Thursday, November 16, 2017

பரதேசியும் கொரியப்பெண்ணும்!!!!!!

Related image
Not this girl
"செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்?" என்று அந்தப் கொரியப் பெண் கேட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
          2000-ஆவது ஆண்டு நான் நியூயார்க்குக்கு வந்த புதிது. கம்ப்யூட்டக் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில் மனித வளத்துறையில் வேலை. நான் அப்போது தனியாகத்தான் இருந்தேன். என் குடும்பம் என்னுடன் இணைந்து கொண்டது 2001-ஆவது ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தான். அதுவரை திருமணமான பேச்சுலர் வாழ்க்கை. கம்ப்யூட்டக் 5-ஆவது அவென்யூவில் எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் அருகில் இருந்தது. 32 மற்றும் 31ஆவது தெருவுக்கு நடுவில் உள்ள கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. சப்வேயில்  இறங்கி 32 -ஆவது தெரு வழி நடந்து 5-ஆவது அவென்யூவில் வலது புறம்  திரும்பினால் அந்தக்கட்டிடம் வரும்.
Related image

          32-ஆவது தெரு பிரட்வேயில் இருந்து 5-ஆவது அவென்யூ வரை உள்ள பகுதி 'கொரியன் வழி' (korean way) என்றழைக்கப்படுவதை நான் முன்னமே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு கட்டிடத்தின் உள்ளே எலிவேட்டருக்குப்  போகும் வழியில் ஒரு கடை. பேகல், சாண்ட்விச், காஃபி, டி மற்றும் குளிர்பானங்கள் விற்கும் மிகச்சிறிய கடை, ஒரு 50 சதுர  அடி  இருக்கும். அங்கே எப்போதும் புன்னகை மற்றும் சுறுசுறுப்புடன் ஓனராக கொரியப்பெண் ஒருவள், பேகல் சாண்ட்விச் செய்து கொடுக்க ஓரத்தில் ஒரு ஸ்பானிய பையன், உள்ளே போனால் மக்களுக்கு வழிவிட்டு எதிர் சுவரோரம் நிற்கும் வாடிக்கையாளர்கள். அந்தச்சிறிய இடத்தில்  வியாபாரம் காலை வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும்.
Related image
Sesame Bagel
          அங்கே பேகல் வகைகள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பிளைன், எவ்ரிதிங், ரெய்சின், செசமே  என்று பலவகைகள் இருக்கும். முதன் முதலில் என்ன பேகல் வேண்டும் என்று கேட்கும் போது திக்குமுக்காடி எனக்குத் தெரிந்த மாதிரி இருந்த செசமே அதாவது எள் தூவிய பேகலை கை காண்பிக்க, "டோஸ்ட்? என்று கேட்கும் போது ஆமாம் என்று சொல்லி, கிரீம் சீஸ், ஜெல்லி அல்லது பட்டரா? என்று கேட்கும் போது எனக்குத் தெரிந்த பெயரான 'பட்டர்' என்று சொல்லி ஆர்டர் செய்தேன்.  
          என் முறை வந்து அந்த ஸ்பானிய பையன் என்னைப் பார்த்து முறுவலித்துவிட்டு உறை போட்ட கையில் செசமே பேகலை எடுத்து இரண்டு ஓரங்களை வெட்டிவிட்டு நீளமான பிரட் கத்தியால் இரண்டாக வெட்டிப் பிளந்து அங்கேயிருந்த சிறிய கிரில்லில் வைத்தான். சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்த பேகலில் லாவகமாக பட்டரை இருபுறம் தடவி, இரண்டு அரை வட்டங்களையும் இணைத்து ஒரு பட்டர் பேப்பரில் வைத்து மீண்டும் மேலிருந்து 2-ஆக வெட்டி கொரியப்பெண்ணிடம் கொடுக்க அதனை ஒரு சிறிய பழுப்பு நிற கவரில் போட்டு கூட 2-3 நாப்கின்களை வைத்து காஃபி டீ? என்று கேட்க, இல்லை இது போதும் என நான் சொல்ல, 75 சென்ட்ஸ் என்றாள்.
Related image
Add caption
          ஆஹா 75 சென்ட்டில் ஒரு காலை உணவா? என்று ஆச்சர்யப்பட்டு அதனை வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் சென்று கம்ப்யூட்டரை ஆன் பண்ணி உட்கார்ந்து சிறிது எடுத்துக் கடித்துப் பார்த்தேன். உருகிய பட்டரில் சிறிதே கருகிய அந்த பேகல் மொறுகிய நிலையில் நாவில் பட்டு இளகியது. சுவை அபாரமாக இருந்தது. ஒன்று சாப்பிட்டால் மதியம் 3 மணி வரைக்கும் பசி உம்ஹிம். அதன்பின் அதே பழக்கம் தினமும் தொடர்ந்தது. அதே செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர். சில சமயங்களில் மற்றவற்றை முயற்சி செய்து பிடிக்கவில்லை. எனவே என்னைப் பார்த்ததும் அந்தக் கொரியப் பெண் என்னைப் கேட்காமலே "செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்" என்று சொல்லிவிடுவாள்.
