Monday, May 18, 2015

அழகான பெண்ணின் அடாவடிக்கேள்விகள் !!!!!!!!!!!


கடந்த வாரம் ஒரு நாள், கட்டுப்போட்ட கையுடன் சிரமப்பட்டு கிளம்பி வேலைக்குச் செல்ல சப்வேயில் ஏறினேன். அங்கே ஒரு அழகான அம்மாவும் அதைவிட அழகான ஒரு பையனும் ஏறினார்கள். அம்மாவின் பூனைக் கண்கள் அவனுக்கும் வந்திருந்தன. பையனுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். பாவம் என்னைப் போலவே இடது கையில் கட்டுப்போட்டிருந்தான். நான் நினைக்கிறேன், பள்ளிக்கு அனுப்ப முடியாமல், வீட்டிலேயும் விட முடியாமல் வேலைக்குத் தன்னோடு அழைத்துச் செல்லுகிறாள் அந்தப் பெண் என்று. அந்தப் பையனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆடி ஓடும் வயதில் இப்படிக் கட்டுப் போட்டுக் கொண்டு திரிகிறானே என்று. எனக்கு கட்டுப் போட்டவுடன் தான், இதே நிலையில் இருக்கும் மற்றவர்கள் நிலைமையை  என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. சரி சரி எனக்கும் சரி, அந்தப் பையனுக்கும் சரி இது தற்காலிகம் தானே என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.
நல்லவேளை சப்வே டிரைனில் இடம் கிடைத்து உட்கார்ந்தேன். எனக்கு நேர் எதிரில் அந்த அம்மாவும் மகனும் உட்கார்ந்தார்கள். கையில் இடித்து விடுவார்கள் என்று நினைத்து பீக் நேரம் கழித்து வந்தால் சப்வேயில் அவ்வளவு கூட்டமில்லை. எதிரிலிருந்த பையனைப் பார்த்து புன்னகைத்தேன். அவன் என்னை முறைத்துவிட்டு அவன் அம்மாவைப் பார்த்தான்.
நான் சேசுவேன்னுட்டு என் புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றேன்.
அப்போது "ஆல்ஃபி நேராக உட்கார்", என்று ஒரு அதட்டல் கேட்டது. (உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் நடந்தாலும் நமது வசதிக்காக தமிழிலேயே கொடுத்துள்ளேன்.)
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, முன்னால் பார்த்தால் அந்தப்பெண் சொல்லியிருக்கிறாள். நான் பார்த்ததும் என்னையும் என் கைக்கட்டையும் பார்த்து இலேசாக புன்முறுவலினாள். நானும் மந்தமாக சிரித்து வைத்தேன்.
யார் இவள்? என் பெயர் அவளுக்கு எப்படித் தெரியும்? கண்ணை மூடிக் கொண்டு எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவள் யாரென்று தெரியவில்லை. அதோடு அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண். எங்கேயாவது சர்ச்சில் பார்த்திருப்பாளோ என்று ஒரே புதிராக இருந்தது.
மீண்டும் புத்தகத்தை எடுத்து விரித்தேன்.
"ஆல்ஃபி பட்டனைப்போடு என்றாள்".
சட்டென்று பார்த்தால் என் சட்டையில் ஒரு பட்டன் போடாமல் இருந்தது. ஒரு கையில் போட்டதால் விட்டுப்போயிருக்கும் என்று நினைத்து மிகவும் முயன்று அந்தப் பட்டனைப் போட்டேன். ஆனால் இந்தத் தடவை என்னைப் பார்த்து சொன்ன மாதிரியே இல்லை. அந்தப் பையனைப் பார்த்தேன். அவன் சட்டையிலும் ஒரு பட்டன் போடாமல் இருந்தது. ஆனால் அவன் கண்டுகொள்ளவில்லை.
நான் அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்க்க, அடுத்து அவள் சொன்னாள், "ஆல்ஃபி புத்தகத்தை ஒழுங்காகப்படி", எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவள் என்னைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் நீலக் கண்களின் ஓரத்தில் ஒரு கிண்டல் தெரிந்தது. அது என் பிரமையாகவும் இருக்கலாம்.
சடாரென்று புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். படிக்க முடியவில்லை. அதே பக்கத்தில் இருந்தேன். ஆனால் அவர்களைப் பார்க்கக் கூடாது என்று தலையை தொங்கப்போட்டுக் கொண்டு இருந்தேன்.
ஆனால் அடுத்தடுத்து இன்ஸ்ட்ரக் ஷன் வந்து கொண்டே இருந்தது. அவற்றுள் சில கீழே
“ஆல்ஃபி தலையை ஒழுங்காச் சீவலையா?”
ஆல்ஃபி உடைஞ்ச கையை அங்குமிங்கும் அசைக்காதே?”
“நல்லா சாய்ஞ்சு உட்காரு
“மூக்கை நோண்டாத
பேண்ட் அழுக்கா இருக்கு பாரு, இன்னிக்கு மாத்திரு.”
“இன்னக்கி நாக்கை கிளீன் பண்ணியா?”
“கம்பியைப் பிடிச்சுக்க, ஏற்கனவே உடைஞ்ச கை
- இப்படி ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குறது. எல்லாத்தையும் என்னைப் பார்த்துச் சொல்ற மாதிரியே இருந்துச்சு. ஒண்ணும் முடியல, ஒண்ணும் படிக்கல, கண்ணை, மூடிட்டு தூங்கிறது போல இருந்துரலாம்னு நினைத்து, தலையைச் சாய்த்தேன்.
person-with-sling-around-hand-due-to-broken-bones.jpg

