My wife's Rose garden 2016 |
நியூயார்க்கில் நான்கு
காலங்களையும் துல்லியமாக பார்க்கலாம் ..ஃபால் (Fall) அல்லது ஆட்டம் (Autumn) என்று ஆங்கிலத்தில்
அழைக்கப்படும் காலத்தில் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலை கூட இல்லாது உதிர்ந்து
போய், சுற்றுப்புறம் களையிழந்து இருக்கும்.என் வீட்டுத்
தோட்டத்தில் பின்னால் இருக்கும் பழமரங்களுக்கும் அதே கதிதான். காய்கறிச் செடிகள்
முற்றிலுமாக செத்துவிடும். முன்னால் இருக்கும் ரோஜாத் தோட்டமும் புல்வெளியும் கூட
முற்றிலும் உதிர்ந்து காய்ந்து பரிதாபமாய் இருக்கும். இந்த நிலை மார்ச் வரை
நீடிக்கும்.
Front Lawn-2016 |
பின்னர் கடுமையான குளிர்காலம்,
பனிப்பொழிவு எனும் வெள்ளைமழை, பனிப்புயல் ஆகிய
எல்லாவற்றையும் பொறுமையுடன் கடந்தால், மெதுவாக கள்ளனைப்போல் வருகிறது வசந்த காலம்
(Spring). ஏப்ரலில் மழை பெய்ய ஆரம்பிக்கும். மரங்களும்,
செடிகளும் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்து பூப்பூக்க
ஆரம்பிக்கும். இதைத்தான் இங்கே "ஏப்ரல் ஷவர் மே ஃபிளவர்" என்று சொல்வார்கள்.
பின்னால்
இருக்கும் தோட்டத்தில் (Kitchen Garden) பெர்சிமன்
மரமும், அத்தி மரமும் ஏப்ரலில் துளிர்க்க ஆரம்பிக்கும்.
ஆனால் பழங்கள் வர ஜூலை இறுதி ஆகிவிடும்.முதலில் புதினாதான்
பசபச வென்று வர ஆரம்பிக்கும். என் மனைவி வழக்கமாகப்போடும் கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பாவக்காய்,
சுரைக்காய் ஆகியவற்றுக்கு மறுபடியும் செடிகள் வாங்கி வைக்க
வேண்டும். அது மட்டும் தானாக வராது. செடிகள் வைக்குமுன்னால் களைபிடிங்கி, கொத்தி உரம் போடவேண்டும். முன்னால் உள்ள பூந்தோட்டத்தில் உள்ள பலவண்ண ரோஜாச்செடிகளும்
மற்றவையும் தன்னால் வந்துவிடும், ஒவ்வொரு வருடமும் செடிகள்
வைக்கத் தேவையில்லை. ஆனால் ஆறுமாதம் அமைதியாயிருந்ததால் பூத்துக் குலுங்கிவிடும்.
அதோடு வசந்த
காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு அம்சம் விதவிதமான பழங்கள். ஆப்பிள்கள்,
ஆரஞ்சு பழங்கள், மாம்பழங்கள், திராட்சை ஆகியவை எல்லா சீசனிலும் கிடைக்கும். ஆனால் வசந்த காலத்தில் தான்,
செர்ரி , ராஸ்பெர்ரி, பிளாக்
பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, கிச்சிலி,
பீச்சஸ், பிளம்ஸ், ஆப்ரிகாட்,
பேரிக்காய்கள், நெக்டரின், கிர்னி, தர்ப்பூசணி போன்ற பழங்கள் கிடைக்கும்.
Jujubee |
இதுதவிர மிகவும்
சிறப்பான பழங்கள் என்று சொன்னால் பெர்சிமன், அத்தி,
கிவி, பேரீச்ச காய்கள், ஜூஜீபி ஆகியவற்றைச் சொல்லலாம். இவை இலையுதிர்கால
ஆரம்பம் வரை கிடைக்கும்.
மதிய உணவு
முடித்து காலாற வெளியே நடந்து போய் வருவது என் வழக்கம்.என் அலுவலகத்தின் அருகில்
ஒரு கொரியன் கடை உள்ளத. அங்கு இந்தத்தடவை சில வழக்கமான மற்றும்
சில மிகவும் வித்தியாசமான பழங்களைப் பார்த்தேன்.அதை உங்களிடம்
பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சிலவை உங்களுக்கு ஏற்கனவே
தெரிந்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். சிலவை என்னால் வாங்க முடியாத
அளவுக்கு விலை அதிகம். இதோ அவை உங்களுக்காக:
பேஷன் ஃப்ரூட் (Passion
Fruit)
Passion Fruit |
இந்தப் பழத்தில்
நிறைய வகைகள் உண்டு. நான் ஹவாய் போயிருந்த சமயம் முதன் முதலில் இதைச்
சாப்பிட்டேன். தோல் ஓடு போல் கடினமாய் இருக்கும். உள்ளே விதைகள் நிரம்பி
புளிப்புச் சுவையாய் இருக்கும். இந்தக்கடையில் இதன் இரண்டு வகைகளைப் பார்த்தேன்.
