாடு மிகவும் அமைதியாகவும், சுபிட்சமாகவும் பொன் விளையும் பூமியாகவும் இருக்குதாம்”.
“சன் டிவி கூட வருதா அங்க?”.
“ஆமா பாத்தேன்,  நாடு வரட்சியில் வாடுது, கொலை கொள்ளை பெருகிப் போச்சு, சட்ட ஒழுங்கு சுத்தமா இல்ல, விவசாயிகள் தினமும் தற்கொலை செய்றாங்க”.
“ஆமாடா, அப்ப நாட்டு நடப்புன்னு நீ எதை நம்புற?”
“மகேந்திரா நான் எதையும் நம்புறதில்லை.நாட்டு நடப்பை விடு, நம்ம வீட்டு நடப்பும் சரியில்லை”.
“என்னடா சொல்ற மனைவி கூட தகறாரா?”.
“ஐயையோ அதெல்லாம் நான் எப்பவும் பண்றதேயில்லை.”
“சமீபத்தில் நீ போட்ட போட்டாவப் பார்த்தேன். ரெண்டு பேரிடமும் நல்ல மாற்றம் இருக்குடா.”
“ஆமடா சமீபத்தில் கூட கல்யாண போட்டோவை நான் எடுத்துக் பார்த்தேன் வித்தியாசம் ரொம்பத்தான் இருக்கு”.
“மாற்றம் தானடா வாழ்க்கை. மாற்றம்தானடா என்னைக்கும் மாறாதது”.
“என்னடா மகேந்திரா, புது வருஷ தத்துவமா?”
“அப்படியெல்லாம் இல்ல, நீ சொல்லுடா என்னடா வீட்டு நடப்பு?”
“அடுத்தவன் கதைன்னா ரொம்ப ஆவலாயிருவேயே”.
“ஏலேய் உங் கூட ரொம்ப நொம்பலம்டா, நீ தானடா பேச்சு எடுத்த”.
“சரிசரி சொல்றேன், என் மனைவிதாண்டா”
“என்னடா சொல்ற தங்கச்சி என்ன சொல்லுது ?”.
“தங்கச்சி அக்கா ஆகி அக்கா பக்காவாயிட்டா?”
“நல்லவேளை அக்கா அம்மா ஆகலைடா”.  
“யார் சொன்னா அவளும் மாறிட்டே இருக்காடா”.
“என்னடா மாற்றம்?”
“கல்யாணம் ஆகும் போது குழந்தை போல இருந்தா. அப்புறம் படிப்படியா முன்னேறி டீனேஜ் பெண்ணாகி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினா”.
“ம் அப்புறம்”.
“அப்புறம் ஒரேயடியா முன்னேறி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆயிட்டா”.
“ஜெயலலிதா மாரியா?”
“ஆமடா”
 “ஆமாம் யாருடைய கொள்கைகளைப் பரப்பிச்சு ?
“தன் சொந்தக் கொள்கைகள் தான்”
“அது என்ன கொள்கைகள்”.
“அதுவா புருஷன், வீட்டில் சரிபாதி வேலை செய்யனும், சமையல் செய்யனும், பத்துப்பாத்திரம் தேய்க்கனும் அப்படின்னா நிறைய கொள்கைகள்”. அப்புறம் பொதுச் செயலாளர் ஆயி, முதலமைச்சர் ஆயிட்டா “.
“ஐயையோ அப்புறம்?”
“அப்புறம் அதிகாரம் ஒரே இடத்தில குவிய ஆரம்பிச்சிருச்சு. அவளோடு உறவினர் பெருகிப் போய்ட்டாங்க”.
“எங்க நியூயார்க்கிலயா”?
“அட ஆமாண்டா ,அப்ப தோழின்னு யாரும்?”
img15

“தோழி கிடையாது, தோழன் மட்டும்தான்?”
“ஐயையோ யாராது அந்த தோழன்?”
 “வேறுயாரு நாந்தேன்”.
“நீ தோழனா? தோலனா?”
“டேய் மகேந்திரா என்ன திமிரா?”
“இல்லடா இப்பவும் உனக்கு என்பு தோல் போர்த்திய உடல் தானடா?”
“ஆமாடா அது சரிதான்”.
“சரி அப்புறம்?”
“அசைக்க முடியாத சக்தியா உருவாயிட்டா, எதிர்பேச  யாருமில்ல,
என்னைத்தான் தலைதலைன்னு எல்லாரும் சொல்வாய்ங்க”.
“இப்ப என்னாச்சு?”.
Related image