          இது கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்தது.
(“டேய் சேகர் , எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் , நீ ஒரு வருடம் அந்தக்கடைக்கு திரும்ப திரும்ப போனது பேகளின் ருசிக்காகவா  இல்லை  அந்த கொரியப்பெண்ணைப்பார்க்கும் குஷிக்காகவா தங்கச்சி  வேற    அப்போது  உன்கூட இல்லை” .)
இந்த மகேந்திரன் தொல்லை தாங்க  முடியலை சாமி, அவனை கண்டுக்காதீங்க மக்களே.
அதன்பின் என் மனைவி மக்கள் வந்தபின் அந்தப்பழக்கம் மாறிப்போய் காலையில் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று ஆகிப்போனது. சில வருடங்கள் தொடர்ந்த இந்தப்பழக்கம் பின்னர் உடலில் இனிமை கூடிப் போனபோது கைவிடப்பட்டு தினமும் ஓட்மீல் என்று பரிணாம(?) வளர்ச்சியடைந்து கடந்த மூன்று நான்கு  வருடங்களாக இது தொடர்கிறது.
          என் மனைவியை எழுப்பாமல் நானே எழுந்து ரெடியாகி ஓட்மீல் பாக்கெட்டைப் பிரித்து ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து மைக்ரோ ஓவனில் ஒன்றரை நிமிடம் வைத்தால் என் காலை உணவு ரெடி.
          கடந்த திங்கள்கிழமை காலை எழுந்து பார்த்தால்  மைக்ரோவேவ் ஓவன் வேலை செய்யவில்லை. கடந்த ஆண்டுதான் கிச்சனை ரெனவேட் செய்யும்போது கேபினட்டில் பொருந்தும்படி குக்கிங் ரேஞ் மேல் GE  ஓவன் ஒன்று பொருத்தினோம். சரியாக ஒரு வருட வாரன்டி முடிந்தவுடன் தன் கடமை முடிந்துவிட்டது போல் அது வேலை செய்ய மறுத்துவிட்டது. அதனை ரிப்பேர் செய்யும் செலவுக்கு புதிதாக ஒன்று வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தோம்.
ஆனால் அது வரை காலை உணவுக்கு வழி? பழைய பேகல் ஞாபகம்வர இப்போது வேலை செய்யும் இடத்திற்கும் பக்கம் என்பதால் அவசரமாகக் கிளம்பி மேன்ஹாட்டன் வந்து சேர்ந்தேன். அந்தச் சிறிய கடை இருக்கிறதோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டு அங்கே போனால், அந்தக் கடை அங்கேயே இருந்தது. அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஸ்பானிய பையனுக்குப் பதிலாக அந்தக் கொரியப் பெண்ணே சாண்ட்விச் பகுதியில் நிற்க, அவளுடைய தங்கை போன்ற ஒரு பெண் கல்லாவில் நின்றிருந்தாள்.
அந்தக் கொரியப் பெண் 17 வருடத்திற்குப் பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே புன்னகையுடன் அப்படியே இருந்தது இன்னுமொரு ஆச்சரியம். இந்த உலகில் தோற்றம் மாறிப்போனது நான் மட்டும்தானா?
“இல்லடா சேகர் நான்தான் போனதடவை நீ வரும்போது பார்த்தேனே நீயும் அப்படியே தாண்டா இருக்கிறாய்”.
(மறுபடியும் மகேந்திரன் போலத் தெரியுது. ஹலோ நண்பர்களே நான் தலைக்கு ஏன் மீசைக்கும் சேர்த்து கறுப்புச் சாயம் அடிப்பதை அவனிடம் சொல்லிராதீங்க ஓக்கே?)
அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், “என்னைப் பார்த்தும் “செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்” என்று சொன்னதுதான். என்னவொரு ஞாபக சக்தி இத்தனை வருடங்கழித்தும் மறக்க வில்லையே.
“ஆமாம் என்று சொல்லி “அன்யஹாசியோ” என்றேன். இப்போது அவளுக்கு ஆச்சரியம் வந்தது. கொரிய பாஷையில் முகமன் கூறும் வார்த்தை அது. பேகல் 75 சென்ட்டிலிருந்து 1.25 ஆகியிருந்தது. 17 வருடத்தில் அப்படி ஒன்றும் கூடிவிடவில்லை. வாங்கி விட்டு “கம்சாமிடா” என்றேன். நன்றி என்று அர்த்தம். அவள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்க நான் புன்னகையுடன் வெளியே வந்தேன். அலுவலகம் சென்று சூடான பேகலை அப்படியே வாயில் வைக்க, உருகிய பட்டரில் சற்றே கருகிய பேகல் மொறுகிய நிலையில் வாயில் இளகியது.