பெரியது ஒன்று 6 டாலர்கள்
சின்னது 4 டாலர்கள் .
Passion Fruits |
கோல்டன்
ஹனிடியூ (Golden
Honey Dew)
Golden Honey Dew |
ஹனிடியு என்ற பழம்
கிர்ணிப்பழ வகையைச் சேர்ந்தது. பொதுவாக வெளியேயும் உள்ளேயும் வெளிர் வெள்ளை
நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் தேன்
போல் தித்திக்கும். அதனால்தான் இதற்குப் பெயர் ஹினிடியூ. ஆனால் இந்த வகை வெளியில்
மஞ்சளாய் இருப்பதால். இதற்குப் பெயர் கோல்டன் ஹனிடியூ. பக்கத்தில் சாம்பிளுக்கும்
வைத்திருந்தார்கள். உள்ளே வெள்ளை நிறம்தான், சுவையும் அதே தேன் சுவைதான். நல்ல
சைஸில் இருந்த இதன் விலை ஒன்று மூன்று டாலர்தான்.
மங்குஸ்தான்
(Mangosteen)
Mangosteen |
அடர்ந்த பிரெளன்
நிறத்தில் இருக்கும் இந்தப்பழம்தான் நான் இதுவரை பார்த்ததில் மிகவும்
விலையுயர்ந்தது. விலையைப் பார்த்துவிட்டு பல தடவை வந்துவிட்டேன். இதுவரை நான்
சுவைக்காத பழங்களில் இது ஒன்று. சிறிய கொய்யாப்பழ அளவில் இருந்தது. விலை ஒரு
பவுண்ட் 15 டாலர் . பவுண்ட் என்பது அரைக்கிலோவுக்கும் சற்று குறைவானது.
டிராகன் பழம் (Dragon
Fruit)
Dragon Fruit |
இது பார்ப்பதற்கு
விசித்திரமான பழம். ரோஸ் நிற அழகு கலரில் ஆங்காங்கே பச்சை நிறப்பட்டைகள் முளைத்திருக்கும். பார்ப்பதற்கு டிராகன் போல
இருப்பதால் இதனை இப்பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தப் பழம் வியட்நாம்
நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது. விலை ஒரு பவுண்ட் ஏழு டாலர்.
இந்தப்பழத்தை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
சற்றே வளவளவென்று விதைகள் அதிகமாக இருந்தது.
கொரியன் ஸ்வீட் மெலன் (Korean
Sweet Melan)
இது எப்போதும்
எனக்கு வெள்ளரிப் பழத்தை நினைவு படுத்தும்.தோற்றத்தில் மட்டுமல்ல ருசியிலும்
கிட்டத்தட்ட அப்படித்தான். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வரிகளைக் கொண்டது. ஆனால் இதன்
அளவு ஒரு சிறிய மாம்பழம் அளவில் இருக்கும். விலை பவுண்ட் 3
டாலர்கள்.
கிவானோ கொம்பு பழம்: (Kiwano
Horned Melan)
மஞ்சள் நிறமான
இந்தப்பழத்தில் ஆங்காங்கே முட்கள் உள்ளது. தொட்டுப் பார்த்தேன் மிகவும் கூர்மையாக
இருந்தன. பேரும் பொருத்தமாய்த் தான் வைத்திருக்கிறார்கள். நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். நான் இவ்வகைப் பழத்தை
இதுதான் முதற்தடவை பார்க்கிறேன். இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. முள்ளைப்
பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. விலை ஒன்று 8
டாலர்கள்.
பெர்சிமன் பழம் (Persimon)
இதில் எனக்குத்
தெரிந்து 2 வகைகள் உள்ளன. ஒன்று தோலை
வெட்டிவிட்டு சாப்பிட வேண்டும்
இல்லாவிட்டால் தொண்டையைப் பிடித்துவிடும். இவ்வகை நன்கு பழுத்தால்தான் சாப்பிட
முடியும். படத்தில் பார்க்கும் மற்றொன்று தோலோடும் சாப்பிடலாம். காய்வெட்டாக
இருந்தாலும் இனிக்கும், பழுத்துவிட்டால் தேன் ஒழுகும் விலை
ஒன்று 2.50 டாலர்கள்.
மற்றும்
படத்தில் உள்ள கினிப்பா, துரியன்,(வந்த புதிதில் இதை பலாப்பழம் என்று நினைத்து ஏமாந்துவிட்டேன்)
Apricots |
Durian |
பி(பெ)ண் குறிப்பு:
"பழங்களைப்பற்றி ஒரு பிளாக் எழுதியுள்ளேன்
, படித்துப்பார்", என்று என் மனைவியிடம் சொன்னேன் ."ஒரு பழம் தானே பழத்தைப்பற்றி
எழுதமுடியும்", என்று சொன்னாள். இதற்கு நான் சும்மா இருந்திருக்கலாம் .நமக்கெல்லாம்
எத்தனை முறை பட்டாலும் ???????
