படித்ததில்
பிடித்தது.
விசுவாசமின்
சகவாசம் - விசு" awesome "
வெளியீடு
-ழகரம் புத்தகச்சோலை - சென்னை
கிடைக்குமிடம்
: டிஸ்கவரி பேலஸ், KK நகர் வெஸ்ட்,
சென்னை.
(www.discoverybookpalace.com)
கலிஃபோர்னியாவில் வசிக்கும் நண்பர் “விசுவாசம் கர்னோலியஸ்” எழுதிய
புத்தகம் இது. இந்தப்புத்தகம் அவர்தம் பதிவுகளைத் ( www.visuawesome.com ) தொகுத்து புத்தகமாக்கி, அவர் படித்த வேலூர் ஊரிசுக்
கல்லூரியில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் VIT-யின் நிறுவனர் கல்விக்கோ விஸ்வநாதன். ஊரிசுக் கல்லூரியின் முதல்வரும்,
விசுவின் நண்பர்களும் பதிவுலக ஜாம்பவான்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நாலு சுவர்களுக்குள் நடக்கும் இயல்பான நகைச்சுவை அள்ள அள்ளக் குறையாமல் விசுவுக்கு
கைவசம் வருகின்றது. நிறைய
பதிவுகள் வெடிச்சிரிப்பை வரவழைத்தன. ஒவ்வொரு கட்டுரைகளுக்கும்
ஒரு கார்ட்டூன் இருந்தது (வாழ்த்துக்கள் தமிழ்) குறிப்பாக அட்டைப்படம் அட்டகாசம். பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களை
அப்படியே போட்டது நல்ல ஐடியா .பின்னூட்டங்களில் பெண்
ரசிகைகள் அதிகம் வருவது பொறாமையாக இருந்தது.உள்ளே
இருக்கும் கார்டூன்களில் சிலவற்றையாவது முழுப்பக்கத்தில் வண்ணத்தில் கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் "விசுவின் சகவாசம், படிப்பவர்க்கு ஒரு சுகவாசக அனுபவம் தரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப்புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரையை அப்படியே
கீழே கொடுக்கிறேன்
"விசு" என்றாலே புன்னகையை வரவழைக்கும் பதிவுகளின் நினைவுகள் கொப்பளித்து
வரும். விசுவையும் அவர் குடும்பம் முழுவதையும் பல வருடங்களாக அறிவேன்.
விவரம்
தெரியாத வயதில் தந்தையை இழந்து, எதுவும் புரியாத நிலையில் ஹாஸ்டல்களில் படித்து வளர்ந்தவர்
விசு. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”, என்ற முதுமொழி இவருக்கு
நன்றாகப் பொருந்தும். இவருடைய தாயார் திருமதி எஸ்தர் கர்னோலியஸ், தன் பிள்ளைகளை விட
பிற அனாதைப் பிள்ளைகளையும், பார்வையற்ற குழந்தைகளையும் அரவணைத்து அவர்களுக்கு பள்ளிகளையும்,
விடுதிகளையும் கட்டியவர். அவற்றையெல்லாம் நேரில் பார்த்து அசந்திருக்கிறேன். வட ஆற்காடு,
தென்னாற்காடு, தர்மபுரி பகுதிகளில் அவரை தெரியாதவர் யாருமில்லை. விசுவின் அம்மாவை,
விசுவை அறியும் முன்னதாகவே எனக்குத் தெரியும்.
பல
சூழலில் வளர்ந்ததால் விசுவுக்கு மற்றவரைவிட
பல மடங்கு அனுபவங்கள் உண்டு. பகிர்ந்து கொள்வதற்கு கணக்கிலடங்கா கதைகளும் உண்டு.
ரேடியோ ஜாக்கி (RJ) பட்டிமன்ற மேடைகள், முக நூல், தமிழ் மணத்தின் டாப் 10 பதிவர்
என்று பல தளங்களில் இயங்குபவர் விசு. எல்லாத்தளங்களிலும் தனிப்பாணியில் முத்திரை பதித்து
பல நூறு பேர்களைக் கவர்ந்து, அவர்களை "ஃபாலோ" செய்ய வைப்பவர். இன்னும் அவருக்குள்
என்னென்ன ஒளிந்து கொண்டிருக்கிறதோ. நினைத்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.
இவருடைய எழுத்திலும் பேச்சிலும் சொற்சுவை, பொருட்சுவை இருந்தாலும். அதிகமாக
தொக்கி நிற்பது நகைச்சுவைதான். நாம் ஒரு கோணத்தில் சிந்தித்தால் முற்றிலும் வேறு கோணத்தில்
சிந்தித்து சிரிக்க வைப்பவர்.
விசுவுடைய
இந்த தொகுப்பு மிகுந்த ரசனையுடன் பொறுக்கி எடுத்து கோர்க்கப்பட்ட பதிவுகள்.சில இடங்களில்
புன்னகையையும் பல இடங்களில் வெடிச்சிரிப்பையும் வரவழைக்கின்றன.
கடல்கடந்து புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், நம் அன்றாட குடும்ப வாழ்க்கை, , நமது
கலை கலாச்சாரம், இசை, நம்பிக்கை ஆகியவை மாறாமல் இருப்பதை பல பதிவுகளில் வெளிப்படுத்துகிறார்.
