Tuesday, April 11, 2017

நிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு !!!!!!!!!! ( மீள் பதிவு )

அசோகமித்திரன் நினைவு பதிவு ( மீள் பதிவு )
படித்ததில் பிடித்தது
அசோகமித்திரனின் 18ஆவது அட்சக் கோடு.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வரும்நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்ட நாவல் இது.
இந்த நாவல் ஒரு பீரியட் வகையைச் சார்ந்த வரலாற்று நாவல் என்று சொல்லலாம். இரட்டை நகரம் (Twin city) என்று அழைக்கப்படும் ஹைதராபாத்செகந்திராபாத் பகுதிகளில் நிஜாம் மன்னரின் ஆட்சிக்காலம்தான் கதையின் காலம்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்இந்திய சுதந்திரத்திற்கு சற்றுப்பின்னர்நிஜாமின் சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைவதற்கு முன்னால் ஆரம்பித்துஇணைந்த சமயத்தில் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகளையும் உள்ளிட்ட கதைக்களம்.
ஆனால் இது நிஜாமுக்கும் இந்திய அரசுக்கும் நிகழ்ந்த போராட்டத்தை விளக்கும் கதையல்லஅந்தச் சூழலில் அங்கு வசித்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் சமூக, பொருளாதாரஅரசியல் ரீதியான சங்கடங்கள், பாடுகள்ஈடுபாடுகள்தவிப்பு ஆகியவற்றை அருமையாக வெளிப்படுத்தும் கதை இது. இது ஒரு மாறுபட்ட வரலாற்று சிந்தனை.
அசோகமித்திரன்
நாவலை எழுதியவர் தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஒரு உன்னத இடத்தை அடைந்து தக்க வைத்துக் கொண்ட அசோகமித்திரன் அவர்கள். இவர் சுஜாதா, ஆதவன்நாஞ்சில் நாடன் போன்ற பல எழுத்தாளர்களுக்கு முன்னோடி ஆவார்.
அசோகமித்திரன் செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். நாவலின் கால கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால் சந்திரசேகரன் என்ற கதாபாத்திரம்தான் அசோகமித்திரன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
1996ல் “அப்பாவின் சிநேகிதர்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற அசோகமித்திரன், முதலில் ஜெமினி ஸ்டுடியாவிலும் அதன் பின்னர் கணையாழியின் ஆசிரியராகவும் வெகுகாலம் பணியாற்றினார். சுஜாதா கணையாழியின் ஆசிரியரானது இவருக்குப் பின்னர் என்று நினைக்கிறேன்.

யார் சொன்னது அசோகமித்திரன் எழுத்துக்கள் கடின வகை வரட்டு எழுத்து என்று?.நாவல் முழுதும் ஒரு சிறு நையாண்டி இயல்பாகவே அமைந்துள்ளது. அதில் அசோகமித்திரனின் குறும்பு வெகுவாகவே தெரிகிறது. (குறிப்பாக இதன் நாவல்தேசிய புத்தக டிரஸ்ட்டின் (ன்பட்) ஆதான் பிரதான் திட்டத்தின்கீழ்இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்பெற்ற நாவல் இது.
நாவலில் எனக்குப் பிடித்த அம்சங்களை கீழே புல்லட் பாயிண்டில் தருகிறேன்.