முற்றும்.
நான் ரொம்ப கன்சர்வேடிவ். அதாவது எதையும் புதிதாக ட்ரை பண்ண மாட்டேன். நம்ம ஊரில் கொய்யாக்காய் திருடி சாப்பிடுவதுண்டு. திருடி சாப்பிடுவதில்தான் கொய்யாக்காய் சுவை. வேற என்ன கொடிக்காப்புளி. சப்போட்டாப் பழம். அப்புறம் சீத்தாப் பழம். நவாப் பழம். புளியம்பழம், எழந்தப் பழம்.
ReplyDeleteமா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, சாத்துகுடி, கொடை ஆரஞெல்லாம் சாதணமாக சாப்பிடுவது.
ப்ளம் சம்மர்லதான் கிடைக்கும்.
இந்த ஊரில் வந்து கன்சர்வேடிவ்ல இருந்ந்து மெதுவாக லிபெரலாகி அதிகமாக சாப்பிடுவது, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி. பீச், ப்ளம், ப்ளோட்டோஸ், வாட்டர் மெலான்.
பர்சிமன், இங்கே ஒருத்தரு "பந்து" ரெக்கமண்ட் பண்ணி வாங்கி சாப்பிட்டேன்.
எனக்கு ரொம்ப இனிப்பான பழங்கள் பிடிக்காது. புளியம்பழம்கூட அரைக் காய்/பழம்தான் பிடிக்கும். கொஞ்சம் துவர்ப்பு, புளிப்பு கலந்து இருப்பைவங்கள்தான் பிடிக்கும்..
எல்லாவற்றையும்விட தக்காளிப் பழம்தான் கிலோக்கணக்கில் திம்பேன். :)
தாக்களிப்பழத்திற்குள், மேல் வழி சிறு துளைபோட்டு , சில உப்புக்கற்களை உள்ளே திணித்து அப்படியே கடித்து சாப்பிட்டுப்பாருங்கள் .திவ்யமாக இருக்கும் .
Deleteநம்மூரில் கிடைக்கும் விளாம்பழம் ,ஈச்சம்பழம் ,ஆலம்பழம்,கோவைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டிருக்கிறீர்களா வருண்?
***விளாம்பழம் ,ஈச்சம்பழம் ,ஆலம்பழம்,கோவைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டிருக்கிறீர்களா வருண்?***
Deleteஎப்போதாவது.. விளாம்பழத்தில் ஏதோ சர்க்கரை போட்டு சாப்பிடுவாங்கனு நினைக்கிறேன்.
மாதுளையை விட்டுவிட்டேன். ரொம்பப் பிடிக்கும்.
பப்பாளி ஏனோ பிடிக்காது! :)
விளாம்பழத்தில் நாட்டுச்சர்க்கரை போட்டுச்சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பப்பாளி மிகவும் நல்லது .லேசாக உப்பும் மிளகும் தூவி சாப்பிடுங்கள் , பிடித்துவிடும் .
Delete
ReplyDeleteசுகர் இருந்தாலும் ஒரு நாள்விட்டு ஒரு நாள் மாம்பழம் சாப்பிட்டுவிடுவேன் மாம்பழத்தை நறுக்கி அதில் உப்பு மற்றும் மிளகாய்தூள் தூவி சாப்பிட பிடிக்கும் அது போல தினசரி காலையில் ஆப்பிளை கட் பண்ணி அதில் சால்ட் போட்டு சாப்பிட பிடிக்கும் வாழைப்பழத்தை நறுக்கி அதை பாலில் போட்டு அதனுடன் சிறிது சுகர் சேர்த்து சாப்பிட பிடிக்கும் .
"வாழைப்பழத்தை நறுக்கி அதை பாலில் போட்டு அதனுடன் சிறிது சுகர் சேர்த்து சாப்பிட பிடிக்கும்" .
Deleteஇப்படியெல்லாம் சாப்பிட்டால் ஏன் சுகர் வராது ?
உங்க வீட்டம்மா கஷ்டப்பட்டு ரோஜா பூ செடியை வளர்த்தால் அதில் வளரும் பூவை கட் பண்ணி ஆபிஸில் வேஅலி செய்யும் பெண்மணிக்கு கொடுப்பதாக நாட்டுல பேசிக்கிறாங்களே அது உண்மையா?
ReplyDeleteமதுரைத்தமிழன், ஆமா எத்தனை நாள் இப்படி மாட்டிக்கொடுக்கணும்னு நினைச்சீங்க ? கனம் கோர்ட்டார் அவர்களே இது திட்டமிட்ட சதி என்று நான் சொல்லுகிறேன் .
Deleteவித்தியாசமான பழங்கள்..... பார்க்கத் தந்தமைக்கு நன்றி ஆல்ஃபி..
ReplyDelete