“தலை சிறுதலையாகி தறுதலையாகிப் போச்சு”.
“வெறுந்தலையாகிப் போச்சுன்னு சொல்லு”.
“டேய் என்னடா வார்த்தை தடுமாறுது”.
“சர்ரா விட்ரா  விட்ரா நீதான் அறிவாளியாச்சே, மேல சொல்லு.
சொத்துக் குவிப்பும் நடந்துச்சு”.
“அப்படியா உன் மனைவி பேர்லயா”?
“நீ வேற எல்லாம் பினாமிதான்”.
“பினாமியா அது யார்றா”?
“வேற யாரு  நாந்தேன்”.
“அடப்பாவிகளா அப்புறம்”?
“நெனைச்சதெல்லாம் நடத்திக் காட்டினா, எல்லாத்தையும் பேசியே சாதிச்சா”.
“அபாரம்டா”
“சில சமயம் அருகில் உறங்கும் போது திரும்பிப் பார்த்தால் கூட ஜெயலலிதா உருவம் போலவே தெரியும்”.
“ஐயையோ பிறகு”.
“இப்ப டிசம்பர் லிருந்து அடியோட மாறிட்டா”?
“ஒண்ணும் புரியலயே”
“அவளுக்குள்ளிருந்த ஜெயலலிதா செத்துப்போன மாதிரி தெரிஞ்சுது.
இப்ப ஒண்ணுமே பேசறதேயில்லை. ஆனா பேசாமலேயே எல்லாத்தையும் சாதிக்கிறா. ஒரே மிரட்டலாய் இருக்கு. பிரமிப்பாய் இருக்கு. ஆனா ஒண்ணும் பேசறதேல்லை”.
“அப்புறம் என்னாச்சு.
நேத்து ராத்திரி தற்செயலா படுக்கையிலே திரும்பிப் பார்த்தேன். இப்ப அடையாளம் சுத்தமா மாறிப்போச்சு”.
“ என்னடா சொல்ற?”,
“ஆமாடா, இப்ப சசிகலா மாதிரியே தெரியறடா”
“ஐயையோ”

Highlight Story

“ஜெயலலிதாவைக் கூட சமாளிச்சரலாம்டா, எல்லாமே வெளிப்படை இந்த சசிகலாவை எப்படிரா சமாளிக்கிறது?”
“அதாண்டா தூக்கமே வரமாட்டேங்குது”.
“
ஹலோ மகேந்திரா ஹலோ மகேந்திரா,
(என்ன இது அடி வாங்கும் சத்தம் கேட்கிறது ஐயையோ ஏற்கனவே என்ட்ட சொல்லியிருக்கிறான். அவன் மனைவி இரவு 12-க்கு மேல் பத்ரகாளி என்று பாவம். நான் தான் ரொம்பப் பேசிட்டேன் போல இருக்கு.)
ஒரு 15 நிமிடம் கழித்து.
“ஹலோ சேகர் ஹலோ சேகர் (குசுகுறுக்கிறான்)”.
“என்னடா அடி பலமா?”
“ஆமாடா, லைட்டா”
“பிறகேண்டா திரும்பவும் கூப்பிடுற”.
“இல்லடா அவ டயர்டாகி  தூங்கிட்டா”.
“சேகரு உன் பாடு எவ்வளவோ பரவாயில்லடா”.
லேசாக சிரித்துக் கொண்டே,
“என்னடா உன் மனைவி அம்மாவா சின்னம்மாவா ?”
Image result for ilavarasi
Ilavarasi
“இரண்டுமில்ல இவ இளவரசிடா”

“என்ன இளவரசியா?”
“ஆமடா அடுத்த வாரிசுடா ,கொஞ்சம் பொறுத்துப்பார் தெரியும்”.
பரதேசி திகைத்துப் போகிறான்.

Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017