1.    விடலைப்பையன்களின் டீனேஜ் அவஸ்தைகளை மிகச்சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் ஒருங்கே வரும் பயம், கூச்சம், எதிர்பார்ப்பு, திருட்டுத்தனம், வெட்கம், மகிழ்ச்சி கிளர்ச்சி, ஆவல் என்ற பல உணர்ச்சிகளை கதையோடு பிண்னி இருக்கிறார். குறிப்பாக பெண்கள் மேல் வரும் ஒருவித இனக்கவர்ச்சி.
2.    அங்கு வாழ்ந்து வந்த சட்டைக்காரர்கள் (Anglo Indians) கலாச்சாரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
3.    வேலை தேடிச்சென்ற தமிழர்கள் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் ஒரு அந்நிய நாட்டில் வாழ்வது போலவே இருந்தனர்.பெரும்பாலும் ரயில்வே துறையில் இருந்தனர்.
4.    ஒருவருக்கொருவர் வழக்கம்போல் ஒற்றுமை இல்லாததால் தனித்தனியாகவே இருந்தனர்.
5.    ஆந்திரா மற்றும் தெலுங்கானா  இணைந்த பெரிய நிலப்பரப்பாக நிஜாம் நாடு இருந்தது.
6.    நிஜாம் நாட்டில் மதவெறி கொண்ட ரஜாக்கர்கள் வைத்ததுதான் சட்டம். பிற மதத்தினரை ஏராளமாகக் கொன்று குவித்தனர். ரஜாக்கர்கள் நிஜாமின் கொலைப்படை.
7.    காங்கிரஸ்காரர்கள் தேசத்துரோகிகளாகக் காணப்பட்டனர்.
8.    நிஜாம் பதவியில் இருந்தாலும் பெரும்பாலான ஆட்சி அதிகாரம் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரிகள் கையில்தான் இருந்தன.
9.    நிஜாம் நடத்திய பள்ளி கல்லூரிகளில் தமிழர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். இவர்கள் வெகுகாலம் அங்கு வாழ்வதால் தமிழுணர்வற்று இருந்தனர். பாரதியார் பற்றிக் கூட இவர்களுக்கு தெரியவில்லை.
10. சில தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்அங்கு வாழ்ந்ததால் நிஜாமுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும் இந்திய யூனியனுக்கு எதிராகவும் இருந்தனர்.
11. நிஜாமின் ஆட்சி, டெல்லி வரை பரவப்போகிறது என்ற நப்பாசை ரஜாக்கர்களுக்கு இருந்தது.
12. இந்திய விடுதலைக்குப்பின் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிறபகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் மக்கள்  அகதிகளாக வந்து வாழ்ந்து வந்தனர்.
13. இந்திய விடுதலைக்குப் பின் நிஜாம் நாட்டில் வந்த நெருக்கடியால்பெரிய உணவுப்பஞ்சம் வந்தது. தண்ணீர் அரிசிஎண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால்சோள ரொட்டியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.
14. நிஜாம் அரசின் பஸ்கள் கடலை எண்ணெய்  ஊற்றி ஓடியதால்சாலை முழுவதும் பஜ்ஜி சுட்டதுபோல் வாசனை வந்ததாம்.
15. அங்கிருந்த ஒரே ஒரு தியேட்டரில் புதுத்தமிழ்ப்படம் வந்தால் ஒரு வாரம் ஓடுமாம்.
16. பள்ளி கல்லூரிகளில் கிரிக்கெட் தலையாய விளையாட்டாக இருந்தது.
17. ஹைதராபாத்தில்காந்தி இறந்துபோனது வெகுவான பாதிப்பை உண்டுபண்ணியதாம். ஜின்னா இறந்துபோன போது அவ்வளவாக பாதிப்பில்லை.
18. இந்திய அரசுப்படைகள் ஹைதராபாத்தில் நுழையும் போது எதிர்ப்பென்று அவ்வளவாக இல்லை. வரும் வழியில் தான் சில சிறு சண்டைகள். இந்தியப்படையைப் பார்த்ததும் நிஜாம் படைகள் ஒன்று ஓடி ஒழிந்தன அல்லது சரணடைந்தன.
19. இந்தியப்படை ஹைதராபாத்தில் நுழைவதற்கு முன்னமே ரேடியாவில் பேசிய நிஜாம்இந்திய அரசில் இணைய சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பின்னர் நடந்தது தான் கொடுமை.
20. இந்துக்கள் முஸ்லீம்களை தாக்குவதும்வீடுகளை எரிப்பதும்பொருட்களை அழிப்பதும் நாடெங்கிலும் நடக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் செகந்திராபாத்தில்.
மொத்தத்தில் அந்தக் காலகட்டத்தின் சமூக வரலாற்று நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அசோகமித்திரனின் இந்த நாவல் படிக்க வேண்டிய ஒன்று.
அசோகமித்திரன் நினைவு  தமிழ் வாசகர்களின் மனதில் நீண்ட நாள் நிலைத்திருக்கும் .
முற்றும்.  

Thursday, April 6, 2017

ரஜினிகாந்தும் மலேசியா வாசுதேவனும் !

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண்: 33

ஆகாய கங்கை

Image result for "தர்மயுத்தம்"
Add caption

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_16.html

ரஜினிகாந்த் நடித்து, எழுபதுகளில் வெளிவந்த "தர்மயுத்தம்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் இது. பாடலைக் கேட்போம்.


