மதுரைத்தமிழன்
ஆரம்பித்து திண்டுக்கல் தனபாலன் தொடர, பலரால் பதில்கள் எழுதப்பட்ட இந்தப் பத்துக்கேள்விகளுக்கும்
இதோ என்னோட பதில்கள். பத்தும் முத்தா இல்லை வெத்தா என்பதை நீங்கதான் சொல்லனும்.
1. உங்களுடைய 100 ஆவது
பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
சொர்க்கத்தில்
தினம் தினம் கொண்டாட்டம் என்றாலும் என் பிறந்த நாள் விழா சிறப்பான நாள்தானே.
சிறப்பு விருந்தினர்களாக ஆதாம் ஏவாளைக் கூப்பிடுவேன் . என் அன்பான அப்பா கண்டிப்பாய் வருவார். அப்புறம் என்ன வழக்கம் போல்
என் மனைவி எல்லா ஏற்பாடுகளையும்
செய்துவிடுவாள்.
2. என்ன
கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
நம்மிடம் பழகும் பலரில் நண்பன் யார் எதிரி யார் என்று தெரிந்து கொள்ள கற்றுக்கொள்ள விரும்புகிறேன்
3. கடைசியாக சிரித்தது எப்போது?
எதற்காக?
பட்டிமன்றத்தில்
பேசும் போது நான் அடிக்கும் மொக்கை ஜோக்குகளுக்கு சிரிக்கும் மக்களைப் பார்த்து உள்ளுக்குள்
நானும் சிரித்தேன்.
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால்
நீங்கள் செய்வது என்ன?
ஐயா ஜாலி ஜாலி
பிளாக்கில் எழுதுவதற்கு இன்னொரு அனுபவம் ரெடி.
5.உங்கள் குழந்தைகளின் திருமண நாளில்
சொல்ல விரும்புவது என்ன?
அப்ப சொன்னாமட்டும்
கேட்றவா போறாங்க. அட போங்க நீங்க வேற.
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில்
உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
Add caption |
இந்த கருணாநிதி
ஜெயலலிதா அறிக்கை பிரச்சனை தான். எந்த சொறிக்கை ஆள் இந்த அறிக்கைகளை எழுதுரானோ, அவன்
கழுத்தை நெறிக்கையில் தான் இந்த பிரச்சனை தீரும்.
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
எப்பொழுதுமே
என் மனசாட்சியிடம் தான்.
8. உங்களைப்பற்றி தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?
ம்ஹீம் யாரும்
நம்பமாட்டேங்கிறாய்ங்க,தப்பித்தவறி நம்பிட்டா ஆஹா, நானும் ரெளடிதான் நானும் ரெளடிதான்.
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால்
அவரிடம் என்ன சொல்வீர்கள்?
எந்த நண்பர்னு
தெரிஞ்சாத்தான் சொல்லமுடியும் அது வேதனையா இல்லை சாதனையான்னு ?
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
எங்க தனியா
இருக்க விடறாங்க, ஒரே கூட்டம்ங்க இங்க.
-
சுவையான பதில்கள்.... ரசித்தேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.
Delete7 - அதானே.. நம்மூர் திண்டுக்கல் ஆச்சே...!
ReplyDeleteசரியாச்சொன்னீங்க திண்டுக்கல் தனபாலன் .தங்கள் வருகைக்கும், ஓட்டுக்கும் நன்றி
Deleteதிண்டுக்கல்கார்கள் மனசாட்சியிடம் அட்வைஸ் கேட்பார்கள் ஆனால் மதுரைக்காரர்களிடம் மனம்சாட்சி இல்லை காரணம் எங்கள் மனத்தைதான் திண்டுக்கல்கார்களிடம்தான் பறி கொடுத்துவிட்டோமே அதனால்தான் அட்வைஸ் என்றால் திண்டுக்கல்கார்களிடம் வருகிறோம்
Deleteஇதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை ?மதுரைத்தமிழன் ?
Delete