(பின் குறிப்பு 2 மணி நேரம் கழித்து சட்டென ஞாபகம் வந்து சுகர் டெஸ்ட் செய்தால் அளவு எகிறி கூடிப்போய் கும்மாளமிட்டது  )

.

18 comments:

  1. பகிர்வுக்கு “கம்சாமிடா” சார்!

    ReplyDelete
    Replies
    1. கம்சாமிடா பாஸ்கர், கொரியன் கற்றுக்கொண்டால் இங்கு வாழ்வுதான்.

      Delete
  2. அன்யஹாசியோ chingu Alfy.
    கம்சாமிடா

    ReplyDelete
    Replies
    1. 32ஆவது தெரு பக்கத்தில் வேலை செய்வதால் நான் சிங்க்கு ஆகிவிட முடியாது நண்பா .

      Delete
    2. சிங்க்கு என்றால் கொரியா மொழியில் நண்பர் என்று அர்த்தம் ..
      --நன்றி கூகுள்

      Delete
  3. இங்கேயும் ஒரு கடை இருக்கு அண்ணே.. என்னையும் கூட்டுனு போய் பேக்கல் வாங்கி தந்தாங்க. ரொம்ப ஆசையா முதல் கடி கடிச்சேன். நம்ம ஊர் பொறை தான் அது.
    அந்த அம்மணி மனதில் படிஞ்சிட்டிங்க போல் இருக்கே.. இது வூட்டுக்காரம்மாக்கு தெரியுமா.

    இதை படிக்கும் போது என்னமோ உங்களையும் அந்த கொரிய மணியையும்.. "பச்சை கிளி ,முத்து சரம்" செட்டப்பில் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த கொரிய அம்மணி நல்ல பெண்மணிதான் என்றாலும் நமக்கு வீட்டில் ஒரு கண்மணி இருக்கே அவளுக்குத் தெரிஞ்சா வெண்பனியிலே என்னை வெளியே அனுப்பிச்சிருவா !!!!

      Delete
  4. அந்த பேகல் கடையிலே வேலை கிடைக்குமா கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க ஆல்பிரட் எனக்கு அந்த கடை பேகல் தினமும் சாப்பிட ஆசையாக இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. மதுரை, என்னோட அப்ளிகேஷனே இன்னும் பெண்டிங்ல இருக்கு , இதுல நீங்க வேற போட்டியா?

      Delete
  5. ஆல்பிரட் பேகல் சாப்பிட்டதுனால உங்களுக்கு சுகர் ஏறல அந்த ஸ்வீட்டையே நினைச்ஸி கொண்டு பேகல் சாப்பிட்டதுன்னாலதான் உங்களுக்கு சுகர் ஏறி இருக்குது

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட்டுக்கே எங்கேயாவது சுகர் வருமா,
      அதை சாப்புடுறவங்களக்கு தான் சுகர் வரும்..
      அதனால ஸ்வீட்டான alfy'கு சுகர் வந்து இருக்க கூடாது ..
      நீங்க தான் இந்த மர்மத்தை கண்டு பிடிக்கணும்.

      Delete
    2. நண்பா மதுரை சொல்ற ஸ்வீட் வேற .எனக்கு ஏன் சுகர் வந்ததுன்னா , நீங்க சொன்ன மாதிரி ஸ்வீட்டா
      இருக்க முயற்சி பண்ணி பண்ணி அளவு கொஞ்சம் கூடிப்போனதால வந்திருச்சு

      Delete
    3. இதை ஆமோதிக்கிறேன். :)

      Delete
    4. அப்பாடா இதையாவது நம்புனீங்களே

      Delete
  6. நடை படிப்பதற்கு சுகமாக இருந்தது!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி எம்ட்டி , ஆமா எம்டியா , எம்டனா ?

      Delete