பாடலின் சூழல்:
திருமணத்திற்கு ஆயத்தமாகும் காதலனும் காதலியும் களிப்புடன் பாடும் இளமை ததும்பும் பாடல் இது.
இசையமைப்பு:
இளையராஜாவின் மெருகேறிய காதல் ததும்பும் பாடல் இது. அந்தச் சமயத்தில், என் இந்தச் சமயத்தில் கூட எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத மெட்டும் இசையமைப்பும் குளிர்விக்கின்றன.
கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் பெண் குரலின் ஹம்மிங்கோடும் காங்கோ டிரம்ஸ் கலவையோடும் ஒன்று சேர்ந்து சடுதியில் பாடல் ஆரம்பிக்கிறது. ஹம்மிங் முடிந்து ஒரு லீட் வந்து முடிய, ஆண்குரலில் ‘ஆகாய கங்கை’ என்று ஆரம்பிக்கிறது. ஆண்குரல் ஒலித்து முடிய பெண்குரல் அதற்குப்பதில் சொல்லி முடிய, சரணம் முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது. கீபோர்டு, புல்லாங்குழல், வயலின் கோரஸ் போன்ற இசைக் கலவை இசைத்து முடிய வயலின் சோலா உருகிமுடிக்க மீண்டும் ஆண் குரலில் "காதல் நெஞ்சில்" என்று சரணம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ல் பெண்குரல் ஹம்மிங் ஒலித்து வயலின் சோலோ முடித்து 2-ஆவது சரணம் பெண்குரலில் ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது. டிரம்ஸ், காங்கோ, கீபோர்டு, பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார், வயலின்கள், வயலின் சோலோ, காங்கோ போன்ற பலவித இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட அருமையான பாடலிது.  

பாடல் வரிகள்:

ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்


காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)
Image result for MG Vallabhan
MG Vallabhan

பாடல் வரிகளை எழுதியவர் M.G. வல்லவன் அவர்கள். இளையராஜாவுக்கு சுமார் 200 பாடல்களை எழுதியிருந்தாலும் இவரை அவ்வளவாய் நமக்குத் தெரியாது. கரும்புவில் என்ற திரைப் படத்தில் வரும், 'மீன் கொடித்தேரில் மன்மத ராஜன்' மண் வாசனையில் வரும் "அரிசி குத்தும் அக்காமார்களே" பொண்ணு ஊருக்குப்புதுசு படத்தில் அமைந்த" சோலைக்குயிலே பாடும் மயிலே", மலர்களே மலர்களே படத்தில் உள்ள "இசைக்கவோ உன் கல்யாணிராகம்" போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும் உதயகீதம், இதயக்கோயில் போன்ற சில படங்களுக்கு திரைக்கதை வசனம் இவரே. அது மட்டுமல்ல, பிலிமாலயா, பேசும்படம், பெண்மணி போன்ற பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். 2003ல் இறந்துபோனார். இந்தப் பாடலில் மெட்டுக்குத் தகுந்த கச்சிதமான வரிகளை எழுதியுள்ளார்.

பாடலின் குரல்கள்:


பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன், மர்றும் ஜானகி. SPB வராததால் "பதினாறு வயதினிலே படத்தில்" ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்று பாட ஆரம்பித்து அது சூப்பர் ஹிட் ஆகிவிட எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தர்மயுத்தம் படத்தில் ரஜினிக்குப் பாடிய இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகியதோடு குரலும் ரஜினிக்குப் பொருத்தமாக இருந்ததால் ரஜினிக்கு நிறைய பாடல்களை மலேசியா பாடினார். SPB இளையராஜாவின் பழைய ஆர்க்கெஸ்ட்ராவில் TMS  திருச்சி லோகநாதன் குரலில் அருமையாக பாடுபவராம். “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே”, “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல்கள் திருச்சி லோகநாதனையும் TMS-யையும் நினைவு படுத்தும்.
ஜானகி குரலில் சொல்லவே வேண்டாம். அவ்வளவு இளமை, காதல், சென்சுவாலிட்டியை எப்படித்தான் பாடலில் கொண்டுவருகிறாரோ. குறிப்பாக சரணத்தில் வரும் ஒரு சிறு சிரிப்பு, இருவரும் இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காளர்கள் ஆவார்கள்.
இளையராஜாவின் மணிமகுடத்தில் மின்னும் இன்னுமொரு வைரம் இது.

