Tuesday, April 14, 2015

சோழனுக்கு பாண்டியன் குறைந்தா போனான் ?

ஆஸ்டின் ,டெக்சஸ் பயணம் -பகுதி-5

        அவர் பெயர் நந்திதா பெரி (Nandita Berry). 2014 ஜனவரி முதல், கவர்னர் ரிக்பெரி (Rick Perry) அவர்களால் தனிப்பட்ட முறையில் அப்பாய்ண்ட் செய்யப்பட்டவர் நந்திதா. ரிக் பெரி, நந்திதா பெரியை நியமித்ததில் ஏதோ உள்குத்து இருக்கிறது என நினைக்க வேண்டாம். நன்றாக ஸ்பெல்லிங்கைப் பாருங்கள் Rick Perry வேறு & Nandita Berry  வேறு.
        இந்த நந்திதா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து, சட்டம் படித்து தனது 21ஆவது வயதில் சட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தார். படித்து முடித்து லாயராக பிராக்டிஸ் செய்து மைக்கேல் பெரி( Michael Berry) என்ற அமெரிக்கரைத் திருமணம் முடித்து, Rick Perry யிடம் பதவியில் அமர்ந்துள்ளார் என்பது இவரது சுருக் வரலாறு.
Tasha Willis
Nandita Berry
         டெக்சஸ் மாநிலத்தின் 109-ஆவது உள்துறை மந்திரி (Secretary of State) பொறுப்பேற்ற - நந்திதா அமெரிக்க மாநிலங்கள் முழுவதிலும் இந்தப் பதவியில் உட்காரும் முதல் பெண் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமை பெறுகிறார். Secretary of State என்பது மிகவும் பெரிய பதவி.
அவரின் பதவியில் அவருக்குள்ள பொறுப்புகள் சில:
1.         மாநிலத்தின் தலைமை தேர்தல் அலுவலர் (Chief Election Officer)
2.         மெக்சிகோ நாட்டினுடன் உள்ள எல்லாத்தாவாக்களை தீர்க்கும் லயசன் அலுவலர்.
3.         டெக்சஸ் மாநிலத்தின் Chief Protocol Officer.
4.         ஸ்டேட் சீலின் பொறுப்பு இவரிடம்தான்.
5.         அரசு ஆவணங்களின் பொறுப்பு.
6.         அரசின் கொள்கை முடிவுகளை வெளியில்  பத்திரிக்கைகளுக்கு அறிவித்தல்.
 வெறும் 200 டாலர்களுடன் 21 வயதில் அமெரிக்கா வந்த இவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறியது நிச்சயமாக மாபெரும் சாதனைதான். அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்களின் நிர்வாகத்துறையின் டைரக்டராகவும் பொறுப்பில் இருக்கிறார்.
அவற்றுள் சில கீழே:
1.         Houston Zoo
2.         South Asian Chamber of Commerce
3.         Houston Area Women's Center
4.         Community Family Center of Houston
இவர் இந்தியர் என்பதில் நமக்குப் பெருமைதானே.
      அதன் பின்னர் எலிவேட்டரில் ஏறி 2ஆம் மாடியை அடைந்தோம். அங்கிருந்து கீழே பார்க்கும் வியூ மிகவும் அழகாக இருந்தது. பள்ளிக்கொயர் பாடும் பாடல்கள் அப்படியே மிதந்து மேலே வந்தன.

          அப்படியே பக்கத்தில் நுழைந்தால் செனட் சேம்பர் இருந்தது. டெக்சஸ் மாநில 31 செனட்டர்களும் (நம்மூர் MLA  மாதிரி) இங்குதான் கூடி சட்டமியற்றுவார்கள். ஸ்டீபன் ஆஸ்டின் அவர்களின் மிகப்பெரிய பெயின்ட்டிங் அங்கிருந்தது. அதுதவிர நுழைவாயிலின் இருபுறமும் ஹென்ரி ஆர்தர் மெக்கர்டில் (Henry Arthur MCARDLE 1836-1908) அவர்களால் வரையப்பட்ட இருபெரும் ஓவியங்கள் இருந்தன.
Governor's Lounge 

           அதனை தாண்டிச் சென்றால் டெக்சஸ் மாநில ஆளுநரின் வரவேற்பரை இருந்தது. காலங்காலமாக கவர்னர்கள் பயன்படுத்திய கண்ணாடி, ஷேண்டலியர் ,  மார்பிள் மேஜை சோஃபா ஆகியவை அங்கு இருந்தன. 

Pastor Johnson

பாஸ்டர் ஜான்சன் அங்கு சென்று கவர்னர் இருக்கையில் அமர்ந்து போஸ் கொடுத்தார். கம்பீரமாகத்தான் இருந்தார். சோழரத்தம் அல்லவா? பாண்டியன் என்ன சோழனுக்கு குறைந்தா போனான் என்று விரைந்து சென்று நானும் போய் உட்கார்ந்தேன். இன்னும் ஒருவர் பக்கத்தில் உட்காரும் அளவுக்கு இடமிருந்தது. ஹ்ம்ம் பாண்டியன் குறைந்துதான் போனான்.

