| சங்கங்களின் சங்கமம் | 
FETNA -2018 பகுதி 6
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_30.html
மாலையில்
சங்கங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் வந்திருந்த அனைத்து சங்கங்களும் தங்களுடைய
பேனர்களை பிடித்து ஆட்டபாட்டத்துடன் ஊர்வலமாய் வந்தனர். நியூயார்க் தமிழ்ச்
சங்கத்திலிருந்து அதில் பங்கு கொண்டோம். அப்போதுதான் இத்தனை தமிழ்ச்
சங்கங்களிலிருந்து இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.
| பூழிப்பாவை நாடகம் | 
பூழிப்பாவை
நாடகம் துவங்கும்போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நவீன நாடகம்
என்பதன் அறிமுகமோ அனுபவமோ பெரும்பாலோருக்கு இல்லை. இதன் வடிவம் கிட்டத்தட்ட ஒரு
நவீன ஓவியம் போன்றது. பார்ப்பவரின் கற்பனைத்திறனுக்கும் சவால் விடுவதுதான் இரண்டு
வடிவங்களும். பார்க்கிறவரின் கற்பனைத்திறனும் படைப்பவரின் கற்பனைத்திறனும் ஒரு
நேர்கோட்டில் சந்திக்கும் போது தான் அதன் பொருள் என்னவென்று விளங்கும். தமிழ்ச்சங்க நண்பர்களுடன்
உட்கார்ந்து   இருந்தேன்.
என்ன
நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் இருந்த நாங்கள்  அனைவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தோம்.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது.
நடிகர்களின் நடிப்பு ஒரு உயிர்ப்புத் தன்மையுடன் இருந்தது. இது எங்கள்
அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம். 
| சஞ்சய் சுப்ரமணியன் | 
அது
முடிந்தபின் கர்நாடக இசைக் கலைஞரான சஞ்சய் சுப்ரமணியனின் தமிழிசைக் கச்சேரி
நடந்தது. அரங்கில் கொஞ்சப்பேரே இருந்தாலும் இருந்தவர் அனைவரும் நன்கு ரசிப்பவராகவே
தெரிந்தது. கூட்டமில்லாத நிலையினை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சஞ்சய் அவர்கள்
நல்ல இசையினை அனுபவித்துக் கொடுத்தார். ஆனால் தமிழிசை என்றிருந்தாலும், பெரும்பாலும் பக்தியிசைப் பாடல்களாவே இருந்தன . சரியாக இரவு 11 மணிக்கு அவர் பாதி பாடிக் கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கிகள்
நிறுத்தப்பட்டன. ஆனாலும் கடைசிப் பாடலை ஒலிபெருக்கி இல்லாமலேயே பாடி முடித்தார்.
அமெரிக்காவில் நேரக்கட்டுப்பாடு மிக முக்கியம். நியுஜெர்சியில் நடந்த இளையராஜா
நிகழ்ச்சியிலும் இப்படித்தான் சரியாக 10 மணிக்கு எல்லாவற்றையும்
 நிறுத்திவிட்டார்கள்.
எல்லோரும் திகைத்து நிற்க மனோ வந்து குட்நைட் சொன்னபோதுதான் கச்சேரி
முடிந்துவிட்டது என்று தெரிந்தது. இதனைப்பற்றி ஏற்கனவே உங்களுக்குச்
சொல்லியிருக்கிறேன். 
சஞ்சய்
சுப்பிரமணியத்தின் இசையோடு ஃபெட்னா 2018 இனிதே நிறைவு
பெற்றது. 
வட
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை (Federation of Tamil Sangams of North
America) வின் 31-ஆவது ஆண்டுக் கூடுகை
இதுவாகும். ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்தக் கூடுகை. இது தவிர மாதாந்திர இலக்கியக்
கூட்டம் தொலைபேசியில் கான்ஃபிரன்ஸ் அழைப்பாக நடக்கும். இந்த ஆண்டு ஃபெட்னா வை பொறுப்பேற்று நடத்தியவர்கள் டல்லாஸ் டெக்சஸில் செயல்படும் மெட்ரோப்ளக்ஸ்
தமிழ்ச்சங்கம். இதற்கு பக்கத்திலுள்ள கீழ்க்கண்ட மற்ற சங்கங்கள் உதவியாக இருந்தன.  
1)  
டல்லஸ்  தமிழ் மன்றம். 
2)  
சான் ஆன்டானியோ  தமிழ்ச்சங்கம்.
3)  
ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.
4)  
கிரேட்டர் ஹியூஸ்டன் தமிழ்ச் சங்கம்
மற்றும் தமிழ்ப்பள்ளி. 
5)  
பாரதி கலை மன்றம் மற்றும் ஹியூஸ்டன்
தமிழ்ப்பள்ளி. 
6)  
மெட்ரோபிளக்ஸ் தமிழ் அக்காடெமி.
7)  
காப் பெல் தமிழ் மையம். 
8)  
பிளானோ தமிழ்ப்பள்ளி. 
9)  
கொங்கு தமிழ்ப்பள்ளி. 
10)              
வித்யா விகாஸ் பள்ளி. 
11)              
பாலா தத்தா தமிழ்ப்பள்ளி. 
12)              
அவ்வை தமிழ் மையம். 
13)              
இலங்கைத் தமிழ் சங்கம்.
வந்திருந்த
முக்கிய விருந்தினர்கள்.