தொடரும்

Monday, April 3, 2017

முஸ்லீம் கட்டிய புத்தர் கோவில்

இலங்கையில் பரதேசி - பகுதி -8

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_28.html

Image result for gangaramaya buddhist temple in colombo
Simmalakka Mantap
"அடுத்து எங்கே" என்று அம்ரியிடம் கேட்டேன்.

"சார் சாயந்திரம் ஆயிருச்சு, அப்படியே போய் எங்கேயாவது சாப்பிட்டுட்டு ரூமுக்கு போயிரலாம்".
“மணி ஐந்து தானே போற வழியில வேறு எங்காவது போகலாமே" என்றேன்.
"சார் ஒரு முஸ்லீம் கட்டிய புத்தர் கோயில் இருக்கு, ஆனா நீங்க கிறிஸ்தவர் ஆச்சே அங்கே வருவீங்களா?”
"என்ன அம்ரி அப்படிச் சொல்லிட்ட, கோவில்கள் கலைகளின் இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம் அல்லவா. நான் தமிழ்நாட்டில் வளரும் போது, என் அப்பா தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று எல்லாக் கோவில்களுக்கும் கூப்பிட்டுப் போயிருக்கிறார். எல்லா புராணங்களும் இதிகாசங்களும் எனக்கு அத்துபடி. அதுமட்டுமல்ல பள்ளிவாசல்களுக்கு தர்ஹாக்களுக்கும் கூடப் போயிருக்கிறேன்."
“என்ன தர்ஹா கூடப் போயிருக்கீங்களா?”
“ஆமாம், நாகூர் தர்ஹா, ஏர்வாடி தர்ஹா, போயிருக்கிறேன். எங்கள் ஊர் பள்ளி வாசலில் கூட போயிருக்கிறேன்”.

Image result
Nagoor Dargha 
“நாகூர் தர்ஹா சரி ஏர்வாடிக்கு எதுக்குப் போனீங்க? அங்க பைத்தியக் காரங்களைத்தான் கூப்பிட்டுபோவாங்க”.
"அம்ரி, என்ன கலாய்க்கிறதா நினைப்பா".
“அதுசரி தர்ஹா கான்செப்டை நம்புறீங்களா?”
“இல்லை, இறந்தவர்களை மதிக்க வேண்டும், பின்பற்றலாம். ஆனால் கடவுளுக்குச் சமமாக வணங்குதலில் நபிக்கையில்லை. அல்லா  ஒருவனே வணங்குவதற்கு உரியவன்”.
“சார் என்ன ஆச்சரியமாக இருக்கு, நீங்க இயேசு நாதரை கும்பிடுபவர்தானே, அல்லாவையும் ஏத்துக்கிறுவீங்களா"
"அல்லான்னா என்ன அர்த்தம் ?"
"கடவுள்னு, படைத்தவன்னு அர்த்தம்?"
“கடவுளுக்கு பேர் ஏதாவது இருக்கா?”
“இல்லை உருவம் இல்லா அரூபம் அவன்”.
“எல்லா மதத்தினரும் இதை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். கடவுள் அல்லது படைத்தவன் ஒருவனே. அவனுக்கு உருவமில்லை பெயருமில்லை. அல்லா என்பது கடவுளின் பெயர் அல்ல, கடவுளுக்கு அந்த மொழியில் உள்ள பெயர், அதனால கடவுளை அல்லான்னு சொல்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.ஏன் இந்து மதத்தில் கூட உருவ வழிபாடு கிடையாது அது பின்னர் தான் புகுத்தப்பட்டது”.
“சார் நீங்க சொல்றது. ஆச்சரியமாயிருக்கு, ஆனா உண்மைதான்”.
“அதோட இதையும் தெரிஞ்சிக்க, ‘யாவே’ அல்லது ‘ஜெகோவா’ என்று ஹீப்ரு மொழியில் அழைக்கப்படும் கடவுளின் அரபி மொழியாக்கம்தான்  அல்லா என்பது. அது மட்டுமல்ல பைபிளிலும் அல்லா என்று போட்டிருக்கு."
“என்ன சார் சொல்றீங்க ?”
“ஆமா, அரபு மொழியில் இருக்கும் பைபிளில் கடவுள் என்று வரும் இடங்களில் எல்லாம் 'அல்லா' என்றுதான் போடப்பட்டிருக்கு.
"அப்ப ஏசு நாதர்"  
“கடவுளின் மனித உருவாக வந்த இறைமகன் தான் இயேசு , அவரும்அல்லாவும் ஒன்றே “.
“ரொம்ப ஆச்சரியமா இருக்கு”.
 “அதுமட்டுமல்ல இந்து மதத்தத்துவங்களுக்கும் கிறிஸ்துவ மத தத்துவங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அத இன்னொரு நாளைக்கு சொல்றேன்”.
“அப்ப உங்களுக்கு எம்மதமும் சம்மதமா?”
“அத நான் இப்படிச் சொல்வேன். எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன. அந்த ஒரு கடவுள்தான், இந்த உலகத்தைப் படைத்தவர். ஏன் உன்னையும் என்னையும் படைத்து பராமரிப்பவர் அவர் ஒருவரே. அதனால உலகின் மனிதகுலம் எல்லாரும் சகோதர சகோதரிகளே”.
“ஹும் இப்படி எல்லாரும் நினைச்சா எவ்வளவு நல்லாருக்கும் சார்”.
“சரி அதவிடு முஸ்லீம் கட்டிய புத்தர் கோயில்னு சொன்னியே அது எங்கிருக்கு?”.
“அங்கதான் சார் போயிட்டிருக்கோம்”.
“அந்தக் கோவிலின் பெயர் ‘கங்கராமய்யா கோவில்’,"
இந்தக் கோவில் இலங்கை, தாய்லாந்து, இந்திய மற்றும் சீனக் கட்டிடக் கலையின் கலவை என்று சொல்லலாம்.
Related image