      மறுபுறம் இன்னும் பெரிய மன்றம்  வந்தது.இங்குதான் டெக்சஸின் 150 House Of Representatives உட்கார்ந்து மாநில அலுவல் நடத்துவார்களாம். மேஜைகளும் சேர்களும் கீழே கார்ப்பெட்டுகளும் மிக நேர்த்தியாக இருந்தன. இதுதான் இந்த பில்டிங்கிலேயே மிகப்பெரிய அறை என்றும் சொன்னார்கள். 1836ல் நடந்த போரில் பயன்படுத்தியிருந்த  டெக்சஸ் கொடி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் பெரிய நூலகம் ஒன்றிருந்தது. “Legislative Reference Library” என்று சொன்னார்கள்.

Senate Chamber

           அங்கிருந்து  செல்லும் அலங்காரமான கிரானைட் படிகளில் மேலே சென்றோம். அங்கு மிகப்பெரிய மற்றொரு மன்றம் இருந்தது. அதுதான் சுப்ரீம் கோர்ட் என்று சொன்னார்கள். இடவசதி பத்தாமல் போனதால் 1959-ல் தனிக்கட்டடத்திற்கு மாற்றப்பட்டதாம். ஆனால் 1888 முதல் 1959 வரை இங்குதான் செயல்பட்டதாம். இப்போதும் இது சில முக்கிய மீட்டிங்குகள் நடப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. முதன்முதலாக இங்கு நீதிபதிகளாக இருந்த Abner Lipscomb, John Hemphil & Royal Wheeler ஆகியோரின் ஓவியங்களும் காணப்பட்டன.
Supreme Court

         நல்ல வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கேப்பிடல் பில்டிங்கை பார்த்த திருப்தியுடன் கீழிறங்கினோம். அங்கிருந்து நேராக ஓட்டலுக்குத் திரும்பி பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஆஸ்டினுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்தோம்.  

         ஏர்போட்டில் நாங்கள் மூவரும் செக்யூரிட்டி செக்கிங் முடித்து உள்ளே நுழைந்தோம். பாஸ்டர் ஜான்சன் சில நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றார். நானும் சதக்கும் உள்ளே போய் விமானத்தில் உட்கார்ந்தோம்.
     சில நிமிடங்களில் “லாஸ்ட் கால் ஃபார் ரேட் ஹினா சமி”, என்ற அறிவிப்பு தொடர்ந்து வந்தது. சதக்தான் மறுபடியும் கண்டுபிடித்தார், “ஆல்ஃபி உங்க ஆளைத்தான் கூப்பிடுறாங்க”, என்று.  அய்யய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா ? 
அந்த முதல் கதையைப்  படிக்க இங்கே சுட்டவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_9.html

முற்றும்.




9 comments:

  1. //“லாஸ்ட் கால் ஃபார் ரேட் ஹினா சமி”//
    என்ன ஐயா? இப்படி சொல்லிட்டு "முற்றும்" என்று முற்று புள்ளி வைச்சா எப்படி? என்ன ஆச்சின்னு சொல்லுங்க ...

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா ?

      Delete
    2. இல்லை.. முதல்ல இருந்து மறுபடியும்.. :)

      Delete
    3. இருந்து மறுபடியும் முதல்ல அய்யய்யோ நண்பா.

      Delete
    4. பின்னாடி சொல்லி முடிச்சிங்க இல்ல அத மீண்டும் முன்னாடி எடுதுன்னு போய் கண்ணாடி மாதிரி பளிச்சின்னு இன்னும் ஒருமுறை சொல்லுங்க ...
      நண்பா... எங்கே பல நாட்களாக எங்கே தெரு பக்கமே ஆளை காணோம் ..

      Delete
    5. வணக்கம் விசு அவர்களே.. blogger'இல் வந்து பார்பதற்கு எளிதாக உள்ளது.. தனியாக வெப்சைட் மூலமாக வந்து பார்க்க சில நேரம் convenient'ஆக இல்லை.. இனி தொடர்ந்து உங்கள் தெருவிற்குவருகிறேன்..
      :)

      Delete
  2. எழுவது போல் ஏன் உட்கார வேண்டும்...? ஹிஹி...

    ReplyDelete
  3. ஹிஹி...கவர்னர் வந்துறுவாரோன்ர பயம்தான் .

    ReplyDelete
  4. மறுபடியும் முதல்ல இருந்தா! ஹா ஹா....

    கவர்னர் இருக்கையில் உட்கார அனுமதி உண்டா?

    ReplyDelete