Thursday, February 16, 2017

மயிலே மயிலே உன் தோகை எங்கே ?


எழுபதுகளில் இளையராஜா, பாடல் எண்: 32

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
          http://paradesiatnewyork.blogspot.com/2016/05/blog-post_5.html

Image result for கடவுள் அமைத்து வைத்த மேடை திரைப்படம்

1979ல் வெளிவந்த "கடவுள் அமைத்த மேடை' என்ற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல். பாடலை முதலில் கேளுங்கள்.

இசையமைப்பு:
Image result for கடவுள் அமைத்த மேடை'

          இளையராஜாவின் இசையில் வழக்கமாக பயன்படுத்தும் லீட் கிட்டார், ரிதம் கிட்டார், பேஸ் கிட்டார், கீபோர்டு, புல்லாங்குழல், வயலின் குழுமம், டிரம்ஸ், கட சிங்காரி, எஃபக்ட்ஸ், மிருதங்கம் ஆகிய அனைத்து இசைக்கருவிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.       ஒரு ரயில் பயணம் போல் கிட்டாரின் ஸ்டிரம்மிங்கில் ஆரம்பிக்கிறது முன்னணி இசை (Prelude), அதோடு சீப்பு இசை சேர்கிறது.   அதன்பின் புல்லாங்குழல் இதமாக வருடி, வயலின் குழுமம் அப்படியே மனநிலையை உயர்த்துகிறது. ஒற்றை வயலினின் முத்தாய்ப்போடு ஆண்குரல் சேர்ந்து மிருதங்கத்துடன் போட்டிபோட்டு "மயிலே மயிலே உன் தோகை எங்கே ?" என்று ஆரம்பித்து முழு பல்லவியையும் பாடி முடிக்க அதற்கு பதில் சொல்லும் விதத்தில் பெண்குரல் சிறிதே மாற்றம் செய்த பல்லவியைப் பாடி முடிக்கிறது. அதுவரை அமைதியாக இருந்த லீட் கிடார் தன் இடையிசைய (Interlude) ஆரம்பிக்க அதற்கு உற்ற தோழனாய் பேஸ் கிட்டார் அதனைத்  தடவித்தழுவி ஒலிக்கிறது. அதன்பின்னர் மீண்டும் வயலின்  குழுமம் உயிர் பெற்று உச்சஸ்தாயிற்குப்போக, ஒற்றை வயலின் எழுந்து அதை  அடக்குகிறது. பின்னர் அவ்வளவு இசையையும் பாராட்டுவது போல், சரணம் ஆண் குரலில் ஆரம்பிக்க மறுபடியும் மிருதங்கம் சேருகிறது. முதலிரண்டு வரியை ஆண்பாட அடுத்த இரண்டு வரியை பெண்பாட கடைசி இரு வரியை ஆண் பாட முதல் சரணம் முடிகிறது.  

          இரண்டாவது இடையிசை முற்றிலும் வேறாக ஒலிக்கிறது. அதுவரை பின்னணி இசையில் இருந்த கீபோர்டு இப்போது முன்னணி பெற்று தன்  கடமையை சிறப்பாகச் செய்ய, இளையராஜாவின் ஆத்மார்த்த ரிதம் டீம் இணைந்து பட்டையைக் கிளப்புகிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த இசை சங்கமத்துடன் புல்லாங்குழல் சேர அத்தனை வயலின் இசையையும் மீறி மேலேறி ஒற்றை வயலின் சாந்தப்படுத்த இரண்டாவது சரணம் ஆரம்பிக்கிறது. பெண் குரலில், "மஞ்சள் மாங்கல்யம்" என்று ஆரம்பித்துப்பாட அடுத்த 2 வரிகளை ஆண்பாட பின் பெண் குரல் பாடி முடிக்கிறது. அதன் பின்னர் பல்லவியை ஆண் குரலும் பெண் குரலும் மாறி மாறிப்பாட பாடல் முற்றுப் பெறுகிறது.

பாடலின் வரிகள்:

மயிலே மயிலே உன் தோகை இங்கே 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 

மயிலே மயிலே உன் தோகை இங்கே 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
ஒரு சொந்தமல்லவோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க 
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
 
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
 
கனி வாய் மலரே பல நாள் நினைவே
 
வரவா தரவா பெறவா...நான் தொடவா
 

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழலி தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி 
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
 
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்
 

மயிலே மயிலே உன் தோகை இங்கே
 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே

Image result for Vaali and ilayaraja

          பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இளையராஜா வாலியின் உறவு ராஜாவின் ஆரம்பத்திலேயே துவங்கிவிட்டது, வைரமுத்துவை உதறித் தள்ளிய பின் அது மிகவும் பலப்பட்டது. இந்தப்பாடலைப் பொறுத்த மட்டில் கவிஞர் அலட்டிக் கொள்ளாமல் எழுதியது போலத் தெரிகிறது. பாடலிலே சிறப்பம்சம் என்று சுட்டிக் காட்டுவதற்கு ஒன்றும் இல்லையென்றாலும், பாடல் வரிகள் பெரும்பாலும் எதுகை மோனையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மயில், ஒயில், குளிர், தளிர், வாராதோ, மலராதோ என்று பாடல் முழுதும் பார்க்கலாம். ஒருவேளை அது தான் சிறப்பு என்று நினைக்கிறேன் மற்றபடி கவிஞரின் கவித்துவ பஞ்ச் இங்கு இல்லை.