ஜின ரத்தனா சாலையில் அமைந்திருக்கும் இது பழசா புதுசா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது. 19ஆவது நூற்றாண்டில் கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த ‘டி சில்வா ஜெயசூரிய கோனவர்த்தனே முதலியார்’, என்பவர் மட்டாரா ஸ்ரீ தர்மராம தேரோ என்ற குருவுக்கு கோவில் எழுப்புவதற்காக மூர் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் இந்த அழகிய இடத்தை வாங்கிக் கட்ட ஆரம்பித்தாராம். மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட இதற்கு "கங்கராமயா விகாரியா" என்ற பெயர் சூட்டப்பட்டது.    
அழகான தோரண வாயிலின் உள்ளே மிக அழகிய கட்டிடங்கள் அடங்கிய பல பகுதிகள் இருந்தன. விகாரா என்று சொல்லக்கூடிய கோயில், பகடா என்று சொல்லக்கூடிய போதிமரம், புத்த பிச்சுகள் கூடும் பெரிய அரங்கம் ஆகியவை இருக்கின்றன.

அதுதவிர புத்தரின் ரெலிக் என்று சொல்லப்படும் உடற்பகுதிகள் வைத்திருக்கப்பட்டிருக்கும் இடம் உள்ளது. மேலும் ஒரு மியூசியம்,  நூலகம், கல்வி நிலையங்கள், தங்குமிடங்கள் என்று பெரிய வளாகம் இது. இதில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றையும் தங்குமிடமாகக் கட்டியதும் முதலியார்தான்.
இங்கு புத்தமதத் தலைவர்களான ‘ரத்மலான ஸ்ரீ தர்மராமா தேரோ’, ‘வாங்கடுவா ஸ்ரீ சுபுட்டி தேரோ, வெலிக்கமா ஸ்ரீ சுமங்கல தேரோ, வெளிவிட்டியே தம்மரத்ன தேரோ மற்றும் பண்டிட் பட்டு வண்டுபாவே ஆகியோரும் இருந்திருக்கின்றனர்.
Related image

இதுல இன்னொரு முக்கிய தகவல் என்னன்னா நியூயார்க் ஸ்டேட்டன் ஐலண்டில் இருக்கும் புத்த ஆலயம், மன் ஹாட்டனில் இருக்கும் புத்த மையம், டான் ஜானியாவில் இருக்கும் மையம் ஆகியவற்றையும் இவர்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள்.
இங்குள்ள போதிமரம் சிறுசெடியாக, அனுராத புரத்திலுள்ள ஸ்ரீ மகா பொதியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு  நடப்பட்டிருக்கிறது. நட்டவர் வேறயாரு நம்ம முதலியார்தான்.
Bodhi Tree
சரி எல்லாம் சரி முஸ்லீம் கட்டியது என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
Relic Chamber
இந்த வளாகத்திலேயே மிக முக்கியமான சிம்மமலாக்கா சந்நிதானத்தைக் கட்டுவதற்கு  பெருமளவில் ஒரு முஸ்லிம் உதவியிருக்கிறார். அதனை உருவமைத்தது ஜாப்ரி பாவாதான். பல கட்டடங்களை இவர்தான் வடிவமைத்தார் என்பதைத்தான் முன்னமே பார்த்தோமே. இந்த மண்டபம் அருகில் உள்ள பெய்ரா என்ற ஏரியில் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ளது.