1)  
முனைவர் மருதநாயகம் தமிழ்ப்
பேராசிரியர்.
2)  
திரு மம்மது - இசை ஆய்வாளர்.
3)  
பேராசிரியர் ஞான சம்பந்தன். 
4)  
சுப வீரபாண்டியன். 
5)  
பூவுலகு சுந்தர்ராஜன். 
6)  
எழுத்தாளர் சு.வெங்கடேசன்.
7)  
திருமதி ரேவதி - இயற்கை விவசாய
ஆராய்ச்சியாளர். 
8)  
Dr.
சுந்தர பாலசுப்ரமணியம் - திருமூலர் பிரணாயாமா. 
9)  
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். 
10)              
நடிகர் கார்த்தி. 
11)              
இசையமைப்பாளர்  ஹிப் ஹாப் ஆதி. 
12)              
பாடகர்கள் கார்த்திக், சக்திஸ்ரீ, டிரம்ஸ் சிவமணி. 
13)              
ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது மற்றும்
இளையராஜா.
14)              
கவிஞர் அறிவு மதி. 
15)              
கவியமூர்த்தி, ஐ.பி.எஸ்.
16)              
பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். 
17)              
கர்நாடக இசைப்பாடகர் சஞ்சய்
சுப்ரமணியம். 
18)              
நடனத்தாரகை - நர்த்தகி நடராஜ். 
19)              
நாட்டுப்புற இசைக்கலைஞர்கள்  முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த். 
20)              
மணல் மகுடி இயக்குநர் முருகபூபதி.
21)              
தமிழிசைப் பாடகர்கள். ஆக்காட்டி
ஆறுமுகம்,
அந்தோணி தாசன். மற்றும் சுகந்தி கருப்பையா. 
22)              
முனைவர் G விஸ்வநாதன், வேந்தர் VIT பல்கலைக்கழகம்.
23)              
நடிகர்கள் ஆரி, வைபவ். 
24)              
உலகத்தமிழ் அறிஞர்கள் Dr. கார்கா சட்டர்ஜி, Dr. ஃபிரான்சஸ் ஹாரிசன், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் முனைவர் சுபாஷினி. 
பேரவை
நிகழ்வில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை கீழே தருகிறேன். 
1)  
முக்கிய அரங்கில் தஞ்சைப் பெரியகோவிலை
பிரமாண்டமாக வடிவமைத்தது மிகவும் சிறப்பு. 
2)  
உணவு ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.
குறிப்பாக ஒவ்வொரு நேரமும் மதுரை, தஞ்சாவூர், சென்னை
உணவு என்று அசத்தினர்.  
3)  
ஒளி,ஒலி அமைப்புகள்
மிகச்சிறப்பாக இருந்தன.
4)  
கவிஞர் அறிவுமதியின் வரிகளுக்கு
நர்த்தகி நடராஜன் அவர்கள் நடனமும், திருக்குறள் நடனமும்,
'ழ' பாடல் நடனமும் மிகவும் நன்றாக இருந்தன. 
5)  
தமிழில் கையழுத்துப் போட்டு
நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை நல்ல ஐடியா. 
6)  
வந்திருந்த விருந்தினர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட தின்பண்டங்கள், பழங்கள் அடங்கிய பை நல்ல முயற்சி. 
7)  
சிறுவர் சிறுமியர் மற்றும் பதின்ம
பிள்ளைகளை விழா முழுவதும்  அறிவிப்புகள்
செய்யப்பயன்படுத்தியது சிறப்பு. 
8)  
மிகவும் சிறப்பாக நடந்த TEF Talk நிகழ்ச்சி நன்றாக அமைந்தது. 
9)  
வரவேற்பு அமைப்புகள் மற்றும் ஃபோட்டோ
பூத்கள் நன்றாக இருந்தன. 
10)              
சு.வெங்கடேசன், கலியமூர்த்தி ஐ.பி.எஸ், ஹிப்ஹாப் தமிழா ஆகியோரின்
உரை மிகவும் அருமையாக இருந்தன. 
குறையென்று
சொன்னால்,
ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்ததால் எந்த நிகழ்ச்சியையும் முழுமையாக
நடத்த முடியாமல் நேரத்தட்டுப்பாடு இருந்தது. அதனைத் தவிர டல்லஸ், டெக்சஸில் நடந்த ஃபெட்னா பேரவை நிகழ்ச்சி ஒரு சிறப்பு மாநாடு என்பதில்
சந்தேகமில்லை. 
- முற்றும் .
மீண்டும் 2019
ஆம் ஆண்டு சிகாகோவில் நடக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் ஃபெட்னா 2019ல் சந்திப்போம்.
 
தொகுப்பு அருமை...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஆஹா...
ReplyDeleteநன்றி நிஜாமுதீன்.
Delete
ReplyDelete//வந்திருந்த முக்கிய விருந்தினர்கள்.//
வேறு ஒருவர் இந்த பதிவை எழுதி இருந்தால் அந்த பதிவில் உங்கள் பெயர்
வந்திருந்த முக்கிய விருந்தினர்கள். லிஸ்டில் வந்திருக்கும்
பேசுவதற்கு திணறி முக்கிய விருந்தினர் என்று வந்திருக்கும் மதுரைத்தமிழா.
Deleteசிறப்பான தொகுப்பு
ReplyDeleteநன்றி முத்துச்சாமி.
Delete