பாடலின் குரல்கள்:
Image result for SPB with Jency
Ilayaraja with Jency
          SPB-யின் இளமைக் காலக்குரல் மிக இனிமையாக இருக்கிறது. நீட் சிங்கிங் என்று சொல்லலாம். ஜென்சியின் குரலில் தேன் ஒழுக்கிறது. மழலைக் குரலில் விடலைப் பெண்ணின் காதலை வெளிப்படுத்தும் குரல். "உன் சொந்த மல்லவோ என்று பாடும்போது உன் என்பது உன்னு என்று ஒலிக்கிறது. அதுவும் அழகாகவே இருக்கிறது.
ஹம்சத்துவனி ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல். சோர்ந்திருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடல் சூழலை மாற்றிவிடும்.மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம்.

தொடரும்.

          

15 comments:

  1. இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் உண்டோ? எனினும் நுட்பமாக அவரது திறமையை விவரிக்கும்பொழுது இன்னும் அதிகமான போதை உண்டாகிறது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி இராய செல்லப்பா .

      Delete
  2. உங்களின் ரசனை தித்திக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. அப்ப சர்க்கரை வியாதி வந்ததுக்கு இதுதான் காரணமோ?

      Delete
  3. நண்பர் ஆல்ஃபி,

    பெரிய மகத்துவமான பாடல் கிடையாது. படு சுமார்தான். படம் வெளிவந்த சமயத்தில் கொஞ்சம் கேட்டதுண்டு. ஆனால் உங்கள் எழுத்து ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்களை போன்றவர்களின் சுவாரஸ்யமான எழுத்துக்களால் தான் இளையராஜாவின் பல சுமார் பாடல்கள் கூட இன்னும் நினைவு கூறப்படுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. காரிகனின் கருத்து எப்போதும் தனிக்கருத்துதான் , ஆனாலும் உங்களையும் என்னையும் இணைப்பது இளையராஜாவின் இசைதானே. நன்றி நீண்ட இடை வெளிக்குப்பின் வந்ததற்கு.

      Delete
  4. ஹையோ எத்தனை நாளாச்சு இந்தப் பாடலைக் கேட்டு!! அருமையான பாடல்!! உங்கள் ரசனையும் பிரமிக்க வைக்கிறது இதற்கு முன்னும் நீங்கள் பல பாடல்களைக் குறித்து இப்படி விரிவாக இசைக்கருவிகளைப் பற்றியும் நுணுக்கமாக எழுதியதுண்டு அதே போன்று இதிலும்...அருமை!!!

    இந்தப் பாடல் ஹம்சத்வனி...சரியே..இதெ போன்று மலர்களே நாதஸ்வரங்கள் என்ற பாடலும் இந்த ராகம்தான்....மயிலே மயிலே, ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம், வா வா கண்ணா வா, இன்னும்...

    இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த பாடல் ஹம்சத்வனி அல்ல..மலலாரிதான் கம்பீர நாட்டையில் வரும் என்பதால் ஒரு காதல் பாடல் கம்பீர நாட்டையில், திலங்க் எனும் ராகத்தின் சாயலில் ஹிந்துஸ்தானி ராகமான ஜோக் எனும் ராகத்தின் சாயல் இழையோட அமைத்திருப்ப்பார். திரை இசையில் இரண்டு மூன்று ராகங்கள் கலந்து வருவது என்பது இயல்பு. ஸ்வர ஃப்ரேஸ்களின் பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் தானே..!!!.

    சொர்கமே என்றாலும் பாடல் ஹம்சநாதம் ராகம். நிலா காயும் நேரம் சரணம் பாடல் சங்கராபரணம் ராகத்தில் அமைந்தது.. இவை என் சிற்றறிவுக்கு எட்டியது..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா .தவறுகள் நீக்கப்பட்டுவிட்டன .கூகிள் பையனை எல்லா சமயத்திலும் நம்பக்கூடாது என்பது படிப்பினை.

      Delete
  5. Very few songs jency has sung. but the surprising thing is all of them are hits. This
    song especially has a nice rhythm, the mirudhangam is enjoyable and you can hear it many times but still it will look fresh

    ReplyDelete
  6. அருமை அருமை நண்பரே..
    பாடலும் உங்கள் ரசனையும் அதை வார்த்தை வரிகளில் வடித்ததும்..
    படிக்கும் போதே பாடலை கேட்ட ஒரு சுகம்.
    இந்த எனக்கு பிடித்த பாடல் தொகுப்பில் இருக்கிறது.. ஆனால் பொது வெளியில் மிகவும் கேட்டதில்லை .

    வாழ்க வளமுடன்..

    ஒரு சிறு சந்தேகம் ..
    பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி -->
    பூங்குழலி தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி??
    சந்தம்? சரியாக இருக்குமா!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சந்தம் சரியாக வராதுதான் .பாடலில் பிழையில்லை , தட்டச்சில்தான் பிழை .சரி செய்துவிட்டேன் .
      நன்றி நண்பா .

      Delete
  7. நன்றி முனைவர் இரா.குணசீலன்.

    ReplyDelete
  8. அருமையான பாடல். உங்களின் ரசிப்புத்திறன் மேலும் மெருக்கூட்டுகின்றது பாடலை!

    ReplyDelete