இதுல இன்னொரு முக்கிய தகவல் இங்குள்ள புத்தர் சிலை முழுவதுமாக ஜேட் என்று சொல்லப்பட்ட சிறப்பான விலைமதிப்புள்ள கல்லால் செய்யப்பட்டது. நம்மூர் மரகத விநாயகர் மாதிரி .பார்த்து முடித்து வெளியே வந்தோம்.
Image result for Jade Buddha in Colombo
Jade Budha
“என்ன சார் சாப்பிட சரவணபவன்  போலாமா?”
“அம்ரி நிஜமாவா சொல்ற இங்க சரவணா பவன் இருக்கா?”

- தொடரும்.

Thursday, March 30, 2017

இயக்குனர் மகேந்திரனின் வெற்றிகளும் தோல்விகளும் !!!!!!!

Image result for director mahendran movies

சினிமாவும் நானும், இயக்குனர் மகேந்திரன் பகுதி 3 

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post.html

இந்தப்புத்தகத்தில் ஆரம்ப முதல் முடிவு வரை மகேந்திரனைப் பற்றி ஏராளமான விவரங்கள் அதுவும் நமக்கு அல்லது குறைந்த பட்சம் எனக்குத் தெரியாத பல விவரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதோ.
Image result for director mahendran movies
நெஞ்சத்தைக் கிள்ளாதே
1.   மகேந்திரன் என்றால்  நமக்கு ஞாபகம் வருவது முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் தான். ஏனென்றால் இவையெல்லாமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். மகேந்திரன் முதல் படம் எது என்றால் "முள்ளும் மலரும்" என்று எல்லோரும் சொல்வீர்கள் . ஆனால் அது அவர் முதன் முதலில் இயக்கிய படம்தான். அதற்கு முன்பு 25 படங்களுக்கு மேலாக கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
2.   நடிகர் திலகம் சிவாஜி நடித்து வெளிவந்த 'தங்கப்பதக்கம்', மகேந்திரனின் கதைதான். அதற்கு மிகச்சிறந்த வசனங்களை எழுதியதும் அவர்தான். தங்கப்பதக்கம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு அதனைத் வந்து பார்த்த சிவாஜி ஆசைப்பட்டு பின்னர் திரைப்படமாக வந்தது. தங்கப்பதக்கம், கன்னடத்தில் ராஜ்குமார் நடித்தும் “ஜஸ்டிஸ்  செளத்ரி” என்று தெலுங்கில் NT.ராமராவ் நடித்தும், இந்தியில் ஷக்தி என்ற பெயரில் திலீப் அமிதாப் நடித்தும் வெளிவந்தது. எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Image result for Thanga Pathakkam