மாறுபட்ட
கலாச்சார சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நமது பழைய நினைவுகள் அதில் நடந்த சுவையான சம்பவங்களை
நகைச்சுவையோடு அசைபோடுவதில் விசுவுக்கு நிகர் அவர்தான்.
படிக்கும் பலர் “விசுAwesome” என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் .இன்னும் சிலர்
"விசு மோசம்" என்கிறார்கள்.ஏன் என்று கேட்டால் சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறதாம்
சிதறி வரும் அவரின் மின் துணிக்கைகள் ஃபன் துணிக்கைகள்
மட்டுமல்ல பொன் துணிக்கைகள் என்று சொன்னால் அது நிச்சயமாய் மிகையில்லை.
இவர்
ஒரு தொழில்முறை கணக்காளர். (CPA-Certified Public Accountant-USA) ஆனால் இவர் ஒரு மருத்துவர்
என்று நான் சொல்லுவேன்.
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் தானே.
நண்பர் மேன்மேலும்
வளர்ந்து புகழ்மணம் வீச என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
பரதேசி
(ஆல்ஃ ப்ரெட் தியாகராஜன்)
http://paradesiatnewyork.blogspot.com/
April 1, 2015
நியூயார்க்
வெயில் அடித்தாலும் குளிர் மாறாத ஒரு வசந்த கால முட்டாள்கள்
தின காலை வேளை.
இனிமையான மருத்துவருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவிசுவின் புத்தகம் படித்தால் பிடிக்கும் ஆனால் விசுவிடம் பழகினாலே அவரை எல்லோருக்கும் பிடிக்கும், பார்க்கதான் வில்லன் போல இருக்கிறார் பழகுவதற்கு அவர் ஒரு குழந்தைதான் அப்படிபட்ட பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... மிக சந்தோஷம்.... அவரிடம் நான் கண்ட குறை BLOGGER தளத்தை விட்டு வேறுதளத்தில் எழுதுவது...BLOGGER தளத்திற்கு கிடைக்கும் ரீஸ் வேறு எந்த இடத்திலும் கிடைப்பதில்லை அது எப்படி அவருக்கு புரியாமல் போய்விட்டது என்பதுதான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது
ReplyDeleteதமிழா... அது என்னமோ நம்ம முக ராசி அந்த காலத்தில் இருந்தே வில்லன் என்று தான் அழைப்பார்கள். தங்களின் அருமையான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteஎலி வலைஎன்றாலும் தனி வலை என்று தான் எனக்கே அமைத்து கொண்ட வலை தளத்திற்கு சென்று விட்டேன். நீங்கள் சொல்வதை பார்த்தவுடன் இரண்டு இடத்திலும் எழுதலாமே என்ற ஒரு எண்ணம் உதித்து உள்ளது.
தங்களின் அன்பான அறிவுரைக்கு மிக்க நன்றி.
அருமை நண்பர் பரதேசிக்கு நன்றி. புத்தகத்தை முழுவதும் படித்து தம் கருத்தை இட்டதற்கு. தாங்கள் சொல்லிய படி கார்டூன் வரைந்து கொடுத்த நண்பர் தமிழ் அவர்கள் ஒரு பொக்கிஷம். அவரை தமிழ் உலகம் கண்டிப்பாக மென்மேலும் உயர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ReplyDeleteநண்பரி விசு அவர்கள் எங்களுக்கும் நண்பராகக் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்கின்றோம். விழா மிக மிக இனிதாக நடந்தது. அவரை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
ReplyDeleteமதுரைத் தமிழன் சொல்லியிருப்பதை நாங்களும் சொல்ல நினைத்தோம். விசு ஏன் அவர் ப்ளாகர் தளத்தை விட்டு வேறு தளத்திற்குச் சென்றார் என்று..என்றாலும் நாங்கள் அது அவரது தனி விருப்பம் என்று விட்டுச் சொல்ல வில்லை. ப்ளாகர் தளம் தமிழன் சொல்லி இருப்பது போல் நல்ல ரீச் காகிறது. அதைச் சொடுக்குவதும் எளிது. பதில் இடுவதும் எளிதாக இருக்கிறது என்பதால்...
விசு அவர்கள் அப்போதும் இதேதான் சொன்னார், எலிவளையானாலும் தனி வளை.....
தமிழன் சொல்லி இருப்பது மிகவும் சரியே....விசு அவர்களைப் பற்றி அவர் சொல்லி இருப்பதும் அதே அதை நாங்கள் வழி மொழிகின்றொம்....
மிக்க நன்றி விசு அவர்களின் புத்தகத்தைப் பற்றிச் சொல்லியதற்கு.
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்கள் அனைவரும் சொன்னது அனைத்தையும் நான் வழி மொழிகிறேன்..
ReplyDeleteநண்பர் விசுவின் சேவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு தேவை.. தேவை.. தேவை..
உங்கள் முன்னுரை ஒரு பொன்னு(ரை/றை) -
ReplyDeleteநண்பரின் புத்தகத்துக்கு பொன்னால் ஆன உறை.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உரை..
வாழ்க வளமுடன்.. :)
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
ReplyDelete