பள்ளியில்
வரும் காதல் :
1. முதல்ல
காதல்னா என்னான்னு தெரியுமா? சும்மா
நானும் காதலிக்கிறேன்னு பண்ணக்கூடாது.
2.
இந்த வயசுல வர்றது காதலே இல்லை, சும்மா
ஒரு இனக் கவர்ச்சி (Infatuation) அது சீக்கிரம் போயிரும்.
3. உங்களால
படிக்க முடியாது, வேற எதலயும்
கவனம் செலுத்த முடியாது, உங்க வாழ்க்கையில முக்கியமான கட்டத்துல
எல்லாத்தையும் இழந்து, திசை திரும்பிப் போயிரும்.
4.
நீ அவள்ட்ட பேசக்கூட முடியாது, இதுல எங்க போய் காதலிக்கிறது.
5. +2 முடிஞ்சவுடன், நீ எங்க போவியோ, அவ எங்க போவாளோ, இதெல்லாம் நடக்க முடியாது.
6. இந்தக்
காதல் பெரும்பாலும் கல்யாணத்துல முடியாது, ஏன்னா அதுக்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு. அதுக்கு நடுவுல என்ன
வேணாலும் நடக்கும்.
![]() |
7. நீயே
பெற்றோர் காசில சாப்பிட்டுட்டு இருக்க, ஒருவேளை உன்னை நம்பி ஒருத்தி வந்தா, நீ அவளைப்
பாதுகாக்க முடியுமா? சாப்பாடு கொடுக்க முடியுமா?
8. எந்தப்
பெண்ணும் உனக்காக நீண்ட நாள் வெயிட் பண்ண முடியாது புரிஞ்சிக்க.
கல்லூரிக்காதல்:
1. இந்தச்
சமயத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கும்னு நீ நினைக்கலாம். ஆனா முதிர்ச்சி இல்லைனு பின்னால தெரியும்போது அதிர்ச்சியா இருக்கும்.
2. ஒரே
வயசுல இருக்கறவங்களை காதலிச்சா
பெருங்கஷ்டம். ஏன்னா ஆண்களுக்கு 28-30 வயசுலதான் கல்யாணம்
பண்ண முடியும். ஆனா பொண்ணுங்களுக்கு 25-26 வயசுக்குள்ள
பெரும்பாலும் ஆயிரும்.
3. நீ
படிச்சு முடிச்சு, நல்ல ஒரு
வேலைக்குப்போனாத்தான் பொண்ணே கிடைக்கும். ஆனா அந்தப் பொண்ணுக்கு அப்படியில்லை உடனே
மாப்பிள்ளை கிடைச்சுரும்.
4. காதல்
தோல்வினா அது ஆண்களுக்கு மட்டும்தான் தெரிஞ்சிக்க. பெண்கள் ஈஸியா மறந்துட்டு
வேறொருவனை கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டி பெத்துருவாள்க.
5. அதோட
பொண்ணுங்க ரொம்ப நெருங்கிப் பழகுவாங்க,
ஆனா காதலிக்கிறேன்னு சொல்லமாட்டங்க, ஏன்னா
ஒரு நாள், வேற நல்ல ஆள் கிடைச்சா, நான் ஒரு நட்பாத்தேன் பழகினேன்னு சொல்லி தப்பிச்சிரலாம்ல.
6.
பொண்ணுங்கல்லாம் ரொம்ப உஷாரு, நல்ல மாப்பிள்ளை
வந்தா டக்குனு OK சொல்லிருவாங்க. அப்புறம் உம்பாடு திண்டாட்டம் தான்.
7. முக்கியமா
அவதான் பேரழகின்னு நெனைப்பே, அப்புறம் அப்படியெல்லாம்
இல்லைன்னுகொஞ்ச நாள்ள தெரிஞ்சிறும், அதனால கொஞ்சம்
அவசரப்படாதே.
8. அதோட
பொண்ணுங்களோட நல்லகுணம் மட்டும்தான் உனக்கு அப்போ தெரியும்,
அப்புறம் பெரிய டார்ச்சராயிரும்.
9. அப்படியே
தப்பித்தவறி கல்யாணம் நடந்தாலும் பெரும்பாலும் தோல்வியில் முடியும் அதுக்கு காரணங்களை
கீழே தர்றேன்.
a)
உன் குடும்பத்தை
அண்டவிடமாட்டா. உன்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணி, அடிமையா நடத்துவா.
b)
அவளோட எல்லா
விஷயங்களும் விவகாரங்களும் அப்புறம்தான் உனக்கு தெரியவரும்.
c)
ஐயையோ அவ அழகே
இல்லைனு தெரிஞ்சிரும், ஏன்னா கொஞ்சம்
கொஞ்சமாக அகத்தின் அழகு முகத்தில் தெரிய ஆரம்பிச்சிரும்.
d)
அதைவிட அழகான,
அம்சமான, அறிவான பொண்ணுகளை பின்னால
பார்க்கும்போது, அவசரப்பட்டுட்டோமோன்னு தோணும்.
இதையெல்லாம்
யோசிச்சுப்பாத்து கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்கன்னு சொல்றேன். அதோட
காதல்னு சொல்றது சும்மா ஒரு மாயைதான். எல்லாமே உடல்ல சுரக்கிற எஸ்ட்ரோஜன் செய்யற வேலை,
காமத்தின் வெளிப்பாடுதான். அது சீக்கிரமே உங்களுக்குப் புரிஞ்சிரும்.
மகேந்திரன்
:
யார்ரா இவன், பரதேசி, என்னடாது லூசு மாதிரி உளர்ற, எந்தக்காலத்தில இருக்க, நீ அமெரிக்கா
போனதும் இங்கெல்லாம் எப்பவோ மாறிப்போச்சு. காதலாவது கத்திரிக்காவாவது, இப்பெல்லாம்
தேவைப்பட்டா ஸ்டிரைட்டா...
பரதேசி
:
நல்ல வேளைப்பா, நான் இப்படி எதுலயும்
மாட்டாம ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு ராசாத்திகளைப் பெத்து ஒரு ராசா மாதிரியே
வாழறேன்.
![]() |
என்னடா
கதை விடற,
அப்ப அந்த அஞ்சாவது படிக்கும்போது காதலிச்ச கதிஜா, எட்டாவது படிக்கும்போது காதலிச்ச பொன்னுத்தாயி, பத்தாவது படிக்கும்போது ராதிகா, +2-வில சரோஜா, காலேஜ்
படிக்கும்போது காதலிச்ச ரேகா, இதெல்லாம் காதல் இல்லையா.
டே
மகேந்திரா, என்னோட உண்மையான காதல்,
கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும் 20 வயசானப்புறந்தாண்டா
வந்துச்சு.
ஐயையோ
இதென்னடா புதுக்கதை, யார்ரா அவ,
என்ட்ட கூட சொல்லலியே. சீனிகம் கதைமாறி இருக்கு.
அடச்சீ
நீ வேற,
அவள் வேற யாருமில்லை .என்னோட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு
இருக்கிற என்னோட பாரியாள்தான்டா.
முற்றும்