3.   சிவாஜி நடித்த "ரிஷிமூலம்" படத்தின் கதை வசனம் மகேந்திரன் தான், இதுவும் வெற்றிப்படமே.
4.   இவை தவிர, வாழ்ந்து காட்டுகிறேன். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரப்பிள்ளை, நிறைகுடம், மோகம் முப்பது வருஷம் போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதைவசனம் இவர்தான்.
5.   சினிமாவில் வெற்றிப்படங்கள் எடுப்பதைவிட பெருமைக்குரிய படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் படங்கள் உலகம் செல்லும் என்கிறார்.
6.   சினிமாவின் அபாயக் கவர்ச்சியில் படைப்பாளிகள் அமிழ்ந்து போகக் கூடாது என்கிறார்.
7.   இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய இயக்குநர் சத்யஜித்ரே என்று சொல்லி அவர் இயக்கிய 'பதர் பஞ்சாலி' படத்தை சிலாகிக்கிறார்.
8.   அவருக்கு மிகவும் பிடித்த மற்றொரு  இயக்குநர் திரிபுராவைச் சேர்ந்த "ஜோசப் புலிந்தநாத்".
9.   உலக அளவில் அவரை ஈர்த்தவர்கள், இத்தாலிய இயக்குநர், பை சைக்கிஸ் தீவ்ஸ் எடுத்த விக்டோரியா டிசிகா (1902-1974) அகிரா குரோசாவா, சார்லி சாப்ளின்.
10.                தமிழில் பெருமைக்குரிய படமாக அவர் குறிப்பிடுவது 1948ல் வெளிவந்த "சந்திரலேகா".
11.                தமிழில் பிடித்த இயக்குநர்கள், ஸ்ரீதர், பாரதிராஜா, வீணை பாலச்சந்தர் (அந்த நாள்) பாலு மகேந்திரா, மணிரத்னம் & பாலா.  
12.                அவருக்குப்பிடித்த படைப்பாளிகள், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயன்.
13.                முள்ளும் மலரும் படத்தை ஒரு இயக்குநராக அல்லாது ஒரு ரசிகனாய் எடுத்தேன் என்று சொல்லி அதனால்தான் அது ஒரு நல்ல யதார்த்த சினிமாவாக அமைந்தது என்கிறார்.
14.                அமெரிக்காவில் பிராட்வே ஷோ என்று இன்னும் பிரபலமாக விளங்கும் நாடகத்துறை தமிழ்நாட்டில் அழிந்து போனதைக் குறித்து ஆதங்கப்படுகிறார்.
15.                நாவலைப் படமாக்கும் கலை வளர வேண்டும் என்று சொல்லும் இவரின் முள்ளும் மலரும், உமாசந்திரன் எழுதிய கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் உதிரிப்பூக்கள் மூலம் புதுமைப்பித்தனின் "சிற்றன்னை" என்ற கதை.
16.                மகேந்திரன் இயக்கிய, மெட்டி, கண்ணுக்கு மை  எழுது, ஊர்ப் பஞ்சாயத்து ஆகியவை தோல்வி அடைந்தன.
17.                இவரின் நெஞ்சத்தைக் கிள்ளாதே 1 வருடம் ஓடி மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.
18.                மோகன் சுகாஷினி ஆகியோர் இந்தப் படத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டனர்.
19.                பொருந்தாக் காதலை முன்னிலைப் படுத்தியதால் இவரது "பூட்டாத பூட்டுக்கள்" தோல்வியடைந்தது என்கிறார்.
20.                மகேந்திரனின் முதல் வேலை 'இன முழக்கம்' என்ற திமுக பத்திரிகையில் உதவி ஆசிரியர்.
21.                மகேந்திரன் 3 1/2 வருட காலம் துக்ளக்கில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். அதுவே தன் வாழ்வின் மகிழ்ச்சி மிக்க காலங்கள் என்கிறார்.
22.                முள்ளும் மலரும் படத்தின் 'செந்தாழம்பூவே' பாடலை எடுக்க தயாரிப்பாளர் வேணு செட்டியார் மறுத்துவிட, கமல்ஹாசன் உதவியுடன் தான் அது படமாக்கப்பட்டது.
Image result for kai kodukkum kai

23.                கைகொடுக்கும் கையில் ஒரு முக்கிய இடத்தில் தயாரிப்பாளர் கதையினை மாற்றியதால் தான் தோல்வியடைந்தது என்கிறார்.
24.                மகேந்திரன் கடைசியாக இயக்கிய படம் "சாசனம்". NFDC -யால் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் சென்னையில் மட்டுமே திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நாடெங்கிலும் திரையிடப்படாததற்கான காரணம் இவருக்கே தெரியவில்லை.
25.                இளையராஜாவின் இசை தன் படங்களின் ஜீவன் என்கிறார்.
26.                ரஜினிகாந்தின் எளிமையை வெகுவாகப் புகழ்கிறார்.
27.                இலங்கையின் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களுக்கு திரைப்படம் எடுக்க மூன்று மாதம் பயிற்சி எடுத்தார். துரதிர்ஷவசமாக அவர்கள் அனைவருமே போரில் கொல்லப்பட்டுவிட்டனர்.
28.                தனது யாழ்ப்பாணப் பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர் அவர்களைச் சந்தித்தது மிகவும் மறக்க முடியாத நிகழ்வு என்கிறார்.
மகேந்திரன் என்ற இயக்குநர் தமிழ் நாட்டின் கொடை என்பதில் சந்தேகமில்லை. தமிழ்த் திரையுலகம் அவரை இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.


- முற்றும்.