"ஆல்ஃபி தூங்காத, அடுத்த ஸ்டாப்பில இறங்கனும்"னு சொல்றா, எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. ஆனா அடுத்த ஸ்டாப் லெக்சிஸ்டன் அவென்யூ வந்ததும் தாயும் மகனும் இறங்கினார்கள். போகும்போது, என்னைப் பார்த்து புன்னகைத்து "ஹேவ் நைஸ் டே", என்று சொல்லிவிட்டு இறங்க்கினாள். 'யு டூ' என்று பதில் சொல்லிவிட்டு அவள் சிரித்தது சாதாரண புன்னகையா இல்லை கிண்டலா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் அதைப்பற்றி மிகவும் சிந்தித்து, யோசித்து கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்தேன்.
· அந்தப் பெண்ணுக்கு நான் யாரென்றோ, என் பெயர் என்னவென்றோ தெரிந்திருக்க நிச்சயமாய் வாய்ப்பில்லை.
·   அந்தப் பெண்ணின் மகன் பெயர் நிச்சயமாய் 'ஆல்ஃபி' என்று தான் இருக்க வேண்டும் (சே ஒரு தடவை நான் அவனைக் கூப்பிட்டுப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்)
·         அந்தப் பெண் நிச்சயமாய் என்னைப் பார்த்து எதுவும் சொல்லவில்லை (ஆனால் ஒவ்வொன்றும் அப்படியே எனக்கும் பொருந்தியதே)
·         என்னைப் பார்த்துச் சொன்னது போல் தோன்றியது ஒரு தற்செயல் நிகழ்வு.
·         என் பெயரும் ஆஃல்பி என்பது ஒரு கோ இன்சிடன்ஸ் மட்டும்தான்.
நன்கு யோசித்தால் குழப்பம் தீர்ந்து தெளிவு பிறக்கும் என்று திருவள்ளுவரோ அல்லது விவேகானந்தரோ அல்லது யாரோ சொன்னது நினைவுக்கு வர, “சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே, சுசிலாவின் மகனே ராஜசேகரே”, என்று பாடிய படியே-34 ஆவது தெருவில் இறங்கி அலுவலகம் சென்றேன்.
அலுவலகத்தில் என்னுடைய பேக்கை வைத்துவிட்டு கொண்டு வந்த மதிய உணவை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு சீட்டில் உட்கார்ந்து PC-யை ஆன் செய்தேன்.
அப்போதுதான் கவனித்தேன், நான் போட்டுக் கொண்டிருந்த சட்டை இரண்டு நாளுக்கு முன்னால் ஒரு மீட்டிங்க்குச் செல்ல அணிந்த அதே சட்டை. சட்டையில் பிரச்சனையில்லை, ஆனால் அதன் இடதுபுறத்தில் ஒட்டியிருந்த 'Hello' ஸ்டிக்கரில் "Alfy" என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததைப்  பார்த்து அயர்ந்து போனேன் .
முற்றும்.


12 comments:

  1. சிறுகதை மாதிரி முடிவு, அருமை. அது எப்படிசார் உங்களக்கு மட்டும் இப்படி ? :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மட்டும் ஏன் அப்படி ? தெரியலையேயேயேயே கவிஞரே ?

      Delete
  2. உங்களை பார்த்து ஒரு அழகான பிகர் ........நல்ல ஜூஸ் புளிஞ்சு போட்டு போயிருக்கு ...என்ன இருந்தாலும் அழகான பியர் இல்லையா ? அதான் நீங்க பதிலே சொல்லாம திகைச்சு போய்டிங்க போல ....எதுக்கும் உங்க வீடு கார அம்மணியிடம் ஒரு வார்த்தை சொல்லி வச்சா நல்லதுன்னு படுது ...

    ReplyDelete
    Replies
    1. என்னாது ஜூஸ் புளிஞ்சதா , அட ஆமா கரெக்ட், வேர்த்து விதிர் விதிர்த்து போயிருச்சு போ .
      அது என்னாது அம்மணிட்ட சொல்லணுமா, தேவையில்லை அம்மணியும் நம் வாசகர்தான் .

      Delete
  3. ///எதிரிலிருந்த பையனைப் பார்த்து புன்னகைத்தேன். அவன் என்னை முறைத்துவிட்டு அவன் அம்மாவைப் பார்த்தான்.///

    அந்த பையன் வராமலிருந்தால் அல்லது முறைக்காமல் இருந்திருந்தால் சார் ஆபிஸுக்கு போய் இருக்க மாட்டார் நேரே லஞ்சுக்கு நல்ல ரெஸ்டராண்டா பார்த்து போயிருப்பார். ஹும் ஆல்பிக்கு அதிர்ஷடம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. அதிர்ஷ்டமா அப்படின்னா என்ன ?

      Delete
  4. Replies
    1. நல்ல அனுபவமா ? கெட்ட அனுபவம்ணுல சொல்லணும் வெங்கட் .

      Delete
  5. ஒரு கட்டு போதாதா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ நான் ஆட்டத்துக்கு வரலை ஆளை விடுங்க

      Delete
  6. //இரண்டு நாளுக்கு முன்னால் ஒரு மீட்டிங்க்குச் செல்ல அணிந்த அதே சட்டை//

    ”ஏண்டா ஆல்பி ... இனிமே அழுக்கு சட்டையெல்லாம் போடாதே” அப்டின்னு நல்ல வேளை அந்த ‘அம்மா’ சொல்லலை!!!!

    ReplyDelete
    Replies
    1. விட்டா நீங்களே சொல்லிக்கொடுப்பீங்க போல ?

      Delete